Thooran Songs in Tamil

Source: https://www.gospelofyogiramsuratkumar.com/amarakavyam/18—the-earlier-devotees-/the-earlier-devotees-

திரு.ம.ப.பெரியசாமி தூரன் பாடல்கள்
குருதேவர் அருட்பாமாலை

பாடல் – 1
விருத்தம் – ராக மாலிகை
(ஹம்சத்வனி, கௌளை, தேவகாந்தாரி, வலஜி)

1. பார்த்தாலே பாட்டு வரும் ராம்சுரத் பரமயோகி பாதம்
சென்னி சேர்த்தாலே துன்பமெல்லாம் தீர்ந்து போகும்
அண்டிக் கண்ணீர் வார்த்தாலே மறுபிறவி மறைந்து போகும்
ரகுராமன் பேர் சொல்லி ஆர்த்தாலே இன்பமெலாம்
ஆகுமெனில் அவர்பெருமை உரைக்கலாமோ?

2. என் குருவே ராம் சூரத் குமாரெனும் பரமயோகி
அன்புருவே அல்லலெனும் ஆழ்கடலில் அமிழ்ந்தலைந்தேன்
இனகருணை காட்டி எனை ஈடேற்றிக் காத்தருள்வாய்
இதுவுமொரு லீலையென கருதல் நன்றோ இறைஞ்சுகிறேன்
பதமலரே
துன்பமொரு முடிவில்லை துயர்போக்கி ஆட்கொள்வாய்
தேவதேவே.

பாடல் – 2
கும்மிப்பாடல் ராகம்

1. சின்னக் குழந்தையாய்த் தோன்றுவான் மனதில்
தெய்வக் குழந்தையாய் ஊன்றுவான்
என்னென்னவோ பல பாடல்கள் – ஞானம்
எண்டிசைவீசுரையாடல்கள்
கண்ணிலே பேரொளி வீசுதே – அதைக்
காண்பதற்கே மிகக் கூசுதே
எண்ணரும் ராம்சுரத் யோகியாம் – தந்தை
ஈசனைக் காட்டும் நல் தேகியாம்.

2. வல்லப் பிணிகளை ஓட்டுவான் – என்றும்
வாதனை தவிர்த்தின்பம் ஊட்டுவான்
எல்லையில் அன்பெனும் ஜோதியாம் – நமக்
கேற்றம் தருவதில் ஆதியான்
மெல்ல வரும் தென்றல் போன்றவன் – ஞான
மெய்ப்பொருள் காட்டிடும் சான்றவன்
சொல்லரும் வேத மெய்த் தந்தையாம் – ராம்
சுரத் குமார் என்னும் எந்தையாம்.

பாடல் – 3
ராகம் – சாரங்கா
தாளம் – ஆதி
பல்லவி

ராம்சுரத் குருபாதம் போற்றிக் கொண்டாடு
ராமர் பாதுகை யென்னும் புகழ் பெறும் திருப்பாதம் (ராம்)

அனுபல்லவி

முக்தியளிக்கும் பாதம் முன்தலை வைக்கும் பாதம்
பக்தி பெருக்கும் பாதம் பவநாச ராம்ஜி பாதம் (ராம்)

சரணம்

தொல்லை ஒழிக்கும் பாதம் தூரன் வண்ங்கும் பாதம்
எல்லையிலா இன்பம் எனக்கருள் குருபாதம்
ஏகாந்த பெருவெளியில் எளியேனைச் சேர்க்கும் பாதம்
ராம்சுரத் குருபாதம் போற்றிக் கொண்டாடு
ராமர் பாதுகையென்னும் புகழ்பெறும் திருப்பாதம் (ராம்)

பாடல் – 4
விருத்தம் – ராக மாலிகை
(கேதார கௌளை, காபி, ஹம்சாநந்தி, கானடா, சிந்து பைரவி)

1. சரணம், சரணம் தாளினை சரணம்
சஞ்சலம் முடிவில்லை அஞ்சலி செய்தேன்
திருவடித் தாமரையில் அன்புடன் பணிந்தால்
ஜென்மம் கடைத்தேறும் மற்றொன்றும் வழி காணேன்

2. கருணைக் கடல் என்னும் கார் வண்ண மேனியனே
காத்தருள்வாய் என்றே முற்றிலும் உணர்ந்தேன்
ராம் சுரத்குமாரா தயை செய்வாய் நீ
இரக்கமில்லையோ நான் படும் பாடெல்லாம் அறியாயோ நீ !

3. ராம்ஜி திருப்பாதம் மீண்டும் ஒரு முறை தொழுதேன்
இரக்கம் உள்ளாய் எனின் என்குறை தீர்ப்பாய்
ஏங்கியே பணிந்தேன் அபயமளிப்பாய்
திருத்தமிழ் பணியெல்லாம் செய்து முடிக்க
என்னை ஆதரிப்பாயே.

4. வருந்தி அழைத்தேன் வணங்கினேன் ஐயா
புரி பிழைகளெல்லாம் பொறுத்தருள்வாயே புண்ணிய ராம்ஜி
தாளடி சரணம் போற்றினேன் ஐயா
சரணம் சரணம் தாள் மலர் சரணம் தயை செய்வாயே.

5. திருவண்ணாமலை வாழ் யோகியே சரணம்
சரணம், சரணம் திருவடி தொழுதேன்
அருள் உளம் ஒன்றே அபயம் என்றுணர்ந்தேன்
கருணா சொரூபனே கண்ணிய ரூபனே
இருள் உளம் போக்கி ஜோதியே வேண்டும்
இரங்கியே அருள்வாய் ! சரணம், சரணம்.


பாடல் – 5
பஜனைப் பாடல்

யோக சத்குரு ஸ்ரீராம சத்குரு
யோகி ராம் சுரத்குமார் ஞான சத்குரு
நாத சத்குரு, ராம நாம சத்குரு
ராம, ராம, ராம, ராம, ராம சத்குரு
நித்ய சத்குரு, ஜோதி நேத்ர சத்குரு
சித்த சத்குரு, தெய்வ குழந்தை சத்குரு


பாடல் – 6
ராகம் – வராளி
தாளம் – மிச்ரசாபு

பல்லவி

என்ன புண்ணியம் செய்தேனோ நான் – உன்
திருப்பாதத்தில் இருக்கவும், பாடாவும் நான்
(என்ன)
அனுபல்லவி

கன்னல் மொழி ராமன் ரகுவம்சதிலகன்
கற்புடையோர்க்கெல்லாம் காவலன் போன்றவன்
(என்ன)

சரணம்

அன்புடனே போற்றும் ராம் சூரத்குமாரன்
அண்டினவர்க்கெல்லாம் தஞ்சம் அளிப்பவன்
தெய்வக் குழந்தையாம் அண்ணாமலை வாழும்
தசரத குமாரன் தாள்மலர் போற்றிட
(என்ன)


பாடல் – 7
ராகம் – ஸரஸாங்கி
தாளம் – கண்ட சாபு

பல்லவி

உனையன்றித் துணை காணேன் – ஸ்ரீ ராமச்சந்த்ரா
எனை யாட்கொண்டருள்வாய்
(உனை)
அனுபல்லவி

அனவரதமும் உன்றன் அரவிந்த பாதம் எண்ணி
மனங்கசிந்துருகினேன் வள்ளலே இரங்குவாய்
(உனை)

சரணம்

குகனென்ற வேடனையும் குரங்கின வேந்தனையும்
சரணென்ற வீடணன் தன்னையும் தம்பியாய்
அகமகிழ்ந் தேற்றதோர் அருள்நிறை புண்ணியனே
ரகு வம்சதிலகனே ரமணீய ராமனே
(உனை)

பாடல் – 8
கிளிக்கண்ணி மெட்டு

1. தெய்வக் குழந்தை பேரை
தெருவிலே கேட்ட போதும்
மெய்சிலிர்த்தே நிற்கிறேன் – கிளியே
செயல் மறந்தும் நிற்கிறேன் – கிளியே
செயல் மறந்தும் நிற்கிறேன்.

2. பச்சைப்பச்சையாயுடுத்தி
பச்சைமயில் வாகனன்போல்
இச்சையெல்லாம் தருவார் – கிளியே
எமதிடர் போயொழியும் – கிளியே
இன்னல்கள் மாய்ந்தொழியும்

3. காளியன் நடனமோ
கடையூழி நடனமோ
ஏதும் அறிந்திலனே – கிளியே
போதம் நான் வேண்டுகிறேன் – கிளியே
போதம் நான் வேண்டுகிறேன்.

பாடல் – 9
விருத்தம் – ராகமாலிகை
(மாயா மாளவ கௌளை, நாட்டகுறிஞ்சி, ஹம்ஸானந்தி, சுருட்டி)

அருள்பொழியும் தனி முகிலே ஆனந்தப் பரவெளியில்
அருணனென மிதந்து வரும் பூரணமே ஆத்ம ஞானத்
திரள் அமுதே மன இருளை சுடர் விழியால் களைந்திடுமோர்
தெய்வீகமே ராம்சுரத் குமாரெனும் அற்புதமே
இருள் செறிந்த வாழ்க்கையென்னும் பெருங்கானில் ஏங்கி நின்று
ஏதும் வழி அறியாமல் இடர்ப்படுவோர் தமக்கெல்லாம்
மருள் ஒழித்துப் புகல் அளிக்கும் மாதவனே உன்றனிரு
மலரடியே தஞ்சமென வந்தடைந்தேன் ஏற்றருளே.


பாடல் – 10
பஜனைப் பாடல்

ராம்சூரத் குமாரம்
ராம்சூரத் குமாரம் (2)
ஜெய ஜெய ராம் சுரத் குமாரம்
ஜெய ஜெய ராம் சுரத் குமாரம் (ராம்)
ராம், ராம், ராம் சுரத் குமாரம்
ராம், ராம், ராம் சுரத் குமாரம் (ராம்)
தசரத ராம் சுரத் குமாரம்
தசரத ராம் சுரத் குமாரம் (ராம்)
ராகவ ராம் சுரத் குமாரம்
ராகவ ராம் சுரத் குமாரம் (ராம்)
ஹரி, ஹரி ராம் சுரத் குமாரம்
ஹரி, ஹரி ராம் சுரத் குமாரம் (ராம்)
ஹரி ஓம் ராம் சுரத் குமாரம்
ஹரி ஓம் ராம் சுரத் குமாரம் (ராம்)
நிறை தவ ராம் சுரத் குமாரம்
நிறை தவ ராம் சுரத் குமாரம் (ராம்)
தவ நிறை ராம் சுரத் குமாரம்
தவ நிறை ராம் சுரத் குமாரம் (ராம்)
ரகுவீர் ராம் சுரத் குமாரம்
ரகுவீர் ராம் சுரத் குமாரம் (ராம்)
அருள்மிகு ராம் சுரத் குமாரம்
அருள்மிகு ராம் சுரத் குமாரம் (ராம்)
எழில் மிகு ராம் சுரத் குமாரம்
எழில் மிகு ராம் சுரத் குமாரம் (ராம்)
ஒளிசேர் ராம் சுரத் குமாரம்
ஒளிசேர் ராம் சுரத் குமாரம் (ராம்)
ஓம், ஓம் ராம் சுரத் குமாரம்
ஓம், ஓம் ராம் சுரத் குமாரம் (ராம்)
வடிவேல் ராம் சுரத் குமாரம்
வடிவேல் ராம் சுரத் குமாரம் (ராம்)
சிவ, சிவ ராம் சுரத் குமாரம்
சிவ, சிவ ராம் சுரத் குமாரம் (ராம்)
நகைமிகு ராம் சுரத் குமாரம்
நகைமிகு ராம் சுரத் குமாரம் (ராம்)
ஸ்ரீஹரி ராம் சுரத் குமாரம்
ஸ்ரீஹரி ராம் சுரத் குமாரம் (ராம்)
திருவளர் ராம் சுரத் குமாரம்
திருவளர் ராம் சுரத் குமாரம் (ராம்)
தெய்வீக ராம் சுரத் குமாரம்
தெய்வீக ராம் சுரத் குமாரம் (ராம்)
திருமிகு ராம் சுரத் குமாரம்
திருமிகு ராம் சுரத் குமாரம் (ராம்)
அருள் சேர் ராம் சுரத் குமாரம்
அருள் சேர் ராம் சுரத் குமாரம் (ராம்)
புனித நல் ராம் சுரத் குமாரம்
புனித நல் ராம் சுரத் குமாரம் (ராம்)
பத மலர் சரணம், பதமலர் சரணம்
சரணம், சரணம், யோகியே சரணம் (ராம்)
தஞ்சமென்றடைந்தோம், ஏற்றருள்வாயே
தஞ்சமென்றடைந்தோம், ஏற்றருள்வாயே
ராம் சுரத் குமாரம், ராம் சுரத் குமாரம்,
ராம் சுரத் குமாரம், ராம் சுரத் குமாரம்.பாடல் – 11
கிளிக்கண்ணி மெட்டு

1. எங்கும் நிறைந்திருப்பான்,
இருந்தும் இல்லாதிருப்பான்
இவன் பெருமை யார் கூறுவார் – கிளியே
இவனடி தஞ்சம் என்போம் – கிளியே
இவனடி தஞ்சம் என்போம்.

2. சித்தர்கள் போலத் தோன்றி
முக்தர்கள் ஆகச் செய்வான்
முக்தி நிலை பெற்று விட்டால் – கிளியே
முன்னால் செய்த புண்ணியமே – கிளியே
முன்னால் செய்த புண்ணியமே

3. தெய்வக் குழந்தையின்
திருவடி போற்றுகின்றேன்
மெய்தவ ஞானியடி – கிளியே
எல்லாம் வல்ல சித்தனடி – கிளியே
எல்லாம் வல்ல சித்தனடி

4. அருணையில் வந்துதித்த
ராம் சுரத் குமாரனடி
என்றன் குருதானடி – கிளியே
ராமனருள் பெற்றவன்டி – கிளியே
ராமனருள் பெற்றவன்டி

5. கிட்டியும் கிட்டாதிருப்பான்
அட்டமா சித்தி பெற்றான்
வெட்ட வெளிச் சித்தனடி – கிளியே
வேகமுடன் தாள் பணிவோம் – கிளியே
வேகமுடன் தாள் பணிவோம்.

பாடல் – 12
ராகம் – காம்போதி
தாளம் – ஆதி

பல்லவி

புண்ணியம் பல கோடி செய்தேனோ – நான்
பொன்னிழல் புன்னையின் கீழ் என்குருவைக் காண
(புண்ணியம்)

அனுபல்லவி

கண்ணிலே ஜோதி காட்டி கரமலர் அபயங் காட்டி
எண்ணிலா இன்பங் கூட்டி என்னையும் ஏற்றருள
(புண்ணியம்)

சரணம்
ஜெயராமா, ஸ்ரீராமா, ஜெய ஜெய ராமா எனும்
தாரக மந்திரமே உருவான தவயோகி
தயை ஓங்கும் ராம் சுரத் குமாரர் தம்பொன்னடியில்
சரணென்று வந்தவுடன் தமியேனை ஆட்கொள்ள
(புண்ணியம்)

பாடல் – 13
விருத்தம் – ராக மாலிகை
(சண்முகப்ரியா, மலையமாருதம்,
ஹிந்தோளம், சிந்து பைரவி, மத்யமாவதி)

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஐம்புலனை அடக்கி வென்ற வீரா
தப்பேது நான் செய்யினும், பிள்ளை மதி என்றே
தவறு செய்யினும் அடியேனைப் பொறுத்தருளல் வேண்டும்
இப்பாரும் ராமனெனக் காணுகின்ற ஒளியே
இனி வேறு கதி இல்லை ராம் சூரத் குமாரா
அப்பாலும் உலகமெல்லாம் கடந்து ஆடல் புரிகின்ற என்றன்
குருநாதா

உன்றன் அடியிணையே தஞ்சமென வந்தடைந்தேன் ஐயா
ஒப்பாரும் உன்பெருமைக்கு அளவில்லை கண்டாய்
உலகத்தை அருள் நோக்கால் நோக்கிடுவாய் சரணம்
ஒளி வீசும் உன்றன் திருப் பார்வையாலே
உனை அடைந்தேன் புண்ணியனே சரணம்.

First Tamil Song on Yogi – Karivaradan Mayananda Swamigal

உலகம்‌ உன்னை வணங்கும்‌
பல்லவி

இறவாத நிலை வேண்டும்‌
இறந்தாலும்‌ ஒளி வேண்டும்‌
மறவாத நிலை வேண்டும்‌
மறந்தாலும்‌ இடம்‌ வேண்டும்‌ (உலகம்‌)

திறவாது பொருள்‌ வேண்டும்‌
திறந்தாலும்‌ அருள்‌ வேண்டும்‌
கறவாது பால்‌ வேண்டும்‌
கறந்தால்‌ உன்பால்‌ வேண்டும்‌ (உலகம்‌)

சிறப்பான நிலை வேண்டும்‌
சிற்றின்பம்‌ கடந்துலவும்‌
சிறப்பான நற்‌ பிறப்பே
செஞ்சுடரின்‌ நற்பிரியோய்‌ (உலகம்‌)

உலகம்‌ உனை வணங்கி
உன்‌ உருவை வழிபட்டுத்‌
திலகம்‌ போல்‌ நீ திகழத்‌
திருவண்ணாமலை அருளும்‌ (உலகம்‌)

அடியார்கள்‌ உனைத்‌ தேடி
ஆயிரம்‌ ஆயிரம்‌ வருவர்‌
அடியார்கள்‌ உனை வாழ்த்தி
முத்தம்‌ பல பொழிவார்‌ (உலகம்‌)

சடையனின்‌ வாக்கு இது
கடையனின்‌ கருத்து இது
இடையனை நம்பும்‌ உனக்கு
எப்போதும்‌ புகழ்‌ ஓங்கும்‌ (உலகம்‌)

————
(பல்லவி)
சுவாமி மயானந்தன்‌
உனக்கு நான்‌ கரிவரதனே.
ஓம்‌ ! ஸ்ரீ ராம்‌! ஹரி ஓம்‌! ராம்‌!

சோதிப்ப தென்வேலை
வாதிப்ப துன்வேலை
நாதி யனாதி யான
நடராஜன்‌ லீலை யிது (சுவாமி)

ஆதி அனாதி யிடம்‌
அண்ணாமலை யினிடம்‌.
பூஜித்த புண்ணியனே!
புண்ணியமே உனை யணையும்‌. (சுவாமி)

Source: http://www.yogiramsuratkumarbiography.com/img/Amarakavyam_English_2017.pdf

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.30

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.30 

ஸ்ரீ பாரதமாதா மந்திர் பிரதிஷ்டையும் & கும்பாபிஷேகமும்

நமது ஜன்ம்பூமி, புண்ணிய பூமி, கர்ம பூமி மற்றும் மோக்ஷபூமியை வணங்குதல் நமது ஹிந்து தர்மத்தின் அதிகாரமுத்திரை ஆகும். வேதங்களும், புராணங்களும் நமது அன்னை பூமியின் மகிமைகளை கூறுகிறது. ஸ்ரீ ராமர் “அன்னையும், அன்னைபூமியும் சொர்க்கத்தைவிட சிறப்பானவை” ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயஸீ என்கிறார். நாம் வணங்குகின்ற அனைத்து கடவுளர்கள், துறவிகள், முனிவர்கள், புனிதமானவர்கள், யாருக்கெல்லாம் பாரதத்திலும் வெளிநாடுகளிலும் கோயில்கள் நிறுவப்பட்டுள்ளனவோ, அவர்கள் அனைவருக்கும் தாயானவள் பாரத அன்னையே. இருப்பினும் நாம் பாரதமாதாவிற்கான கோவிலை மிக அரிதாகவே காண இயலும். பங்கிம் சந்திரர், சுவாமி விவேகானந்தர், மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர், சகோதரி நிவேதிதா, வீர சாவர்க்கர், மற்றும் மகாகவி பாரதியார் போன்றோர் பாரத மாதாவை மஹாசக்தியாக போற்றி நம் முன் ஆனந்த மடம், மற்றும் பவானி மந்திர் போன்ற கருத்துக்களை வைத்துள்ளனர். பாரத அன்னையின் மக்களின் உள்ளத்தில் பாரத பவானியை மஹாசக்தியாக போற்றி வழிபடும் மிக உயர்ந்த பண்பாட்டை நிலைநாட்ட,  பாரதமாதா மந்திர் அமைப்பதற்கான பூமிபூஜை, வெள்ளிக்கிழமை மே – 21 , 2004 அன்று, பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், சீனிவாச நகரில், பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மைய வளாகத்தில், நடைபெற்றது. மந்திரின் கட்டுமானப்பணிகள் சிறப்பாக நடைபெற சாது ரங்கராஜன் மற்றும் பிற பக்தர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில்,  திரு. B.K. ஸ்ரீனிவாசமூர்த்தி, பூஜையை கணபதி, நவக்ரஹ மற்றும் சுதர்சன ஹோமங்களுடன் நடத்தினர். 

உடுப்பி பேஜாவர் மடத்தின் ஸ்ரீ விச்வேச  தீர்த்த சுவாமிஜி அவர்களால் புதன்கிழமை டிசம்பர் 8 , 2004 அன்று ஸ்ரீ பாரதமாதா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மந்திர் புனிதப்படுத்தப்பட்டது.  சுவாமிகள் அன்று ஒரு உணர்ச்சிமிக்க அறைகூவல் விடுத்து,  ஹிந்துக்கள் அனைவரும் ஓன்றுபட்டு சகோதரத்துவத்தை பேண வேண்டும் என்றார். நம்மிடையே பல மொழி மற்றும் மாநில பிரிவுகள் இருப்பினும் நாம் அனைவரும் பாரத அன்னையின் குழந்தைகள். இந்த எண்ணத்தை நாம் கொண்டிருந்தால் நம்மிடையே இருக்கும் வேறுபாடுகள் நீங்கி சகோதரத்துவம் வெளிப்படும். பாரத மாதாவின் பிள்ளைகளான நாம்தான் நமது அன்னையை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். அன்னிய சக்திகளின் அபஹரணம் (சுரண்டல்) மற்றும் அத்யாசாரம் (அநீதி) காரணமாக இன்று அவள் கண்ணீர் வடிக்கிறாள். ராமாயணத்தில் ஒரு கிராமத்தின் பசு துன்பப்படுவது கண்டு காமதேனு கண்ணீர் விடுவதாக ஒரு காட்சி இருக்கு. ஆனால் இன்றோ நூற்றுக்கணக்கான பசுக்கள் கருணையின்றி கொல்லப்படுகின்றன. யாரும் கண்ணீர் விடுவதில்லை. இத்தகைய அநீதிகளை நிறுத்தவே சாது ரங்கராஜன் இந்த பாரத மாதா  மந்திரத்தை இங்கு நிறுவி,  பாரத மாதாவை இங்கு பிரதிஷ்டை செய்து, பாரதத்தின் புராதன மற்றும் தேசிய வாழ்க்கை மூல்யங்களை   புத்துணர்ச்சி பெறச் செய்வதற்கான மாபெரும் செயலை மேற்கொண்டுள்ளார். நாம் அன்னைக்கு வெறும் ஆரத்தி மட்டும் காட்டாமல், முழுமையாக நம்மையே அவளது பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டு, அவளை மகிழ்வாக வைக்க வேண்டும். இன்றைய சூழலில் அவளை மகிழ்விக்க நாம் நமது கரங்களின் சக்திக்கும் மேற்பட்டு பணிபுரிந்து அவளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும், என்று சுவாமிஜி கூறினார்.

திரு. H.V. சேஷாத்திரி, ஆர்.எஸ்.எஸ் ன் அகில பாரத பிரச்சார பிரமுகர், இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் சுவாமி விச்வேச தீர்த்தர் இந்த நிகழ்ச்சியில் கூறியது அனைத்தும் 1989 ல் உடுப்பியில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சம்மேளனத்தில் விவாதிக்கப்பட்டது என்றார். நாமெல்லாம் ஹிந்துக்கள் பாரத மாதாவின் குழந்தைகள், மற்றும் ஹைந்தவா சஹோதரா சர்வே — “இந்துக்கள் அனைவரும் சகோதரர்கள். என்ற முழக்கத்தை அங்கு சுவாமி விச்வேச தீர்த்தாஜி தந்தார். காஷ்மீர், நாகாலாந்து, மற்றும் பங்களாதேசம் போன்ற இடங்களில் பெருமளவு ஹிந்துக்களின் மதமாற்றத்தால் ஹிந்துக்களின் எண்ணிக்கை விரைவாக குறைந்து வருகிறது. மதம் மாறியவர்கள் திரும்பி வர இயலவில்லை என்றால் நமது தேசத்தில் நாமே சிறுபான்மையினராக மாறும் அவலம் நேரும். ந ஹிந்தூர் பதிதோ பாவேத் – “ஹிந்து ஒருபோதும் வீழமாட்டான்” என்பது நமக்கு வழங்கப்பட்ட மற்றொரு முழக்கம். “ஹிந்து ரக்‌ஷா மம தீக்ஷா “ – “ஹிந்துக்களை காப்பதே எனது தீக்ஷை” மற்றும் “ஹிந்து மந்த்ர சமானதா“ – “சமத்துவமே ஹிந்துக்களின் மந்திரம்” போன்ற முழக்கங்கள் நம் முன் வைக்கப்பட்டன, என்றார். திரு. சேஷாத்திரி, சிக்மங்களூர் அருகே ஒரு தேவி கோயில் கட்டப்பட இருந்த நிலையில், தேவி பூசாரியின் கனவில் தோன்றி அடித்தட்டு மக்கள் , குழந்தைகள் வசிப்பதற்கு குடிசையே இல்லாதபோது தனக்கு கோயில் வேண்டாம் என்று கூறிய நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, ஏழைகளுக்கான குடிசைகள் அமைக்கப்பட்ட பின்னரே அங்கே கோயில் அமைக்க முடிந்தது என்று கூறினார். நமது தாய்மார்கள் சகோதரி நிவேதிதையை  பின்பற்றி சமூகத்திற்கு தொண்டாற்ற முன்வர வேண்டும் என்றார். சகோதரி நிவேதிதா தன்னைப் பற்றி கவலைப்படாமல், ப்ளேக் பாதிக்கப்பட்ட பகுதியில் அங்கிருக்கும் மக்களுக்காக இரவும் பகலும் துணிவோடு சேவை செய்தார். அவர் மேலும் கூறுகையில், பாரதமாதா மந்திர் அமைக்கப்பட்டுள்ளது எல்லா ஹிந்து சகோதரர்களும் ஒருங்கிணைந்து ஒரே கூரையின் கீழ் கூடி புனித அன்னை பாரத மாதாவிற்கு வழிபாடு செலுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

முன்னர், பாரதமாதா மந்திரை நிறுவியுள்ள பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இன்டோலோஜிக்கல்  ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஸ்தாபகத் தலைவர், சாது பேராசிரியர் வே. ரங்கராஜன், பூஜனீய சுவாமி விச்வேச தீர்த்தர்   மற்றும் திரு ஹெச்.  வி. சேஷாத்ரி அவர்களையும்  மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரையும் வரவேற்றார். பல்வேறு வழிபாட்டு முறைகள் மற்றும் சமயப் பிரிவுகள் காரணமாக பிரிந்து நிற்கின்ற ஹிந்து  சகோதரர்கள் அனைவரையும் விழித்தெழசெய்து, தாங்கள் அனைவரும் ஒரே தாயின் மக்கள், மற்றும் அந்த புனித அன்னை எல்லா கடவுளர்கள், குருமார்கள், மற்றும் அனைத்து சமயங்களுக்கும் தாயானவள் என்பதை உணர்த்தவே இந்த  கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்றார். சிறு வயது முதல் தான் கலந்துகொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் சங்கஸ்தானத்தில் அன்றாடம்  பாடப்பட்டு வந்த பிரார்த்தனை, பாரத மாதாவை வழிபடும் பண்பை தனது உள்ளத்தில் நிலைநாட்டி, பாரத மாதாவை மகா சக்தியாக கண்டு, அவளுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்ற உத்வேகத்தை தனது உள்ளத்தில் ஏற்படுத்தியது என்று கூறினார் அந்த கனவு தான் இப்பொழுது நிறைவேறுகிறது என்றும் அவர் கூறினார். இது வெறும் வழிபாட்டு சடங்குகளுக்காக கட்டப்பட்டுள்ள கோயில் அல்ல, மாறாக பாரத மாதாவின் மக்களான  ஹிந்துக்களின் உள்ளத்தில் தேசபக்தி மற்றும் நமது புராதன கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் ஆழ்ந்த பற்றுதல் ஏற்படுத்துவதற்கான  ஒரு பெரும் முயற்சி ஆகும் என்று அவர் கூறினார். இந்த மாபெரும் புனிதப்பணியில் தனக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்த தனது சுயம்சேவக சஹோதரர்களுக்கு அவர் நன்றியை தெரிவித்தார்.

பிரதிஷ்டை விழா சண்டி ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியோடு நடைப்பெற்றது. அதில் பூஜ்ய சுவாமிஜி மற்றும் சிறப்பு விருந்தினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கோயில் திறப்பு விழா, யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியோடு டிசம்பர் – 1 , 2004 அன்று துவங்கப்பட்டு, அதனை தொடர்ந்த நாட்களில், தாய்மார்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விசேஷ கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பு சண்டி பாராயணம் மற்றும் பூஜைகள் உடன் பிரதிஷ்டை   தினம் ஆன டிசம்பர் – 7 , 2004, அன்று அருகாமையில் உள்ள கிராமங்களைச் சார்ந்த சிறுவர் சிறுமியர்களின் சிறப்பான சத்சங்கம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகளுடன் முடிவு பெற்றது. அந்த விழாவில் உரைநிகழ்த்திய சாதுஜி,  பாரத மாதாவிற்கு கோயில் அமைக்க வேண்டும் என்ற “பவானி மந்திர்” திட்டம் மகாயோகி அரவிந்தர் அவர்கள் வழங்க, அதை நிறைவேற்றுவதை  கனவாக கொண்டவர் மாபெரும் தேசபக்தர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்,  துறவி சுப்பிரமணிய சிவம் ஆவர் என்றும், இந்தத் திட்டம் தனது  தீக்ஷா குரு யோகிராம்சுரத்குமார் அவர்களுடைய உள்ளத்திற்கும் மிக  நெருக்கமாக இருந்தது என்றும் கூறினார்.  பல ஆண்டுகளுக்கு முன்னரே, பகவான் யோகி ராம்சுரத்குமார் சாதுவிடம், அவரது இந்த திட்டம் கண்டிப்பாக நிறைவேறும் என்று உறுதியளித்திருந்தார். அந்த கனவு இன்று  நனவாகிறது என்றும் இது நிறைவேற ஒவ்வொரு நிலையிலும் பகவான் தனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை , அக்டோபர் 23, 2011 அன்று ஸ்ரீ பாரதமாதா மந்திரின் மஹாமேரு மற்றும் கோபுரத்தின் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. டாக்டர். R. L. காச்யப் என்ற புகழ்பெற்ற அறிவியல் மற்றும் வேதக்கல்வி வல்லுநர், மற்றும் ஸ்ரீ அரவிந்தோ கபாலி சாஸ்திரி வேத ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர், இதை நிறைவேற்றினார். திருமதி பிரேம குமாரியின் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. திரு B.K. ஸ்ரீனிவாசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இந்த பாரதமாதா மந்திர் சாது பேராசிரியர் ரங்கராஜன் அவர்களின் வாழ்நாள்  கனவாக இருந்தது என்று அவர் கூறினார். கர்நாடகாவின் வி.எச்.பி தலைவரான டாக்டர். சிவக்குமார் சுவாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அவர் வேதத்தின் பூமி சூக்தத்தில் இருந்து சில மந்திரங்களை விளக்கிக் கூறி பாரதமாதாவை வழிபடுவதன் அவசியத்தைப்பற்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள் ஹிந்துவாக, சனாதன தர்மத்தை பின்பற்றுவது குறித்தும், பாரத தேசத்தில் பிறந்தமைக்காகவும், பெருமை கொள்ள வேண்டும் என்று அவர்  கூறினார். அவர், சாது பேராசிரியர் ரங்கராஜனுடன் தனது நெருங்கிய தொடர்பு பற்றி குறிப்பிட்டு, இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதில் தான் மிகவும் பெருமைகொள்வதாகவும் கூறினார். வித்யா பாரதியின், தக்ஷிண மத்திய க்ஷேத்திரிய  சஹ  சங்கடனா  காரியதரிசி, திரு ஜெகதீஷ், இந்த தேசத்தின் புராதனமான தனிச்சிறப்புகளை பற்றி குறிப்பிட்டு, அனைத்து துறைகளிலும் இந்த தேசம் முன்னணியில் நின்றிருந்தது என்றும், மீண்டும் இந்த நாட்டை அந்த நிலைக்கு கொண்டு செல்ல, நாம் நமது தாய் திருநாட்டை வழிபடும் பண்பை வளர்க்கவேண்டும் என்றும் கூறினார்.

சாது பேராசிரியர் ரங்கராஜன் தனது உரையில், தனது நீண்ட கால முயற்சியான இந்த ஆலயம் குறித்து பேசினார். மேலும் அவர், மஹாயோகி அரவிந்தர் வழங்கிய  பவானி பாரதி திட்டத்திற்கேற்ப, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தேசபக்த துறவி சுப்பிரமண்ய சிவா, பாரதமாதாவிற்காக கோயில் கட்ட முயன்றதையும்,  இறுதியாக அந்த கனவு இப்பொழுது நிறைவேறி உள்ளதையும் குறித்து விளக்கினார். மற்ற கோயில்களில் உள்ளது போல் இந்த கோயிலில் எந்த கட்டுபாடுகளும் இல்லை, பக்தர்களில் எவர் வேண்டுமானாலும் உள்ளே சென்று பாரதமாதாவிற்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யலாம் என்றார்.

டாக்டர் R.L. காஷ்யப் தலைமை விருந்தினராக உரையாற்றுகையில் காஸ்மிக் கதிர்களின் தன்மை குறித்தும், அது கோபுரம் வழியாக மந்திரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மேருவை அடைந்து, மந்திர் முழுவதும் பரவுவதைப்பற்றி குறிப்பிட்டார். அவர் உண்மையான ஞானம் பெற வேதபுத்தகங்களை வாசிக்கும்படி கூறினார். பரிபூரணமான சரணாகதி அடைய காயத்ரி  மந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து கூறினார். இயற்கை அன்னை நாம் உயிர் வாழ்வதற்கு அனைத்தையும் அளிக்கின்ற பொழுதும் நாம் இயற்கைக்கு திரும்பச் செய்யும் பணி மிக அற்பமானது என்றார். நமது வாழ்க்கைக்கு ஆதாரமான பூமித்தாயை, தாய்த்திரு நாட்டை, வணங்குவதுதான்  நாம் செய்யக்கூடிய நன்றிக்கடன் என்று அவர் உரைத்தார். ஹிந்து என்பவன், இனம், மொழி, ஜாதி வேறுபாடுகள் இவைகளுக்கு அப்பாற்பட்டு, தாய்த்திரு நாட்டை வணங்குபவனாகத்தான் இருக்க வேண்டும். மொகலாயர்களும், பிரிட்டிஷாரும் தங்கள் ஆட்சிக்காலத்தில் ‘ஹிந்து’ என்ற பெயரின்  தோற்றம் குறித்த தவறான கருத்துக்களை பரப்பினார்கள் என சுட்டிக்காட்டினார். ஹிந்துவிற்கு இல்லை என்பதைபற்றியும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டதற்கு  அமைப்பாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஸ்ரீ பாரதமாதா மந்திரின் டிரஸ்டியான திருமதி பாரதி, வருகை தந்த பிரமுகர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் திரு. விவேகானந்தன் நன்றியுரை ஆற்றினார். சௌ பிரேமாகுமாரி பிரார்த்தனை கீதம் பாட, “வந்தே மாதரம்” தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

பாரத மாதா மந்திர் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து, மந்திர்க்கான மஹாகும்பாபிஷேகம், வெள்ளிக்கிழமை நவம்பர் 25, 2016, அன்றும், அத்துடன் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி நவம்பர் 26 அன்றும் பாரதமாதா பக்த சம்மேளனம் நவம்பர் 27 அன்றும் கொண்டாடப்பட்டது. வெள்ளியன்று ஸ்ரீ ஸ்ரீநிவாச மூர்த்தி அவர்களின் மேற்பார்வையில் பூஜாரிகளின் ஒரு குழு விசேஷ ஹோமங்கள் நடத்தி, ஸ்ரீ பாரதமாதாவிற்கும், மந்திரின் மேல் தளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமஹாமேருவிற்கும் , மற்றும் மெருகோபுரத்தின் மீதுள்ள கலசத்திற்கும் அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்தனர். சென்னையை சேர்ந்த ஸ்ரீ ஞான அத்வைத பீடத்தின் ஆன்மீக தலைவர் சுவாமி ஸ்ரீஹரிபிரசாத் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பாரத மாதாவை “லோக குரு”வாக வழிபட வேண்டியது குறித்து உரையாற்றினார். அடுத்தநாள் நவம்பர் 26 ஆம் தேதி நடந்த யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் ராமநாம ஜபம் மற்றும் பஜனைகளுக்குப் பிறகு சுவாமி ஸ்ரீஹரிபிரசாத்  அருள் உரை நிகழ்த்தினார். விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றிய, மொரிஷியஸிலிருந்து வந்த, அகில உலக ராம நாம இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணா கார்ஸில், பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களை தான் சந்தித்தது குறித்தும் ராமநாம இயக்கத்தின் பணிகளை பாரதத்திற்கு வெளியே பரப்புவதில் ஈடுபட்டுள்ளது குறித்தும் விளக்கினார். 

சாது ரங்கராஜன் தனது தீக்ஷா குரு யோகி ராம்சுரத்குமார் அவர்களுடைய அருளாசி மற்றும் ஊக்குவித்தல் காரணமாக, அகில உலக ராமநாம இயக்கத்தை துவக்கிய யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், பாரதமாதா குருகுல ஆசிரமம், மற்றும் யோகி ராம்சுரத்குமார் இன்டோலோஜிக்கல்  ஆராய்ச்சி மையம் ஆகியவைகளை சகோதரி நிவேதிதா அகாடமியின் கீழ் துவங்கவும் ஸ்ரீ  பாரதமாதா மந்திர் அமைத்தபின் பெங்களூரில் ஸ்ரீ குருஜி கோல்வால்கர் ஹிந்து ரிசோர்ஸ்   சென்டர் துவங்கவும் முடிந்தது குறித்து  பேசினார். ஒவ்வொரு ஆண்டும் அக்ஷய திருதியை நாளில் (ஏப்ரல் அல்லது மே மாதத்தில்) பாரத மாதா மந்திரில்,  சிறப்பான பூஜைகள் மற்றும்,  தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், கேரளாவில் ஆற்றுகாலில் பகவதி கோவிலில்  நடத்துவது போன்ற பொங்காலா விழா நடத்தி, கொண்டாடுவது பற்றி குறிப்பிட்டார். நவராத்திரியும் பாரத மாதா மந்திரில்  மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது பற்றி விளக்கினார்.

அகில இந்திய பாரதீய ஜனதா கட்சியின் பொது செயலாளர் திரு. ராம் மாதவ் பாரத மாதா பக்த சம்மேளனத்தில் உரையாற்றுகையில், பாரத மாதாவின் வழிபாடு, பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அவளது மக்களுக்கு செய்யும் சேவையே ஆகும் என்றார். ஹிந்துக்கள் முப்பத்துமுக்கோடி தேவேர்களை வழிபடுபவர்கள் ஆயினும் அந்த அணைத்தது கடவுளர்களும் ஒரே பரம்பொருளின் பல்வேறு தோற்ற்றங்கள்தான் என்பதை உணர்ந்தவர்கள் ஆவர். பாரத மாதா அனைத்து ஜாதி, மதம், மொழி ஆகியவற்றை சார்ந்தவர்களுக்கும் தாயானவள் ஆவாள் என்றும், நாட்டிற்க்கு தொண்டுபுரிவதுதான் அவளுக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த வழிபாடு என்றும் அவர் கூறினார். அமெரிக்காவில் சர்வ சமய பாராளுமன்றத்தில் உரையாற்றி புகழ் எய்திய சுவாமி விவேகானந்தர் பாரதம் திரும்பிய பின் “கொழும்பு முதல் அல்மோரா” வரை பயணம் செய்து அவர் நிகழ்த்திய உரைகளில் அவர் விடுத்த அறைகூவல், நாட்டில் வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான ஏழைகள் மற்றும் எளியோருக்கு சேவை செய்வதை வலியுறுத்தியதாகும் என்று திரு ராம் மாதவ் கூறினார். கல்விகற்ற ஒவ்வொரு இந்தியனும் தாய்த்திருநாட்டின் சேவையில் தன்னை அர்பணித்துக்கொள்ள வேண்டும் என்று சுவாமிகள்  வற்புறுத்தினார். மானிட சேவையே மகேசன் சேவை என்று அவர் முழங்கினார். அதற்கு மூன்று விஷயங்கள் தேவை  என்று சுவாமிகள் கூறினார். நாட்டிடமும் நாட்டு மக்களிடமும் ஆழ்ந்தபற்றுணர்வு, தியாக உணர்வு அல்லது பற்றற்ற சேவை உணர்வு, மற்றும் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்கான மன உறுதி ஆகியவையாகும் அவை என்று திரு ராம் மாதவ் சுட்டிக்காட்டினார்.  ஸ்ரீ ராம் மாதவ், “தத்துவ தர்சனா” காலாண்டிதழின் சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை திரு கிருஷ்ணா கார்ஸில் பெற்றுக்கொண்டார். பிரகதி கிருஷ்ணா கிராமீய வங்கியின் இயக்குனர் திரு ராகவேந்திரா கூட்டத்தில் உறை நிகழ்த்தினார்.

இன்று பெங்களூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாரதமாதா மந்திர், உத்வேகம், மற்றும் ஒற்றுமையை அனைத்து பகவானின் பக்தர்களுக்கு மட்டுமன்றி பல்வேறு நாடுகளின் இருந்து வருபவர்களுக்கும் தருகின்ற ஒரு மையமாக திகழ்கிறது. பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஆரவாரமான அறைகூவல்  இதுவே: 

“நீங்கள் எப்போதும் நமது மகத்தான குருமார்கள் காட்டிய சரியான பாதையில் பயணிக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையின் லட்சியம் தன்னைத்தான் உணர்வதே. தன்னைத்தான் உணர்ந்த ஒரு ஞானி இருந்தால் அவர் இந்த மொத்த மனிதகுலத்திற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் சரியான பாதையை காட்டுவார். 

பழங்காலத்தில் அனைத்து ஆட்சியாளர்களும், அரசர்களும் சாதுக்களையும், சன்னியாசிகளையும் மற்றும் தன்னையறிந்தவர்களையும் போற்றிப் பாதுகாத்து,  உரிய மரியாதையை வழங்கி வந்தனர். அக்காலத்தில் சாதுக்களையும் , துறவிகளையும் காப்பதற்காக தீய சக்திகளையும், அசுரர்களையும் ஆட்சியாளர்கள் நிர்மூலமாக்கினர். அதனாலேயே இந்த நாட்டில் என்னைப்போன்ற பிச்சைக்காரர்களுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்பட்டது. 

ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஒரு சக்தி உயரும் போது இன்னொன்று தனது முக்கியத்துவத்தை இழக்கும். இன்னொரு சக்தி தோன்றுகையில் முந்தைய ஒன்று காணாது போகும். இதுவே இயற்கையின் நியதி. ஆனால் என் தந்தை எப்போதும் இந்த அனைத்து சக்திகளின் பின்னால் இருந்துக்கொண்டு அவர் சிறந்தது வெல்வதை பார்ப்பார். 

நமது நாடு, ஞானிகள், துறவிகள், சாதுக்கள் மற்றும் தன்னையறிந்தவர்களின் நிலமாகும். அவர்கள் இந்தியாவை வழிநடத்தி மொத்த பிரபஞ்சத்திற்கும் பின்பற்ற வேண்டிய வழியை காட்டுமாறு செய்வார்கள். எனவே நீங்கள் எனது தந்தை மற்றும் அனைத்து சாதுக்களின் மொழிகளையும் பின்பற்ற வேண்டும். சுவாமி ராம தீர்த்தா கூறுகையில், அவர் எப்போதும் நம்மிடையே ஏதேனும் ஒரு மனித வடிவில் இருந்து நமது இலக்கை நாம் அடைகிறோமா என்பதை பார்ப்பார் என்று உரைத்துள்ளார். 

சுவாமி ராம்தாஸ் , அரவிந்தர், ராம் தீர்த்தா , மகாத்மா காந்தி , சுப்பிரமண்ய பாரதி மற்றும் பிற மகா குருமார்கள் முன்னறிந்து  கூறியது போல்  இப்பொழுது நேரம் வந்திருப்பதால், இந்தியா மட்டிலுமே சரியான பாதையை காட்ட இயலும். 

சிறிது காலம் ஜப்பான் செழித்தது, பின்னர் ஜெர்மனி, இத்தாலி , அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து. இனிமேல், இந்தியா மட்டுமே மொத்த பிரபஞ்சத்தையும் வழிநடத்தும். என் தந்தை அந்த பணியை சிறப்பாக செய்வார்.

பாரதமாதாவே லோக குரு மற்றும் லோக மாதா. அவள் மட்டுமே இந்த மொத்த பிரபஞ்சத்தையும் வழிநடத்துவாள். “ 

வந்தே மாதரம் ! ஜெய் ஸ்ரீ ராம் ! ஜெய் யோகி ராம் சுரத்குமார் !

ஸ்ரீ பாரதமாதா மந்திர்

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.29

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.29 

எனது குருவின் பக்தர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

பரம்பூஜ்னீய ஸ்ரீ குருஜி கோல்வால்கர் இந்த சாது ரங்கராஜனின் வழிகாட்டிகளில் ஒருவர். அவர் சமயம் அல்லது ஆன்மீக இயக்கங்கள் நித்திய கங்கையை போல் எப்போதும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்றும் அது ஒரு ஆசிரமம் அல்லது மத அமைப்பின் நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டால் அது தேங்கி மாசடையும் என்றும் கூறுவார். பாரத தேசத்தின் மத வரலாற்றில் பல வலிமையான சமய மற்றும் ஆன்மீக இயக்கங்கள் பல பெரும் மகாத்மாக்களால் துவங்கப்பட்டன. அவைகளில் பல ஆணவமும் அதிகார மோகவும் கொண்ட  தலைவர்களால், மற்றும் தமக்குள்ளேயே  மோதிக்கொள்ளும் குழுக்களால் இன்று தேங்கிய குட்டைகளாக அல்லது பாழடைந்த கிணறுகளாக மாறியுள்ளன. பக்தர்களுக்கு ஆன்மீக ஆற்றலை ஊட்டும் ஜீவநதிகள் ஆக இருப்பதற்கு பதிலாக ஆணவமிக்க சில பேர்களின் அதிகார போராட்டத்திற்கான மையமாகவும், ஏமாளி பக்தர்களை சுரண்டுகின்ற இடங்களாகவும் மாறியுள்ளன. 

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் மஹாசமாதிக்குப்பின் அவரது ஆசிரமம் அவரது பக்தர்களை ஒன்றிணைத்து பகவானின் நோக்கத்தை பரப்பாமல், அனைத்து மத நிறுவன அமைப்புக்களைப்போல் பல உட்பிளவுகளுக்கு ஆளாகியது இந்த சாதுவிற்கு பெரும் வலியை தந்தது. மே 6 2001 அன்று இந்த சாது யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தின் யோகா வகுப்புகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கையில், பகவானின் பக்தரான திரு. ராஜகோபால் என்பவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பை பெற்றார். அவர் ஜஸ்டிஸ் திரு. அருணாச்சலம் அவர்கள் பெங்களூர் வந்திருப்பதாகவும், அவர் சாதுவை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். சாது ஜஸ்டிஸ் அவர்களை காந்திநகரில் உள்ள ஓட்டல் கனிஷ்காவில், அவர் தங்கியிருந்த இடத்தில் சந்தித்தார். அங்கே சாது திரு. அருணாச்சலம் அவர்களிடம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் உள்ளவர்களிடையே உள்ள தொடர்புகள் நல்லுறவிற்கு வெகு தொலைவே இருப்பதைப்பற்றி மனம் விட்டு பேசினார். விவாதித்து முடிந்தப்பின், இந்த சாது, திரு. சக்திவேல் மற்றும் திரு. ராஜகோபால் அவர்களால், பாரதமாதா குருகுல ஆசிரமத்த்திற்கு திரு. அருணாச்சலம் அவர்களின் காரில் திரும்ப அழைத்து வரப்பட்டார்.

சாது பகவானின் பணிகளில் ஈடுபட்டிருந்தமையால் அவருக்கு ஆசிரமத்திற்கு செல்வதற்கான நேரம் வாய்க்கவில்லை. ஆகஸ்ட் 2, 2001 ல் சாது சிங்கப்பூர் செல்லும் முன் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிங்கப்பூர் லஷ்மி நாராயணா கோயிலில் சாது பகவத்கீதை குறித்த தொடர் விரிவுரைகளை ஹிந்தி மொழியில் வழங்கினார். மேலும் ஆகஸ்ட் 10 அன்று இந்தியா திரும்பும் முன் ராமநாம ஜப யக்ஞத்தை நடத்தினார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், சாது, தென்ஆப்பரிக்கா மற்றும் கென்யா பயணத்தில் மும்முரமாக இருந்தார். தென் ஆப்பிரிக்காவின் க்வாஸுளு நேடாலில், சாட்ஸ்வர்த்தின் சர்வ தர்ம ஆசிரம வளாகத்தில், செப்டம்பர் 24, 2001, திங்கள் அன்று, சாது, “யோகி ராம்சுரத்குமார் ராம்நாம் பரிக்ரமா மந்திர்” என்னும் பிரார்த்தனை அறையை துவக்கி வைத்தார். அந்த மந்திரின் திறப்பு விழா    கணபதி, காயத்ரி, ம்ருத்யுஞ்ஜய மற்றும் ராமநாமதாரக ஹோமங்களுடன் நடைப்பெற்றன. சாதுஜி, ராமநாமத்தின் சிறப்பு, மற்றும் அந்த தாரக மந்திரத்தை இடைவிடாது ஜெபித்து ஆன்மீகத்தின் உச்ச நிலையை எட்டிய பப்பா ராமதாஸ் மாதாஜி கிருஷ்ணா பாய் மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஆகியவர்களின் வாழ்க்கை குறித்து உரையாற்றினார். பல இனம், மொழி, மதங்களை சேர்ந்தவர்களும் ராமநாம தாரக மந்திரத்தை தொடர்ந்து அங்கே, யோகி ராம்சுரத்குமார் அவர்களின் குருநாதர் பப்பா ராமதாஸ் ஏற்படுத்திய ஆனந்தாசிரமத்தில் உள்ளதுபோல், வருஷத்தின் 365 நாட்களும், அனைத்து நேரமும் ஜபிக்கப்படுகிறது. அந்த மந்திரின் மையத்தில் உள்ள மேடையில், காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமம் மற்றும் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித மண்ணை பாதுகாத்து அதன்மீது ஒரு புனித விளக்கு நிறுவப்பட்டது. அந்த விளக்கைச்சுற்றி பல தெய்வங்கள் மற்றும் யோகி ராம்சுரத்குமார் படங்கள் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கே சுற்றி வந்து ராமநாம தாரக மந்திரத்தை நாள் முழுவதும் கூறுவார்கள். இந்தியர்கள் மட்டுமல்லாது பல கறுப்பின மக்களும் மற்றும் வெள்ளையர்களும் இந்த கோயிலை வலம் வருவார்கள். 

சாது கென்யாவிற்கு தீபாவளி நாளுக்கு முன் மாலையில் வந்து, நைரோபியில் ஹிந்து  சகோதர சகோதரிகளுடன் விழாவை கொண்டாடினார். அவர் கென்யாவில் தங்கியிருந்த போது, சனாதன ஹிந்து தர்ம சபை கோயில், ஜெயின் மந்திர், சுவாமி நாராயண் கோயில், ஹரே கிருஷ்ணா கோயில், தியாசஃபிகல் சொஸைட்டி, தீனதயாள் பவனில் அமைந்த பாரதீய ஸ்வயம்சேவக் சங்க், குஜர்  சுத்தர் விஸ்வகர்மா கோயில், ஸ்ரீ அரவிந்தோ சங்கம், மற்றும் ஆர்ய சமாஜ் போன்ற இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும் அவர் கென்யா ஹிந்து கவுன்சிலின்  செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு “ஹிந்து அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு“ குறித்து பேசினார். கென்யாவிலும் சகோதரி நிவேதிதா அகாடமி மையம் நிறுவப்பட்டது. 

பகவானின் ஜெயந்தி பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் டிசம்பர் 1 2001 அன்று நடைபெற்றது. பகவானின் முதல் திதி பூஜை மார்ச் 10, 2002 அன்று  கொண்டாடப்பட்டது. மே – 31, 2002 அன்று சாதுஜி, திருமதி. பாரதி, அமெரிக்காவின் திரு. நந்தி ஜேத்தி, டெல்லியை சேர்ந்த திரு. P.N. கல்ரா, பெங்களூரை சேர்ந்த திரு. அசோக் மட்டூ  மற்றும் அவரது மகள் ரோஹிணி ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு காரில் பயணித்து, யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்திற்கு வந்தனர். அடுத்தநாள் காலை, கிரிபிரதட்சணம் செய்தபிறகு, ராமநாம ஜபம் மற்றும் ஆரத்தியை பகவானின் சன்னதியில் நிகழ்த்தினர். அவர்கள் ஜஸ்டிஸ் அருணாச்சலம், மா தேவகி, மா விஜயலட்சுமி, திரு. சுவாமிநாதன், மற்றும் பல ஆசிரமத்தினரை சந்தித்துவிட்டு, அருணாச்சலேஸ்வரர் கோயில், ரமணாச்ரமம், மற்றும் சேஷாத்ரி சுவாமி ஆசிரமம், ஆகிய இடங்களில் தரிசனம் செய்துவிட்டு, பாண்டிச்சேரிக்கு பயணித்தனர். அங்கே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் போன்ற இடங்களுக்கு பயணித்தப்பின் அவர்கள் திருக்கோயிலூர் வந்தனர் அங்கே ஞானானந்தா தபோவனத்தில், சுவாமி சதாசிவ கிரி, அவர்களை வரவேற்றார். பின்னர் அவர்கள் உலகளந்தபெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு  பெங்களூர் திரும்பினர். செப்டம்பரில் பக்தர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தபோது சாது ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்றார். அங்கே சுவாமி சச்சிதானந்தர் மற்றும் சுவாமி முக்தானந்தா போன்றோர் சாதுவை வரவேற்றனர். அவர்கள் நித்தியானந்தா ஆசிரமத்திற்கும் பயணித்து பின்னர் அவர்கள் தர்மஸ்தலாவிற்கு சென்றனர். அங்கே அவர்கள் திரு. விரேந்திர ஹெக்டே அவர்களை பெங்களூர் திரும்பும் முன் சந்தித்தனர். 

அக்டோபர் 28, 2002, திங்கள்கிழமை அன்று, திருமதி. ரெஜினா சாரா ரயன் மற்றும் திருமதி. உடே அகஸ்ட்டினியக்  போன்ற திரு. லீ லோசோவிக்கின் சீடர்கள் பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு மூன்று நாட்கள் தங்குவதற்கு வந்திருந்தனர். அப்போது சாதுவிடம் ரெஜினா ஒரு விரிவான, ஆழமான நேர்காணலை, பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்து, தனது பெரும் பணியான, “ஒன்லி காட் – எ பயோகிராபி ஆஃப் யோகி ராம்சுரத்குமார்“ (Only God—A Biography of Yogi Ramsuratkumar) என்ற புத்தகத்திற்காக, நிகழ்த்தி, பல புகைப்படங்களை சாதுவிடம் கேட்டு பெற்றார். ‘தத்துவ தர்சனா’வின் பழைய இதழ்களையும் வாங்கிக் கொண்டார். பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி குருகுல ஆசிரமத்தில் அகண்ட ராமநாம ஜபத்துடன் டிசம்பர் – 1, 2002 ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பெற்றது அவ்விழாவில் தர்மாச்சாரியர்களான சுவாமி சதானந்தா மற்றும் சுவாமி அபய சைதன்யா போன்றோர் உரையாற்றினா். 

சாது திரு. அருணாச்சலம் அவர்களை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2, 2003 அன்று, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அகில உலக ராம நாம இயக்கத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர், திரு. D.S.கணேசன், அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சத்சங்கத்தில் சந்தித்தார். மார்ச் 27, 2003, வியாழன் அன்று பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் பகவானின் இரண்டாம் ஆண்டு திதி பூஜை நடைப்பெற்றது. ரெஜினா, பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்த மேலும் விவரங்களை கேட்டு ஒரு கேள்வி பட்டியலை அனுப்பியிருந்தார். சாது அவரது கேள்விகளுக்கு விரிவான பதிலை வெள்ளிக்கிழமை அன்று அனுப்பினார். 

சாது 5-4-2003 அன்று திரு.A. வைத்தியநாதன் மற்றும் திரு. R. குருராஜ் என்னும், கடலூர் வழக்கறிஞர்களிடமிருந்து, திரு. S. பார்த்தசாரதி, திருவண்ணாமலை, பகவானின் பக்தர், சார்பாக ஒரு சட்ட நோட்டீஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி திரு சதாசிவம் முன்  சமர்ப்பிக்கப்பட்டிருந்த  உறுதிமொழி மற்றும் மனுக்களின் பிரதிகளுடன், பெற்றார். அதில் மனுதாரர் திருவண்ணாமலை துணை பதிவாளரை முதல் பதிலளிப்பவர், யோகி ராம்சுரத்குமார் டிரஸ்ட்டை இரண்டாம் பதிலளிப்பவர், மற்றும் சாது ரங்கராஜன், N.S.மணி, திருமதி. ப்ரபா சுந்தரராமன், T.S. ராமனாதன், ஜஸ்டிஸ். T.S. அருணாச்சலம், மா தேவகி, அன்னை. விஜயலட்சுமி, அன்னை விஜயக்கா, திரு. R. ஆஞ்சனேயலு, சென்னை வருமான வரி இலாகா ஆணையர், மா தேவகி வேதபாடசாலை டிரஸ்ட், திரு. விஸ்வநாதன் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, திருவண்ணாமலை, ஆகியோர் மூன்று முதல் பதினாறு வரையிலான பதிலளிப்பவர்களாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் யோகி ராம்சுரத்குமார் டிரஸ்ட் புனரமைக்கப்பட்டதை எதிர்த்ததோடு அல்லாமல் அதைச் செய்ய பகவானுக்கு அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். யோகி ராம்சுரத்குமார் அவர்களின் மஹாசமாதிக்கு பிறகு  வாரிசு  உரிமைக்காக போராட்டம் நடப்பதாகவும், அந்த ட்ரஸ்ட் இக்கட்டான நிலையில் உள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த வழக்கு முடியும் வரை, இப்பொழுது உள்ள மற்றும் பழைய  டிரஸ்டிகள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டிருந்தார்.

ஏப்ரல் 10, 2003 அன்று, ஜஸ்டிஸ் அருணாச்சலம் எழுதிய ஒரு கடிதத்தில், அந்த ரிட் பெட்டிஷன் குறித்து விவாதிக்க, ஏப்ரல் 27 , 2003 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அன்று, ஆசிரம வளாகத்தில், பகவானின் பக்தர்கள் பங்குபெறும் ஒரு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, சாதுவை அழைத்திருந்தார். ஆனால் சாது, ஆசிரமத்தின் டிரஸ்டி என்ற நிலையில் இருந்து, எப்போது எந்த காரணத்திற்காக, எந்த முன் அறிவிப்போ தகவலோ தரப்படாமல், நீக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்கே தெரியாது. அவர் அதனை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அவரது பகவான் மீதான நம்பிக்கை, பகவானின் சித்தம் இன்றி எதுவும் நடைபெறாது என்ற ஆழந்த நம்பிக்கையின் காரணமாக, அவர் தனக்கு பகவான் இட்ட பணிகளை செய்ய விரும்பினாரே அன்றி எந்த பதவியையும் அடைய அவர் ஆசைக்கொள்ளவில்லை. மேலும் பகவான் சாதுவிற்கு  தீக்ஷை அளித்தபின், பதிமூன்று வருடங்களில் பல முறை, சாதுவுடனும் மற்ற நெருங்கிய பக்தர்களிடமும் உரையாடுகயில், சாது தான் தனது முதன்மையான சிஷ்யர் என்றும், தனது தந்தை அளித்துள்ள மிக முக்கியமான ஒரு பொறுப்பை தான் அவர்க்கு வழங்கியுள்ளதாகவும், ஆஸ்ரம வேலைகளில் அவரை சிக்க வைக்கலாகாது என்றும் கூறியுள்ளார். பகவான் சாதுவை, ஏதேனும் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்பொழுது, அல்லது பகவான் சார்பில் ஏதாவது மிக முக்கியமான பொறுப்பை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்படும் பொழுது மட்டும், தன்னருகில் அழைப்பார்.

சாது பகவானின் பக்தர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை போன்ற கடிதம் ஒன்றை எழுதி, அதனை ஜூன் 2003 இதழான ‘தத்துவ தர்சனா’விலும் வெளியிட்டார்: 

“தலையங்கம் 

எனது குருவின் பக்தர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு!” – “எத்தனை மகான்கள் தோன்றியுள்ளனரோ அத்தனை பேர்களுக்கும் எங்கள் வந்தனங்கள்” –. இது ஸ்ரீ தியாகராஜர் அவர்களின் பாடல். எனது தீக்ஷா குரு யோகி ராம்சுரத்குமார் எல்லாவிதங்களிலும் அந்த மகானின் மறு அவதாரம் போல்  திகழ்ந்தவர் அவர். அவர் மிகுந்த எளிமை மற்றும் தாழ்மையான வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது குரு, காஞ்சன்காடு ஆனந்தாசிரமத்தின் பூஜ்ய பப்பா ராமதாஸ் அவர்கள் அவருக்கு தீக்ஷை அளித்த மந்திரத்தின்  நாயகனை, ஸ்ரீ ராமனை, தனது தந்தையாக ஏற்று, அனவரதம் அவரிடம் தீவிர பக்தி கொண்டிருந்தார். இந்த மந்திரத்தை தன் வாழ்நாள் முழுவதும் ஜெபித்து வந்தார். அனைத்து சாதுக்கள் சன்யாசிகள் மற்றும் மகாத்மாக்கள் இடம் அபாரமான மதிப்பும் மரியாதையும் அவர் வைத்திருந்தார். ஸ்ரீ தியாகராஜர் பாடுகிறார், நிதி சால சுகமா ராமுனி சன்னதி சேவா சுகமா?“ — “ஆனந்தம் எங்கே இருக்கிறது? பணத்திலும் பொருளிலுமா  அல்லது ராமபிரானின் சேவையிலா?” அரச மரியாதைகளும்  பேரும் புகழும் அவரது இல்லக் கதவுகளை தட்டிய பொழுதிலும், அவற்றை தூக்கி எறிந்து,   மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அவர். அதுபோலவே எனது குருநாதர் யோகி ராம்சுரத்குமார், பெயர், புகழ், மற்றும் பணம் படைத்தவர்கள் மற்றும் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்கள் ஆதரவு,  ஆகியவற்றை   துச்சமாக தள்ளினவர் ஆவர். அவருக்கு உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இருந்ததில்லை. இந்த சாது, பலமுறை, பகவான் ஒரு விவசாய தொழிலாளி, அல்லது தெருவில் காய்கறி விற்பவர் போன்றவர்களையும் பெரும் தொழிலதிபர், உச்ச நீதிமன்ற நீதிபதி, பெரும் அரசியல்வாதி, புகழ்மிக்க திரைநட்சத்திரம் ஆகியோரையும் ஒன்றாக பாவித்து தனதருகே அமரச் செய்வார். அவர் தனக்கும் தனது சிஷ்யனிற்கும் இடையேயும் எந்த பாகுபாடும் பார்த்ததில்லை. பல நேரங்களில் நாங்கள் ஒன்றாக, கரங்களை பற்றிக் பற்றிக்கொண்டு அமர்ந்திருக்கிறோம், தெருவில் நடந்து இருக்கிறோம், ஒரே இலையில் சாப்பிட்டு, அருகருகே. தரையில், நீண்ட கால நண்பர்களைப் போல ஒன்றாக படுத்திருக்கிறோம். பல்வேறு ஹிந்துசமய மற்றும் ஆன்மீக இயக்கங்களில், பல பொருப்புகளில், இந்த சாதுவின் முப்பதாண்டு ஹிந்து சேவையில், உலகப் புகழ்பெற்ற துறவியர்கள், பல மகான்கள், மற்றும் சாதுக்கள் பலருடைய தொடர்பை பெற்றிருந்துள்ள  போதிலும், யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு இணையாக எவரையும் இந்த சாது சந்திக்கவில்லை. யோகி ராம்சுரத்குமார், மஹாயோகி என்ற வரையறைக்கு, தபஸ்வி பாபா அவதூத் குறிப்பிடுவதை போல், மிகவும் பொருத்தமானவர்: ம்ருதவத் – பாராட்டு அல்லது கண்டனம், , நன்மை அல்லது தீமை எது ஏற்பட்டாலும் சலனப்படாதவர், ப்ரஷ்ட பீஜவத் – முளைக்காத விதையைப்போல் அனைத்திலும் பற்று இல்லாதிருப்பவர், பாலவத் – குழந்தையை போன்று வெகுளியாக இருப்பவர், உன்மத்தவத் – பித்தனைப் போல் இருப்பவர், பிசாசவத் – பேய் போல், குளித்தோ அல்லது குளிக்காமலோ, நன்றாக உடுத்தியோ அல்லது அழுக்கு கோணிகளை உடுத்தியோ, உடல் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பவர், ஆனால் அதே சமயம் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் எப்பொழுதும் காணப்படுபவர்: முதிதா  – பெருங்களிப்பு, கருணா – இரக்கம், மைத்ரீ – நட்புணர்வு, உபேக்‌ஷா –அலட்சியம். 

இத்தகைய துறவுநிலையில் வாழ்கின்ற ஒரு மஹானுடன் சில கணங்கள் இருப்பது கூட வாழ்க்கையின் பெரும் ஆசிர்வாதம். பல தூர தேசங்களில் இருந்து வருபவர்கள் சில நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்கள் அவருடன் இருந்தாலே அந்த மகிழ்வான தருணங்கள் தரும் அனுபவம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் நினைவில் பேணுவார்கள். அவரை ஒரு முறை கூட நேரில்  தரிசிக்க வாய்ப்பு பெறாத பலர், தென் ஆப்பிரிக்காவின் சார்ட்ஸ்வர்த்தில் உள்ள சர்வதர்ம ஆசிரமத்தில், யோகி ராம்சுரத்குமார் ராம்நாம் பரிக்ரமா மந்திரில், அவரது பெயரை பாடி, அவரது படத்தை சுற்றிச் சுற்றி வருகின்றனர். பலர் தங்கள் வாழ்க்கையில் விவரிக்க இயலாத பெரும் மாற்றங்களை தங்கள் உலகாயத மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் பெற்று வருகின்றனர். 

ஆனால், பகவானோடு நீண்டகாலமாக தொடர்பிலிருந்துள்ளவர்கள், உண்மையில் பகவானுக்கு ‘நெருக்கமான’ அல்லது ‘தொலைவான’ வட்டங்கள் என எதுவும் இல்லாதபோதும், தங்களை அவரது ‘நெருக்கமான’ வட்டத்தை சேர்ந்தவர்களாக கருதிக்கொள்கிறவர்கள், தங்களது  கர்வம், அகங்காரம் , தற்பெருமை , ஆசைகள் , பரஸ்பர பொறாமை , பொல்லாங்கு போன்ற குணாதிசயங்களை துடைத்து நீக்காமல் இருப்பது மிகவும் விசித்திரமானதாகும். எனது குரு அனைத்து வகையான மக்களையும் அவருக்கு அருகே வர அனுமதிப்பார். நிலையான இருப்பிடம் அற்றவர்கள், காசில்லாதவர்கள் மற்றும் குடிபோதையில் இருப்பவர்கள் வந்து அவரது அருகில் அமர்வதை இந்த சாது பார்த்திருக்கிறான். அதே நேரத்தில் வேறு சாது அல்லது மஹாத்மா அவர்முன் அமர்ந்திடுக்கக்கூடும். ஆனால், பாகவான், தன் முன் அமர்ந்திடுப்பவர்களிடையே எந்த பாகுபாடும் கண்டதில்லை. ஒரு முறை கிராமத்துப் பெண்மணி ஒருவர்  பகவான் முன் தோன்றி தனது கணவன் குடிபோதையில் ஒரு போலீஸ்காரரை தாக்கினதால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாக கூறி அழுது புலம்பினாள். பகவான் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியதோடு, அவளது கணவனை விடுவிக்க “எனது தந்தையிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி, அந்த பெண்மணிக்கு இரவு உணவையும் தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்தார். பகவானது இரக்கமும், கருணையும் அளவற்றது, கீழே விழுந்தவர்களை கூட எழுந்து நிற்கச் செய்து திருந்தி வாழ வழி வகுத்து கொடுத்துள்ளது. ஆனால், அதே சமயம், கல்வி கற்ற, வசதிபடைத்த, சமூகத்தில் மேல் நிலையில் உள்ள, பல பேர்கள், அவர்கள் ஒழுக்க குறைவு  உடையவர்கள் ஆக  இருந்தால்கூட,   பகவானிடம் நெருங்கி  சில ஆயிரம் ரூபாய்களை செலவழித்து பகவானுக்காக பிறந்தநாள் விழா கொண்டாடவோ  அல்லது ஆசிரமம் அல்லது கோயில் கட்ட  நன்கொடை அளித்தாலோ,    பகவானுடைய அருள்  கிடைத்துவிடும் என்றும்  அதன்மூலம் தங்கள் உலகாயத பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றும்  நம்புகின்றனர். பக்தர்களை காண்பதற்கு பகவானின் உடல்நிலை சரியில்லாத காலத்திலும் தொலைவில் நின்று அவரை தரிசித்து விட்டு செல்ல வேண்டும் என்று எண்ணி அவர் இருக்கும் இடத்திற்கு வந்த  பாமர மக்களை விட, பகவானிடம் நெருங்கிய தொடர்பிலுள்ள  தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைத்த சிலபேரும் இருக்கத்தான் செய்தார்கள். சந்தனமரத்தின் மரத்தின் கீழ் நீண்டகாலமாக கிடந்தால்  கற்கள் சந்தானத்தின் வாசத்தை பெற்றுவிடுமா? அதைப்போலவே குருவுடன் அருகாமையில் இருந்த போதும் அவர்கள் குருவின் அருளாசியை பெறுவதில்லை. இத்தகைய நிகழ்வுகளை நாம் மஹா குருவின் லீலைகளாகவே காண்கிறோம். 

1996 ல் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் திருவண்ணாமலையில் எழுப்பப்பட்டு வந்த நேரத்தில், இந்த சாது குருநாதரின் ஆணையை ஏற்று ஒரு சிறப்பு கட்டுரை, “எனது தீக்ஷா குருவிற்கு வணக்கங்கள்” என்ற தலைப்பில்,  ஆசிரம நினைவு மலருக்காக எழுதினான். அதே கட்டுரை மீண்டும் ‘தத்துவ தர்சனா’வில் நவம்பர் 1995 – ஜனவரி 1996 இதழில், நினைவு மலரில் அச்சிடாமல் விட்டுவிடப்பட்ட ஒரு பத்தியும் சேர்க்கப்பட்டு, வெளிவந்தது. அந்த விடுபட்ட பத்தியில் நாங்கள் குரு தந்த தீர்க்க தரிசனத்தோடேயே குறிப்பிட்டிருந்தோம்: “கோயில்களும், ஆசிரமங்களும் சாதனா செய்வதற்கான இடங்கள், தனிப்பட்ட மனிதர்கள் தங்களை லௌகீக வாழ்விலிருந்து ஆன்மீக வாழ்க்கைக்கு உயர்த்திக்கொள்ள உதவும் ஒரு தளம். இவைகள் தெய்வத்தோடோ, தெய்வீகத்தோடோ ஒருவரின் லௌகீக விருப்பத்திற்கோ அல்லது சுகத்திற்கோ பேரம் பேசும் இடமல்ல. அவைகள் பொழுதுபோக்கும் இடமோ அல்லது விடுமுறைகளில் வந்து தங்கி கதைகளையும், அற்புதங்களையும் மற்றும் கற்பனைகளையும் விவாதிக்கும் இடமும் அல்ல. ஆகம மற்றும் சில்ப சாஸ்திரங்களும், தொடர்ச்சியான சாதனா மற்றும் பரிபூரண எண்ணங்களின் பரிசுத்தம், சொல் மற்றும் செயல்களின் பரிசுத்தம் போன்றவற்றை ஆன்மீக மையங்களின்  கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்களிடமும்  ஆசிரமத்தை பராமரிப்பவர்களிடமும் அதனை பயன்படுத்துபவர்களிடமும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன, அனைத்து பெரிய மற்றும் புராதனமான கோயில்களும், ஆன்மிக இல்லங்களும் அபாரமான ஆன்மீக வலிமையும், சாதனாக்களும் கொண்ட மனிதர்களாலேயே கட்டப்பட்டன. இத்தகைய புனிதமான மையங்கள் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல,  அவை நிரந்தரமாக இருப்பதற்கும், தொடர்ந்த சாதனா அதன் பக்தர்களிடமும்  இத்தகைய நிறுவனங்களை பராமரிப்பதில் ஈடுபடுபவர்களிடமும் மிகவும் அவசியம். எங்கேயெல்லாம்  தவறுகிறார்களோ அங்கேயெல்லாம் அந்த நிறுவனமானது, அதில் நிறுவப்பட்ட சக்திமிக்க தெய்வம் அல்லது அதனை உருவாக்கிய குருமார்கள் எட்டியிருந்த ஆன்மீக உயரம் ஆகியவைகளைகடந்தும் வீழ்ச்சி அடைந்து விடுகிறது.”

இப்போது பகவான் யோகி ராம்சுரத்குமார் நம்மிடையே   ஸ்துலமாக இல்லை. குருதேவரின் உண்மையான பக்தன் அல்லது பக்தையாக இருப்பதற்கு ஒவ்வொருவரும் அவர் கடைபிடித்த எளிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். அவரது  காலடித.தடங்களை பின்பற்றி, அவர் வாழ்ந்ததுபோல் புனித வாழ்வு வாழாமல்,  அவரது பெயரை பாடுவதும், “யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார்” என கூக்குரல் எழுப்புவதும் பலன் அளிக்காது. அவரது பக்தர்கள் அவர் இருந்தபோது நிறுவிய ஆன்மீக சகோதரத்துவம், இன்று பக்தர்களிடையே பொறாமை, தப்பெண்ணங்கள், மற்றும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்ளுதல் போன்றவைகளால் உடைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். இது நடைபெறவில்லையெனில், அது அவரது தோல்வியோ அல்லது அவரது இலக்கின் தோல்வியோ அல்ல, ஆனால் அவரது  பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அவர் வாழ்ந்து காட்டிய மற்றும் போதித்த உயர்ந்த இலட்சியங்களை வாழ்க்கையில கடைபிடிக்க தவறியதையே சுட்டிக்காட்டும். மழைபோல் பொழிகின்ற பகவானது  அருளை ஏற்றுக்கொள்வதற்கு தங்களது இதயங்களை திறந்துவைக்க தவறியவர்கள் ஆக அந்த பக்தர்கள் ஆகிவிடுவார்கள்.

இந்த பாரததேசமானது பல ஞானிகளையும், மகான்களையும் வெவ்வேறு காலநிலைகளிலும் கண்டுள்ளது. இருப்பினும் சூரிய உதயத்தின் பொழுது தாமரைகள் மலர்வது போல் இந்த மகான்களின் வருகையினால், சில பாக்கியம் செய்த புண்ணியாத்மாக்கள் தான் ஆன்மீக உணர்வை பெறுகின்றனர்.. நமது வாழ்க்கை மிகவும் குறுகியது. நமது பெயர், புகழ், பணம், ஆரோக்கியம், பெருமை, அகங்காரம் போன்றவை நமது வாழ்க்கை முடியும்போது காணாமல் போகும். ஒரு புத்திசாலி எப்போதும் வாழ்க்கையின் நிலையாமையை அறிந்து கொள்வான். நாம் நமது ஆன்மீக பாதையில் பயணிக்கும் பொழுதும், உலக வாழ்க்கையில் நாம் சேமித்து வைத்துள்ள நமது வாசனைகள் அல்லது விருப்பு வெறுப்புகள், தெரிந்தோ தெரியாமலோ நமது இதயத்தை பாதித்து, நமது ஆன்மீக முயற்சிகளை குலைக்கும். மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள்; நிறுவனங்கள் வரும், போகும்; ஆனால் தனிமனிதன் ஆன்மீக வாழ்வில் அடையும் முன்னேற்றம் அவனது சுயமுயற்சியினாலேயே சாத்தியமாவது. 

 உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்।

 ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:॥ (பகவத் கீதை – 6.5)

“உன்னை நீயே உயர்த்திக்கொள். உன்னை இழிவு படுத்திக் கொள்ளாதே. நீயே உனக்கு நண்பன். நீயே உனக்கு பகைவன்”.

இது பகவத்கீதையின் வாக்கு, நமது முயற்சிகளை நாம் சுயமாக மேற்கொண்டால் மட்டுமே பகவான் யோகி ராம்சுரத்குமார் நமக்கு உதவ இயலும். பகவான் சொர்க்கம், பூமி, அல்லது நரகத்தில் இல்லை. அவர் எல்லா உயிர்களின் உள்ளத்திலும் இருக்கிறார். அவர் இந்த உலகத்தின் மிகப்பெரிய பாவியின் உள்ளத்திலும் இருக்கிறார். அறியாமையே பாவத்திற்கு காரணம். ஞானம் பிறக்கும் பொழுது கொடிய பாவிகூட மஹா ஞானி ஆகிவிடுவான்.  அறியாமையை களைந்து, ஞானத்தின் ஒளியை நோக்கி, நாம் அனைவரும் பயணிப்போம் ஆக.

மூத்தவர் மற்றும் ஞானம் பொருந்தியவர் என்று தங்களைத்தானே நினைத்துக்கொள்பவர்களுக்கு அறிவுரை வழங்க, இந்த சாது மிக தாழ்மையானவன், அவசியமற்றவன். இருப்பினும் எனது தீக்ஷா குருவின் சீடனாக, இந்த சாதுவின் உள்ளம், குருவின் பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு எனது குருநாதனின் பெயரில் உள்ள ஆசிரமத்தின்  நிர்வாகம் சம்பந்தமாக நீதிமன்றத்தில்  வழக்கு தொடர முன்வந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது., இது ஒன்றும் எனது சகோதரர்களிடம் மட்டும் காணப்படும் பலவீனமல்ல, பெரும்பான்மையான ஒழுங்கமைக்கப்பட்ட மத நிறுவனங்கள் சந்தித்து வந்துள்ள ஒரு சாபக்கேடாகும். மதமும், ஆன்மீகமும் நிறுவனமயமாக்கப்படும் போது சிதைந்துவிடும். புகழும், சொத்து சேரலும், நிறுவனத்திற்கு உயர்கையில், அங்கே அதிகாரத்திற்கும், பதவிக்கும் போராட்டங்கள் நடப்பது சாதாரணமாகும். அனைத்து புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமய நிறுவனங்களும் இது போன்ற உள் அமைப்பு சண்டைகள் பலவற்றை சந்தித்துள்ளன. ஆனால் இவ்விதம் பரஸ்பரம் இழிவுபடுத்திக் கொள்ளுதல் மற்றும் குற்றச்சாட்டுகளை வீசிக்கொள்வது எந்த மஹாத்மாவின் பெயரில் இந்த ஸ்தாபனங்கள் அமைக்கப்படுகின்றனவோ  அதை களங்கப்படுத்துகிறது. இத்தகைய ஒரு நிலை எனது குருநாதனை  பின்பற்ற விரும்புவர்களுக்கு ஏர்ப்படாமல் இருக்கட்டும். இத்தகைய குழிகளில் விழாமல் இருக்க, நம் அனைவருக்கும் நல்லறிவு ஏற்பட்டு, நமது குருவின் கருணையும் நம்மை காக்கட்டும். இதுவே நமது தாழ்மையான ஸ்ரீ குரு பூர்ணிமா பிரார்த்தனையாகும்.

வந்தே மாதரம் ! ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் !

யோகி ராம்சுரத்குமார் , யோகி ராம்சுரத்குமார் ,

யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா!

– சாது ரங்கராஜன்

திரு. S.P. ஜனார்த்தனன் யோகி ராம்சுரத்குமார் டிரஸ்ட் துவக்கப்பட கருவியாக இருந்தவர். பகவானிடம் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகினார். பகவான் சாதுவை அனைத்து பணிகளையும் நிறுத்திவிட்டு ஆசிரமத்தின் டிரஸ்டியாக உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டு, ஆசிரமத்தின் கட்டுமான பணிகளின் பிரச்சனைகள் சீரடையும் வரை அந்தப் பொறுப்பை கவனிக்குமாறு கூறியிருந்தார். ஜூன் 20, 2003 அன்று திரு. S.P. ஜனார்த்தனன் சாதுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சாது அவரிடம், எளிய மற்றும் தாழ்மையான வாழ்க்கை வாழ்ந்த ‘பெரும் யாசகன்’ பகவானின் பெயரில் தொடரப்படும் எந்த வழக்கிலும் தான் ஆர்வம் காட்ட விரும்பவில்லை என்று தெளிவாகக் கூறினார். சாது விற்கு மற்றொரு கடிதம், ஆசிரமத்திற்கு வெளியே நடக்கும் வேறு ஒரு கூட்டத்திற்கு வருமாறு வந்திருந்தது. ஜூலை 2, 2003 ல் திரு. S.P.ஜனார்த்தனன் சாதுவை மீண்டும் ஒரு முறை தொலைபேசியில் அழைத்தார். சாது மீண்டும் தீவிரமான வேண்டுகோள் ஒன்றை 5-7-2003 அன்று இமெயில். மூலம் பகவானின் பக்தர்களுக்கு அனுப்பி, தான் ஏற்கனவே கூறியதை மீண்டும் வலியுறுத்தி, பகவானின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு பக்தர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை வலியுறுத்தினார்:.

“ஆசிர்வதிக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமாரின் பக்தர்களே, 

வந்தே மாதரம் ! ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! எனது குரு உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கிறார்! 

இந்த சாது ஒரு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை சில நாட்களுக்கு முன் யோகி ராம்சுரத்குமார் ஆசிரம ட்ரஸ்ட் விஷயமாக பெற்றான். பின்னர் இது சம்பந்தமாக விவாதிப்பதற்காக ஆசிரம வளாகத்தினுள் நடைபெறும் பகவானின் பக்தர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டி கடிதம் ஒன்றை நாங்கள் பெற்றோம். இப்பொழுது நாங்கள் ஆசிரமத்திற்கு வெளியே நடக்கும் மற்றொரு கூட்டத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டு இன்னொரு கடிதம் ஒன்றை பெற்றுள்ளோம்.

மூத்தவர் மற்றும் ஞானம் பொருந்தியவர் என்று தங்களைத்தானே நினைத்துக்கொள்பவர்களுக்கு அறிவுரை வழங்க, இந்த சாது மிக தாழ்மையானவன், அவசியமற்றவன். இருப்பினும் எனது தீக்ஷா குருவின் சீடனாக, இந்த சாதுவின் உள்ளம், குருவின் பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு எனது குருநாதனின் பெயரில் உள்ள ஆசிரமத்தின்  நிர்வாகம் சம்பந்தமாக நீதிமன்றத்தில்  வழக்கு தொடர முன்வந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது., இது ஒன்றும் எனது சகோதரர்களிடம் மட்டும் காணப்படும் பலவீனமல்ல, பெரும்பான்மையான ஒழுங்கமைக்கப்பட்ட மத நிறுவனங்கள் சந்தித்து வந்துள்ள ஒரு சாபக்கேடாகும். மதமும், ஆன்மீகமும் நிறுவனமயமாக்கப்படும் போது சிதைந்துவிடும். புகழும், சொத்து சேரலும், நிறுவனத்திற்கு உயர்கையில், அங்கே அதிகாரத்திற்கும், பதவிக்கும் போராட்டங்கள் நடப்பது சாதாரணமாகும். அனைத்து புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமய நிறுவனங்களும் இது போன்ற உள் அமைப்பு சண்டைகள் பலவற்றை சந்தித்துள்ளன. ஆனால் இவ்விதம் பரஸ்பரம் இழிவுபடுத்திக் கொள்ளுதல் மற்றும் குற்றச்சாட்டுகளை வீசிக்கொள்வது எந்த மஹாத்மாவின் பெயரில் இந்த ஸ்தாபனங்கள் அமைக்கப்படுகின்றனவோ  அதை களங்கப்படுத்துகிறது. இத்தகைய ஒரு நிலை எனது குருநாதனை  பின்பற்ற விரும்புவர்களுக்கு ஏர்ப்படாமல் இருக்கட்டும். இத்தகைய குழிகளில் விழாமல் இருக்க, நம் அனைவருக்கும் நல்லறிவு ஏற்பட்டு, நமது குருவின் கருணையும் நம்மை காக்கட்டும்.

பகவானின் பக்தர்களிடையே எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அல்லது பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை பகவானின் இல்லம் என்ற ஒரே கூரையின் கீழ் அமர்ந்து பேசி தீர்க்கலாம். எப்படி ஆசிரமத்தின் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு, பகவானின் பக்தர்கள் ஆசிரமத்திற்கு உள்ளே ஒன்று கூடுவதை தடுக்க உரிமை இல்லையோ, அதுபோல், பக்தர்கள் ஆசிரம விஷயங்களை விவாதிக்க, ஆசிரமத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் கலந்து கொள்ளாமல், ஆசிரமத்திற்கு வெளியே கூட்டம் நடத்துவதும் முறை அல்ல.

பகவான் பல வருடங்கள் மிகுந்த தாழ்மையான மற்றும் எளிமையான வாழ்க்கையை மரத்தடியிலும், சாலையோர கடைகளின் வராண்டாவிலும், கோயில் வளாகத்திலும் வாழ்ந்தார். பின்னர் பக்தர்களை திருவண்ணாமலை சன்னதி தெருவில் ஒரு பழைய வீட்டின் வராண்டாவிலும் வரவேற்றார். அவர் தனக்கென ஆசிரமத்தை வேண்டியதில்லை. தன்னை சுற்றி ஒரு சீடர்கள் அல்லது பக்தர்களின் கூட்டத்தை உருவாக்கவும் அவர் விரும்பவில்லை. தனது பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே தனது பெயரில் ஒரு ஆசிரமத்தை அமைக்க அனுமதி அளித்தார். அவரது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப வாழ்ந்து அவரது கருணையையும் , ஆசியையும் பெறுவது பக்தர்களின் கடமையாகும். 

ப்ரேம் மற்றும் ஓம் உடன்,  சாது ரங்கராஜன். “

வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2003 அன்று மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை புவனேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைப்பெற்றது. அங்கே பகவானின் பல பழைய பக்தர்கள் கூடினர் . அவர்களிடம் சாது, பகவானின் விருப்பப்படி ராமநாமத்தை பரப்பும் காரியத்தில் முழுமையாக அர்ப்பணிப்போடு கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மீண்டும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா பெங்களூர் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் டிசம்பர் – 1 , 2003 அன்று நடைப்பெற்றது. அதில் எண்பது வயதான பகவானின் பக்தரான திரு. தண்டபாணி ஐயர் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்-ன் திரு. நாகராஜ் பக்தர்களிடையே உரையாற்றினார். பல பகவானின் பக்தர்கள் கூடியிருந்த அந்த நிகழ்வில் சாது அனைவரும் ஒன்றாக இருந்து பகவானின் பணியை நிறைவேற்றுவோம் என்றார். 

பகவான் ஒருபோதும் தனது பெயரில் எந்த வழிபாட்டு இயக்கம் அல்லது சமய நிறுவனம் துவங்குவதை விரும்பவில்லை. அவரது  திடமான  கருத்து எந்த அமைப்போ, அல்லது தனிமனிதனோ, எந்த பக்தனுக்கும் மீட்பை தர இயலாது, மாறாக அவரவர்களின் தவமும், சாதனாவும் மட்டிலுமே அவர்களுக்கு ஆன்மீக ஆனந்தம் மற்றும் சுயம் அறிதலை தர இயலும் என்பதாகும். அவரது ஆன்மீகம் ஒருபோதும் கண்மூடித்தனமான வழிபாடு, மூடநம்பிக்கை, மற்றும் சடங்குகளை சுற்றி இருந்ததில்லை. அவர் ஒரு முதலில் முற்றிலும் ஒரு தேசபக்தர். அன்னை பாரதத்தை வழிபடுபவர். அவர் பலமுறை உரத்த குரலில் பெருமை பொங்க, “இந்தியா எனது நிலம் ! இந்தியா எனது தாய்நிலம் ! இந்தியா என் தந்தையின் நிலம் ! இந்தியா புனித நிலம் ! இந்தியா தர்ம பூமி ! இந்தியா வேத பூமி ! இந்தியா புண்ணிய பூமி ! இந்தியா இந்தப்பிச்சைக்காரனின் இதயம் ! இந்தியா இந்தப் பிச்சைக்காரனின் விளையாட்டுத்திடல் ! இந்தியா தவசிகளும், முனிவர்களும் என்னைப் போன்ற பிச்சைக்காரன்க ளும்  வசிக்கும் நிலம்! இந்தியா எப்போதும் இருக்கும், மேலும் இந்தியா இந்த உலகத்தை மிக விரைவில் வழிநடத்தும்.!” 

தேசபக்தி மற்றும் தேசிய உணர்வு களுக்கு மேலானதாக  சமயச் சடங்குகளையும் சாதனைகளையும் போற்றுகின்ற எந்த ஒரு அமைப்பும் இந்த சாதுவை கட்டுப்படுத்த முடியாது என்று யோகிராம்சுரத்குமார் அவர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார். யோகி, ராமநாம தாரக மந்திர சாதனையில் சாதுவிற்கு தீக்ஷை  வழங்கி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதை பரப்புகின்ற ஒரு பெரும் பொறுப்பை அவருக்கு வழங்கியிருந்த போதிலும், மதமும் ஆன்மீக சாதனையும்  நமது தேசத்தின் இருப்பிற்கான அடிப்படைகள் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டது இந்த சாதுவின் தேசப்பற்றை எவ்விதத்திலும் குறைக்கவில்லை என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அனைத்து பக்தர்கள் கூடியிருக்கும் கூட்டத்திலும், நமது அன்னை பாரதம் மீது கொண்டிருக்க வேண்டிய தேசப்பற்றை குறித்து பேசுமாறு, பகவான், பலமுறை, சாதுவை தூண்டியுள்ளார். இந்த சாதுவின் நீண்டநாள் கனவான பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் டிசம்பர் – 1, 1999 அன்று பகவானின் ஆசியால் நிஜமானது. அதில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு,  நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியம் போன்றவற்றில் ஆழ்ந்த பயிற்சி பெறுவதற்கு உத்வேகம், வழிகாட்டல், உதவி போன்றவற்றை அளித்து, அவர்கள் ஒரு குறிப்பிட்ட மத வழிபாட்டு முறை, ஸ்தாபனம் அல்லது இயக்கத்தை சாராமல், பாரத அன்னையின் தூதுவர்களாக, பாரதநாட்டின் பழம்பெரும் ஆன்மீக பண்பாடு மற்றும் உலகளாவிய கலாச்சாரத்தை, மனித இனம் உய்ய, உலகெங்கும் பரப்ப செல்வார்கள். பகவான் ஒருமுறை இந்த சாதுவிடம், சங்க  பிரார்த்தனை ( ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரார்த்தனை பாடல் ) வரிகளில்  மிகுந்த உத்வேகத்தை அளிக்க வல்லது எது என்று வினவினார். சாது அனைத்து வரிகளுமே உத்வேகத்தை தரவல்லவை என்று பதிலளித்தார். ஆனால் பகவான் இந்த பிரார்த்தனையில் ஒரு வரியை சுட்டிக்காட்டி அது மிகவும் அதிகமாக உத்வேகத்தை அளிக்கவல்லது என்றார். “த்வதீயாய கார்யாய பாத்தா கடீயம் “ –- “நாங்கள் உனது ( அன்னை தேசத்தின் ) பணியை செய்ய உறுதி ஏற்று சிறந்த முறையில் தயாராகியுள்ளோம்” — என்ற வரியை பகவான் சுட்டிக்காட்டினார். இதையே இன்று ஸ்ரீ பாரதமாதா மந்திர் மூலம் அடைவதற்கான முயற்சிகளை சகோதரி நிவேதிதா அகாடமி செய்து வருகிறது. பாரத அன்னையின் மக்களின் உள்ளத்தில் பாரத  தேவியை போற்றி வழிபடும் மிக உயர்ந்த பண்பாட்டை நிலைநாட்ட,  பாரதமாதா மந்திர் அமைப்பதற்கான பூமிபூஜை, வெள்ளிக்கிழமை மே – 21 , 2004 அன்று, பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், சீனிவாச நகரில், பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மைய வளாகத்தில், நடைபெற்றது.

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.28

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.28 

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் மஹாசமாதி

ஜனவரி 30, 2001 , செவ்வாய்க்கிழமை சாதுவிற்கு யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் இருந்து பகவானின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வந்தது. சாது பகவானின் பக்தர், ஆட்டோ கேரவன் உரிமையாளர், திரு. குமார் அவர்களிடம் பேசி, திருவண்ணாமலைக்கு செல்ல கார் ஒன்றை ஏற்பாடு செய்தார். பாரதி மற்றும் மூன்று பக்தர்களுடன் சாது திருவண்ணாமலைக்கு விரைந்தார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவை வரவேற்று பகவானின் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார். சாது பகவானின் அருகாமையில் அரைமணி நேரம் செலவழித்தார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவிற்கும் , பாரதிக்கும் அறை ஒன்றை ஏற்பாடு செய்தார். பகவானின் பக்தர்களான திரு. பாலகுமாரன், திருமதி. பவதாரிணி போன்றோர் அங்கே பகவானின் உடல்நிலை குறித்து கேள்விபட்டு வந்திருந்தனர். புதன்கிழமையும் சாது சிறிது நேரத்தை பகவானின் அருகில் செலவழித்தார். பாரதியை சென்னைக்கு அனுப்பிவிட்டு , சாது பெங்களூருக்கு, தென் ஆப்பிரிக்க பக்தர்களை வரவேற்க சென்றார். சேட்ஸ்வர்த்  சர்வ தர்ம ஆசிரமத்தின் திரு. பேசில் ( துளசிதாஸ் ) மற்றும் திருமதி. பிரமிளா போன்றவர்களை பிப்ரவரி – 2 அன்று வந்து சேர்ந்தனர். பாரதியும் பிப்ரவரி 3 அன்று சென்னையில் இருந்து திரும்பினார். சாது ஒரு காரை ஏற்பாடு செய்து, பாரதி, விவேக், நிவேதிதா மற்றும் குழந்தைகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் உடன் திருவண்ணாமலைக்கு சென்றார். சாது பகவானின் தரிசனத்தை பெற்று டாக்டர். ராஜலட்சுமி மற்றும. டாக்டர் ராமனாதன் உடன் சிறிது நேரம் செலவழித்தார். அவர் ஜஸ்டிஸ் அருணாச்சலத்துடன் பேசி பெங்களூருக்கு இரவில் திரும்பினார். 

சாது பிப்ரவரி – 4 , ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூர் குந்தலஹள்ளியில் திருமதி சூர்யா ரமேஷ் அவர்களின் இல்லத்தில், சின்மயா மிஷனின் பாலவிஹார் வகுப்புகளில் கலந்து கொண்டார். சாதுஜி குழந்தைகளிடம் உபநிஷத் கதைகளையும், தனது சிக்ஷா குரு சுவாமி சின்மயானந்தா அவர்களுடனான தனிப்பட்ட அனுபவங்களையும், பகிர்ந்தார். அவர் குழந்தைபருவத்திலிருந்தே ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிகளை விதைப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினார். மாலையில் சாதுஜி ஒரு சத்சங்கத்தில் பெரியவர்களிடையே சின்மயா மிஷனின் சார்பாக குந்தலஹள்ளி விநாயகர் கோயிலில் உரையாற்றினார். வேதகாலம் தொடங்கி நவீன காலம்வரை, ஹிந்து தத்துவ சிந்தனை மற்றும் கலாச்சாரங்களில் உள்ள பகுத்தறிவு மற்றும் அறிவியல் அடிப்படைகள் குறித்து  அவர் பேசினார். 

பிப்ரவரி 16 ஆம் தேதி சாதுவோடு, திரு.பேசில், திருமதி. பிரமிளா, பாரதி ஆகியோர் சென்னை வந்தனர். சாது ஜஸ்டிஸ் அருணாசலம் அவர்களை சந்தித்தார். பகவானின் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று அவர் மூலம் அறிந்து கொண்டார். பிப்ரவரி 18, 2001 அன்று சென்னை பெரம்பூரில் சாது ரங்கராஜன் ஒரு இலவச மருத்துவ மையத்தை பாரதமாதா சித்தார்த்தா பள்ளியில் துவக்கி வைத்து, அங்கே சுவாமி விவேகானந்தரின் சேதியான, “மனிதர்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவை“ என்பதை குறிப்பிட்டு, உச்ச ஆன்மீக நிலை என்பது ஏழைகளிலும், கீழ்தட்டு மக்களிலும் இறைவனை கண்டு, பக்தியோடும், அர்ப்பணிப்போடும் அவர்களுக்கு சேவை செய்வதுதான் என்றார். சாது தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஏற்பாடு செய்த காயத்ரி ஜப யக்ஞத்தில், கொளத்தூர் வினாயகர் கோயிலில், கலந்து கொண்டு ஜெப சாதனையின் அறிவியல்பூர்வமான அடிப்படை குறித்து பேசினார். “பொன்மலர்” என்ற ஆன்மீக இதழின் ஆசிரியர் திரு. T.M. ராமகிருஷ்ணன் கூட்டத்தினிரிடையே உரையாற்றினார். 

பிப்ரவரி 20, 2001 அன்று அதிகாலையில் பகவானின் பக்தரான சசீந்திரம் ராஜலட்சுமி அவர்கள் பகவான் அவர்கள் மஹாசமாதி அடைந்து விட்டார் என்ற சேதியை தெரிவித்தார். நிவேதிதாவும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் மூலமாக தனக்கு கிடைத்த மஹா சமாதி தகவலை சாதுவிற்கு தெரிவித்தார். சாது தென்ஆப்பரிக்கா பக்தர்களுடன் ஆனந்தாஸ்ரமம் செல்ல வேண்டிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக திருவண்ணாமலைக்கு விரைந்தார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவிற்கு ஒரு அறையை ஏற்பாடு செய்திருந்தார். சாது ஆசிரமத்தின் பிரார்த்தனை கூடத்தில் நாள் முழுவதும் பகவானின் பாதமருகில் அமர்ந்திருந்தார். சுவாமி முருகானந்தம், சுவாமி தேவானந்தா , திரு. பாலகுமாரன் மற்றும் பல முக்கிய பக்தர்கள் அங்கே குழுமினர். சாது இரவு முழுவதும் பக்தர்களோடு செலவழித்து, காலையில் மீண்டும் பகவானின் காலடியில் அமர்ந்து ராமநாம தாரக மந்திரத்தை ஜபித்தார். அவர் ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் பிறர் உடன் இறுதி சடங்குகள் குறித்து விவாதித்தார். ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி சுத்தானந்தா அவர்களும் வந்திருந்தார். அவர் பகவான் அமர்ந்த நிலையில் இருந்த மேடைக்கு வர சிரமப்பட்டார். சாது,  மா தேவகி மற்றும் விஜயலட்சுமி மட்டுமே அவரது அருகில் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆசிரம பணியாளர்கள் கூட்டத்தினரை தள்ளிய வண்ணம் இருந்தனர். சாது, சுவாமி சுத்தானந்தா அவர்கள் மேடைக்கு வந்து பகவானருகில் அமர உதவினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் மரியாதையை பகவானுக்கு தெரிவிக்க குழுமியிருந்தனர். கூட்டத்தினர்  அமைதியற்ற நிலையில் இருந்தனர். பகவானின் உடலானது ஆசிரமக் கூடத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போதும்  பக்தர்கள் மிகவும் அமைதியற்று காணப்பட்டனர். அவரது உடல் சமாதி குழியினுள் இறக்கப்படும் முன், ஒரு பையில் அமர  வைக்கப்பட்டது. அங்கு குழுமியிருந்த தாய்மார்கள் பலரும் அவர்களின் நகைகள் மற்றும் நாணயங்களை அக்குழியினுள் போட்டனர். சாது, வியப்புடன் அதைப் பார்த்து, பகவானின் பயணத்திற்கு இவைகளெல்லாம் தேவையா என நினைத்தவுடன், திடீரென உள்ளிருந்து ஒலித்த ஒரு குரலில், சாதுவின் பகுத்தறிவு சிந்தனை காணாமல் போனது. சாதுவின் கைகளில் இருந்த தங்க மோதிரம் அதிசயமாக கழன்று குழியில் விழுந்து பகவான் அமரும் ஆசனமாக அமைந்தது. பகவானின்  உடல் மூடப்படும்போது சாது மற்றவர்களோடு சேர்ந்து இறுதிசடங்கை மேற்கொண்டார். சாது, குழியில் இருந்து விபூதியை எடுத்து, பகவானின் பாரதமாதா குருகுல ஆசிரம கோயிலில் பாதுகாக்க முடிந்து வைத்தார். மஹாசமாதி சடங்குகள் முடிந்தப்பின், சாது, ஜஸ்டிஸ் அருணாச்சலம், மா தேவகி, ஆகியோரிடம் விடைப்பெற்று, சென்னைக்கு சசீந்திரம் ராஜலட்சுமி, அனுராதா மற்றும் திரு விஸ்வநாதன் ஆகியோருடன் திரும்பினார். வியாழக்கிழமை காலை, சாது, சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு மஹாசமாதி நிகழ்வுகள் குறித்த தகவல்களை அனுப்பிவிட்டு, பெங்களூர் திரும்பினார். 

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் திதி பூஜை, உரிய சடங்குகள் மற்றும் அகண்ட ராமநாமத்தோடு, சாது ரங்கராஜனால், பெங்களூர் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில், மார்ச் 22, 2001 அன்று, நடத்தப்பட்டது. கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா சாதனா கேந்திரத்தின் தலைவர், சுவாமி சந்திரேசானந்தா, அந்த சிறப்பு சத்சங்கத்தில் பங்குபெற்று உரையாற்றினார். 

ஏப்ரல் 2001 “தத்துவ தர்சனா” இதழானது பகவானின் அட்டைப்படத்தை தாங்கி சாதுவின், பகவானுக்கான அஞ்சலி தலையங்கத்தோடு வெளியானது. 

“தலையங்கம் 

எனது தீக்ஷா குருவிற்கு சிரத்தாஞ்சலி

“தந்திரக்காரனும், பைத்தியக்காரனும் மட்டுமே வாழும் போது கடவுளாக அறியப்பட விரும்புவார்கள். விவேகமும், சத்தியமுடன் இந்த பூமியில் இருப்பவர்களுக்கு கடவுள்தன்மை என்பது அவர்களது வாழ்வில் தாங்க இயலாத பாரமாகவே இருக்கும்.” 

– யசோதரா தனது மாணவர்களுக்கு கி.மு. 5054 ல் சொன்னது. 

மேற்சொன்ன மேற்கோள் புகழ்பெற்ற எழுத்தாளரான பகவான் S. கித்வானி எழுதியுள்ள ஆர்யர்களின் திரும்பல்என்ற, எண்ணத்தை தூண்டும், புராதன ஆரியர்களின் வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.

தேவா மானுஷ ரூபேண சரந்த்யேதே மஹீதலே”  — “கடவுள் மனித வடிவில் பூமியில் நடக்கிறார்” என்று நமது வேதங்கள் கூறுகின்றன.  ராமாயணத்தில், பகவான் ராமசந்திரன், ஆத்மானம் மானுஷம் மன்யே தசரதாத்மஜம் – “நான் மனிதன், தசரதனின் மகன்” என்று உணருங்கள் என்று வேண்டுகிறார்.

கடவுள் மனிதராக பூமிக்கு வந்து அவரே இலட்சிய புருஷனாக இருந்து மனிதர்கள் அவரை ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு தங்களை கடவுள் தன்மைக்கு உயர்த்திக் கொள்ள வழிவகுக்கிறார்கள். அத்தகைய தெய்வீக ஆன்மாக்கள் இறைவன் வகுத்த பாதையில் சென்று கடவுள் தன்மையை அடைவார்கள். ஆனால் அவர்கள், அவர்களை, ஆன்மீக உணர்வு பெறுவதற்கான தாகம் மிகுந்த  பக்தர்கள் தாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று அடையாளம் கண்டு கொள்ளும் வரை, சாதாரண மனிதர்கள் போல் மக்களிடையே மறைந்து வாழ்வார்கள்.

பகவான் யோகி ராம்சுரத்குமார், எனது தீக்ஷா குரு, தன்னை “பைத்திய பிச்சைக்காரன்“ என்று கூறிக் கொள்வார். அவர் தனது சாதனா காலத்தின் ஆரம்ப வாழ்க்கையை சாலை ஓரங்களில் இருக்கும் மரத்தடியிலும், இரயில்வே பிளாட்பாரங்களிலும், மிகவும் சந்தடியான மார்கெட், மற்றும் கோயிலின் முன்பும் கழித்த அவர், தனது பக்தர்கள் கட்டிய பெரிய ஆசிரமத்தில் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை , பிப்ரவரி 21, 2001 அதிகாலை 3.20 மணிக்கு அவரது 84 வது வயதில் மஹாசமாதி அடைந்தார். 

அவர் டிசம்பர் – 1, 1918 ல் ஒரு மிகச்சிறிய குக்கிராமத்தில் , உ.பி. -யின் பலியா மாவட்டத்தில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது சிறுவயது முதலே மதநம்பிக்கை கொண்டிருந்தார். கிணற்றடியில், வாளியில் நீர் நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் வீசிய காற்றின் நுணி  ஒரு பறவையின் மீது பட்டு,  அது அந்த இடத்திலேயே இறந்த நிகழ்வு. அவருக்குள் உலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை குறித்த பார்வையை தந்தது. அவர் பல சாதுக்கள் மற்றும் மகான்களின் தொடர்பை தேடி அவர்களிடம் வாழ்க்கையின் இலட்சியத்தை அறிய முயன்றார். அவர் அலகாபாத் பல்கலை கழகத்தில் ஆசிரியருக்கான கல்வி மற்றும் பட்டத்தை பெற்று தன்னை ஒரு ஆசிரியராக நிறுவியவர், ராம்ரஞ்சனி என்பவரை மணந்து மூன்று மகள்களான, யசோதா, மாயா மற்றும் பீனா, மற்றும் ஒரு மகனான அமிதாப், என்பவர்களையும் பெற்றிருந்தார். ஆனால் அவரின் ஆன்ம தாகம் அவரை மீண்டும் மீண்டும் கங்கை கரையில் உள்ள சன்னியாசிகளை அடிக்கடி தேடி செல்ல வைத்தது. அத்தகைய ஒரு நிகழ்வில் ஒரு மகாத்மா அவரிடம் அவரது குருவை கண்டறிய,  பாண்டிச்சேரிக்கு, மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர் அவர்களை தரிசிக்க செல்லுமாறு கூறினார். அவர் பாண்டிச்சேரிக்கு 1947 ல் வந்தார். அங்கே அவர் பகவான் ரமணர் குறித்து கேள்விபட்டு திருவண்ணாமலைக்கு பயணப்பட்டார். அங்கே அவர் பப்பா ராம்தாஸ் அவர்களைப்பற்றி கேள்விபட்டு கேரளாவின் காஞ்சன்காட்டில் உள்ள ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்றார். அந்த தேடித்திரியும் ஆன்மாவானது தனது இலக்கை இறுதியாக அடைவதற்கான நேரம் இன்னமும் சேர்ந்து வராததால், தனது இல்லத்திற்கு திரும்ப வந்தது. அடுத்த வருடமும் இந்த மூன்று இடங்களுக்கும் பயணித்தும் நிறைவினை அடையாத அவர் வடக்கு நோக்கி பயணித்தார். 1950 களில் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ ரமணர் இருவரும் மஹாசமாதி அடைந்தார்கள் என்ற சேதியை அறிந்த அவர் இருக்கும் ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது என நினைத்து பப்பா ராம்தாஸ் அவர்களிடம் வந்து அவரில் தனது குருவை கண்டார். மீண்டும் ஒருமுறை அவர் 1952-ல் பப்பாவிடம் வந்தார். இந்தமுறை அவருக்கு ராமநாம தாரக மந்திரமான, ” ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்“என்ற ராம நாமதாரக மந்திரம் தீக்ஷையாக வழங்கப்பட்டது. அவர் பப்பாவின் அருகே இருக்க விருப்பம் கொண்டார். ஆனால் பப்பா அவருக்கு வேறொன்றை விதித்திருந்தார். பப்பா அவரை ஆசிரமத்தைவிட்டு வெளியே சென்று ஜப சாதனையை மேற்கொள்ளுமாறு கூறினார். ஆனாலும் அவர் பப்பா வடநாட்டில் எங்கெல்லாம் பயணம் மேற்கொண்டாரோ அங்கேயெல்லாம் சென்றார். பப்பா அவரிடம் தன்னை பின் தொடரும் இந்த பைத்தியக்காரத்தனத்தை விட்டுவிட்டு கிர்னாரில் தங்கி சாதனாவை மேற்கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் ராம்சுரத்குமார் தனது இறுதி ஓய்வெடுக்கும் இடமாக புனிதமான அருணாச்சலத்தில் 1959 -ல் வந்தடைந்து அவரது நிரந்தர இல்லமாக ஆக்கினார். 

ஆரம்பகாலத்தில் திருவண்ணாமலையின் அருணாச்சல மலையை சுற்றி வாழ்கிறவர்கள் அவரை, ஒரு வட இந்திய, பைத்தியம் பிடித்த, அழுக்கு பிச்சைக்காரனாக, கிழிந்த உடைகளை அணிந்து, ரயில்வே நிலையத்திற்கு அருகே ஒரு மரத்தடியிலோ, கோயிலின் முன்போ அல்லது தெருக்களில் உள்ள கடைகளின்  திண்ணைகளிலோ அமர்ந்து புகைபிடித்தவாறோ, அல்லது இலக்கின்றி திரிவதையோ பார்ப்பார்கள். சிலர் அவரை ஆனந்தாசிரமத்திற்கு வந்திருந்தவர் என்று தெரிந்து கொண்ட போதிலும் “பைத்தியக்கார பீஹாரி“ யாக நினைத்தார்கள். ஆசிரமத்தில் பரவச நிலையில் காட்சியளிக்கும் அவர் பிற பக்தர்களுக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் பப்பா அவரை விலக்கியே வைத்திருந்தார் என்று அவர்கள் நினைத்தனர். மயானத்தை இருப்பிடமாகக் கொண்டு, பித்தனாக அலைந்த சிவபிரானையே  அவரது மாமனார் தக்ஷன் அவமரியாதையாகவும் வெறுப்புடனும் நடத்தவில்லையா?

சில ஆசிர்வதிக்கப்பட்ட ஆன்மாக்கள் அவரை பிச்சைக்காரர்களின் இடையே இருக்கும் துறவியாக அடையாளம் கண்டு அவரை தொடர்ந்து வணங்கி வந்ததோடு, அவரை யோகி மற்றும் கடவுளின் குழந்தை என்றழைத்தனர், ராம்சுரத்குமார் அவர்களோ தன்னை, “அழுக்கு, பைத்திய பிச்சைக்காரன்” என்றே கூறிக் கொண்டார். துணை வேந்தர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் போன்ற உயர் பதவிகளில் உள்ள, ஆண்கள் மற்றும் பெண்கள், அவரது ஆசியை பெறுவதற்காக வந்தனர். ஆனால் அவர் அனைவரையும் சற்று தொலைவிலேயே வைத்திருந்தார். அவர் தன்னை பலர் பின்பற்றும் ஆன்மீக தலைவராக பிரகடனப்படுத்தி கொள்ளவேயில்லை. அவர் ஆசிரமத்தையோ, ஆன்மீக அமைப்பையோ உருவாக்கவேயில்லை. அவர் தங்குவதற்கு இல்லம் ஒன்று பரிசாக  வழங்கப்பட்டபோதும் அவர் அதனை தனது கைகளில் திணிக்கப்படும் அனைத்தையும் வைக்கும் இடமாக வைத்துவிட்டு பெரும்பாலும் வராண்டாவிலேயே தனது பெரும்பான்மையான நேரத்தை, வரும் பார்வையாளர்களை வரவேற்கும் இடமாக வைத்திருந்தார். உயர்பதவியிலிருப்பவர்களோ, சாமானிய கிராம மக்களோ, அனைவரையும் சமமாகவே கருதினார். சில சமயம் சில மக்கள் அவரை வழிபட்டனர். ஆனால், சிலரின் சுயநலமிக்க உலகாயதமான ஆசைகள் நிறைவேறாதபோது அவர்கள் இவரை தேவையில்லை என ஒதுக்கினர். இருப்பினும் பாராட்டோ, கண்டனமோ இரண்டும் அவர் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் பக்தர்கள் நெருங்க முடியாத உயர்ந்த இறைநிலையி்லிருந்தார். அவர் எவரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை, பிறருக்குக் கொடுக்க எதையும் வைத்திருக்கவும் இல்லை. அவர் பகவத்கீதையின் கூற்றுபடி ஒருவர் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே அவர் பக்தர்கள் அவரவர்களுக்கேற்ற தங்களது சொந்த பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதித்தார். பெரிய அளவிளான ஆசிரமம் அமைக்கப்பட்ட பின்னரும் அவர் எந்த ஒரு ஆன்மீக அமைப்பையும் உருவாக்கும் எண்ணம் கொள்ளாமல், தினமும் இரண்டுமுறை அங்கு வந்து நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அவரது உடல்நிலை மெல்ல சரியத்துவங்கியபோது ஆசிரமத்திற்கு பலமுறை பயணிப்பது கஷ்டமாக போனதால், அவரது வாழ்வின் இறுதியில் பக்தர்களின் வசதிக்காக அவர் ஆசிரமத்திலேயே தங்கினார். 

ஆதி சங்கரர் மூன்று விஷயங்கள. கிடைப்பதற்கு அரிதானவை, அவைகள் கடவுளின் கருணையாலேயே கிடைக்கும் என்கிறார். அவைகள் மனிதப்பிறவி, பெரு விடுதலைக்கான தேடல் மற்றும் உத்தம குரு ஒருவரின் பாதுகாப்பு கிடைத்தல். இந்த சாது முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் காரணமாகவே, இந்த சாதுவை வழிநடத்த, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் புனித பாதங்களை அடைவதற்கும் அவர் ஆசியை பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பகவான் யோகி ராம்சுரத்குமார் அவரது குருவிடமிருந்து பெற்ற ராமநாம தாரக மந்திர தீக்ஷை, யோகியிடமிருந்து இந்த சாது பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. பப்பா ராம்தாஸ் அவர்களின் 104 வது ஜெயந்திவிழா, ஏப்ரல் 26 , 1988 அன்று, அருணாச்சல மலைமீதுள்ள ஆலமரத்து குகையில் பப்பா ராம்தாஸ் அமர்ந்து தியானித்த இடத்தில் நடைபெற்ற பொழுது அந்த விழாவில் தலைமை தாங்க இந்த சாது அழைக்கப்பட்டிருந்தான்.  அங்கே மிகவும் எதிர்பாராத விதமாக யோகி இந்த சாதுவை சந்தித்து அவரை குகைக்குள் இழுத்துச்சென்று திடீரென்று தீக்ஷை வழங்கினார். யோகி ராம்சுரத்குமார் மிக முக்கிய பாடங்களான தியாகம் மற்றும் துறவு குறித்து  தீக்ஷை அளிக்கும்பொழுது சாதுவிற்கு விளக்கினார்: துறவு என்பது எதையோ கொடுப்பதோ அல்லது பெறுவதோ அல்ல ஆனால் அது உனது மனப்பான்மையில் ஏற்படும் மாற்றம்“. மேலும் அவர், நேற்றுவரை நீ செய்த செய்கைகளை செய்தவனாக நீ இருந்தாய். ஆனால் இன்றுமுதல் எனது தந்தை உன் மூலமாக பணி செய்ய இருக்கிறார்என்றார் அவர் சாதுவிடம்! தனது குருவான பப்பாவின் பணியான ராமநாமத்தை பரப்புவதையும், மாதாஜி கிருஷ்ணாபாய் உலக அமைதிக்காக துவங்கிய 15,500 கோடி நாமஜப யக்ஞத்தை முடிப்பதற்கான பணியையும், அர்ப்பணிப்போடு செய்யுமாறு கூறினார். இந்த சாது தனது சகோதரி நிவேதிதா அகாடமியை பகவானின் பாதங்களில் ஒப்படைத்து இந்த பணியை மேற்கொள்ளவதாக கூறினார். பகவானும் இந்த ஸ்தாபனத்தின் பணிகளை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்திச் சென்றார். இந்த சாது யோகி ராம்சுரத்குமார் ஆசிரம பணிகளுக்காக சில முக்கியமான நேரங்களில் அழைக்கப்பட்டாலும், சில சிறப்பு பணிகள் தவிர்த்து, மற்ற நேரத்தில் சாதுவை பப்பா ராம்தாஸ் பணியான ராமநாம ஜப யக்ஞத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பரப்பும் பணியை மேற்கொள்ளுமாறு பகவான் கூறினார். 

ஆன்மீக குருமார்கள் காலகாலமாக இந்த பாரத தேசத்தில் வந்து கடவுள் அறிதல் என்ற பாதையை வேட்கை கொண்ட பக்தர்களுக்கு அமைத்து தந்தாலும், சில சமயம் பக்தர்களின் குருட்டுத்தனமான போக்கும், மூடநம்பிக்கைகளும், சடங்குகளோடான வழிபாடும் இத்தகைய மகாத்மாக்களின் வருகையின் இலக்கை சிதைக்கின்றன. எனது குரு ஒருபோதும் தான் ஒரு சிலையாக வழிபடப்படுவதை விரும்பவில்லை. ஆனால் தான் ஒரு இலட்சியமாக இருக்க விரும்பினார். மகாத்மாக்களை சிலைகளாக்கி அவர்களின் இலட்சியங்களை தியாகம் செய்து விடுகிறோம். நாம் நமது குருவிற்கு தரக்கூடிய மிகப்பெரிய மரியாதை என்பது உண்மையாகவும், அர்ப்பணிப்போடும் அவரது காலடித்தடங்களை எவ்வளவு சிறப்பாக இயலுமோ அவ்வளவு சிறப்பாக பின்பற்றுதலே ஆகும். எனது குரு பணிவின் உருவகம். அவர் தன்னை மதிக்க தவறியவர்களையும் மதிக்க தவறியதில்லை. குருவிடம் வைக்கப்படும் இந்த சாதுவின் ஒரே ப்ரார்த்தனை இதுவே :– அவர், இந்த சாதுவிற்கு, தனது குருவிடம் கண்ட அனைத்து நல்ல தன்மைகளையும் பின்பற்ற தேவையான வலிமையை அளித்து, தனது குரு தன்னிடம் தந்த பணியை சிறப்பாக முடித்திட அருள வேண்டும். இந்த சாதுவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ அல்லது புறக்கணிக்கப் படுகிறானோ, பாராட்டப்படுகிறானோ அல்லது இகழப்படுகிறானோ, ஒவ்வொரு படியிலும் வெற்றியை காண்கிறானோ அல்லது தோல்வியும் ஏமாற்றவும் ஏற்படுகிறதோ, எந்த நிலையிலும் குருநாதர் தனக்கு வழங்கியுள்ள பணியை லட்சியம் அடையும்வரை முன் கொண்டுசெல்ல குருநாதர் அருள்புரிய வேண்டும். 

எனது குரு வெறும் யோகி மட்டுமல்ல, அவர் ஒரு பெரும் தேசபக்தர். அவர் உறுதியாக தனது குரு மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர் கூறிய வார்த்தைகளை நம்புபவர், அதாவது, இந்த பாரத தேசம் லோக குருவாக இருந்து,                   பாரத்தேசத்தின் ஆன்மீக பாரம்பரியம் இந்த உலகத்தை முழுமையாக தழுவி, மொத்த மனிதகுலத்தையும் தெய்வீக இலக்கிற்கு கொண்டு செல்லும் என்பதாகும். நமது தாழ்மையான அமைப்பான ‘பாரதமாதா குருகுல ஆசிரமம் & யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம்’ எனது குருவின் ஆசி மற்றும் கருணையால் நிறுவப்பட்டது. பெரும் மகான்களின் கனவுகளை நனவாக்க இந்த அமைப்பு தனது எளிய பங்கை நிறைவேற்றும். சகோதரி நிவேதிதா அகாடமி எனது குருநாதரின் அருளாசியால் புனிதமான பாரத நாட்டிற்கும் வெளிநாடுகளில் வாழும் ஹிந்து மக்களுக்கும் ஆற்றிவரும் தொண்டுப்  பணியில்,  அதன் இருபத்திஐந்தாவது ஆண்டிற்கு, அடுத்த ஆண்டு  ஏப்ரில் மாதத்தில், அடியெடுத்துவைக்கிறது. அந்த பணிகளுக்காக தன்னை மீண்டும் அற்பணித்துக்கொள்கிறது  

“மகத்தான மனிதர்களின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது

        நாமும் நம் வாழ்க்கையை உயர்ந்ததாக்க இயலும் 

மேலும், விடைபெறும் பொழுது நமக்குப்  பின்னால்  விட்டுச்செல்வோம் 

        காலமெனும் மணலில் கால்தடங்களை.”

வாழ்க்கையின் ஒரு சத்சங்கீதம் , லாங்ஃபெலோ 

நமது குருவான பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் கால்தடங்களை பின்பற்றி நாமும் நமது வாழ்க்கையை உயர்ந்ததாக்கி நமது கால்தடங்களை காலமெனும் மணலில் விட்டுச் செல்வோம். 

வந்தே மாதரம் ! “

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் முதலாமாண்டு திதி பூஜையான மார்ச் – 9 , 2002 அன்று சாது, ‘தத்துவ தர்சனா’வில் ஒரு அறைகூவலை பகவானின் இந்தியா மற்றும் வெளிநாட்டு பக்தர்களுக்கு விடுத்திருந்தார்: 

”தலையங்கம் 

சிவோ பூத்வா சிவம் யஜேத் — 

சிவனாக மாறி சிவனை வழிபடுங்கள்

“சந்தன குழம்பு, மற்றும் மலர்களால் வழிபடுவது மதிப்பற்ற வழிபாட்டு முறை. எதை வழிபடுகிறாயோ அதுவாக மாறுவதுதான் உண்மையான வழிபாடு. ‘சிவோ பூத்வா சிவம் யஜேத்‘ – ‘சிவனாக மாறி சிவனை வழிபடுங்கள்’ என்பதே தர்மத்தின் தனிச்சிறப்பாகும்.” இந்த சேதியை ஸ்ரீ குருஜி கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ் – ன் இரண்டாவது சர்சங்சாலக்,  தனக்கு முன் பதவி வகித்த, ஹிந்து ராஷ்டிர த்ருஷ்டா, டாக்டர். கேசவ் பலிராம் ஹெட்கேவார், நிறுவனர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – ன் முதல் சர்சங்கசாலக், 1940-ல் காலமான பொழுது, பதிமூன்றாவது நாள் சடங்குகளின் நேரத்தில், தனது அஞ்சலியை, அவருக்கு செலுத்தும் பொழுது, வழங்கினார். 

பரம்பூஜ்னீய ஸ்ரீ குருஜி அவர்களின் இந்த வார்த்தைகளை நாங்கள் எங்களின் குருவின் முதலாமாண்டு திதி பூஜையான மார்ச் – 9 , 2002 அன்று நினைவில் கொண்டோம். ஹிந்துக்கள் என்பவர்கள் வெறும் சிலை வழிப்பாட்டாளர்கள் அல்ல அவர்கள் இலட்சிய வழிப்பாட்டாளர்கள். என் குரு , யோகி ராம்சுரத்குமார் ஒரு தாழ்மையான மற்றும் எளிமையான மனிதராகவே அவரது வாழ்நாள் முழுவதும் இருந்தார். 1940 களில் அவரது ஆன்மீக தேடலுக்காக அவர் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ரமணா மகரிஷி அவர்களை சந்தித்து பின்னர் பப்பா ராம்தாஸ் மூலம் ஆனந்தாஸ்ரமத்தில் தீக்ஷை  பெற்றார். அவர், ஒரு துறவியின் வாழ்க்கை முறை பற்றிய மேற்கோள், கரதல பிக்ஷா, தரு தல வாச“, அதாவது தனது கைகளில் பிக்ஷை பெற்று மரத்தடியில் வசிப்பது, என்பதை கடைப்பிடித்து இந்தியா முழுவதும் பயணித்து, இறுதியாக திருவண்ணாமலை ரயில்வே நிலையத்திற்கு அருகே உள்ள புன்னை மரத்தடியில் தஞ்சமடைந்தார். சாதாரண மனிதர்களின் கண்களுக்கு அவர் பைத்திய பிச்சைக்காரனாக காட்சி அளித்த போதும், அவரது தெய்வீக பெருமையை, உண்மையை தேடுபவர்களிடமும் இருந்து  அவரால் மறைத்து வைக்க முடியவில்லை. அவரை பல அறிஞர்களும், இலக்கியவாதிகளும், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களும் அடையாளம் கண்டு கொண்டு அவரை நெருங்கத் துவங்கினர், அவரது தேவைகளை நிறைவேற்ற அவர்கள் தயாராக இருந்தபோதும், குரு தனது எளிமையான வாழ்க்கையையே தொடர்ந்தார். சில நல்ல உள்ளங்கள் ஒரு பழைய வீட்டை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அருகே அவர் தங்குவதற்காக தேரடி வீதியில் அமைத்துக் கொடுத்தனர். இருப்பினும் குரு தனது பெரும்பாலான நேரத்தை தேரடி மண்டபத்திலும், கோயில் வளாகத்திலும், கோயிலுக்கு அருகே உள்ள கடைகளின் வராண்டாவிலும் செலவழித்தார். 

எனது குரு தன்னை ஒருபோதும் ஒரு ஆன்மீக தலைவராகவோ, மத தலைவராகவோ கருதியதில்லை. எனவே அவர் ஒருபொழுதும் தன்னைச்சுற்றி புகழ் புகழ்பாடும் பக்தர்  கூட்டத்தை வைத்துக்கொள்ளவில்லை. ஒருவர் பெரும் பணக்காரரோ செல்வாக்கு மிகுந்தவரோ  ஆயினும், பகவானிடம் நெருங்குவது பகவான் விரும்பினால் மட்டும் தான் இயலும். பெரும் வியாபாரி அல்லது அரசாங்க  அதிகாரி ஆயினும் சரி, கிராமத்தில் வசிக்கும் எளிய விவசாயி அல்லது தெருவில் அலையும் பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி, அவர் விரும்பினால் அவரை நெருங்க விடுவார். அவர் விரும்பாவிட்டால் “என் தந்தை உங்களை ஆசீர்வதிக்கிறார், நீங்கள் போகலாம்” என்று கூறி உடனே அனுப்பி விடுவார். 

பல பிறவிகளில் சேர்த்த புண்ணியம் மட்டுமே இந்த சாதுவை அவரது இதயத்தில் இடம்பெற செய்து, அவரிடம் இருந்து மந்திர தீக்ஷையையும் பெற வைத்தது. 1988-ல், திருவண்ணாமலை உச்சியில், அவரது குருநாதர் பப்பா ராமதாஸ் அமர்ந்து தவம் செய்த ஆலமர குகையில், பப்பாவின் ஜெயந்தி நடைபெறுகின்ற புனிதமான வேளையில், இந்த சாதுவிற்கு அவர் தீக்ஷை வழங்கினார். அவர் இந்த சாதுவைக்காண மலையேறிவந்து, சற்றும் எதிர்பார்க்காதவிதமாக மந்திரதீக்ஷை வழங்கியது, இந்த சாதுவிற்கு, வானத்திலிருந்து திடீரென்று இறை அருள் இறங்கிவந்து தன்னை ஆட்கொண்டதுபோல் இருந்தது. மந்திர தீக்ஷை வழங்கிய குருவாக இருந்த பொழுதிலும் அவர் சாதுவை, சாதாரணமாக குருமார்கள் தங்களது சீடர்களை நடத்துவது போல, நடத்தவில்லை. ஒரு ஸுஹ்ரித் சகா – ‘நல்ல நண்பனாக’ நடத்தினார். சாதுவின் கரங்களைப்பற்றி பகவான் கோயில் வளாகங்களில் அல்லது நகர பாதைகளில் நடந்தார். பலமணி நேரம் சாது உடன்  உரையாடுவதில் அல்லது ராமநாம ஜபம் செய்வதில் கழிப்பார். சில சமயம் சாதுவை வெளியே அழைத்துச்செல்வதற்காக சாது தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வரவும் அவர் தயங்கியதில்லை. சாதுவுடன் ஒரே இலையிலிருந்து உணவை பகிர்ந்துகொள்வார். சில சமயம் அவரது கரங்களைப்பற்றியவாறே இந்த சாதுவை அவரது அருகில் தூங்கவும் அனுமதித்தார். அவரிடம் ஒருபோதும் அகங்காரத்தின் சாயல்கள் தெரிந்தது இல்லை. இது அவரது பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் பின்பற்றவேண்டிய ஓர் பெரும் குணாதிசயமாகும்.

தீக்ஷைக்குப்பின் இந்த சாது ராமநாமத்தை பாரதத்திற்கு உள்ளேயும் வெளி நாடுகளிலும் பரப்புவதில் முழுமையாக ஈடுபட வேண்டுமென்று பகவான் விரும்பினார். ஆகையினால் சாது பகவானிடம் அடிக்கடி செல்ல இயலவில்லை. எப்போது திருவண்ணாமலைக்கு பயணிக்க நேர்ந்தாலும் அவர் முன்கூட்டியே தகவலை பகவானுக்கு தெரிவித்ததோடு அவரோடு நீண்ட நேரத்தை செலவழித்தார்.  பல தீவிரமான தேடல் உள்ள பகவானின் பக்தர்கள், சாது பகவானுக்கு நெருக்கமான சீடர் என்பதை உணர்ந்து, அவருக்கு உரிய மரியாதையும் கொடுத்தார்கள். பல வி.ஐ.பிக்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், மற்றும் பல வெளிநாட்டு பக்தர்கள் என அனைவரும், சென்னை மாநகரின் நெருக்கமான ஒரு பகுதியில், ஒரு பழைய கட்டிடத்தில் அமைந்த, சாதுவின் தாழ்மையான இரண்டு அறைகள் கொண்ட வாடகை வீட்டிற்கு விஜயம் செய்தனர். அவர்களில் சிலர், பகவானை  நெருக்கமாக சந்திப்பதற்கு, சாது உடன் திருவண்ணாமலைக்கும் பயணித்தனர். பகவானை தரிசித்தால் அவர் அவரது தெய்வீக ஆற்றல் மூலம் தங்களது பொருளாதார மேம்பாடு மற்றும் சுயநல பிரச்சனைகளுக்கு தீர்வு ஆகியவை வழங்குவார் என்று கனவுகண்டு அவரை நெருங்கியவர்கள் ஏமாற்றம் அடையும் பொழுது அவரை விட்டு விலகவும் செய்தனர். சாதுவுடன் பகவானை தரிசித்து பகவானுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சிலர், பின்னர் சாதுவின் உதவி தேவையில்லை என்று அவரை புறக்கணிக்கவும் செய்தனர். ஆனால் பகவான் எப்பொழுதும் ஒரு எளிய மற்றும் பணிவான ஆத்மாவாகவே திகழ்ந்தார்.

ஒருமுறை சாது பகவானுடன் அமர்ந்திருந்தார். திருவண்ணாமலைக்கு புனிதப் பயணம் வந்த ஒரு சில கிராமத்தினர் பகவானை தரிசிக்க அவரது இல்லத்திற்கு வந்தனர். பகவான் ஒரு பிச்சைக்கார தோற்றத்தில், கையிலே ஒரு சிகரெட் வைத்து புகை பிடித்துக் கொண்டு, வராந்தாவில் அமர்ந்திருந்தார். சாது, தனது வழக்கமான காவி உடையுடன் அப்போது பகவான் அருகே அமர்ந்திருந்தார். அங்கே வந்த அப்பாவி விவசாயிகள் அறியாமையினாலோ அல்லது யாரோ ஒருவர் தவறாக சுட்டிக்காட்டியதாலோ, பகவானை அடையாளம் கண்டுகொள்ளாமல், சாதுவின் காவி உடையைப்பார்த்து அவரை குரு என்று கருதி ஒருவர்பின் ஒருவராக வந்து வணங்கி மாலையணிவித்தனர். அதிர்ச்சியுற்ற சாது இவர்களை தான் பகவானல்ல எனறு கூறி தடுக்க முற்பட்டபோது பகவான் ஆங்கிலத்தில் அழுத்தமான குரலில் ஆணையிட்டார்: “ரங்கராஜா,  சற்று பேசாமல் இருப்பாயா?” (Rangaraja, will you please keep quiet?). சாது அமைதியாகி விட்டான். கிராமத்தில் இருந்து வந்தவர்கள் சாதுவையே பகவான் என நினைத்து மரியாதை செய்தனர். அவர்கள் அனைவரும் சென்றபிறகு பகவான் சாதுவிடம், “ரெங்க  ராஜா நீ எதற்காக அவர்களை தடுக்க முயன்றாய். அவர்கள் சரியாகத்தான் செய்து கொண்டிருந்தனர். நீ இந்த உடையில் இருந்தமையால் அவர்கள் உனக்கு வணக்கத்தை செலுத்தினர். காவி உடுத்தியவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும் என்ற பாரம்பரியத்தை அவர்கள் பின்பற்றினார்கள். அதிலென்ன தவறு ? “ என்று பகவான் சாதுவை வினவினார். சாது பதிலளிக்கையில் “அவர்கள் உங்களை தரிசிக்க வந்தவர்கள்” என்றார். சாதுவிடம் பகவான், “அவர்கள் உன்னை வணங்கினாலோ  அல்லது என்னை வணங்கினாலோ அதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? அவையனைத்தும் என் தந்தையையே போய் சேரும். இந்தப்பிச்சைக்காரனும் நீயும் வேறல்ல” என்றார். 

பகவான் எதை உபதேசித்தாரோ அதன்படியே வாழ்ந்தார். பகவானோடு சாது ஒருமுறை திருவண்ணாமலையில் ஒரு அகண்ட ராம நாம ஜெபம் ஏற்பாடு செய்யப்பட்டு, சாது வேண்டிக் கொண்டதின் பேரில், பகவான் ஒரு பகலும் இரவும் அவர்களோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பகவான் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப சாது  ராம நாமம் பற்றியும் அகில உலக ராமநாம இயக்கம் பற்றியும் உரை நிகழ்த்த துவங்கியபோது, பகவான் திடீரென்று எழுந்து சாதுவின் கால்களை தொட்டு வணங்கினார். அதிர்ச்சியுற்ற சாது  பகவான் கைகளை பிடித்து தூக்கி “என்ன இது பகவான்?” என்று வேதனையுடன் வினவியபோது, பகவான், “நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய். மேலே செல்”, என்று கூறி அமர்ந்தார். நூற்றுக்கணக்கான பகவானின் பக்தர்கள் இந்த காட்சியை கண்டு வியப்புற்றனர்.

இது பகவான் தனது பக்தர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நிகழ்த்திய திருவிளையாடல் ஆகவே சாது கருதினார். தனக்கும், இறைத் தொண்டில் ஈடுபட்டுள்ள மற்றவர்கள்  எவ்வளவு எளியவர்கள் ஆயினும் சரி, அவர்களுக்கும் இடையே எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது என்பது பகவான் போதிக்க விரும்பிய பாடமாகும். இந்த நிகழ்ச்சி சாதுவிற்கு பகவான் சிவானந்தாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை நினைவு படுத்தியது. அவரது பக்தர்களின் சிலர், ரிஷிகேஷில் வாழ்ந்துவந்த மற்ற சில துறவியர்களை பயனற்றவர்களாக கருதி வந்தனர். இதை அறிந்த பகவான் சிவானந்தா, அந்த பக்தர்களுக்கு பாடம் புகட்ட விரும்பி அவர்கள் அனைவரையும் கங்கைக்கு புனித நீராட அழைத்துச் சென்றார். நீராடிய பிறகு, அவர்கள் அனைவரும் தங்கள் குருதேவருடன் திரும்பி வருகையில், ஒரு சலவைத்தொழிலாளி எதிர்திசையில் தனது கழுதையின் முதுகில் சலவை செய்ய வேண்டிய துணி மூட்டையுடன் வருவதைக்கண்ட பகவான் சிவானந்தா அந்த கழுதையின் முன்னே விழுந்து வணங்கினார். அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து வினவியபோது பகவான் அமைதியாக, அந்த கழுதை, ரிஷிகேஷை சேர்ந்த பல மகாத்மாக்களின் காவி உடைகளை, அந்த சலவைத்தொழிலாளி சலவை செய்த பிறகு, தனது முதுகில் சுமந்து வருவதாக கூறினார். 

மதம் இன்று ஒரு விற்பனைப்பொருளாகவும், மத அமைப்புகள் வியாபார இல்லங்களாகவும் ஆகியுள்ளன. ஆன்மீகத் தலைவர்களின் அற்புத ஆற்றல்கள் தங்களது உலகாயத பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என்று கருதி பலர் அத்தகைய தலைவர்களை தேடும் பணியில் முனைந்துள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி சிலர் காவி உடுத்து மகாத்மாக்கள் போல் நடித்து செல்வம் ஈட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானம் மற்றும் பகுத்தறிவின் இந்த காலத்திலும், பல கல்வி கற்றவர்கள் மற்றும் பெரும் பதவிகளில் உள்ளவர்கள் போலும், தங்களது உலகாயத பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறி சொல்பவர்கள் அல்லது கடவுள் மனிதர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் இருக்கும் இடத்தை தேடி, அவர்கள் மூலம் இறைவனின்  உதவி பெறலாமென்று நினைக்கின்றனர். தொலை தூரங்களில் உள்ள சிறிய கிராமக் கோயில்களில் அமர்ந்து குறி சொல்லியும் மந்திரம் தந்திரம் போன்றவற்றை செய்தும் கிராம மக்களை கவருகின்றவர்கள் முதல், பெருநகரங்களில் ஆசிரமம் அமைத்து கோடீஸ்வரர்களான  வியாபாரிகளையும் பெரும் பதவிகளில் உள்ளவர்களையும் கவர்ந்து, விமானத்தில் பறந்து ஆடம்பர வாழ்க்கை வாழும் போலி சாமியார்களும், தங்களை கடவுளின் அதிகாரம் பெற்ற  ஏஜெண்டுகளாக கூறிக்கொள்கின்றனர். இவர்களை தவிர ‘மன ஆற்றல்’, ‘குண்டலினி யோகம்’, ‘தொழில் மற்றும் ‘வியாபார வெற்றி மற்றும் மனச்சோர்வு நிர்வாகம்’ என்று பணத்திற்காக ஆன்மீகத்தை வியாபாரச்சரக்குகளாக்கியுள்ளவரும் இன்று பலர் உள்ளனர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் மந்திரம் தந்திரம் என்று போலி ஆன்மீக ஆற்றலை வெளிக்காட்டுபவர்களுக்கு விளம்பரம் அளிக்கப்படுகிறது. 

பாரதத்தின் மிகப்புராதனமான ரிஷி முனிவர்கள் வகுத்து வழங்கியுள்ள சமய மற்றும் ஆன்மீக வாழ்க்கை மூல்யங்களை விஞ்ஞான பூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் கற்றறிந்து ஒரு புத்தெழுச்சி ஏற்படுத்தவேண்டிய காலமாகும் இது. சுவாமி விவேகானந்தர், சுவாமி தயானந்தா, சுவாமி ராம்தீர்த்தா , மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர், மற்றும் பகவான. ரமணர் போன்ற சான்றோர்கள் நவீனகாலத்தில் நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப்பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாகவும் பகுத்தறிவுபூர்வமாகவும் விளக்கிக்கூறியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இன்று, பல படித்த உயர்நிலையில் உள்ள ஹிந்துக்கள்  இந்த மஹான்கள் நமக்கு போதித்துள்ள பாதையில் சென்று ஆன்மீக உணர்வு பெற  முயற்சிக்காமல் உலகாயத நலன்களுக்காக போலியான குருமார்களையும் கடவுள்மனிதர்களையும் நாடிச்செல்கின்றனர். உண்மையான கடவுள் நம்பிக்கை இன்றி கோயிலுக்கு செல்லுதல், கண்மூடித்தனமான மூடநம்பிக்கையுடன் கடவுள் மற்றும் கடவுள் மனிதர்களை வழிபடுதல் போன்றவை வாழ்க்கை முன்னேற்றத்தையோ, ஆன்மீக முன்னேற்றத்தையோ ஒரு போதும் தருவதில்லை. மனித பிறவி என்பது அரிதான ஒன்று. கட்டுப்பாடுடனும்  சமர்ப்பண மனப்பான்மையோடும்  உயர்ந்த வாழ்க்கை மூல்யங்களை கடைபிடித்து, மனித வாழ்க்கையை, மிருகங்களைப்போல் உயிர் வாழும்  நிலையிலிருந்து, தெய்வ நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். யோகி ராம்சுரத்குமார் போன்ற மகாத்மாக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையுமே உயர்ந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியுள்ளனர். அவர்களை கண்மூடித்தனமாக வழிபடுவதைவிட, உண்மையான பக்தர்களாக, அவர்கள் வாழ்ந்துள்ளது போன்ற வாழ்க்கையை, அவர்கள் காட்டிய பாதையில் சென்று, வாழ்ந்து காட்டவேண்டும். அதுவே நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை ஆகும். எனது குருநாதர் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஆன்மா இந்த பாதையில் பயணிக்க, அனைத்து பக்தர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கட்டும்!. 

– சாது. ரங்கராஜன். 

மஹாசமாதியில் பகவான்

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.27

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.27 

பகவானின் மோசமான உடல்நிலையும், சாதுவின் துன்பமும்

செவ்வாய்க்கிழமை , ஜூலை – 18 , 2000 அன்று போட்ஸ்வானாவின் திரு. P. ஸ்ரீனிவாசன் மற்றும் சுரபி சாதுவை சந்தித்தனர். வெள்ளிக்கிழமை சௌ. உமா மகேஸ்வரி, திரு. தேவன் ஷர்மாவின் மகள், தங்களின் திருவண்ணாமலை பயணம் குறித்தும் பகவானின் உடல்நிலை பற்றியும் தெரிவித்தார். ஜூலை – 23 காலையில் சாது, நிவேதிதாவிற்கு பகவானின் கருணையால் ஆண்குழந்தை பிறந்தது என்ற சேதியை அறிந்தார். சாது பகவானுக்கு இந்த சேதியை தெரிவிக்க ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களை ஆசிரமத்தில் தொடர்பு கொண்டார். அப்போது ஜஸ்டிஸ் அருணாச்சலம் அதிர்ச்சியளிக்கும் தகவலாக பகவானின். உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு கேன்சர் இருப்பதாகவும் கூறினார். ஆகஸ்ட் – 2 அன்று நிவேதிதாவின் குழந்தைக்கு ஸ்ரீராம் என்று பெயர் சூட்டப்பட்டது.  ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி முக்தானந்தா பெங்களூரை அடைந்தார். சாது அவரை வியாழக்கிழமை சந்தித்தார். ஆகஸ்ட் – 5, சனிக்கிழமையன்று, ஒரு சத்சங்கம் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில்  நடைப்பெற்றது. சுவாமி முக்தானந்தா, திருமதி மற்றும் திரு. P.R. ராவ் , திருமதி  மற்றும் திரு. ராம்தாஸ் மற்றும் ஆனந்தாஸ்ரமத்தின் பல பக்தர்கள், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் பக்தர்கள், சாதுவின் குடும்பத்தினரான விவேக் மற்றும் நிவேதிதா, சத்சங்கத்தில் பங்கேற்றனர். சாது மீண்டும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களுடன் ஆகஸ்ட் – 8 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 11 அன்று சாது திருவண்ணாமலைக்கு மாலையில் சென்று அடைந்தார். பகவான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அடுத்தநாள் காலையில், ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவை பகவானிடம். அழைத்துச் சென்றார். பகவான் ஆசிரமத்தில் உள்ள சிறப்பு அறையில் படுத்தபடுக்கையாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மா தேவகி மற்றும் மா விஜயலட்சுமி சாதுவை வரவேற்றனர். சாது பகவானின் அருகில் நின்றிருந்தார். பகவான் படுக்கையில் தனது கண்களை மூடி படுத்து இருந்தார். மாதேவகி அவரிடம், “சாது ரங்கராஜன் வந்திருக்கிறார்“ என்றார். பகவான் கண்களை திறந்து, “எப்போது?“ என வினவினார். தேவகி பதிலளிக்கையில், “சாது ரங்கராஜன் இங்கே உங்கள் அருகே“ என்றார். பகவான் திரும்பி சாதுவை பார்த்தார். சாது தனது வணக்கங்களை தெரிவித்தார். படுக்கையில் இருந்தபோதும், பகவானும் கைகளை கூப்பி சாதுவிற்கு வணக்கம் தெரிவித்தார். அவரது கண்கள் அவரது உடல் அனுபவிக்கும் வலியை உணர்த்தின. அவர் பேச முற்பட்டு, “யாரோ வருகிறார்கள்…” என்று அங்கேயே நிறுத்தினார். மேலும் அவரால் பேச இயலவில்லை. தேவகி அவரது வார்த்தையை திரும்ப உச்சரித்து அவரை பேச வைக்க முயற்சித்தார். ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஆயினும் அவர் சாதுவை கூர்ந்து கவனிக்கலானார். அவர் தனது கண்களை மூடி மீண்டும் தூங்க துவங்கினார். சாது அவரது அருகில் ஐந்து நிமிடங்கள் அமர்ந்துவிட்டு பின்னர் அவர் முழுமையாக ஓய்வெடுக்க விட்டுவிட நினைத்தார். மா தேவகி மற்றும் விஜயலட்சுமி,  பாரதி, நிவேதிதா மற்றும் விவேக் குறித்து விசாரித்தனர். சாது அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பகவான் கண்ணைத் திறந்து வலியில் உறுமினார்.. அனைவரும் அவரின் அருகே சென்றனர். பகவான் மீண்டும் கண்களை திறந்து சாதுவை பார்த்து பின்னர்                    கண்களை மூடிக்கொண்டு உறங்கத் தொடங்கினார். சாது, மாதேவகி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் விடைப்பெற்று, ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு, திரு சங்கரராஜுலு மற்றும் திரு சக்திவேல் போன்ற ஆசிரம வாசிகளிடம் விடைப்பெற்று, சென்னைக்கு பேருந்தை பிடித்து வீட்டை வந்தடைந்தார். 

சாது பகவான் அறுவைசிகிச்சை செய்து கொள்ள மறுத்துவிட்டதை எண்ணி மிகுந்த துன்பம் கொண்டார். சில பக்தர்கள், அவர் தனது ஆன்மீக சக்தியை பயன்படுத்தி தன்னை தானே குணப்படுத்திக் கொள்வார் என நம்பினர். சாது, மாதேவகிக்கு, திங்கள்கிழமை ஆகஸ்ட் 13 அன்று, பகவானை மருத்துவ சிகிச்சைக்கு இணங்க வைப்பது குறித்து, ஒரு சேதியை ஃபேக்ஸ் செய்தார்: 

“பூஜ்ய மாதாஜி ! 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! எனது குருநாதர், யோகி ராம்சுரத்குமார் அவர்களின், புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!  உங்களுக்கும், அன்னை விஜயலட்சுமி மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களுக்கும்  எனது வணக்கம் ! 

இந்த சாது, பகவான் அவர்களை நேற்று காலை  தரிசிக்க அனுமதித்தமைக்கு தங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறான். வலியில் துடித்துக் கொண்டிருந்த பொழுதும் பகவான், இந்த சதுவின் வண்க்கத்திற்கு, கைகளை கூப்பி, இந்த எளிய சீடனுக்கு திருப்பி வணக்கத்தை செலுத்திய பகவானது பணிவு இந்த சீடனின் உள்ளத்தில் பெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்திவிட்டது.  ஆசிரமத்திற்கு வெளியே இந்த சாதுவின் ஒவ்வொரு செயலிலும் பகவான் உடன் இருந்து வழிகாட்டி வந்துள்ள போதிலும், அவரோடு இருந்து அவருக்கு சேவை செய்ய இயலவில்லையே என்ற குறை இவனது நெஞ்சில் வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த சாது திரு. அருணாச்சலம் அவர்களிடம் எந்த நேரத்திலும் எனது உதவி தேவையெனில் என்னை அழைக்கலாம் என்று கூறியிருக்கிறான். 

நாங்கள் பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பை  பெற்றோம். அவர், பகவான் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மறுத்த போதிலும், ஒரு டாக்டர்கள் குழு அவரது கேன்சரை ஆய்வு செய்து, அவருக்கு வலி மற்றும் கஷ்டமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். நாம் அனைவரும் பகவானின் முன் குழந்தைகளாக இருக்கின்ற போதிலும், நமது தந்தை அவரது உடல்நிலை குறைப்பாட்டில் இருந்து முழுவதும் குணமாவதற்கான பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், அதை செய்ய உரிமைகளும் நமக்கு உண்டு. அவரது உடல்நிலை குறைபாட்டை நாம் அவரது தெய்வீக விளையாட்டு என்று எடுத்துக்கொண்டாலும் சரி, அல்லது இயற்கையின் விதி என்று பகுத்தறிவோடு உணர்ந்தாலும் சரி, நமது கடமையை நாம் ஆற்ற வேண்டும் .

மாதாஜி, இந்த சாது, உங்களுடைய மற்றும் நமது ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களுடைய கவனத்திற்கு, ஒரு முக்கிய தகவலை கொண்டுவர விரும்பிகிறான். நாம் நமது குருவின் கட்டளைகளை மிகவும் உறுதியாக பின்பற்றிவந்தாலும், பொதுமக்களிடையேயும், பகவானின் நெருக்கமான பக்தர்களிடையேயும், ஆசிரம நிர்வாகிகள், பகவானின் அற்புத சக்திகளின் மீது நம்பிக்கை கொண்டு, பகவானை குணப்படுத்த போதிய மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக பேசிக் கொள்ளகிறார்கள். பத்திரிகைச் செய்திகள் குறிப்பிடுவதுபோல் பகவானின் உடல்நிலை காரணமாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் அவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பதிலாக, மருத்துவ நிபுணர்களின் ஒரு குழு ஏற்படுத்தி பகவானின் உடல்நிலை குறித்து அவ்வப்பொழுது பொதுமக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் தகவல் வழங்க நாம் ஏற்பாடு செய்வது அவசியமாகும். நீங்கள், அன்னை விஜயலட்சுமி மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் போன்றோர் இந்த கருத்தை எடுத்துக்கொண்டு சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். பகவான் இப்போதிருக்கும் சூழலில் நாம் அவரது உத்தரவிற்காக காத்திருக்க கூடாது. இந்த சாது நிச்சயம் பகவான் உள்ளிருந்து வழிகாட்டுவார் என்று நம்புகிறான். 

ஆசிரமத்தில், இன்றைய மருத்துவ முகாம் நன்றாக முடிந்திருக்கும் என்றே நம்புகிறோம். நாம் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடமிருந்து முகாமிற்கான பொதுவான மருந்துகளின் தேவை குறித்து அறிய காத்திருக்கிறோம். அதன்படி நாம் நமது ராமநாம பணியாளர்கள் மற்றும் எங்கள் மருத்துவர் தொடர்புகளின் மூலம், தேவைப்படும் மருந்துகளை ஆசிரமத்திற்கு தொடர்ந்து பெற இயலும். இதுகுறித்து சாது ஜஸ்டிஸ் இடமும் விவாதித்துள்ளான். 

இந்த சாது இந்தவாரம் முழுவதும் சென்னையில் இருந்துவிட்டு பின்னர் பெங்களூர் திரும்புவான். 

வணக்கத்தோடு, பகவானின் சேவையில், 

சாது ரங்கராஜன். “

ஆகஸ்ட் – 15 , 2000 செவ்வாய்க்கிழமையன்று சாதுஜி பின்வரும் கடிதத்தை மா தேவகியின் பதிலாக, ஆசிரமத்தில் இருந்து, ஈ-மெயிலில் பெற்றார். 

யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா !

அன்பிற்குரிய சாதுஜி, 

நமஸ்கார் ! பகவான் தங்களின் ஆகஸ்ட் – 14 , 2000 தேதியிட்ட ஈ-மெயிலை பெற்றார். சேதியானது பகவானிடம் தேவகி மூலம் வாசிக்கப்பட்டது. பகவான் அதற்கு பதிலளிக்கவில்லை. மா தேவகி உங்களின், டாக்டர்களின் குழு ஏற்படுத்துவது குறித்த, கருத்தை பகவானின் முன் வைத்தபோது, பகவான் மா தேவகியிடம், “இந்த விஷயத்தை விட்டுவிடுங்கள்“ (Leave the case) என்றிருக்கிறார். மா தேவகி இதன் பொருள் என்ன என்று வினவி “இதனை புறக்கணியுங்கள்“ என்று பொருள் கொள்ளலாமா என்று வினவ பகவான் “ஆம்“ என்றிருக்கிறார். 

எங்கள் அன்பு மற்றும் விசாரிப்பை திருமதி. பாரதி , விவேக் அவரது மனைவி, மற்றும் நிவேதிதா, ரமேஷ் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு தெரிவிக்கவும். 

அன்புடனும், வணக்கத்துடனும், 

ராஜ்மோகன்.” 

பகவானின் பக்தரும், சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலருமான மும்பையை சேர்ந்த திரு. ஆஷிஷ் பகோர்டியா சென்னைக்கு ஆகஸ்ட் – 15 அன்று வந்தார், சாது அவரையும் திரு. கைலாஷ் நட்டானியையும் சென்னை கே.கே.நகரில் சந்தித்தார். அவர்கள் பகவானின் உடல்நிலை குறித்து விவாதித்தனர். புதன்கிழமை ஆகஸ்ட் – 16 அன்று, பகவானின் பக்தரும் , சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலரும், பகவானின் மருத்துவ உதவிகளை கவனித்துக் கொள்பவரும் ஆன, டாக்டர். ராஜலட்சுமி, பகவான் சென்னைக்கு வியாழக்கிழமை அன்று மருத்துவ சிகிச்சைக்காக தி.நகர் ரமணா கிளினிக்கிற்கு அழைத்து வரப்பட்டதாக சாதுவிடம் கூறினார். சாது, டாக்டர். ராஜலட்சுமியின் கணவரான திரு. S.ராமமூர்த்தி உடன் ரமணா கிளினிக் சென்றார். அங்கே பகவான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தமையால், சாது பகவானின் தரிசனத்தை பெறாமல் திரும்பினார். சாது, வெள்ளிக்கிழமை, திரு. ராமமூர்த்தியிடம், டாக்டர். ராஜலட்சுமி பகவானின் அருகிலேயே சேவையில் இருக்க வேண்டும் என்றார். சனிக்கிழமையன்று டாக்டர். குமரேசன் சாதுவிடம் பகவானின் உடல்நிலை குறித்து விவாதித்தார். ஆகஸ்ட் – 22 செவ்வாய்க்கிழமை, திரு. ராம்மூர்த்தி, பகவான் அப்பலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறினார். வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் – 25 அன்று, சாது “குங்குமம்” என்ற தமிழ் இதழை பெற்றார். அதில் பகவான் குறித்த கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. திங்கள்கிழமையன்று, சாது, டாக்டர் குமரேசன் மற்றும் திரு.ராம்மூர்த்தி அவர்களிடம் பகவானின் உடல்நிலை குறித்து விவாதித்தார். அன்றிரவு சாது பெங்களூருக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் மூலம் பயணித்து அடுத்தநாள் ஆகஸ்ட் – 29 அன்று அங்கே சென்று சேர்ந்தார். செப்டம்பர் – 1 விநாயகர் சதுர்த்தி நாளன்று, சாது, பகவானின் உடல்நலத்திற்காக, ஒரு சிறப்பு பூஜையை செய்தார். 

1995-ல் டர்பனில் நடைபெற்ற உலக ஹிந்து மகாநாட்டில் வெகு சிறப்பாக தொண்டாற்றிய, சௌ. காஷ்மீரா பிஹாரி மற்றும் சிரஞ்சீவி ரன்ஜிவ் நிர்கின் என்ற, பீட்டர்மாரிட்ஸ்பர்க்கின் இரு துடிப்பான இளம் பருவத்தினர், அவர்கள் குடும்பத்தினர் சம்மதம் பெற்று, திருமணம். செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். அவர்களுக்கு சாது, பாரதமாதா குருகுல மந்திரில் வேதமுறைப்படி திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். மணமக்கள், மணமகளின் தாயார் மற்றும் மணமகனின் பெற்றோர்கள் உட்பட, இருதரப்பிலிருந்தும் 15 பேர்,  திருமணத்திற்கு, செப்டம்பர் – 9 , 2000, சனிக்கிழமை அன்று, ஜெட் எயர்வேய்ஸ் மூலம், டர்பனில் இருந்து வந்தனர். ஆசிரமத்தில் யோகிராம்சுரத்குமார் சன்னிதியில் காயத்ரி மற்றும் கணபதி ஹோமங்கள் பூஜைகள் ஆகியவை ஞாயிறன்று நடைபெற்றன ரஞ்சீவின் மஞ்சள் விழா, காஷ்மீராவின் மருதாணி விழா ஆகியவைகளும் நடைபெற்றது. திங்கட்கிழமையன்று, ஆசிரமத்தின் பல பக்தர்கள் மற்றும் சாதுவின் குடும்பத்தினர் முன்னிலையில் அவர்களது திருமணம் வேத முறைப்படி திரு ஸ்ரீதர் வாத்தியார் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டது. சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் இரண்டுநாள் சாதுவுடன் தங்கி வியாழக்கிழமை, செப்டம்பர் 14 ஆம் தேதி, விடைபெற்றனர். பகவானின் அருள் ஆசிகள், அந்த தம்பதியினரை தென்னாபிரிக்காவில் பகவானின் பணிக்கு, சிறந்த சேவகர்களாக மாற்றியது.

சாது சென்னைக்கு செப்டம்பர் – 16  சனிக்கிழமை திரும்பினார்.  தன்னிடம் தீக்ஷை பெற்ற சீடன், திரு ஹேமாத்ரி ராவ் அவர்களின் மனைவி, டாக்டர் ஆண்டாள் அவர்களுடைய மருத்துவமனை திறப்பு விழாவிற்காக, சாது ஞாயிறு அன்று, ஒரு ஹோமம் நடத்தினார். செவ்வாய்க்கிழமை சாது ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பகவானின் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டார். அவர் டாக்டர் குமரேசனிடம் புதன்கிழமை பேசினார். செப்டம்பர் – 21 வியாழக்கிழமை அன்று சாது பகவான் சிகிச்சை பெறும் ரமணா க்ளினிக்கை அடைந்தார். திரு. ஆஷிஷ் பக்ரோடியாவின் மனைவி, திருமதி சாந்தி பிரியா மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவை வரவேற்றனர். மா தேவகி மற்றும் மா விஜயலட்சுமி பகவானின் அறைக்கு கூட்டி சென்றனர். சாது, மிகுந்த ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பகவானின் அருகே சிறிது நேரம் நின்றார். பின்னர் சாது மா தேவகி இடமும் மற்றவர்களிடமும் விடைப்பெற்று தனது இல்லத்திற்கு திரும்பினார். டாக்டர். குமரேசன் சாதுவை தொலைபேசியில் அழைத்து, பகவானின் உடல்நிலை குறித்து விவரித்தார். சாது, கடிதம் ஒன்றின் மூலம், பகவானின் பக்தர்களின் சார்பாக ஒரு வேண்டுகோளை, ரமணா கிளினிக்கின் நிறுவனர், டாக்டர் ரங்கபாஷ்யம் அவர்களுக்கு எழுதி அனுப்பி, பகவானுக்கு சிறந்த மருத்துவம் மற்றும் கவனத்தை தருமாறு கோரியிருந்தார். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ ரமணர் போன்று, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஒரு அவதாரமாக இருந்தபோதும், அவர் தனது ஆன்மீக சக்தியை தன்னை குணப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள மாட்டார், எனவே அவருக்கு சிறந்த மருத்துவ கவனிப்பை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அவரது பக்தர்களை சாரும், என்று சாது குறிப்பிட்டிருந்தார். சாது தனது பதிப்பகத்தின் பகவான் குறித்த நூல்களை டாக்டருக்கு பரிசாக அனுப்பி வைத்தார். 

சனிக்கிழமை செப்டம்பர் 23 அன்று சாது கீதா பவனில் நடைபெற்ற மானிட கடமைகள் மன்றத்தின் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். விவேகானந்தா கல்விக்கழகத்தின் திரு B. கோவிந்தராஜ் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் திரு உத்தமராஜ் போன்றவர்கள் தாதுவை வரவேற்றனர். மாநகரைச் சேர்ந்த பல பிரமுகர்கள், திருமதி சவுன்தரா கைலாசம் மற்றும் டாக்டர் லலிதா காமேஸ்வரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கெடுத்தனர். திரு கோவிந்தராஜ் அவரது உரையில் சாதுவின் “வந்தே மாதரம்” நூல் குறித்து குறிப்பிட்டார். சாது ‘தத்துவ தரிசனம்’ மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் வெளியீடுகளை  விருந்தினர்களுக்கு வழங்கினார். செப்டம்பர் 24 ஞாயிறன்று, தென்னாப்பிரிக்காவிலிருந்து, திரு டெட்டி  கொமல், திருமதி ஷெரிதா, அவர் தாயார் மற்றும் சகோதரி வந்து சேர்ந்தனர். திங்கட்கிழமை அன்று, சாது, திரு ராமமூர்த்தி,  திரு கெ எஸ். வைத்தியநாதன் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த விருந்தினர்களுடன் பனப்பாக்கம் பிச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பிரதோஷ பூஜைகளில் பங்கு பெற்றார். அங்கு, சாது, பக்தர்களிடையே, பகவான் யோகி ராம்சுரத்குமார் பற்றி உரை நிகழ்த்தி, ஒரு ராமநாம சத்சங்கத்தையும் நடத்தினார். பெருமாள் கரியமாணிக்கர் ஆலயத்திற்கும் அவர் சென்றார். செவ்வாயன்று,  சாது, தென்னாப்பிரிக்க பக்தர்களுடன் பெங்களூருக்கு பயணித்தார்

அக்டோபர் 14 ஞாயிற்றுக்கிழமையன்று, சாது, திரு. சக்திவேல் மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களின் மகளிடம் பேசினார். திங்கள்கிழமை அவர் ரமணா கிளினிக்கிற்கு மீண்டும் சென்று, பகவானின் தரிசனத்தை பெற்றார். பகவான் சாதுவோடு 20 நிமிடங்கள் செலவழித்தார். சாது பகவானின் முன் சமீபத்திய ‘தத்துவ தர்சனா’ இதழை வைத்தார். சாது பகவானிடம் ‘விக்ஞான பாரதி’ வகுப்புக்களை, பெங்களூரில், யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 22 அன்று துவங்குவதாக கூறினார். பகவான், “என் தந்தை உனது அனைத்து திட்டங்களையும் ஆசீர்வதிப்பார்” என்றார். பகவான் சாதுவின் வெளிநாட்டு பயணத்தையும் ஆசீர்வதித்தார். 

அக்டோபர் – 18 புதன்கிழமை, சாது பெங்களூருக்கு திரும்பினார். பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் புனேவில் இருந்து தொலைபேசியில் அழைத்தார். அவர் தனது விருப்ப ஆவணத்தில் தனது குருகுலத்தை சகோதரி நிவேதிதா அகாடமிக்கு வழங்கியுள்ளதாக கூறினார். விக்ஞான பாரதி ஹிந்து பண்பாடு வகுப்புகள் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் – 22 அன்று துவங்கியது. அந்த வகுப்பில் பல மாணவர்கள் கலந்து கொண்டனர். சாது, பகவான் யோகிராம்சுரத்குமார் குறித்தும்,  அகாடமியின்  பணிகளுக்கு அவர் வழங்கியுள்ள ஆசி குறித்தும், பேசினார்.

சாதுவின் பிள்ளைகள் விவேக் மற்றும் நிவேதிதா சாதுவிற்கு சஷ்டியப்தபூர்த்தியை “ ஸ்ரீ பாரதி மந்திர்” பெங்களூரில், நவம்பர் – 15 , 2000 அன்று செய்யவிரும்பினர். குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அதற்கான முழு ஏற்பாடுகளை செய்தனர். “விக்ஞான பாரதி — சாது பேராசிரியர் வே ரங்கராஜன் நூல்கள் முழு தொகுப்பு–தொகுப்பு I“ இந்த புனித நாளில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்த முதல் தொகுப்பு, “வேத காலம் தொட்டு நவீன காலம் வரை ஹிந்துப் பண்பாடு– பகுதி 1”, சாது ரங்கராஜன், சகோதரி நிவேதிதா அகாடமியின் விக்ஞான பாரதி ஹிந்து பண்பாடு வகுப்புகளில், பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆற்றியுள்ள உரைகளின் மற்றும் பாடங்களின்  தொகுப்பு ஆகும். சகோதரி நிவேதிதா அகாடமியின் பெங்களூரில் உள்ள யோகி ராம்சுரத்குமார் இண்டொலொஜிகல் ஆராய்ச்சி மையம் வெளியிடுகின்ற இந்த நூலிற்க்கு ஹவுரா, பேலூரில் உள்ள, ராமகிருஷ்ணா மிஷன் மடத்தின், சுவாமி முக்யானந்தர், முன்னுரை வழங்கியுள்ளார்

சாதுவின் நூல்கள் மொத்த தொகுப்பு, பத்து தொகுதிகளை தாண்டும். கடந்த 40 ஆண்டுகளில் சாது ரங்கராஜன் எழுதியுள்ள நூல்கள், பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள கட்டுரைகள், பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்த்தியுள்ள உரைகள் மற்றும் பேட்டிகள் இவற்றில் அடங்கும், பகவானின் பக்தரும் ஷோபனா ஆப்செட்டின் உரிமையாளருமான திரு. S.P. ஜனார்த்தனன், சாதுவின் விக்ஞான பாரதியின் முதல் தொகுதியின் முதல் பகுதியை சிறப்பாக அச்சிட்டார். திரு. அசோக் மட்டூ என்ற மற்றொரு பக்தர் அந்த நூலை அச்சிடுவதற்கான காகித செலவை ஏற்றுக்கொண்டார். தென் ஆப்பிரிக்காவின் டிவைன் லைஃப் சொஸைட்டியின் சுவாமி சகஜானந்தா சாதுவின் சஷ்டியப்தபூர்த்திக்கு அவரது அன்பு காணிக்கையை தந்தார். நிகழ்ச்சிக்கு முன்பாக சாது, கொரியர் மூலம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு கடிதம் ஒன்றையும், “விக்ஞான பாரதி” பிரதி பிரதிகளையும் அனுப்பினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் அளவற்ற கருணையினால் இந்த சாதுவின் சஷ்டியப்தபூர்த்தி இங்கே நாளை எளிய குடும்பவிழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. இருப்பினும் அந்த விழாவில் நாங்கள், இந்த சாதுவின் , விக்ஞான பாரதி சாது பேராசிரியர் வே ரங்கராஜன் நூல்கள் முழு தொகுப்புதொகுப்பு I — வேத காலம் தொட்டு நவீன காலம் வரை ஹிந்துப் பண்பாடுபகுதி 1″, வெளியிடப்படுகிறது. அதன் முதல் பிரதியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க அனுப்பியிருக்கிறோம். இந்த சாது , பாரதி, விவேக் , மாலதி, நிவேதிதா, ரமேஷ் , ஹரிப்ரியா, ஸ்ரீராம் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் வணக்கங்களை உங்களுக்கு தெரிவித்து, உங்கள் ஆசியைப்பெற வேண்டுகிறோம். 

பிரேம் மற்றும்  ஓம் உடன், பகவானின் சேவையில், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

குடும்ப உறுப்பினர்கள், சாதுவின் மூத்த சகோதரர் திரு. V. லஷ்மிகாந்தன் போன்றோர், சஷ்டியப்தபூர்த்தி விழாவில் நவம்பர் – 15 அன்று கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி. உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பெங்களூருக்கு வெளியே இருந்து வந்த உறவினர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

சாதுஜி, பகவான் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு திரும்பிவிட்டார் என்ற சேதியை பெற்றார். டிசம்பர் – 1 யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் பெங்களூரில் நடைப்பெற்றன. டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் அகமதாபாதில் வி.எச்.பி.யின் சர்வதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை சாது பெற்றார். நவம்பர் 27 அன்று சாது இது குறித்த கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

சென்னையிலிருந்து தாங்கள் திருவண்ணாமலைக்கு திரும்பியது குறித்து எங்கள் மனமகிழ்வை தெரிவித்துக்கொள்குறோம். உங்களின் உடல் நலத்திற்கும் பூரண ஆயுளுக்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

நாங்கள் டிசம்பர் – 1 , 2000 அன்று இங்கே யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியை வழக்கம்போல் சிறப்பு பூஜை அருகில் உள்ள ஸ்ரீனிவாசா கோயிலிலும், ஹோமம் மற்றும் அகண்ட ராமநாம ஜபம் மற்றும் பொது விழாவை எங்கள் ஆசிரமத்திலும்  நடத்த இருக்கிறோம். இத்துடன் அழைப்பிதழையும் இணைத்துள்ளோம். நாங்கள் உங்கள் கருணை மற்றும் ஆசியை வேண்டுகிறோம். 

“விக்ஞான பாரதி — சாது பேராசிரியர் வே ரங்கராஜன் நூல்கள் முழு தொகுப்பு — தொகுப்பு I — வேத காலம் தொட்டு நவீன காலம் வரை ஹிந்துப் பண்பாடு — பகுதி 1″, முதல் பிரதியை தாங்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். அதற்கு பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்த சுவாமி முக்யானந்த்ஜி முன்னுரை எழுதியுள்ளார். இந்த சாது டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் அகமதாபாதில் வி.எச்.பி. யின் சர்வதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார். நாங்கள் புனேவிற்கும் சென்று பூஜ்ய தபஸ்வி பாபா  அவதூத் அவர்களை சந்தித்து அவரிடம் ஹிந்து தர்மோதயா சங்கம் அமைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆன்மீக பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க விரும்பிகிறோம். அதற்கு முன் தங்களை சந்தித்து ஆசிப்பெற்று செல்ல வேண்டும் என விரும்பிகிறோம். 

சௌ. பாரதி, சௌ. நிவேதிதா மற்றும் சிரஞ்சீவி. ரமேஷ், அவர்களின் பிள்ளைகள் ஹரிப்ரியா மற்றும் ஸ்ரீராம், சிரஞ்சீவி. விவேக் மற்றும் சௌ.மாலதி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் தங்களின் வணக்கங்களை உங்கள் புனித பாதங்களில் சமர்ப்பித்து உங்கள் ஆசியை வேண்டுகிறார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

83 வது யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி சிறப்பு ஹோமம், பூஜைகள், அகண்ட ராமநாம ஜபம் என பெங்களூர் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை டிசம்பர் – 1, 2000 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆசிரமத்தின் அருகாமையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது. பெங்களூர், கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா சாதனா கேந்திராவின் நிறுவனரான பூஜ்ய சுவாமி சந்திரேஸ்னாந்த்ஜி பூஜை மற்றும் அகண்ட ராம நாமத்தில் கலந்து கொண்டதோடு, ஆன்மாவைக்கிளறும் ஒரு பஜனையை மேற்கொண்டார். சாது அந்த நிகழ்வில் சகோதரி நிவேதிதா அகாடமி, பாரதமாதா குருகுல ஆசிரமத்தை துவங்கியது, பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல்வேறு ஹிந்து அமைப்புகள் மற்றும் சமயத் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பாரதத்தின் கலாச்சாரம் மற்றும் ரிஷி முனிவர்கள் வகுத்துள்ள உலகளாவிய வாழ்க்கை மூல்யங்கள் ஆகியவற்றை உலகெங்கும் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முயற்சி ஆகும் என்றார். 

சனிக்கிழமை டிசம்பர் – 9 அன்று டாக்டர் ராஜலட்சுமி, பகவானின் உடல்நிலை குறித்து சாதுவிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். திங்கள்கிழமை டிசம்பர் – 18 அன்று சகோதரர் வேதானந்தா, சகோதரர் ஹரிதாஸ் மற்றும் தென்ஆப்பரிக்காவை சேர்ந்த ஆறுபேர், பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அடுத்தநாள் , சாது சென்னையை அடைந்தார். சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை செவ்வாய்க்கிழமை டிசம்பர் 19 , 2000 அன்று எழுதி ஈ-மெயில் மூலம் ஆசிரமத்திற்கு அனுப்பினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியினால் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா பெங்களூர் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. நாங்கள் ஹோமம் , சிறப்பு பூஜை , அகண்ட ராமநாமம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகளை ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த கேந்திரத்தின் பூஜ்ய சுவாமி சந்திரேசானந்தா அவர்கள் முன்னிலையில் நடத்தினோம். இந்துமதம் குறித்த வகுப்புகள் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று அவர்களை விட்டுவிட்டு, இந்த சாது, சென்னைக்கு இன்று காலை வந்தடைந்தான். இந்த சாது நாளை சபரிமலை செல்ல இருக்கும் யோகி ராம்சுரத்குமார் பக்தர்களின் ஐயப்ப லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் உரையாற்றுவான்.  இந்த சாதுவும் நாளை மறுநாள் 21 ஆம் தேதி காலையில் அகமதாபாத்திற்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் மூலம் செல்வான். எனவே இந்த சாதுவால் திருவண்ணாமலைக்கு வந்து பகவானின் தரிசனத்தை, வட இந்தியா பயணப்படும் முன், பெற இயலவில்லை. நாங்கள் பகவானின் ஆசியை இங்கிருந்தே வேண்டுகிறோம்.

இந்த சாது டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் அகமதாபாதில் வி.எச்.பி.-யின் சர்வதேச ஒருங்கிணைவு கூட்டத்தில் கலந்து கொண்டு “வெளிநாட்டில் வாழும் பாரதியர்களிடையே ஹிந்து வாழ்க்கை மூல்யங்களின் எழுச்சி“ என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறான். 200-க்கும் மேற்பட்ட முக்கிய பணியாளர்கள் உலகம் முழுவதில் இருந்தும் அகமதாபாதில் கூடி, வி.எச்.பி. யின் உலகளாவிய திட்டங்களை வடிவமைக்க இருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்குப்பின் இந்த சாது வல்சத், பம்பாய் மற்றும் புனேவிற்கு சென்று எங்கள் பக்தர்களையும் பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் அவர்களையும் சந்திக்க இருக்கிறான். நாங்கள் பெங்களூருக்கு 31 ஆம் தேதி டிசம்பர் அன்று, திரும்பியபின், ஜனவரி ‘தத்துவ தர்சனா’ இதழை அச்சிற்கு அனுப்புவோம். அது தயாரானவுடன் நாங்கள் திருவண்ணாமலைக்கு வந்து முதல் பிரதியை தங்களிடம் சமர்ப்பிப்போம். 

தென் ஆப்பிரிக்காவில் இருந்தும், போட்ஸ்வானாவில் இருந்தும் பக்தர்கள் இங்கே வந்து இம்மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இந்த சாதுவை சந்தித்து, இந்த சாதுவின் அடுத்த வெளிநாட்டு பயணத்தை திட்டமிடுவர். 

இந்த சாது பகவானின் ஆசிகளை எங்களின் நிகழ்ச்சிகளுக்கு வேண்டி பிரார்த்திக்கிறான். திருமதி. பாரதி இன்று சென்னைக்கு பெங்களூரில் இருந்து ராமநாம பணிக்காக வந்துள்ளார். சிரஞ்சீவி விவேக், சௌ. மாலதி, சௌ. நிவேதிதா, சிரஞ்சீவி ரமேஷ் மற்றும் பிள்ளைகள் ஹரிப்ரியா மற்றும் ஸ்ரீராம் தங்கள் வணக்கங்களை உங்களுக்கு தெரிவிக்கின்றனர். எங்களின் பெங்களூர் ஆசிரமத்தை கவனித்துக்கொள்ளும் திரு. அனந்தன் மற்றும் அவரது அன்னை திருவண்ணாமலையில் கடந்த ஒருமாத காலமாக இருந்து, தினந்தோறும் பகவானின் தரிசனத்தை பெற்று வந்துள்ளனர். அவர்கள் பகவானை தனிப்பட்ட முறையில் சந்திக்க வாய்ப்பினை பெறாதபோதும், அவர்களும் பகவானின் ஆசியை வேண்டுகின்றனர். 

பிரார்த்தனை மற்றும் வணக்கங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். 

சாதுஜி அய்யப்ப சமாஜ் பக்தர்களின் லட்சார்ச்சனை நிகழ்வில்  புதன்கிழமை மாலை, “ பக்தியும், ஹிந்து வாழ்க்கையின் மூல்யங்களும்“ என்ற தலைப்பில் பேசினார். வியாழக்கிழமை டிசம்பர் 21 அன்று அவர் நவஜீவன் எக்ஸ்பிரஸில் அகமதாபாத் சென்றார். வி.ஹெச்.பி. தொண்டர்கள் அவரை புகைவண்டி நிலையத்தில் வரவேற்று சர்வதேச  ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு  அழைத்துச் சென்றனர்.

டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதி நடந்த விசுவ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில், “உலக ஹிந்துக்களே ஒன்று படுங்கள்“ என்பதே முழக்கமாக இருந்தது. 45 நாடுகளில் இருந்து 100 வி.எச்.பி பிரதிநிதிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ராமஜன்மபூமியின் ராமர் கோயிலை மீண்டும் எழுப்புதல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. குஜராத்தின் முதல்வரான திரு. கேஷூபாய் பட்டேல் விழாவை துவக்கி வைத்தார். டாக்டர்.B.K. மோடி வி.எச்.பியின் வெளிநாட்டு பிரிவின் செயல் தலைவர், பல்வேறு நாட்டின் பிரதிநிதிகளை வரவேற்றார். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ஆத்மானந்தா, உலக பௌத்த கவுன்சில்  தலைவர் பண்டே  ஞானஜகத், வி ஹெச் பி  சர்வ தேச தலைவர் திரு விஷ்ணு ஹரி டால்மியா, வி ஹெச் பி  செயல் தலைவர் திரு அசோக் சிங்கால், உபதலைவர் கிரிராஜ் கிஷோர், பொதுச் செயலாளர் டாக்டர் பிரவீன் தொகாடியா, கயானாவை சார்ந்த  சுவாமி அக்ஷரானந்த  மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சுவாமி முருகானந்தம் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள், அமெரிக்காவைச் சார்ந்த திரு மகேஷ் மேத்தா மற்றும் ஸௌ.  அஞ்சலி பாண்டே,  தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் தில்லைவேல் நாயுடு, திரு  ரமேஷ் மேத்தா,  திரு அநித்  மஹராஜ்  மற்றும் திருமதி நீதா மஹராஜ், ட்ரினிடாடின் சுவாமி அக்ஷரானந்தா மற்றும் இங்கிலாந்தின் டாக்டர் தத்துவவாதி ஆகியோர் சாதுவுடன் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக ஹிந்து மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஆவர்.

அவர்களைத் தவிர சாதுவின் பழைய நண்பர்கள், விஹெச்பியின் பிரமுக காரியகர்த்தர்கள்,  திரு பாலகிருஷ்ண நாயக், திரு பாபுபாய் காந்தி மற்றும் சுவாமி விக்ஞானாநந்தா ஆகியோரும் பங்குபெற்றனர்.

சாது பேராசிரியர்  வே. ரங்கராஜன் பேசுகையில், ஹிந்து என்ற சொல்லுக்கு பராமபூஜனீய குருஜி கோல்வால்கர் மற்றும் சுவாமி சின்னமயானந்தர் வழங்கியுள்ள விளக்கம, “பாரதத்தில் தோன்றியுள்ள அமரமான வாழ்க்கை மூல்யங்களை மதித்து  பின்பற்றுபவர்கள்” என்பதாகும் என்றார். பாரத மாதாவை வழிபடுவது, மற்றும் இந்த நாட்டின் ரிஷி முனிவர்கள் காட்டியுள்ள பாதையை பின்பற்றுவது தான் ஹிந்து வின் அடையாளம் என்றார். பாரதநாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வாழ்கின்ற ஹிந்துக்கள் பாரத அன்னையை தங்களது மிக உயர்ந்த கடவுளாக வழிபட வேண்டும் என்றும் தங்களது குழந்தைகளுக்கு அன்றாடம் ப்ராத ஸ்மரணம் எனும் பாரத பக்தி ஸ்தோத்ரம் ஒவ்வொரு இல்லத்திலும் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் சாது  கூறினார். பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது பற்றி குறிப்பிட்ட அவர், அந்த மையத்தின் நோக்கம் பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாழ்கின்ற ஹிந்து இளம் தலைமுறையினருக்கு, பாரத பண்பாடு மற்றும் ஆன்மீக நெறிகள் குறித்து பயிற்சியளித்து, அவர்களை மனித இனம் முழுமையும் உய்விக்க, உலகெங்கும் ஹிந்து தர்மத்தின் பிரச்சாரகர்களாக அனுப்புவதாகும் என்றார்.

சாது டிசம்பர் 25 அன்று வல்சத் வந்து அடைந்தார். அங்கே திருமதி நீலம் மற்றும் திரு. சஞ்சய் கர்க் சாதுவை வரவேற்றனர். சாது செவ்வாயன்று விவேகானந்த சேவா கேந்திராவில் உரையாற்றினார். ஸ்வேதா மற்றும் ஆசிஷ்  எனும் இரு பக்தர்களில் திருமணத்திலும் பங்கு பெற்றார். சாது கடற்கரையிலுள்ள சாய்பாபா மந்திர் மற்றும் சுவாமி நாராயண் மந்திர் போன்ற இடங்களுக்கும் சென்றார். வெள்ளியன்று சாது டிதால்  பீச்சிற்கு சென்றார். பின்னர், சஞ்சய் கர்க் அவர்களின் தாயார் வீட்டில் ஒரு ராமநாம சத்சங்கம் நடத்தினார். டிசம்பர் 30 அன்று சாது பாம்பே செல்வதை தவிர்த்து, நேரடியாக புனேவிற்கு  அஹிம்சா எக்ஸ்பிரஸில் பயணித்து அங்கு சென்று சேர்ந்தார். பூஜ்ய ஸ்ரீ தபஸ்வி பாபா அவதூத் அவர்களின் பக்தர்களான திரு. திலீப் ஜோஷி மற்றும் திரு.N.S. ஐயர் சாதுவை வரவேற்றனர். சாது தனது நேரத்தை பூஜ்ய பாபாவுடன் செலவழித்தார். அவர் பகவானின் உடல்நிலை குறித்த தனது கவலையை வெளிப்படுத்தினார். திரு அரோரா என்ற பக்தர் சகோதரி நிவேதிதா அகாடமியில் புரவலராக இணைந்தார். அவர் சாதுவை  மற்றொரு புரவலர் ஆன, பேராசிரியர். G.C. அஸ்நானி அவர்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர், பூஜ்ய  தபசி பாபா அவர்களின் மகள் திருமதி அனுசுயா மற்றும் மருமகன் திரு தபலியால், மற்றும் திருமதி ஊர்மிளா மற்றும் எஸ். சி. பாண்டே  எனும் தம்பதியினர், சாதுவிற்கு அவர்களின் இல்லங்களில் சிறந்த வரவேற்பு அளித்தனர். ஜனவரி – 1 , 2001 புத்தாண்டு நாளில் சாது சோமேஸ்வரர் கோயில்,. ஸ்ரீ ஜங்கலி மஹராஜ் சமாதி மற்றும் ஸ்ரீ பாடலேஸ்வர் கோயிலுக்கு சென்று, தபஸ்வி பாபா  உடன் சிறிது நேரத்தை செலவழித்தார். மாலையில் சாது, பாபா அவர்களிடம் விடைபெற்று, புகைவண்டி மூலமாக பெங்களூருக்கு பயணித்து, செவ்வாயன்று அங்கு வந்து சேர்ந்தார். சாது ஜனவரி – 4 அன்று யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தனது வெற்றிகரமான குஜராத் மற்றும் மகாராஷ்டிரா சுற்றுப்பயணத்தை குறித்து எழுதினார். 

சாது பேராசிரியர்  வே. ரங்கராஜன், அறிவியல், கலை மற்றும. கைவினை கண்காட்சி , பிளாசம்ஸ் – 2001- ஐ, பெங்களூர், கிருஷ்ணராஜபுரத்தில், அமர் ஜோதி பப்ளிக் பள்ளியில், ஜனவரி 6, 2001 அன்று பாரம்பரிய முறையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அந்த இரண்டு நாள் கண்காட்சி, மாணவர்களின் விஞ்ஞான ஆர்வம் மற்றும் கலை மற்றும் கை பொருள்களில் அவர்களுக்கு உள்ள ஆர்வம், ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த நிகழ்ச்சியாக அமைந்தது. பாரதத்தின் புராதன பண்பாடு குறித்து உரையாற்றிய அவர்கள் பாரதம் என்ற சொல் ஒளியிலே திளைக்கின்ற நாடு என்று பொருள்படும் என்றார். தொன்று தொட்டு ஞான ஒளியில் கிடைக்கின்ற நாடு பாரதம். பாரதத்தின் ரிஷி முனிவர்கள் ஞானத்தை இரண்டாக பிரித்தனர். உலகாயத ஞானம், மருத்துவம், கலைகள், விஞ்ஞானம், ஆகியவை ‘அபர வித்யா’  என்று அறியப்பட்டது. ஆன்மீக உணர்வு பெற உயர்ந்த மெய்ஞானம் ‘பர வித்யா’ என்று அறியப்பட்டது. மானிட உடல் தன்னுண்மை  உணர்வை பெறுவதற்கான கருவி ஆதலால், சரீரம்,  மனம், புத்தி, ஆகியவற்றின் எல்லா நிலைகளிலும் அதை சிறந்ததாக மாற்றுவதற்கு நமது ரிஷி முனிவர்கள் விஞ்ஞானம், மற்றும் மெய்ஞானம் இரண்டையும் சிறப்பாக அமைத்தனர்

சரகர் மற்றும் சுஷ்ருதர் மருத்துவத்திலும், ஆர்யப்ட்டா மற்றும் பாஸ்கரா வானவியிலிலும், பரத்வாஜா விமானவியலிலும் கணிதத்திலும், பரத்வாஜர் வைமானிக சாஸ்திரத்திலும் சாதனைகளை ஏற்படுத்தியது பற்றியும், கட்டிடக்கலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் பாரதத்திற்கு வெளியே, அங்கோவாரட், போரோபுடூர் போன்ற கோயில்கள், ஜாவா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் பணிது, பாரதத்தின் சிற்பக்கலை நிபுணர்கள் சாதித்துள்ளதையும் அவர் எடுத்துக்காட்டினார்.

சாது சென்னைக்கு புதன்கிழமை ஜனவரி 11 அன்று வந்தார், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் நகர பள்ளி மாணவர்களுக்கு,  யோகி ராம்சுரத்குமார் சூழல் கேடயம் மற்றும் பரிசுகள் வழங்குவதற்காக, சுவாமி விவேகானந்தர் பற்றிய பேச்சு போட்டியை,  இளைஞர் தினமாகிய விவேகானந்த ஜெயந்தி அன்று நடத்த, ஏற்பாடாகியது. சாதுவின் இளைய தகப்பனார், சென்னை வைணவக் கல்லூரியில் முன்னாள் முதல்வர், பேராசிரியர் எஸ். ஆர்.  கோவிந்த ராஜன், உலக ராமநாம  இயக்கத்தில் பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு விநியோகிப்பதற்காக, “ஸ்ரீராம தாரகம்” என்ற நூலின் பிரதிகளை சாதுவிடம் வழங்கினார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி ஜனவரி 12 , 2001 வியாழனன்று, கன்னிகா பரமேஸ்வரி கலைக்கல்லூரியில் நடைப்பெற்றது. டாக்டர் V. பாலாம்பாள் என்ற அந்த கல்லூரியின் முதல்வர் தலைமை தாங்கினார். அகில இந்திய வானொலி இயக்குனர், திரு. அஸ்வினிகுமார் மற்றும் திரு. சக்தி சீனிவாசன் உரைகளை நிகழ்த்தி, பரிசுகளை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்கள். சாது நிறைவுரையை வழங்கினார். இளைஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரு. R. விவேகானந்தன், வரவேற்புரையை வழங்கினார். சாது பெங்களூருக்கு, சனிக்கிழமை அன்று சென்றடைந்தார்.

ஸ்பெயினை சேர்ந்த திரு. ஜோஸ் ரிவரோலா சாதுவை ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14 ஆம் தேதி சந்தித்து, பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்து ஒரு ஸ்பானிஷ் இதழுக்காக சாதுவை நேர்காணல் மேற்கொண்டார். சாது   R.S.S. சுயம்சேவகர்களின் மகரசங்கராந்தி விழாவில் உரையாற்றினார். பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் குறித்து பேசினார். ஜனவரி 15 அன்று சாது யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திரு. ஆனந்தன் அவர்களிடம் பேசி, பகவானின் உடல்நிலை குறித்து விசாரித்தார். புதன்கிழமை டாக்டர் லலிதா மற்றும் டாக்டர் P.M. நாயுடு தென் ஆப்பிரிக்காவில் இருந்து சாதுவின் ஆசிரமத்திற்கு வந்தனர். சாது சென்னைக்கு ஜனவரி – 23 ஆம் தேதி திரும்பி வந்தார். அவர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், வ.உ.சி. மெட்ரிக்குலேஷன் பள்ளியின் விளையாட்டு தினத்தை, ஜனவரி – 25 வியாழனன்று,  தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ரியூனியன் தீவிலிருந்து  வந்த சுவாமி அத்வயானந்தா மற்றும் திரு மானுவல் அடுத்தநாள் சாதுவை சந்தித்தனர். சாது சென்னை பெரம்பூரில் உள்ளபாரதமாதா பள்ளியில், ஜெய்கோபால் கரோடியா இலவச மருத்துவ மையத்தின்  நான்காவது ஆண்டுவிழாவில், ஞாயிற்றுக்கிழமை ஜனவரி – 28 அன்று கலந்து கொண்டு சிறப்பித்தார். புனித கங்கையம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நல்லூர் கிராமத்தில் ஜனவரி 29 , 2001 திங்கள்கிழமை நடைபெற்றது. கொண்டார். அங்கே பெரிய அளவில் வேத ஹோமங்கள் மற்றும் பூஜைகள் போன்றவற்றை முருகாஸ்ரமத்தின் சுவாமி சங்கரானந்தா நடத்தி வைத்தார். சாது கலந்துகொண்டு, கோயில் வழிபாட்டின் அறிவியல் முக்கியத்துவம் குறித்தும் புராதன ரிஷி முனிவர்கள் உருவாக்கிய ஆலய வழிபாடு முறைகள் குறித்தும் விளக்கினார். அந்த கிராமத்தின் ஆன்மீக சாதகர்களுக்கு ராமநாம தாரக மந்திர தீக்ஷையை வழங்கினார். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.26

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.26 

விவேக்கின் திருமணத்தை ஆசீர்வதித்த பகவான்

திரு. பெருமாள் நாயுடு என்கிற ஒரு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மற்றும் சாதுவின் பக்தர் தென்னாப்பிரிக்காவிலிருந்து பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு சனிக்கிழமை, ஏப்ரல் 29 அன்று வந்தார். திரு. அனில் ஸுட்ஷி, திருமதி ரீட்டா ஸுட்ஷி மற்றும் அவரது பெண்களான சஹானா மற்றும் அனன்யா ஆசிரமத்திற்கு ஹைதராபாத்தில் இருந்து மே – 1 திங்கள்கிழமை வந்தனர். சாது பகவானுக்கு தனது அடுத்தநாள் திருவண்ணாமலை பயணம் குறித்த சேதியை ஃபேக்ஸ் செய்தார்:

பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் ! 

உங்கள் அளவற்ற கருணை மற்றும் ஆசியால் நமது ஆசிரமம் , யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் வேகமாக முன்னேறிவருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை தந்தது  மட்டுமல்லாது, பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின். சுவாமி முக்யானந்த்ஜி, பெங்களூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா சேவா கேந்திரா சுவாமி சந்திரேசானந்தா, அனுசோனி ஹம்ஸாஸ்ரமத்தின் ஸ்ரீ விரஜேஸ்வர் போன்றோர் எங்கள் இல்லத்திற்கு வந்து ஆசீர்வதித்தனர். திரு. பெருமாள். நாயுடு, தென் ஆப்பிரிக்காவின் பக்தர், வந்து எங்களோடு தங்கியுள்ளார்.

பகவானின் கருணை மற்றும. ஆசியினால், நாங்கள் சிரஞ்சீவி விவேகானந்தனுக்கு ஒரு மணப்பெண்ணை பார்த்துள்ளோம். சௌ. மாலதி என்ற, எம்.காம் படித்துள்ள, மற்றும் ICWA இறுதி வருட தேர்வு எழுத இருக்கின்ற, அந்த பெண், பெங்களூர் ப்ராவிடன்ட் ஃபண்ட் அலுவலகத்தில் பணிபுரிகிறாள். அவளின் தந்தை வரதன், பாரத் போர்ஜ் லிமிடெட் -ல் ஒரு சேல்ஸ் மேனேஜர். அவரும் அவரது மனைவியும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா டிசம்பர் – 1 ல் கலந்து கொண்டனர். அவர்கள் மிகுந்த பக்தி கொண்டவர்கள். மணப்பெண்ணும் அவரது பெற்றோர்களும் பகவானின் தரிசனத்தை திருமணத்திற்கு முன் பெற விரும்புகின்றனர். திருமணம் ஜூன் – 22 என தற்சமயம் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் மே – 7 என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிறவற்றை துவங்கும் முன், இந்த சாது உங்கள் தரிசனத்தை பெற விரும்புகிறான். 

திரு. அனில் ஸுட்ஷி அவர்கள் பகவானின் கருணையால் அமெரிக்காவின் கனெக்டிகட்டில், மேக்னா இன்போடெக்கில், துணை – தலைவர் ( மார்கெட்டிங் ) பணியை பெற்றுள்ளார். அவர் தனது மனைவி திருமதி. ரீட்டா மற்றும் இரண்டு பிள்ளைகளோடு இங்கு வந்துள்ளார். அவர்களும், அமெரிக்க தூதரகம் சென்று விசாவினை புதன்கிழமை விண்ணப்பிக்கும் முன், பகவானின் ஆசியை பெற   விரும்புகிறார்கள். எனவே நாங்கள் திருவண்ணாமலைக்கு நாளை செவ்வாய்க்கிழமை மே – 2 அன்று காரில் அங்கே முற்பகலில் வருவோம். நாங்கள் உங்கள் ஆசியை மற்றும் தரிசனத்தை வேண்டி பிரார்த்திக்கிறோம். 

தாழ்மையான வணக்கங்களுடன், 

சாது ரங்கராஜன்.” 

சாது பக்தர்களோடு திருவண்ணாமலைக்கு அடுத்தநாள் காலை காரில் கிளம்பி பகவானின் இல்லத்தை காலை 9 மணிக்கு சென்றடைந்தனர். நாங்கள் அங்கே சென்றவுடன் பகவான் எங்களை அழைத்தார். அவர் ஆசிரம கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள குடிலில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் அவர் முன்னர் அமர்ந்தோம். அவர் சாதுவிடம், “என்ன சங்கதி?“ என்று கேட்க, மா தேவகி, திரு. அனில் ஸுட்ஷி மற்றும் குடும்பத்தினர் சாதுவோடு வந்துள்ளார்கள் என்றார். சாது அவர்களையும் திரு. பெருமாள் நாயுடுவையும் பகவானிடம் அறிமுகப்படுத்தினார். சாது பகவானிடம் சிரஞ்சீவி விவேக்கிர்கு சௌ. மாலதியுடன் திருமண நிச்சயதார்த்தம் மே – 7 , 2000 ல் நடக்க இருப்பதாக கூறி, மணமகளின் புகைப்படத்தை காட்டினார். தேவகி, பகவான் ஏற்கனவே சாதுவின் பேக்ஸை விவரமாக படித்துவிட்டதாக கூறினார். பகவான் அந்த புகைப்படத்தை ஆசீர்வதித்து திரும்ப தந்து, “எனது தந்தையின் ஆசியால் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்“ என்றார். சாது பகவானிடம் மணப்பெண்ணின் பின்னணி மற்றும் அவளது பெற்றோர்கள் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டதைப்பற்றி தெரிவித்தார். அவர்கள் மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்றும் கூறினார். பகவான், “ தந்தையின் கருணை!” என்றார். 

பகவானிடம் திரு. அனில் ஸுட்ஷி அவர்களின் அமெரிக்க வேலைவாய்ப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. பகவான் அனில் மற்றும் அவரது குடும்பத்தை சகல வெற்றிகளையும் பெற ஆசீர்வதித்தார். மா தேவகி அனில் தனது குடும்பத்தோடு அமெரிக்கா செல்ல இருக்கிறாரா என்று கேட்க, அவர் ஆம் என்று பதிலளித்தார். பகவான் அவர்கள் காஷ்மீருக்கு அவர்களின் மகளின் திருமணத்திற்காக செல்லக்கூடும், ஏனெனில் அவர்கள் காஷ்மீர் பண்டிட் என்றார். 

சாது, பகவானிடம், “விக்ஞான பாரதி — வேத காலம் தொட்டு நவீன காலம் வரை ஹிந்து தர்மம்“ என்ற சாதுவின் நூலுக்கான, சுவாமி முக்யானந்த்ஜி அவர்களின. முன்னுரையை கொடுத்தார். அத்தோடு பாரதமாதா குருகுல ஆசிரமத்தை தலைமையிடமாகக் கொண்ட, “வாழ்க்கை மூல்யங்களை அடிப்படையாகக்கொண்ட உலகளாவிய கல்வி இயக்கம்” (Global Organization for Value Oriented Education) குறித்த வேண்டுகோள் ஒன்றையும் வழங்கினார். மேலும் டாக்டர் சம்பூரண் சிங் மற்றும் சுவாமி முக்யானந்தா ஆகியோரும் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதைப்பற்றி கூறினார். பகவான் தந்தையின் ஆசியால்  பாரதமாதா குருகுல ஆசிரமம் வளரும் என்றார். மா தேவகி சுவாமி விரஜேஸ்வர் குறித்து கேட்டார். மாலதி மற்றும் அவர்களது பெற்றோர்களை பகவானிடம் அழைத்து வருகையில், ஒருவேளை சுவாமி விரஜேஸ்வர் எங்களோடு இணையலாம் என்றார். பகவான் அவர்களை அழைத்துவர ஒப்புதலை தந்தார். சாது பகவானிடம் விவேக்கின் திருமணம் முடிந்தப்பின் தான் முழுமையாக குடும்ப பொறுப்புகளில் இருந்து விடுதலையாகி பகவானின் பணிகளுக்கு முழுமையாக அர்ப்பணித்து கொள்ள இருப்பதாக கூறினார். பகவான் தேவகியிடம் திரும்பி, “ரங்கராஜன் அவரது பொறுப்புக்கள் விவேக்கின் திருமணத்தோடு முடிந்துவிடுவதாக நினைக்கிறார்“ என்றார். பின்னர் அவர், “நிவேதிதா?“ என்று கேட்க, தேவகி, நிவேதிதாவிற்கு திருமணமாகி குழந்தை இருப்பதை எண்ணி குழம்பி, பகவானிடம், “நிவேதிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி அவள் ஒரு குழந்தை பெற்றிருக்கிறாள்.” என்று கூற, பகவான் புன்னகைத்தார். சாது பகவானிடம் நிவேதிதா அவளது இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறாள், இப்போது அவள் ஆறு மாத கருவோடு இருக்கிறாள் என்றார். பகவான் நிவேதிதாவின் பாதுகாப்பான பிரசவத்திற்கு ஆசீர்வதித்தார். 

பகவான் தான் பலஹீனமாக இருப்பதாகவும் தன்னால் எதையும் செய்ய இயலவில்லை என்றும், “அனைத்து நேரமும் தூங்குகிறேன்“ என்றும் கூறினார். மா தேவகி, பகவான் ஆசிரமத்தில் அவருக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட அறையில் தங்குவதற்கு மறுத்து, கூரை வேயப்பட்ட கொட்டகையிலேயே நாள் முழுவதும் இருந்து, மாலையில் சுதாமாவிற்கு திரும்புகிறார் என்றார். பகவான் எங்களுக்கு விடை அளிக்க முடிவெடுத்து, வழக்கம்போல் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் அவர் பக்தர்களை ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் தான் மாலதி மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உடன் வருவதாக கூறினார். “அது சரி“ என்று கூறிய பகவான், அனில் ஸுட்ஷி அவர்களின் ஆவணங்களை எடுத்து அவர் விசா பெறவும், பாதுகாப்பான அமெரிக்க பயணத்திற்கும் ஆசீர்வதித்தார். அவர் அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினார். சாது பகவானிடமிருந்தும், மா தேவகி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் இருந்தும் விடைப்பெற்று, ரமணாச்ரமம், சேஷாத்ரி ஆசிரமம், அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்கு குழுவினரோடு சென்று, சென்னைக்கு  இரவில் வந்தடைந்தனர். அனில் மற்றும் அவரது குடும்பத்தினர் சாதுவிடம் விடைப்பெற்றனர். சென்னையில் இரவில் தங்கிவிட்டு சாது மற்றும. திரு. பெருமாள் நாயுடு பெங்களூர் நோக்கி பயணித்தனர். சாதுவின் சகோதரர் திரு. லக்ஷ்மிகாந்தன் மற்றும் சகோதரி திருமதி. அலமேலு மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மைசூர் செல்வதற்காக சாது உடன் பெங்களூருக்கு வந்தனர். 

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் கருணை மற்றும் ஆசியால் சிரஞ்சீவி. விவேக் மற்றும் சௌ. மாலதி அவர்களின் நிச்சயதார்த்தம் பெங்களூர் இன்ஃபென்றி சாலை, இன்ஃபென்றி கோர்ட் ஓட்டல் ஹாலில், மே – 7 ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பெற்றது. சாது, திரு. பெருமாள் நாயுடு, திருமதி பாரதி மற்றும் ஹரிப்ரியா ஆகியோருடன் சத்யசாய் பாபா ஆசிரமமான வைட்ஃபீல்டுக்கு, பாபாவின் தரிசனத்தை பெற, புதன்கிழமை சென்றனர். மே – 13 சனிக்கிழமை அன்று, சாது, தான் திருவண்ணாமலைக்கு அடுத்தநாள் மாலதி மற்றும் அவரது பெற்றோர்கள் உடன் விஜயம் செய்வது குறித்து பகவானுக்கு தகவல் தெரிவித்தார். 

சாது, திருமதி பாரதி, சௌ. மாலதி மற்றும் அவளின் தந்தை திரு. வரதன், திருவண்ணாமலைக்கு ஞாயிற்றுக்கிழமை மே – 14 , 2000 அன்று வந்து சேர்ந்தனர். சிரஞ்சீவி விவேக்கும் அவர்களுடன் இணைந்தார். ராஜேஸ்வரி அம்மா பகவானின் ஆணைப்படி அவர்கள் தங்க குடிலை ஏற்பாடு செய்தார். பகவான் காலையில் முழுமையாக ஓய்வு எடுத்து, சாது மற்றும் பிறரை 4.00 மணி மாலையில் அழைத்தார். சாது மாலதி மற்றும் அவளது தந்தையை பகவானிடம் அறிமுகம் செய்தார். பகவான் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண வேலைகள் துவங்கிவிட்டனவா ? என்று கேட்டார். சாது ஆம் என்று பதிலளித்தார். திருமணம் எந்த தேதியில் என்று பகவான் வினவ,  சாது, திருமணம் ஜூன் – 22 என்று கூறினார். பகவான் விவேக்கை தனதருகே அழைத்து, “உனக்கு முடிவான பெண் குறித்து நீ திருப்திதானே ?“ என்று கேட்டார். விவேக், “ ஆம் “ என்று கூறினார். பின்னர் அவர் மாலதியை தனதருகே அழைத்து அவளிடம், “ நீ ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா ?” என்று கேட்க, அவள் அமைதியாக இருந்தாள். தேவகி அவளிடம், “நீ பகவானிடம் ஏதேனும் கேட்க நினைத்தால் கேட்கலாம்.” என்றார். மாலதி பகவானிடம் திரும்பி, “உங்கள் ஆசி மட்டுமே எனக்கு தேவை“ என்று கூற, பகவான் தனது கைகளை உயர்த்தி “என் தந்தையின் ஆசீர்வாதங்கள்“ என்றார். தேவகி பகவானிடம், திருமணத்திற்கான இடம் D.S.கல்யாண மண்டபம், கொரட்டூர்,  சென்னை என்று கூற, பகவான் விவேக் மற்றும் மாலதியை இனிய திருமண வாழ்க்கைக்காக ஆசி வழங்கினார். விஜயலட்சுமி நிவேதிதா குறித்து விசாரித்தார். நிவேதிதா வர விரும்பினாள், ஆனால் கருவுற்று ஆறு மாதம் ஆவதால் நீண்ட பயணம் வேண்டாமென்று நாங்கள் அழைத்து வரவில்லை என்று சாது கூற, பகவான் நிவேதிதாவை ஆசீர்வதித்தார். தேவகி , விவேக் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருப்பதாகவும், விவேக்கும், நிவேதிதாவும் சிறியவர்களாக இருக்கையில் திருவண்ணாமலைக்கு அடிக்கடி வருவார்கள் என்றும் குறிப்பிட்டார். 

பகவான் படுத்துக்கொள்ள விரும்பினார். படுக்கை அவருக்காக விரிக்கப்பட்டது. அவர் படுத்துக் கொண்டார். பகவான் சாதுவை தன் அருகே அமருமாறு கூறினார். அவர் சாதுவின் கரங்களை தனது இதயத்திற்கு அருகே பிடித்துக்கொண்டு கண்களை மூடிக் கொண்டார். அவ்வப்போது தனது தோளையும், தலையையும் உயர்த்தி சாதுவை பார்த்தார். இவ்விதமாகவே கால்மணி நேரம் கழிந்தது. அரைமணி நேரம் கழித்து அவர் எங்களை விடைபெறுமாறு கூறினார். மாலதி மற்றும் விவேக் மாதேவகியை வணங்கினர். பகவான் எழுந்து தனது படுக்கையில் அமர்ந்துகொண்டார். சாது மற்றும் பிறர் பகவானை வணங்கினர். பகவான் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆப்பிள் பிரசாதமாக வழங்கினார். வழக்கம்போல் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் ஸ்ரீதரின் மகள் சௌ. கௌசல்யாவுக்கு, திரு ராஜேஷ் உடன் திருமணம் குறித்துக் கூறினார். பகவான் அவர்களை ஆசீர்வதித்தார். சாது அடுத்த ‘தத்துவ தர்சனா’ இதழ் வெளியீட்டின் போது சுவாமி விரஜேஸ்வர் அவர்களை அழைத்து வருவதாக கூறினார். மேலும் சாது பகவானிடம் சுவாமி விரஜேஸ்வர் அவர்களின் குரு மஹாசமாதி அடைந்துவிட்டார் என்ற சேதியை கூறினார். பகவான் அவரது பெயர் என்ன என்று கேட்டார். “ரிஷிகேஷின் சுவாமி வித்யானந்தா. இவர் சுவாமி சிவானந்தரின் சீடர் ஆவார்” என்று சாது பதிலளித்தார். பகவான் சாதுவிடம் சுவாமி விரும்பினால் அழைத்து வரும்படி கூறினார். சாது மாலதியும், விவேக்கும் திருமணம் ஆனபிறகு மீண்டும் ஆசியை பெற வருவார்கள் என்றார். சாது பகவானிடம் நிவேதிதாவின் சுகபிரசவத்திற்கு ஆசியை வேண்டினார். பகவான் ஆசீர்வதித்தார். மா தேவகி சாதுவும் அவரது குழுவினரும் பெங்களூருக்கு திரும்புகிறார்களா என்று வினவினார். சாது பதிலளிக்கையில், விவேக்கும், பாரதியும் சென்னைக்கு செல்வதாகவும், தான் மாலதி மற்றும் அவள் தந்தையுடன் பெங்களூருக்கு செல்வதாகவும் கூறினார். சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ள திரு பெருமாள் நாயுடு  பெங்களூரில் ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக கூறினார். மா தேவகி திருவண்ணாமலை மிகுந்த வெப்பநிலையோடு இருப்பதாக கூற, சாது பெங்களூர் ஆசிரமம் மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும் என்றார். பகவானிடம் விடைபெறும் பொழுது அவர் ஆசிரமத்தின் விரைவான வளர்ச்சிக்கு ஆசீர்வதித்தார். சாதுஜி மாதேவகி மற்றும் விஜயலட்சுமியிடம் விடைப்பெற்றார். ஆசிரமத்தை விட்டு கிளம்பும் முன் சாதுஜி ஜஸ்டிஸ் அருணாச்சலம் , சக்திவேல் , திரு. சங்கர்ராஜூலு மற்றும் சுவாமிநாதன் அவர்களிடம் விடைப்பெற்றார். பின்னர் சாது மற்றும் அவரது குழுவினர் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையை விவேக் மற்றும் மாலதியின் பெயரில் செய்தார். திரு. ராமச்சந்திர உபாத்யாயா சாதுவை உடுப்பி பிருந்தாவன் ஓட்டலில் வரவேற்று மகிழ்வித்தார். அவர் திரு. வரதனிடம் பகவானோடு தனக்கு இருக்கும் 35 வருட பழக்கம் குறித்தும், விவேக் மற்றும் நிவேதிதாவை அவர்களின் குழந்தை பருவத்திலிருந்தே தெரியும் என்றும், அவர்கள் இருவரும் தனியே பகவானை காண வருகையில், அவர்களை பகவான் எப்படி அவரது இல்லத்தில் பார்த்துக் கொண்டார் என்றும். கூறினார். சாது அவரிடமிருந்து விடைப்பெற்று, விவேக் மற்றும் பாரதியை சென்னைக்கு வழியனுப்பி, பின்னர் வரதன் மற்றும் மாலதியோடு பெங்களூருக்கு கிளம்பினார். 

திங்கள்கிழமை , மே 22 அன்று சாது, திரு. பெருமாள் நாயுடு உடன் சென்னைக்கு, வியாழக்கிழமை மே – 25 அன்று நடைபெற இருக்கும் திரு. பாஸ்கரதாஸ் அவர்களின் மகளான சௌ. ப்ரீத்தி மற்றும் திரு. பகத் சிங் அவர்களின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள, சென்றனர். வெள்ளிக்கிழமை சாது, விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கான முகாமில் கலந்து கொண்டார். சனிக்கிழமை VHP அலுவலகத்தில் நடைபெற்ற ஊழியர்களின் கூட்டத்தில், சங்கரர் மற்றும் ஷண்மதம் குறித்து பேசினார். சாது, ஞாயிறன்று, கீதா பவன், லாயிட்ஸ் சாலை, சென்னையில், பசு பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அடுத்தநாள் அவர் பெங்களூர் திரும்பினார். 

வெள்ளிக்கிழமை, ஜூன் – 9, 2000 அன்று, சாது, பகவான் ஆசிரமத்திற்கு தொலைபேசியில் அழைத்து, ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடம் பேசினார். அவர் சாதுவிடம், பகவான் உடல்நலம் குன்றி இருப்பதாகவும், அவர் எவரிடமும் பேசுவதில்லை, எவரையும் காண்பதில்லை என்றும் கூறினார். திருமதி. பாரதி மாதேவகிக்கு ஜூன் – 13 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய மாதாஜி, 

எனது தாழ்மையான வணக்கங்கள் தங்களுக்கும் , யோகி ராம்சுரத்குமார் அவர்களின் புனித பாதங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற ஞாயிற்றுக்கிழமை நாங்கள் சிரஞ்சீவி. விவேகானந்தனின் திருமண பத்திரிக்கையை பகவானின் முன் வைக்க நினைத்தோம். சுவாமிஜி பக்தர்களுக்கு தரிசனம் தருவதில்லை என்பதை அறிந்தோம். எனவே நாங்கள் அங்கே வரவில்லை. இத்துடன் திருமண பத்திரிக்கையை இணைத்துள்ளோம். நாங்கள் அவரது அளவற்ற ஆசியை சிரஞ்சீவி. விவேக் மற்றும் சௌ. மாலதி அவர்களின் இனிய திருமண வாழ்க்கைக்கு வேண்டுகிறோம்.

திருமதி. நிவேதிதாவின் கணவன், சிரஞ்சீவி ரமேஷ் வயிற்றுவலி மற்றும் வாந்தி காரணமாக 7 ஆம் தேதி இரவு முதல் மருத்தவமனையில் இருந்தார். அவர் 9 ஆம் தேதி வெளியே அனுப்பப்பட்டு, மீண்டும் பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் அதே இரவில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்படலாம். டாக்டர்கள் அவரது சிறுநீரகம் அல்லது கல்லீரலில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கலாம் என்று தேவையான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். நாங்கள் சிரஞ்சீவி. ரமேஷ் விரைவாக குணமடைய சுவாமிஜியின் ஆசியை வேண்டுகிறோம். 

எங்களின் தாழ்மையான வணக்கங்கள் தங்களுக்கும் , சௌ. விஜயலட்சுமிக்கும்.

பெருமதிப்புடன், தங்களின் அன்பிற்குரிய, 

பாரதி.”

யோகியின் ஆசி மற்றும் கருணையால் சிரஞ்சீவி. விவேக் முற்றும் மாலதி  திருமணம் இனிதே ஜூன் – 22 , 2000 அன்று நிறைவுற்றது. பகவானின் பக்தர்கள் மட்டுமில்லாமல், தென் ஆப்பிரிக்காவின் திரு. டெட்டி கொமல் , திரு. தயாராம் அஹீர், திருமதி. ராதிகா அஹீர், மற்றும் திரு. பெருமாள் நாயுடு போன்றோர் வெளிநாட்டு பக்தர்களின் சார்பாக வந்திருந்தனர். முந்தைய நாள் ஹனுமான் கோவிலில் நடைபெற்ற நிச்சயதார்த்தம் மற்றும் மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் மற்றும் கொரட்டூர் D.S. கல்யாணமண்டபத்தில் நடந்த திருமண விழாவும் சிறப்பாக நடைப்பெற்றன. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பகவானின் பக்தர்கள் சென்னையில் உள்ள பக்தர்களின் விருந்தினர்களாக தங்கினர். சாது, மணமக்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்களுடன் பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை ஜூன் – 23 அன்று வந்தனர். விஷய் அஹீர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து இணைந்து கொண்டார். 

சாது, பாரதி, திரு. தயாராம் அஹீர், திருமதி. ராதிகா மற்றும் திரு. விஷய் அனைவரும் ஆனந்தாஸ்ரமத்திற்கு சனிக்கிழமை , ஜூலை – 1 அன்று, காரில் சென்றனர். அவர்கள் ஆனந்தாஸ்ரமத்தை இரவில் அடைந்தனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் பப்பா ராம்தாஸ் மற்றும் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் சமாதிகளில், தங்கள் பிரார்த்தனைகளை அடுத்தநாள் காலையில் செலுத்தினர். அவர்களை சுவாமி சச்சிதானந்தர் மற்றும் சுவாமி முக்தானந்தா ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் தங்கள் பிரார்த்தனைகளை கோயிலில் சமர்ப்பித்தனர். மௌன விரதம் கடை பிடித்துக் கொண்டிருந்த சுவாமி சுத்தானந்தாவும் இவர்களை வரவேற்றார். பின்னர் அவர்கள் சுவாமிகளிடம் விடைப்பெற்று, கோழிக்கோடு சென்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின். தலைவர் சுவாமி கோகுலானந்தா சாதுவை வரவேற்று இரவு உணவை வழங்கினார். சுவாமியிடம் விடைபெற்று அவர்கள் குருவாயூர் சென்றனர். கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று ஸ்ரீவேலி மற்றும் இதர பூஜை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.. அவர்கள். குருவாயூரில் இரவு தங்கி, காலையில் எர்ணாகுளம் சென்றனர். சாதுவின் இளமைக்கால நண்பர்கள் திரு சந்தானம், திரு அப்துல் கரீம், மற்றும் டாக்டர் பி.என். பாபு வாசுதேவன் ஆகியோர் நீண்ட காலத்திற்கு பின்  சாதுவை வரவேற்றனர். சாதுவும் தென்னாப்பிரிக்க பக்தர்களும் அவர்களுடைய இல்லங்களுக்கு சென்றனர். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து அவர்கள் கன்னியாகுமரியை அடைந்தனர். திரு. தங்கஸ்வாமி, விவேகானந்த கேந்திராவின் மேலாளர், அவர்கள் தங்குவதற்கு விவேகானந்தபுரம் வளாகத்தில் ஏற்பாடு செய்தார். 

ஜூலை – 4 செவ்வாய்க்கிழமை சாது மற்றும் அவரது குழுவினர் விவேகானந்த புரத்தில் உள்ள திரு. ஏக்நாத் ரானடேயின். சமாதிக்கு சென்றனர். திரு. லட்சுமணன், படகு சேவை பொறுப்பாளர், விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னத்திற்கு செல்ல படகு ஏற்பாடு செய்தார். விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர், சாரதா தேவி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணர் விக்கிரகங்களை தரிசித்துவிட்டு, தியான மந்திரில் சிறிது நேரம் அமர்ந்து தியானித்த பிறகு, கரைக்கு திரும்பினர். பின்னர் கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசித்துவிட்டு, அன்னை மாயம்மா வசித்த குடிலுக்கு சென்றனர். பிறகு அவர்கள் மாயம்மா சமாஜத்திர்கு வந்தனர். அங்கு சமாஜத்தின் பூஜாரி திரு புஷ்பராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சாதுவையும் பிற பக்தர்களையும் வரவேற்றனர். சாது அங்கு ஒரு சிறப்பான ஹோமத்தை நடத்தி, மாயம்மா, யோகி ராம்சுரத்குமார், மற்றும் பிற மஹான்களின் சன்னிதிகளில் பூஜை மேற்கொண்டார். ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்துகொண்ட பக்தர்களுடன் உணவு அருந்திய பின்பு சாது மற்றும் அவரது குழுவினர், காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்திற்கு சென்றனர். திரு பொன். காமராஜ், அவர்களை வரவேற்றார். அவர்கள் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, திரும்ப அஞ்சுகிராமம் வந்து பொன் காமராஜை அங்கே விட்டபின் மதுரைக்கு சென்றனர். இரவில் அங்கே YMCA விருந்தினர் இல்லத்தில் தங்கினா். காலையில் மதுரை மீனாக்ஷி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, அவர்கள் திருச்சிராப்பள்ளி சென்றனர். அங்கே பாரதியின் சகோதரி, ராஜி, மற்றும் ராமநாம இயக்கத்தைச் சார்ந்த திரு வைத்தியநாதன் மற்றும் திரு ஜெயராமன் போன்றவர்கள், சாதுவை வரவேற்றார்கள். பின்னர் அவர்கள் சென்னைக்கு இரவில் வந்தடைந்தனர். 

ஜூலை – 6 , 2000, வியாழக்கிழமை அன்று, மித்தனஹல்லியில், சிறப்பான ராம்நாம் சத்சங்கம் ஒன்றை, ஆவடியை சேர்ந்த திரு. விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார். சாதுவை திருவல்லிக்கேணியில் இருந்து பிரம்மச்சாரி ஜெகதீச சைதன்யா அழைத்துச் சென்றார். ஆவடி செல்லும் வழியில் அவர்கள் திருமுல்லைவாயில் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு சென்றார்கள். அங்கே மாதாஜி வசந்தியை சாது சந்தித்தார். சாதுவிற்கு ஒரு ஆரவாரமான வரவேற்பு பாதபூஜையுடன் திரு. விஸ்வநாதன் அவர்களின் இல்லத்தில் வழங்கப்பட்டது. மித்தனஹல்லியின் பாலாஜி கோயிலை சேர்ந்த பக்தர்கள் கோயில் அருகில் சாதுவை வரவேற்று, ஒரு ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சாது, அந்த கூட்டத்தினரிடையே ராமநாம தாரக மந்திரத்தை பற்றியும், பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுவரும் உலக ராம்நாம் இயக்கம் குறித்தும், பேசினார். சாது விடைபெறுகையில் “ ஜெய் ஸ்ரீராம் “ என்ற முழக்கத்தால் அந்த இடமே அதிர்வினைப்பெற்றது. 

சாது பெங்களூருக்கு, ஜூலை – 8 சனிக்கிழமையன்று பயணித்தார். காஞ்சங்காடு ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி ஜ்யோதிர்மயானந்தா, சாதுவை, ஸ்ரீ யோகேஷ் பட் என்ற பகவானின் பக்தர் மற்றும் கர்நாடக எம்.எல்.ஏ. அவர்களை, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் சந்திக்க அழைத்தார். சுவாமி சாதுவை முக்கிய தலைவர்களான திரு. V.R. ஷெனாய் , திரு. M.G.N ஷெனாய் மற்றும் திரு.M.M. மல்லைய்யா போன்றோரிடமும் அறிமுகப்படுத்தினார். சாது அவர்களை பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்தார். 

ஜூலை – 14 , 2000 அன்று, சாது பகவானுக்கு தனது அடுத்த நிகழ்ச்சிகள் குறித்த தகவல் ஒன்றை அனுப்பினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் ! 

உங்களின் குறைவற்ற கருணையால் , சிரஞ்சீவி. விவேகானந்தன் திருமணத்தில் கலந்து கொண்ட தென் ஆப்பிரிக்கா பக்தர்களுடன், இந்த சாது மற்றும் திருமதி. பாரதியால்  மேற்கொள்ளப்பட்ட புனிதப்பயணம் வெற்றிகரமாக முடிந்து, நாங்கள் பெங்களூர் வந்தடைந்தோம். தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் இந்தமுறை தங்கள் தரிசனத்தை பெறமுடியாத காரணத்தால் கனத்த இதயத்துடன் திரும்பினர். அவர்கள் மீண்டும் நீங்கள் தரிசனம் தருகையில் வருவதற்கு விரும்புகின்றனர். 

நாங்கள் பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா, சுவாமி முக்தானந்தா மற்றும் சுவாமி சுத்தானந்தா  போன்றோரை ஆனந்தாஸ்ரமத்தில் சந்தித்தோம். சுவாமி சுத்தானந்தாஜி தங்களிடம், அவரும் டாக்டர் ராஜகோபால், மற்றும் சுவாமி முக்தானந்தா, திருவண்ணாமலைக்கு, ஜூலை – 28 அன்று வரும் தகவலை தெரிவிக்குமாறு சொன்னார்கள். அவர்கள் பகவானின் தரிசனத்தை பெறும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். 

ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், ட்ரினிடாடில் நடக்க இருக்கும் ‘உலக ஹிந்து மாநாடு 2000’ த்தில் கலந்து கொள்ள அழைப்பிதழை இந்த சாது பெற்றுள்ளான். பகவானை சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்த திரு.ரவி மஹராஜ் எங்களது ஏர் டிக்கெட்டை ஏற்பாடு செய்வதாக கூறியிருக்கிறார். அது உரிய நேரத்தில் வந்து, விசாவும் கிடைத்தால் நாங்கள் அந்த மாநாட்டில் பகவானின் ஆசியினால் கலந்து கொள்வோம் என நம்புகிறோம். போட்ஸ்வானாவின் பக்தர்களும் பெங்களூர் வந்துள்ளனர். அவர்களும் இந்த சாதுவிடம் அவர்கள் நாட்டிற்கு அடுத்த பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். நாங்கள் பகவானின் ஆசிக்காக பிரார்த்திக்கிறோம். 

சுவாமி சச்சிதானந்தா திருவண்ணாமலை வந்தபோது அவருடன் சாது அங்கு வந்தது போல், சுவாமி சுத்தானந்தஜி மற்றும. சுவாமி முக்தானந்தஜி ஆகியோரின் வருகையின் போது இந்த சாதுவும் கலந்து கொள்ள பகவான் விரும்பினால், இந்த சாது அவர்களோடு பகவானின் ஆசியை பெற விரும்புகிறான். 

திருமதி. நிவேதிதா அவளது இரண்டாவது குழந்தையை இன்னமும் பதினைந்து நாட்களில் பெற்றெடுப்பாள். அவள் உங்கள் ஆசியை வேண்டுகிறாள். திருமதி. பாரதி, சிரஞ்சீவி விவேக், சௌ. மாலதி மற்றும் திரு. ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் தங்கள் வணக்கங்களை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு கூறினார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.25

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.25 

பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு தர்மச்சார்யார்களின் வருகை

புத்தாயிரம் ஆண்டு 2000 த்தின் துவக்கம், சாது ரங்கராஜனின் தலைமையில் பல இந்து அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணி மற்றும் ஹிந்து மதம் மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் பணியில் ஈடுபட ‘ஹிந்து தர்மோதயா சங்கம்’ நிறுவப்பட்டதை கண்டது. சென்னை தியாகராயநகரில் நடந்த கூட்டத்தில் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். ‘தத்துவ தர்சனா’வின் சிறப்பு மலரானது, “புத்தாயிரமாண்டில் இந்துமதம்” என்ற தலைப்பில், பகவான் வெளியிட தயாரானது.  சாது கடிதம் ஒன்றை பகவானுக்கு ஜனவரி – 3 , 2000 அன்று எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் அளவற்ற கருணை மற்றும் ஆசியால் இந்த சாது பெங்களூர் ஆனந்தாஸ்ரம சத்சங்க சமிதியில் டிசம்பர் 27, 1999 அன்று பப்பா ராம்தாஸ் அவர்களின் சன்னியாச நாளில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தான். 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதில் கலந்து கொண்டனர். மேலும் இந்த சாது யோகி ராம்சுரத்குமார் குறித்தும் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தான். இந்த சாது சென்னைக்கு டிசம்பர் – 31 , 1999 அன்று திரும்பினான். 

“சில்ப ஸ்ரீ” நிறுவனர், திரு. T. பாஸ்கரதாஸ், இந்த சாதுவோடு முப்பது ஆண்டுகளாக அகாடமியின் பணிகளில் ஈடுபட்டிருப்பவர். தனது ஃபியட் ப்ரீமியர் பத்மினி காரை நமது பெங்களூர். ஆசிரம பணிக்காக நன்கொடை அளித்துள்ளார். நாங்கள் அந்த வாகனத்தை பெங்களூரில் வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்காக விட்டுவைத்திருக்கிறோம். நாங்கள் பகவானின் ஆசியை யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் சிறப்பாக இயங்க வேண்டுகிறோம். இத்துடன் நாங்கள் நமது மையத்தின் துவக்கவிழா குறித்த பத்திரிகை செய்திகளை இணைத்துள்ளோம். 

யோகிராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் 12 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தின விழா, மற்றும் யோகி ராம்சுரத்குமார் சூழல் கேடயங்கள் மற்றும் பரிசுகளை நகர மாணவர்களுக்கு வழங்க, விவேகானந்தர் குறித்த பேச்சுப் போட்டி, KTCT பெண்கள். உயர்நிலை பள்ளியில் ஜனவரி 9, 2000 ல் நடக்க இருக்கிறது. இத்துடன் அதன் அழைப்பிதழை இணைத்துள்ளோம். 

சமீபத்திய ‘தத்துவ தர்சனா’ இதழ் ஜனவரி 2000, “புத்தாயிரமாண்டில் இந்துமதம்“ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டுள்ளது. நாங்கள் அதன் முதல் பிரதியுடன் அங்கே வந்து தங்களின் புனித பாதங்களில் சமர்ப்பித்து ஆசிபெற விரும்புகிறோம். இந்த சாது, மூன்று பக்தர்களுடன் திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை , ஜனவரி 6 , 2000 அன்று காலையில், காரில் வர இருக்கிறேன். நாங்கள் உங்கள் தரிசனம் மற்றும் ஆசிக்காக பிரார்த்திக்கிறோம். 

சௌ. நிவேதிதா மற்றும் குடும்பத்தினர், சிரஞ்சீவி விவேக் மற்றும் திருமதி பாரதி தங்கள் நமஸ்காரங்களை உங்களுக்கும், சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன் 

சாது ரங்கராஜன். 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி.” 

வியாழக்கிழமை , ஜனவரி 6 , 2000 அன்று சாது , விவேக் , ஸ்ரீதர், பார்த்தசாரதி மற்றும் மோகன் போன்றோர் காரில் பயணித்து திருவண்ணாமலைக்கு காலை 10.30 மணிக்கு சென்றடைந்தனர். பகவான் ஆசிரமத்தின் பெரிய ஹாலில் தரிசனத்தை தந்து கொண்டிருந்தார். மா தேவகி பகவானிடம் சாதுவின் வருகையை பற்றி கூறினார். அவர் எங்கள் அனைவரையும் உள்ளே அழைத்தார். சாது மற்றும் பக்தர்கள் தங்கள் நமஸ்காரங்களை அவருக்கு தெரிவித்து ‘தத்துவ தர்சனா’ ஜனவரி 2000 இதழ் பண்டிலை அவரது முன் வைத்தனர். பகவான் அந்த இதழை தனது கைகளில் எடுத்து அதன் உள்ளடக்கம் குறித்து கேட்டார். சாது அதனை விளக்கினார். அவர் சாதுவிடம் பேராசிரியர். கமலம் எழுதிய முதல் கட்டுரையான, “யோகி ராம்சுரத்குமார் – கடவுள்“ என்ற கட்டுரையை படிக்கச் சொன்னார். பின்னர், சாதுவின் தலையங்கமான, “மதங்களின் பாராளுமன்றம், போப்பின் வருகை, மதங்களுக்கு இடையிலான உரையாடல்கள்” என்ற கட்டுரையை படிக்கச் சொன்னார். சாது அந்த தலையங்கத்தை படித்தார். மேலும் தென் ஆப்பரிக்காவின் மதங்களின் பாராளுமன்றத்தில் டிசம்பர் 2 அன்று கலந்து கொள்ள, அதிகாரப்பூர்வமான அழைப்பு, பயண டிக்கெட், மற்றும் விசா பெறுவதற்கான பத்திரங்கள் உரிய நேரத்தில் வராததால்  தன்னால் அதில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற அறிவிப்பை அந்த இதழில் வெளியிட்டு இருந்ததையும் பகவான் வாசிக்கச் சொன்னார். பகவான் அட்டைப்படத்தில் இருக்கும், சுப திருஷ்டி கணபதி ஓவியம், திரு. பாஸ்கரதாஸ் ஒரு தெய்வீக தூண்டுதல் காரணமாக வரைந்ததை கவனித்தார். சாது, பகவானிடம், அந்தப்படத்தை பாராட்டியும் அதன் குறிப்பீடு குறித்தும் தான் எழுதியுள்ள கட்டுரையை,  இதழில் வெளியிட்டுள்ளது குறித்து கூறினார். பெங்களூர் குருகுல ஆசிரம பணிகளுக்காக திரு. பாஸ்கரதாஸ், ஒரு ஃபியட் காரை கொடுத்ததைப் பற்றியும் சாது பகவானிடம் பகிர்ந்தார். 

சாது பகவானிடம் ஆசியாவின் பெரும் மதங்களின் சர்வதேச மாநாடு, நேபாளின் லும்பினியில், நடைப்பெற்றது குறித்து பகவானிடம் தெரிவித்தார். பகவான் அதனை ஆழ்ந்து ஆர்வத்தோடு கேட்டார். பின்னர் சாது பகவானிடம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மற்றும் பாரதமாதா குருகுல ஆசிரம துவக்கவிழா, மற்றும் பெங்களூர் ஆனந்தாஸ்ரம சமிதியில் நடந்த பப்பா ராம்தாஸ் சன்னியாச தின நிகழ்வுகள் குறித்து விவரித்தார். பகவான், ஆனந்தாசிரம பக்தர்கள் பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் “அவர்கள் உனது ஆசிரமத்திற்கு வருவது நன்று“ என்றார். பகவான் சாதுவிடம், அவரோடு வந்த பக்தர்களை அறிமுகப்படுத்துமாறு கூறினார். சாது அதனை செய்தார். பகவான் விவேக் கண்ணாடி அணிந்திருந்தமையால் உடனடியாக அவனை அடையாளம் காணவில்லை. பகவான் விவேக்கை கண்ணாடியை கழட்டுமாறு கூற விவேக் அதனை கழற்றினார்.. பின்னர் யோகி விவேக்கிடம் எவ்வளவு காலமாக நீ கண்ணாடி அணிந்துள்ளாய் என்று கேட்டார். விவேக் கடந்த இரண்டரை வருடங்களாக என்று பதிலளித்தார். பகவான் விவேக்கிடம் அவரது பணி குறித்து கேட்டார். விவேக் தான் ஃபிஷ்னர் என்ற நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறினார். பகவான் விவேக்கிடம் அவனது பணிக்காலம் குறித்து கேட்டார். விவேக் அதனை விளக்கினார். சாது பகவானிடம் விவேக்கிற்கு திருமணம் செய்துவைக்கும் திட்டம் குறித்து கூறினார். பகவான் ஆசீர்வதித்து, “அனைத்தும் நன்றாக நடக்கும்“ என்றார். பகவான் விவேக்கிடம் நீ வெளிநாடு போக விரும்புகிறாயா ? என்று வினவினார். விவேக் வாய்ப்பு ஏற்பட்டால் செல்வேன் என்றார். பகவான் புன்னகைத்தவாறே கூறுகையில், “ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு போகாதே. இந்தியாவில் வேலை செய். அன்னை நாட்டிற்கு சேவை செய். அதுவே போதுமானது. நீ விரும்பினால், உன் தந்தையுடன் நீ தென் ஆப்பிரிக்கா போகலாம்“ என்றார். பின்னர் அவர் சிரித்தவாறே தொடர்ந்தார், “இந்தப்பிச்சைக்காரன் சொல்வதை கேட்காதே. அவன் சிலசமயம் அர்த்தமற்ற எதையேனும் பேசிக்கொண்டிருப்பான்.” என்றார். பின்னர் நகைச்சுவையாக, “ஆனால், உன் தந்தையை பின்பற்று“ என்றார். யோகி விவேக்கிடம் நீ எப்போது என்னை சந்தித்தாய் ? என வினவினார். 1986 ல் என்று விவேக் பதில் அளித்தார். யோகி விவேக்கிடம் வயது என்னவென்று கேட்க, விவேக் “ இருபத்தெட்டு” என்றான். சாது, விவேக்கிற்கு பதினான்கு வயது இருக்கும்போதே முதல்முறையாக அவன் பகவானின் தரிசனம் பெற்றதாக கூறினார். 

சாது பகவானிடம்  நிவேதிதா கர்ப்பமாக இருப்பதைப்பற்றி தெரிவித்தார். சாது அவளது பாதுகாப்பான பிரசவத்திற்கு ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் ஸ்ரீதரின் மகள் திருமணம் பற்றி கூறினார். பகவான் மணமக்களின் பெயர்களை கேட்டு அவர்களை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காக ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வர இருக்கும் பக்தர்கள் பற்றி குறிப்பிட்டார். பகவான் அவர்களின் திருவண்ணாமலை வருகையை முன் கூட்டியே தெரிவிக்குமாறு கூறினார். சாது பகவானை ‘தத்துவ தர்சனா’வில் கையொப்பம் இட்டு தருமாறு கூறினார். பகவான் அவரிடம், “ இப்போது இல்லை நீ இங்கேயே இரு” என்றார். யோகி ஆசிரமத்தின் அலுவலர்களிடம் சாதுவின் உணவிற்கும் அவர் தங்குவதற்கான இடத்திற்கும் ஏற்பாடு செய்யுமாறு சொன்னார். சுதாமா செல்லும் முன் பகவான், ”இந்தப்பிச்சைக்காரன் உடல்நிலை நன்றாக இல்லை. அவன் மருந்துகளால் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்“ என்றார் சாது பகவானிடம் நாங்கள் உங்களின் உடல்நலனுக்காக பிரார்த்திக்கிறோம் என்றார். பகவான், “என் தந்தை இந்தப்பிச்சைக்காரனை இந்த உடலில் அவன் விரும்பும் வரை வைத்திருப்பான். இந்தப்பிச்சைக்காரனின் வேலை முடிந்துவிட்டது என்று அவன் நினைத்தால் அவர் அவனை அழைத்துக்கொள்வார்“ என்றார்.

சுதாமாவிற்கு பகவான் மதியம் ஓய்வெடுக்க சென்றார். சாது மற்றும் அவரது குழுவினர் உணவு கூடத்தில் மதிய உணவை எடுத்துக்கொண்டனர். பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு சாதுவிற்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் விஷ்வேஷ் குடிலில் ஓய்வெடுத்தனர். பகவான் மீண்டும் ஆசிரமத்திற்கு மாலை 4 மணிக்கு வந்தார். அவர் சாதுவையும், விவேக்கையும் அழைத்து, சாதுவிடம் ‘தத்துவ தர்சனா’ பிரதிகளை எடுக்குமாறு கூறி அவைகளில் தனது கையொப்பத்தை இட்டார். மேலும் அவர் இரண்டு பிரதிகளில் கையொப்பம் இட்டு மா தேவகி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் தந்தார். பின்னர் அவர் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து வழக்கம்போல் ஆசீர்வதித்தார். பகவான் சாதுவிடம் வேறு ஏதேனும் கேட்பதற்கு இருக்கிறதா என வினவினார். சாது பகவானிடம் தனது ஒரே பிரார்த்தனை பெங்களூரில் துவக்கப்பட்ட பணிகள் வளரவேண்டும் என்றார். பகவான், “நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய், அந்தப்பணி வேகமாய் வளரும்“ என்றார். சாது தான் அவரது எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப வளர வேண்டும் என்றார். பகவான், “நிச்சயமாக. என் தந்தையின் ஆசி உண்டு“ என்றதோடு பகவான் சாதுவின் பெங்களூர் நோக்கம் நிறைவேற ஆசி வழங்கினார். சாது மற்றும் குழுவினர் பகவானிடம் ஆசியைப் பெற்று சென்னைக்கு திரும்பினார். 

யோகிராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய இளைஞர் தின விழா, மற்றும் யோகி ராம்சுரத்குமார் சூழல் கேடயங்கள் மற்றும் பரிசுகளை நகர மாணவர்களுக்கு வழங்க விவேகானந்தர் குறித்த பேச்சுப் போட்டி, கன்னிகாபரமேஸ்வரி கலைக்கல்லூரியில் ஜனவரி 9 ல் 2000 ல் நடைப்பெற்றது. நகர பள்ளிகளிலிருந்து 100 மாணவர்கள் அதில் பங்கு பெற்றனர். பகவானின் பக்தர்கள், டாக்டர் பவானி, டாக்டர் E.R. நாராயணன், திரு. சங்கர், திருமதி லஷ்மி, திரு பிரசாந்த் மற்றும் திரு. சிவசுப்பிரமணியம் நடுவர்களாக இருந்தனர். திரு. மாதவன் மற்றும் திரு. பிரசாத் நிகழ்ச்சியை நடத்தினர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இயக்குனர், திரு. அஸ்வினிகுமார், சிறப்பு விருந்தினராக இருந்து, பரிசுகளை வழங்கினார். டாக்டர் பாலாம்பாள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தினார். சாது, யோகி ராம்சுரத்குமார் குறித்தும் இளைஞர்களின் மீது அவர் உருவாக்கிய தாக்கம் குறித்தும் பேசினார். 

தென் ஆப்பிரிக்காவில் இருந்து, திரு. சோம பிள்ளை, அவரது தாய், கிருஷ்ணவேணி, மற்றும் சௌ. ப்ரேமா, புதன்கிழமை ஜனவரி – 12 அன்று வருகை தந்தனர். திருமதி பாரதி அவர்களோடு இணைந்து திருவண்ணாமலைக்கு சென்றனர். சாது ஆசிரமத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து பகவானிடம் தகவலை தெரிவிக்குமாறு கூறினார். அவர்கள் பகவானுடன் இரண்டு மணி நேரம் செலவழித்து ஆசிரமத்தில் தங்கி அடுத்தநாள் திரும்பினார். வெள்ளிக்கிழமையன்று சாது மற்றும் பாரதி பெங்களூருக்கு ரயிலில் சென்றனர். திரு. சோமா மற்றும் அவரது அன்னை அங்கே பஸ்ஸில் வந்து சேர்ந்தனர். அவர்களை பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் வரவேற்றனர். 

யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் மையத்தின் நூலகம் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் நிறுவப்பட்டது. அதில் சென்னையிலிருந்து அனைத்து புத்தகங்களும், இதழ்களும் வந்து சேர்ந்தன. ஹௌரா விலிருந்து வந்த சுவாமி முக்யானந்தா, பேலூர் ராமகிருஷ்ண மடத்தின் பண்பாட்டு கல்வி நிறுவனத்தின் (Ramakrishna Mission Institute of Culture) தலைவரை, வரவேற்க, சாது சென்னைக்கு வியாழக்கிழமை பிப்ரவரி 3 ஆம் தேதி, வந்திருந்தார். சாது மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று சுவாமியை சந்தித்தார். சுவாமி சாதுவின் நூல்களின் முழுமையான தொகுப்பான, ”விக்ஞான பாரதி– பகுதி – I – இந்துமதம் வேதகாலம் முதல் நவீன காலம் வரை“ என்ற நூலுக்கு முன்னுரை வழங்க ஒப்புக்கொண்டார். திங்கள்கிழமை , பிப்ரவரி – 7 ஆம் தேதி அன்று சாது மற்றும் பாரதி சென்னை , மைலாப்பூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் சர்வ மத கோயில் திறப்பு விழா மற்றும் மத நல்லிக்கணத்திற்கான மாநாட்டின்  துவக்கவிழாவில் கலந்து கொண்டனர். அங்கே சுவாமி ரங்கநாதனந்தா உரையாற்றினார். மாநாட்டிற்கு பிறகு சாது மத நல்லிணக்க மாநாட்டில் ஆற்காட்டின் இளவரசரான திரு. மொஹமத் அலியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அலி ஹிந்துக்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டதாக கூற, சாது பாபர்தான் இன்றைக்கும் வழிபாட்டில் இருக்கும் ராமர் கோயிலின் ஒரு பகுதியை அழித்துவிட்டு அதில் இந்துக்கள் வராமல் இருக்க இஸ்லாமிய கட்டிடத்தை கட்டியதாகவும், அதனை மீண்டும் இந்துக்கள் கைப்பற்றியதாகவும், கூறினார். அது தவறான முறையில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அதனை இந்துக்கள் இடித்தார்கள், அங்கே மசூதி ஒருபோதும் இருந்ததில்லை, என்றார். 

சாது மற்றும் பாரதி பெங்களூருக்கு வியாழக்கிழமை, பிப்ரவரி 10  அன்று திரும்பினர். ஒரு வாரம் தங்கியப்பின்னர் , சாது சென்னைக்கு பிப்ரவரி 18 அன்று திரும்பினார். திருமதி ரீட்டா மற்றும் தென்னாப்பிரிக்கா சத்யசாய் அமைப்பின் இரண்டு பக்தர்கள் சாதுவை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று  சந்தித்தனர். சாது பெங்களூருக்கு திங்கள்கிழமை பிப்ரவரி 22 அன்று பயணித்தார். சாது இன்னொரு பயணத்தை மார்ச் 4 முதல் 8 வரை சென்னைக்கு மேற்கொண்டார். இந்த கால இடைவெளியில் பகவானின் பக்தர்கள் சாதுவை சந்தித்து ராமநாம நோட்டுக்களையும், ஜப எண்ணிக்கைகளையும் தந்தனர். ஓசூரில் இருக்கும். பகவானின் கோயிலுக்கு வருகை தர, பகவானின் பக்தர்களின் அழைப்பும் சாதுவிற்கு வந்தது.

திரு. அனில் ஸுட்ஷி, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பக்தர், சாதுவிற்கு ஹைதராபாத் பயணத்தை ஏற்பாடு செய்தார். திரு. அனில் மற்றும்  திரு. விவேக் ஏற்கனவே அங்கே இருந்தனர். சாதுவை அவர்கள் சனிக்கிழமை மார்ச் – 18 அன்று ஹைதராபாத் புகைவண்டி நிலையத்தில் வரவேற்றனர். திருமதி ரீட்டா ஸுட்ஷி மற்றும் குடும்பத்தினர் அவர்களது இல்லத்தில் வரவேற்றனர். திருமதி பாரதியும் அங்கே விவேக்குடன் வந்து சேர்ந்திருந்தாள். ஒரு பிரம்மாண்ட காயத்ரி ஹோமம் மற்றும் சத்சங்கம் ஸுட்ஷி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. அதில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமதி ரத்தின குமாரி மற்றும் ஹைதராபாதில் உள்ள  அவரது கணவர், பாரதியின் மருமகளான ஸுசித்ரா மற்றும். ரீட்டா ஸுட்ஷியின் சக பணியாளர்களும் கலந்து கொண்டனர். சாது பகவான் குறித்தும் உலக ராம்நாம் இயக்கம் குறித்தும் உரையாற்றினார். சாது பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை மார்ச் 21 அன்று திரும்பினார். 

சாது, மார்ச் 23, 2000 அன்று, பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி முக்யானந்தா மற்றும் பெங்களூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஹர்ஷானந்தா ஆகியோரை பெங்களூரில்  சந்தித்தார். சுவாமி ஷர்ஷானந்தா மற்றும் சுவாமி ஜோதிர்மயானந்தா போன்றோர், சென்னையில், திரு. மொஹமத் அலியின் குற்றசாட்டுக்கு எதிரான சாதுவின் விமர்சனத்தை பிரதி எடுத்து பலருக்கு வினியோகம் செய்தனர் என்ற சேதியை சாது அறிந்தார். சுவாமி முக்யானந்தா, பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தாலஜிகல் ஆராய்ச்சி மையத்திற்கு ஏப்ரல் – 2 ஞாயிற்றுக்கிழமையன்று வருவதற்கு ஒப்புக்கொண்டார். வெள்ளிக்கிழமை  மார்ச் – 24 அன்று சாதுஜி திரு. அசோக் மட்டூ அவர்களோடு ஓசூருக்கு அருகே உள்ள அனுசோனிக்கு சென்று, சுவாமி விரஜேஸ்வர் அவர்களை ஹம்ஸாஸ்ரமத்தில் சந்தித்தனர். சாது தனது பகவான் யோகி ராம்சுரத்குமார் மற்றும் அன்னை மாயம்மா குறித்த அனுபவங்களை சுவாமியோடு பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் ஓசூர் யோகி ராம்சுரத்குமார் பஜன் மந்திருக்கு வந்தார். அங்கிருந்த பகவானின் பக்தர்கள் அவரை வரவேற்றனர். 29 ஆம் தேதி மார்ச் 2000 அன்று சாது, பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் அளவற்ற ஆசி மற்றும் கருணையால் எங்களது குருகுல ஆசிரமத்தின் தாழ்மையான பணி வேகமாக முன்னேறிவருகிறது. இந்த சாது வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருந்தான். தங்கள் கருணையால் அவன் இப்போது நன்றாக உள்ளான். 

பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரான பூஜ்யபாத சுவாமி முக்யானந்த்ஜி மஹராஜ் நமது குருகுல ஆசிரமத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 2 , 2000 அன்று வந்து பகவானின் பக்தர்களை சந்தித்து, சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார். இதுகுறித்த அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். நாங்கள் பகவானின் ஆசி வேண்டுகிறோம். சுவாமிகள் கல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன்  இன்ஸ்டிட்யூட் ஆஃப் கல்ச்சரின் தலைவர், மற்றும் மிஷனின் துறவிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளவர்.

யோகி ராம்சுரத்குமார் இந்தாலஜிகல் ஆராய்ச்சி மையத்தின் பெருமைமிக்க முதல் வெளியீடான, ”விக்ஞான பாரதி – பகுதி – I – இந்துமதம் வேதகாலம் முதல் நவீன காலம் வரை“ என்ற, இந்த சாதுவின் நூலுக்கு, முன்னுரை எழுதியுள்ளார். இத்துடன் அவர் வழங்கிய முன்னுரையின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ‘விவேகானந்தா கேந்திரா பத்தரிக்கா’வில் வெளியான, “புத்தாயிரமாண்டில் நித்திய மற்றும் உலகளாவிய மனித மதம்” (Eternal and Universal Religion of Man in the New Millennium) என்ற, இந்த சாதுவின் கட்டுரையும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கட்டுரை, டாக்டர். சம்பூரண் சிங் என்பவர் ஐ.நா. சபையில் சமர்ப்பிக்க இருக்கும் ஒரு விசேஷ தொகுப்பிலும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சாது மார்ச் – 16 ஆம் தேதி, ஓசூர் யோகி ராம்சுரத்குமார் பஜன் மந்திர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.  எங்களின் கார் இறுதி நேரத்தில் பழுதாகிய காரணத்தால் எங்களால் அங்கு சென்று சேர இயலவில்லை. இருப்பினும் நாங்கள் ஓசூருக்கு 25-3-2000 அன்று, காஷ்மீரத்து பக்தரான திரு. மட்டூ அவர்களுடன், பஜன் மந்திருக்கு சென்று தரிசனம் செய்தோம். திரு. ஸ்வர்ணநாதன் மற்றும் குடும்பத்தினர் எங்களை வரவேற்றனர். 

நாங்கள் ஓசூருக்கு அருகே உள்ள அனுசோனி ஹம்ஸாஸ்ரமம் சென்றோம். அங்கே சுவாமி விரஜேஸ்வர் எங்களை வரவேற்றார். அவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பி.எச்.டி பெற்றவர். மேலும் அவர் IBM ல் மூன்றாம் தலைமுறை கணிணிகளான IBM – 360  தயாரிப்பதின் பொறுப்பாளராக இருந்தவர்.. அவர் தனது  பணியை அமெரிக்காவில் விட்டுவிட்டு,  ரிஷிகேஷ்  சிவானந்தா ஆசிரமத்தின் சுவாமி வித்யானந்தா அவர்களிடம் சன்னியாசம் பெற்று, அனுசோனியில் தங்கியுள்ளார். 72 வயதான அவர் பகவானை தரிசிக்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார். நாங்கள் பகவானின் தரிசனத்தை அவர் பெற பிரார்த்திக்கிறோம். 

நாங்கள் திரு. அனில் ஸுட்ஷி உடன் ஹைதராபாத்தில் 18 முதல் 20 மார்ச் வரை இருந்தோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகள் டெல்லி மற்றும் அமெரிக்காவில் இருந்து கிடைத்துள்ளன. இருப்பினும் அவர் முடிவு எதையும் எடுக்கவில்லை. அவர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு வந்து தங்கள் ஆசியைப்பெற்று பின்னர் ஹைதராபாத்தை விட்டு செல்ல முடிவு எடுத்திருக்கிறார். 

சௌ. நிவேதிதா இப்பொழுது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அவள் மற்றும் அவளது குடும்பத்தினர் பகவானின் ஆசியை வேண்டுகின்றனர். விவேக்கிற்கு தகுந்த மணப்பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறோம் பாரதி திருமதி தங்களது ஆசியை வேண்டுகிறாள்.

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

பூஜ்ய சுவாமி முக்யானந்த்ஜி மஹராஜ், ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி மற்றும் ஹவுரா விலுள்ள பேலூர் மடத்தில் பிரம்மச்சாரிகளுக்கு பயிற்சி அளிப்பவர், மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலரும் ஆனவர், பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தாலஜிகல் ஆராய்ச்சி மையத்திற்கு ஏப்ரல் 2 அன்று வந்து அங்கே கூடியிருந்தவர்களிடம் உரையாற்றினார். சுவாமி, வேத காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வந்துள்ள பாரதத்தின் பெருமை வாய்ந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை  பாரதத்திற்கு உள்ளும்  வெளிநாடுகளிலும் பரப்புவதற்கு, சகோதரி நிவேதிதா அகாடமி தனது கேந்திரங்கள் மூலம் மேற்கொண்டுள்ள பணிகளை வெகுவாக பாராட்டினார். அகாடமி கடந்த இருபது வருடங்களாக நடத்தி வந்துள்ள, “விக்ஞான பாரதி — ஹிந்து சிந்தனை மற்றும் கலாச்சார பாடத்திட்ட”த்தில் சாது பேரா. ரங்கராஜன் வழங்கியுள்ள பாடங்கள், நூற்றாண்டுகளாக வந்துள்ள பாரதப் பண்பாடு மற்றும் தத்துவ சிந்தனையை தெளிவாகவும் சுருக்கமாகவும் படம் பிடித்துக் காட்டுகின்றன என்றும் விஞ்ஞான பாரதி என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக நூல்வடிவில் வெளிவர இருக்கின்றது என்றும் அவர் கூறினார். முதல் பகுதி வெளிவர தயாராக உள்ளது என்றும் தானே அதற்கு முன்னுரை எழுதி உள்ளதாகவும் சுவாமிகள் கூறினார். பாரதத்தின் பெருமை வாய்ந்த பண்பாடு மற்றும் கலாசாரம் மற்றும் தத்துவ சிந்தனையின் அடிப்படைக் கருத்துக்கள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறி, நமது புராதன ரிஷி முனிவர்கள் வழங்கியுள்ள வாழ்க்கை மூல்யங்கள் நூற்றாண்டு காலமாக எப்படி பாரதத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் மனித இனத்திற்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்பது பற்றி அவர் பேசினார்.

சாது. பேராசிரியர். V. ரங்கராஜன் சுவாமிஜியின் ஆசிரம வருகைக்கும், அவரது உத்வேகம் தரும் விக்ஞான பாரதி முன்னுரைக்கும் நன்றி தெரிவித்தார். கடந்த டிசம்பரில் ஆசிரமம் திறக்கப்பட்ட பிறகு, சுவாமிஜி தனது ஆசிரமத்திற்கு வருகை தந்த முதல் துறவி ஆவர் என்றார். மேலும். சாது, பாரதமாதா குருகுல ஆசிரமம், யோகி ராம்சுரத்குமார் இந்தாலஜிகல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூல் நிலையத்தை ஏற்படுத்தி, பாரதத்திற்கு உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் வருகின்ற இளைஞர்களுக்கு பாரதப் பண்பாடு பற்றிய பயிற்சி அளித்து, அவர்களை பாரத அன்னையின் ஆன்மீக தொண்டர்களாக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது பற்றி குறிப்பிட்டார். “வாழ்க்கை மூல்யங்களை அடிப்படையாகக்கொண்ட உலகளாவிய கல்வி இயக்கத்திற்கு” (Global Organization for Value Oriented Education) ஆசிரமம் கேந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய சாது, பெரும் துறவியர், சமயத்தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலின் கீழ், சன்மார்க மற்றும் ஆன்மீக மூல்யங்கள் உலகெங்குமுள்ள இளைஞர்களுக்கு போதிக்க திட்ட்மிடப்பட்டுள்ளது குறித்தும் கூறினார். பெங்களூரு ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா சாதனா கேந்திரத்தின் நிறுவனர் சுவாமி  சந்திரேசானந்தர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஒரு பிரம்மாண்ட ராமநவமி விழா அனுசோனி ஹம்ஸாஸ்ரமத்தில் ஏப்ரல் 12 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சாது ஆசிரமத்திற்கு மீண்டும் சென்று விழாவை சிறப்பித்தார். சுவாமி விரஜேஸ்வர் சாதுவை வரவேற்று அறிமுகப்படுத்தினார். சாது ராமநாம ஜெபத்தை முன் நடத்தினார். அகில உலக ராமநாம இயக்கம் குறித்து பேசினார். சாது பெங்களூர் திரும்பும் முன் ஓசூர் யோகி ராம்சுரத்குமார் பஜன் மண்டலிக்கும் சென்றார். திரு ஸ்வர்ண நாதன், அவரது குடும்பத்தினர், மற்றும்  பகவானின் பக்தர்கள் சாதுவை வரவேற்றனர். அங்கே சாது கோயிலில் பகவானுக்கு ஆரத்தி எடுத்து பிரசாதங்களை வழங்கினார். ராமநவமி விழா தமிழ் புத்தாண்டு நாளில், ஏப்ரல் 13 , 2000 அன்று பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது. 1977 ஆம் ஆண்டு சகோதரி நிவேதிதா அகாடமி தமிழ் புத்தாண்டு நாளில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, அகண்ட ராமநாம ஜபம் நடைப்பெற்றது. மாலை, நிறைவு விழாவில், ராம நாமம் தாரக மந்திரம். “ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம், என்பது பற்றி சாது உரை நிகழ்த்தினார். ஏப்ரல் 23 ஞாயிறு அன்று, பெங்களூரில் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா சாதனா கேந்திரா நடத்திய ஆன்மீக புத்துணர்வு முகாமில் சாது கலந்து கொண்டார். சுவாமி சந்திரேசானந்தா, அந்த கேந்திரத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், சாதுவை வரவேற்றதோடு சாதுவிடம் பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் குறித்து பேசுமாறு கூறினார். சாது சுவாமி விவேகானந்தர் மற்றும் சகோதரி நிவேதிதை பாரத அன்னையை மீண்டும் உலக குருவாக அரவணையில் அமர்த்த கனவு கண்டது குறித்து பேசினார்.

சுவாமி விரஜேஸ்வர், அனுசோனி ஹம்ஸாஸ்ரமத்தின் தலைவர், ஏப்ரல். 24 , 2000 அன்று, பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு விஜயம் செய்து தனது கருணையை பொழிந்தார். கர்நாடகத்தின் உடுப்பியில் பிறந்த அந்த சுவாமிகள், அமெரிக்காவின் நியூ ஜெர்சி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எச்.டி பெற்று, புகழ்பெற்ற IBM  நிறுவனத்தில் மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றி, IBM ல் மூன்றாம் தலைமுறை கணிணிகளான IBM – 360  தயாரிப்பதின் பொறுப்பாளராக இருந்தவர். அவர் தனது  பணியை அமெரிக்காவில் விட்டுவிட்டு,  ரிஷிகேஷ்  சிவானந்தா ஆசிரமத்தின் சுவாமி வித்யானந்தா அவர்களிடம் சன்னியாசம் பெற்று, 1992 முதல் இவர் பெங்களூர் பன்னேர்கட்டா சாலையில் உள்ள ஒரு குகை கோயிலில் தங்கியிருந்தார். ஜூன் 1999 முதல் ஹம்ஸாஸ்ரமத்திற்கு மாறினார். சுவாமிஜி, சமீபத்தில் மஹாசமாதி ஆன தனது குருவிற்காக, ரிஷிகேஷ் சென்று விமானம் மூலம் பெங்களூர் திரும்பியவுடன், பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு வந்து சில மணி நேரங்கள் சாது ரங்கராஜன் உடன் செலவழித்து விட்டு அனுசோனிக்கு கிளம்பினார். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.24

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.24 

நேபாள் பயணம், யோகி ஜெயந்தி மற்றும் பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் துவக்கம்

சென்னையை  அடைந்தவுடன் சாது, பாரதமாதா ஆசிரமத்தின் கட்டுமான பணிகளை கவனிக்க, உடனடியாக பெங்களூருக்கு சென்றார். சாதுவும், பாரதியும் பெங்களூருக்கு ஆகஸ்ட் – 27, 1999, வெள்ளியன்று சென்றடைந்தனர். தென் ஆப்பரிக்காவில் இருந்து வந்திருந்த திரு. ஓரி மற்றும் திரு. நாயக்கார் சாதுவோடு இணைந்தனர். அவர்கள் அனைவரும் கட்டுமானத்தின் வளர்ச்சியை காண்பதற்கு பணி நடக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சாது சென்னைக்கு ஆகஸ்ட் -31 அன்று திரும்பினார். செப்டம்பர் -5 ஞாயிறன்று. கோயம்பேட்டில் திருமதி. லலிதா என்பவரின் இல்லத்தில் சாது ஒரு சத்சங்கத்தில் உரையாற்றினார். சாது, பகவானுக்கு, தான் பாதுகாப்பாக திரும்பி வந்ததையும், தனது திருவண்ணாமலை வரவேண்டும் என்ற ஆவலையும், ஃபேக்ஸ் மூலம், தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று சாதுவை திரு. அஸ்வினிகுமார், ரேடியோ எஃப்.எம்.-ற்காக பேட்டி எடுத்தார். சாது அதில் “குடும்ப மதிப்புகள்“ குறித்து பேசினார். 

சாதுஜி மற்றும் திருமதி பாரதி, வியாழக்கிழமை செப்டம்பர் -9 , 1999 அன்று, திரு. ஸ்ரீதர், சௌ. கௌசல்யா, திரு. மோகன் மற்றும் திரு. சந்திரசேகர் ஆகிய பக்தர்களுடன், திருவண்ணாமலைக்கு சென்று, பகவானின் இல்லத்தை அடைந்தனர். பகவான் சாதுவை வரவேற்று தனது கருணை மற்றும் ஆசியை பொழிந்தார். சாது ஜஸ்டிஸ் திரு. T.S. அருணாச்சலம் அவர்களை சந்தித்து ஆசிரமத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தார். பின்னர் டிரஸ்ட் உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று பகவான் முன்னிலையில் நடந்தது. அதில் சௌ. விஜயலட்சுமி மற்றும் மா தேவகி கலந்து கொண்டனர். பகவான் அருணாச்சலத்திடம் சாதுவிடம் அனைத்து ஆசிரமத்தின் விவகாரங்களை விவாதிக்குமாறு கூறினார். அருணாச்சலம் ஏற்கனவே அது நடந்துவிட்டது என்றார். பின்னர் பகவான் சாதுவிடம் அவரது தென் ஆப்பரிக்க பயணத்தின் விவரங்களை பரிமாறும்படி கூறினார். சாது தனது வெற்றிகரமான தென் ஆப்பிரிக்கா பயணம் குறித்து விளக்கி,   பின்னர்,  இந்த ஆண்டு இறுதியில், அங்கு நடைபெற இருக்கும் சர்வ சமய பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்தும்,  மகாகவி பாரதியார் பற்றிய ஒரு நூலை வெளியிடுவதற்கு தான் அழைக்கப்பட்டுள்ளது குறித்தும்   கூறினார். தென்னாப்பிரிக்கா பயணம் குறித்து வெளியிடப்பட்ட “ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல்” செய்தி அறிக்கை சாது பகவானிடம் சமர்ப்பித்தார். பகவான் சாதுவிடம் அந்த செய்தி அறிக்கை, மற்றும், சாது மற்றும் பாரதமாதா ஆசிரமம் குறித்த ஒரு துண்டுப்பிரசுரம், ஆகியவற்றை படிக்குமாறு கூறினார். சாது அதனை வாசிக்க, பகவான் அதனை ஆசீர்வதித்தார். பகவான் கூறுகையில், “ ரங்கராஜா நீ எனது தந்தைக்கு மிகப்பெரிய காரியங்களை செய்திருக்கிறாய். நீ எங்கிருந்தாலும் எனது தந்தையின் ஆசி அங்கிருக்கும்” என்றார். யோகி சகோதரி நிவேதிதா அகாடமி தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் துவக்கப்பட்டதை ஆர்வத்தோடு கேட்டார். யோகி தென் ஆப்பிரிக்காவில் உள்ள மாநிலங்களைப்பற்றி கேட்டார். சாது பகவானிடம் அவைகளை பட்டியலிட்டார். தென்னாப்பிரிக்காவின்  வடமேற்கு மாநிலத்தின் பிரதமராக, மாண்புமிகு திரு போபோ மொளேஃபே    பதவியேற்றபோது, அந்த விழாவில், ஹிந்து சமுதாயத்தின் சார்பில், அவரை ஆசீர்வதித்து பேசுவதற்கு, சாது அழைக்கப் பட்டது குறித்து, பகவானிடம் தெரிவித்தார் பகவான் சாதுவிடம் திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்த ராபின் தீவு குறித்து கேட்டார். சாது உலக இந்து மாநாட்டின் போது திரு. மண்டேலா அவர்களை சந்தித்ததையும், அவர் தான் சிறையில் அமைதியாக இருக்க முடிந்தது தான் விடாது பகவத் கீதை பாராயணம் செய்து கொண்டிருந்ததால்தான் என்று குறிப்பிட்டதையும் கூறினார். பகவான், அதற்குக் காரணம், அவர் மீது மகாத்மா காந்தியின் தாக்கம் இருந்ததுதான் என்று கூறினார்

சாது பகவானிடம் பாரதமாதா ஆசிரமத்தின் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது குறித்து கூறினார். பாரத அன்னையின் பிரசாரகர்களை உருவாக்கும் திட்டத்தைப் பற்றியும் விளக்கினார். மேலும் பகவானிடம், திருமதி. பாரதி, விவேக்கின் திருமணத்திற்குப்பின், பெங்களூருக்கு சென்று ஆசிரம பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். பகவான் சாதுவிடம் பாரதி மற்றும் பிற சென்னை பக்தர்களை தன் அருகே அழைக்குமாறு கூறி, பின்னர் அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். பகவான் விவேக்கின் திருமணத்திற்கும் ஆசி வழங்கினார். சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்கா பக்தர்களின் பிரார்த்தனைகள் பற்றியும் கூறினார். திருமதி. பிரமிளா மற்றும் திருமதி. சரோஜினி அவர்களது ஆரோக்கியத்திற்காக ஆசியை வேண்டியதை கூறினார். பகவான் அவர்களது படங்களை ஆல்பத்தில் பார்த்து ஆசி வழங்கினார். அனைவரிடமும் விடைப்பெற்று பகவான் சுதாமாவிற்கு சென்றார். நாங்கள் உணவு கூடத்திற்கு சென்றோம். அங்கே பிரார்த்தனைகள் தொடர்ந்தன. பகவானுக்காக வைக்கப்பட்டிருந்த உணவு சாதுவிற்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அங்கே சாது, திரு. அருணாச்சலம், திரு. சங்கர்ராஜூலு, திரு. ரங்கமணி ஐ.ஏ.எஸ். மற்றும் பிறரிடம் தென் ஆப்பிரிக்கா ஆல்பத்தை காட்டி பேசிவிட்டு பின்னர் சென்னைக்கு திரும்பினார். 

சாதுவும், பாரதியும் மீண்டும் பெங்களூருக்கு செப்டம்பர் 11 அன்று சென்றனர். அங்கே, அடுத்த நாள், அவர்கள் ஆசிரமத்தின் இறுதி வடிவத்தினை கண்டனர். செப்டம்பர் -16 , 1999 வியாழன் அன்று, பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் கிரகப்பிரவேசம், வாஸ்து பூஜை, நவக்ரஹ ஹோமம் இன்னும் பிறவற்றுடன் நடைப்பெற்றது. அவைகளை, ஸ்ரீனிவாசா நகரின். ஸ்ரீனிவாசா கோயிலினை சேர்ந்த திரு. A.S. சம்பத் பட்டர். நடத்திக் கொடுத்தார். பல பக்தர்களும், சாதுவின் உறவினர்களும் அதில் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை சாது சென்னைக்கு பாரதியோடு திரும்பினார். 

செப்டம்பர் – 24 , வெள்ளிக்கிழமையன்று திரு. பாஸ்கர்தாஸ் மற்றும் திருமதி. சித்ரா, மற்றும் பகவானின் பக்தர்கள், சாது மற்றும் பாரதியை, சென்னை வளசரவாக்கத்தில், அவர்களது இல்லம் மற்றும் அலுவலகமான “சில்ப ஸ்ரீ”யில் வரவேற்றனர். திரு பாஸ்கரதாஸ் அவர்கள் ஒரு தெய்வீக அனுபவத்தில் கண்ட உருவத்தை “சுப திருஷ்டி விநாயகர்” என்ற ஒரு சிற்பமாக வடித்திருந்தார். அதற்கு சாது ஒரு சிறப்பு பூஜையை நடத்தினார். அக்டோபர் 11 திங்கள்கிழமையன்று சாதுவை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த, திருமதி. சரோஜினி முனுசாமி அவர்கள் சந்தித்தார். அந்த சந்திப்பில் தென் ஆப்பிரிக்காவின் மதங்களின் பார்லிமெண்ட்டில் சாது கலந்து கொள்ள அங்கு செல்வது பற்றி  விவாதிக்கப்பட்டது. அக்டோபர் – 13 புதன் அன்று, சாது, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர், திரு. அசோக் சிங்கல் அவர்களை, ஹோட்டல் காஞ்சியில், ஒரு வி.ஹெச்.பி. நிகழ்ச்சியில் சந்தித்தார். அவர் சாதுவிடம் அவரது தென் ஆப்பிரிக்கா பயணம் குறித்து விசாரித்தார். மேலும் நேபாளின் லும்பினியில் அடுத்தமாதம்  நடக்க இருக்கும் ஆசியாவின் பெரு மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அவர் சாதுவை அழைத்தார்.  அடுத்தநாள்  அன்று சாதுவை சுவாமி வன்னிய அடிகள் சந்தித்தார். அக்டோபர் 22 , 1999 வெள்ளிக்கிழமை  அன்று சாதுவிற்கு, தென்ஆப்பரிக்கா மற்றும் பிற இடங்களிலிருந்து பக்தர்கள், பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அக்டோபர் 29 வெள்ளி அன்று, சாது, விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இருந்து ஒரு அழைப்பிதழை, லும்பினிக்கு செல்ல பெற்றார். சாது பகவானுக்கு ஃபேக்ஸ் கடிதம் மூலம், அடுத்தநாள் திருவண்ணாமலைக்கு வருவதாகவும், தனது நேபாள் பயணம் குறித்தும், தெரிவித்தார் 

சாது, ஸ்ரீதர், மோகன், பார்த்தசாரதி மற்றும் கண்ணன் ஆகிய பக்தர்களுடன், திருவண்ணாமலைக்கு அக்டோபர் 30, 1999 சனிக்கிழமையன்று சென்றார். கிருஷ்ணமூர்த்தி, லலிதா மற்றும் குடும்பத்தினர் இன்னொரு காரில் சாதுவை பின்தொடர்ந்தனர். நாங்கள் பகவானின் இல்லத்தை முற்பகலில் அடைந்தோம். ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் சங்கர்ராஜூலு சாதுவை வரவேற்றனர். பகவான் சாதுவை காலை 11.15 மணிக்கு அழைத்து தனதருகே பிரதான கட்டிட வாயிலுக்கு முன் அமரவைத்தார். சாதுவிடம் “உன்னோடு வந்துள்ள பக்தர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்துள்ளவர்களா?” என்று வினவினார். சாது தன்னோடு வந்துள்ளவர்கள் ராம்நாம் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடும் தொண்டர்கள் என்றும், லூகாஸ் – டி.வி.எஸ் -ன் பணியாளர்கள் என்றும் குறிப்பிட்டார். யோகி அவர்களின் பெயர்களை கேட்டார். அவர் திரு. R.K. மூர்த்தி அவர்களின் பெயரை நினைவு கொள்ள முயன்றார். பின்னர் அனைவரையும் பகவான் ஆசீர்வதித்தார். சாது, பகவானிடம், நோபாளின் லும்பினியில் நடைபெற இருக்கும், ஆசியாவின் பெரும் மதங்களின் முதல் சர்வதேச மாநாட்டின் அழைப்பிதழை காட்டினார். பகவான் அதனை வாங்கி புரட்டிப்பார்த்தார். அதில் அவர் காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி படத்தினையும், தம்பதிகளின்  படத்தையும் பார்த்தார். பகவான் காஞ்சி மடம் பல தலைமுறைகளாக நேபாளத்துடனும்  நேபாள அரச பரம்பரையுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது குறித்து பேசினார். பகவான் சாதுவிடம், விஸ்வ இந்து பரிஷத்த்தைச் சேர்ந்த, திரு  பாலகிருஷ்ண நாயக் மற்றும் திரு மாதவ் அவர்கள் சாதுவை மாநாட்டிற்கு அழைத்துள்ள கடிதத்தை படித்து காட்டுமாறு கூறினார். சாதுவும் அதனை படித்து காட்டினார். பகவான் சாதுவிடம் எங்ஙனம் நீங்கள் கோரக்பூர் சென்று அங்கிருந்து லும்பினிக்கு செல்வீர்கள் என்றும், எந்தெந்த தேதிகளில் பயணம் செய்வீர்கள் என்றும் வினவினார். சாது பகவானிடம் தனது பயணத்திட்டத்தை விளக்கினார். பகவான் சாதுவை அவரது பயண வெற்றிக்கான ஆசிர்வாதங்களையும் வழங்கி, *எங்கெங்கு நீ சென்றாலும், என்ன நீ செய்தாலும், எங்கே நீ சென்று பேசினாலும் அவையனைத்தும் எனது தந்தையின் பணியே!  அவரது ஆசிர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும்!.” என்றார். 

சாது பகவானிடம் நேபாளத்தில் இருந்து திரும்பியவுடன் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மற்றும் பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் துவக்கவிழா மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் மையத்தின். துவக்கவிழா போன்றவை  பெங்களூரில் நடத்தப்படும் என்றார். பகவான் அனைத்து திட்டங்களையும் ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் தனக்கு இன்னமும், தென் ஆப்பிரிக்காவில்  உலக மதங்களின் பார்லிமெண்டில் கலந்துகொள்ள அங்கு செல்வதற்கான விமான டிக்கெட், வந்தடையவில்லை என்றார். பகவான் கூட்டத்தின் காலத்தை சாதுவிடம் கேட்டார்,  சாது, 1999 டிசம்பர் 1 முதல் 8 ஆம் தேதி வரை என்றார். சாது பகவானிடம், அங்கு செல்வதாக இருந்தாலும், யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கு பின்னரே அந்த மாநாட்டிற்கு செல்வேன் என்றார். சாது, பகவானிடம், பெங்களூரில் நிவேதிதா புதிய இடத்தின் சாவியை பெற்று, பின்னர் பொருட்களை சென்னையிலிருந்து பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றார். யோகி தனது தந்தையின் ஆசியினால் காரியங்கள் அனைத்தும் விரைவாக நடைப்பெற்று வருவது குறித்து தனது மகிழ்வை தெரிவித்தார். சாது, பகவானிடம், திட்டமிட்டபடி அனைத்தையும் மேற்கொள்ள வழிகாட்டுதலை கோரினார். பகவான், “ என் தந்தை உனக்கு வழிகாட்டுவார். நீ அவரது பணியை செய்கிறாய்” என்றார். 

சாது அவரின் முன் ‘தத்துவ தர்சனா’ ஆகஸ்ட் – அக்டோபர் 1999 பிரதிகளை வைத்தார். அந்த இதழ் சுவாமி நிச்ரேயாஸானந்தா அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. பகவான் அந்த சுவாமிகள் குறித்த விவரங்களைக் கேட்டார். சாது விவரித்தார். மேலும் அவரது நூற்றாண்டு விழா, செப்டம்பர் 14 , 1999 ல் நடைபெற்றது என்றார். அவரே ஆப்பரிக்க கண்டத்தில் ராமகிருஷ்ண இயக்கம் உருவாக முன்னோடியாக இருந்தவர் என்றார். ஆப்பிரிக்கா கண்டத்தில் தெற்கு நாடுகளில் ராமகிருஷ்ணா வேதாந்தா சொசைட்டி கிளைகள் நிறுவி அவைகளை திறம்பட நிர்வகித்த பெருமை அவரைச் சாரும் என்றார். பகவான் அவர் யாருடைய சீடன் என வினவினார். சாது அவர் சுவாமி சாரதானந்தா அவர்களுடமிருந்து தீட்சை பெற்றிருக்கலாம் என்றார். பகவான், சுவாமி திருச்சூரை சேர்ந்தவரா என வினவினார். சாது அவர் திருச்சூரில் பிறந்த போதிலும், சுவாமி விவேகானந்தரின் அடியொற்றி, வெளிநாடுகளுக்கு சென்றார் என்றார். பகவான் சாதுவிடம் ‘தத்துவ தர்சனா’வில் அந்த சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் சாதுவின் கட்டுரையை வாசிக்குமாறு கூறினார். சாது எழுதி இருந்த “குருவும், குருகுலமும்” என்ற கட்டுரையையும் பகவான் வாசிக்கச் சொன்னார். பகவான் பத்து பிரதிகளில் கையொப்பம் இட்டு குருகுல நூலகத்திற்காக தந்தார். மூன்று பிரதிகளை சுதாமா சகோதரிகளுக்கும், அங்கிருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதியையும் தந்தார். 

பகவான் பக்தர்களின்  குடும்பத்தினர் குறித்து விசாரித்து ஒவ்வொருவரையாக ஆசீர்வதித்தார். சாது, பகவானிடம், திரு. அனில் ஸுட்ஷி தன்னை நேற்று தொலைபேசி மூலம் அழைத்து, அவரது வணக்கங்களை பகவானுக்கு தெரிவித்ததாக கூறினார். யோகி அவரை ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் லும்பினி மாநாட்டில் பகிர அவரது சேதி வேண்டினார். பகவான் கூறுகையில், “இந்தப்பிச்சைக்காரனிடம் எதுவுமில்லை. ஆனால் என் தந்தை உன் மூலம் சேதியை தருவார்” என்றார். பின்னர் யோகி சாதுவின் சிரட்டை மற்றும் தண்டத்தை எடுத்து வழக்கம்போல் ஆசீர்வதித்தார். அவர் பக்தர்கள் அவருடன்  புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தார். எங்கள் அனைவரையும் அவர் ஆசீர்வதித்தப்பின் நாங்கள் அவரிடமிருந்து விடைப்பெற்று திரும்பினோம். உணவு கூடத்தில் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு, சாதுவிற்க்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மதுரையை சேர்ந்த திரு. N.S. கிருஷ்ணன் தனது மகள் சௌ. ஜானகியின் திருமணம் குறித்து தெரிவித்தார். சாது அப்பெண்ணை ஆசீர்வதித்துவிட்டு, ஆசிரமத்திலிருந்து விடைப்பெற்று சென்னை திரும்பினார். 

சனிக்கிழமை , நவம்பர் 6 , 1999 அன்று சாது, திரு. அஸ்வினி குமாருக்கு, ரேடியோ எஃப்.எம். –ற்காக, தீபாவளி குறித்து ஒரு நேர்காணலை வழங்கினார். திங்கள்கிழமை அன்று சாது, பகவான், சுவாமி சச்சிதானந்தா மற்றும் பூஜ்ய தபஸ்வி பாபா அவர்களுக்கு, தனது நிகழ்ச்சிகள் குறித்து கடிதம் எழுதினார். நவம்பர் – 12 ஆம் தேதி வெள்ளி அன்று, தனது சுயம்சேவக் சகோதரரான திரு. K.E. ராமசாமி அவர்களின் மறைவினை ஒட்டி நடந்த இரங்கல் கூட்டத்தில், விவேகானந்தா கேந்திராவில் பேசினார். மறுநாள் சாது கேப்டவுனில் திருமதி.  ப்ரமிளா வஸ்ஸனுக்கு, இதுவரை விமான டிக்கெட் வராததால், இனி விசாவிற்கு விண்ணப்பித்து பயணம் மேற்கொள்ள நேரமில்லாததால், தன்னால் மதங்களின் பார்லிமெண்டில் கலந்துகொள்ள முடியாது என்ற தகவலை தெரிவித்தார். நவம்பர் – 16 அன்று சாது, நேபாளத்திற்கு பயணித்தார். சகோதரி நிவேதிதா அகாடமியின் திரு. மாதவன், சாதுவுடன் கோரக்பூர் – க்கு  ரதி சாகர் எக்ஸ்பிரஸில் பயணித்தார். சுவாமிஜிகள் வன்னிய அடிகள், மற்றும் ஊரான் அடிகள் ஆகியோரும், திரு. ராஜேந்திரன் என்பவரும் சாதுவோடு இணைந்தனர். அவர்கள் கோரக்பூரை வியாழக்கிழமை இரவில் அடைந்தனர். அவர்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அலுவலக பணியாளர்கள் வரவேற்றனர். அவர்கள் கோரக்பூரின் கோயில் சத்திரத்தில் ஸ்ரீ மஹந்த் அவைத்யநாத் அவர்களின் விருந்தினர்களாக தங்கினர். லக்னோ வி.எச்.பி. யின் பேரா. உஷா மிஸ்ரா போன்றோர் சாதுவோடு இணைந்து. அனைவரும் ஒரு சிறப்பு பேருந்து மூலம், லும்பினிக்கு, வெள்ளிக்கிழமை நவம்பர் 19 ஆம் தேதி கிளம்பினர். ஆசியாவின் பெரும் மதங்களின் மாநாடானது சிறப்பான முறையில் துவக்கப்பட்டது. திரு. அசோக் சிங்கல், திரு. ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் , திரு. பாலகிருஷ்ண நாயக் , வி.எச்.பி. யின் திரு. வேதாந்தம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் -ன் திரு. சூரியநாராயண ராவ், போன்றோரும் பங்குபெற்றனர். திரு. பாண்டே ஞான் ஜகத், புத்த துறவிமடம் தலைவர், மற்றும் தென் ஆப்பிரிக்காவின் திரு. சேஜி கோகுல் அவர்களோடு இணைந்தனர். சாதுஜி சனிக்கிழமை நவம்பர் – 20 அன்று  மதிய நேரம், மாநாட்டில், “புத்தமதமும் ஹிந்து கலாச்சாரமும்“ என்ற தலைப்பில் பேசுகையில், பல்வேறு ஹிந்து சமய பிரிவுகளின்  பொதுவான பிரச்சனைகள் மற்றும் வேட்கைகள் குறித்து பேசினார். விழாவில் பங்கேற்றவர்கள் சாதுவின் உரையை பாராட்டினர். ஞாயிற்றுக்கிழமையன்று காஞ்சி மடத்தை சேர்ந்த ஸ்ரீ ஜெயேந்திரர் உரையாற்றினார். சாதுஜி, ஊரான் அடிகளின் தமிழ் உரையை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தார். மதியம் சாதுவும் அவரது குழுவினரும் லும்பினியில் பகவான் புத்தர் பிறந்த இடத்திற்கு சென்றனர். மாலையில் திரு. ஹேம் சர்மா அவர்களின் இல்லத்தில் நடந்த சத்சங்கத்தில் திரு. பாந்தே ஞான் ஜகத் அவர்களும் கலந்து கொண்டார். நவம்பர். – 22 திங்கள்கிழமை அவர்கள் கோரக்பூருக்கு திரும்பினர், அவர்களை திரு. மஹந் அவைத்யநாத், சாதனா பவனில் வரவேற்றார். செவ்வாய்க்கிழமை சாதுஜி, திரு. மாதவன் மற்றும் டாக்டர் கணேஷ் கோரக்பூர் கீதா பிரஸ்ஸிர்க்கு சென்றனர். மதியம் சாதுவும் , மாதவனும் நண்பரிகளிடம் விடைப்பெற்று அவத் எக்ஸ்பிரஸ் மூலம் லக்னோவிற்கு சென்றனர். திரு. லால் குடும்பத்தை சேர்ந்த திரு. விரேந்திரா, திரு. ராஜேந்திரா மற்றும் திரு. விக்கி சாதுவை ரயில்நிலையத்தில் வரவேற்று, திரு லால்  அவர்களுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.. சுவாமி ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் பக்தர்கள் சாதுவிற்கு இனிய வரவேற்பை வழங்கினர். சாது, டாக்டர் உஷா மிஸ்ரா அவர்களின் இல்லத்திற்கு சென்றார். அடுத்தநாள், வியாழக்கிழமை, நவம்பர் 25 அன்று, சாது, லக்னோ பக்தர்களிடம் விடைப்பெற்று, சென்னைக்கு லக்னோ எக்ஸ்பிரஸ் மூலம் திரும்பினார். அவர் சனிக்கிழமை வீட்டை அடைந்தார். திரு. மாதவன் ஒரு விவரமான அறிக்கையை, லும்பினி பயணம் குறித்தும், ஆசியாவின் பெரும் மதங்களுக்கான சர்வதேச மாநாடு குறித்தும் தயாரித்தார்: 

“ஆசியாவின் பெரும் மதங்களின் சர்வதேச மாநாடு பகவான் புத்தர் பிறந்த இடமான நேபாளின் லும்பினியில் நவம்பர் 19 , 20 மற்றும் 22 ஆம் தேதி 1999 ல் நடைப்பெற்றது. இந்த மாநாடு, ரோமன் கத்தோலிக்க சர்ச்களின் தலைவரான போப் ஜான் பால் II, நவம்பர் – 5 அன்று புதுடெல்லிக்கு வருகை தந்த பொழுது, வரும் புத்தாயிரமாண்டில் மொத்த ஆசிய கண்டத்தையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவோம் என்று அவர் கூறியதற்கு சவால் விடும் வகையில், நடத்தப்பட்டது. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் தலைமை புரவலராக ஜகத்குரு சங்கராச்சாரியாரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் திகழ , பல ஹிந்து , புத்த மற்றும் ஜெயின் ஆன்மீக தலைவர்களும் இதற்கு புரவலர்களாக இருந்தனர். 1994 ல் பாரதத்தின் சாரநாத்தில் முதன்முறையாகவும், 1996 ல் இரண்டாவதாக ஜப்பானிலும், 1997 ல் மோடி நகர், புது டெல்லியில், மூன்றாவது முறையாகவும் இந்த மாநாடு நடைப்பெற்றது. நேபாளில் முதன்முறையாக நடைபெற்றுள்ள இந்த மாநாடு, புத்தாயிரம் ஆண்டில் ஆசியா நாடுகளுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

மாநாட்டின் புனிதமான துவக்கவிழா நாளில்,  புத்தர் பிறந்த புனிதமான இடத்தில் பூஜைகளும், பரிக்ரமாக்களும் நடைப்பெற்றன. காலையில் மாநாடு                    துவக்கவிழா, சித்தார்த் நகரில் ஒரு திறந்த மைதானத்தில், காஞ்சி பீடத்தின் ஜெயேந்திரர் மூலம் குத்துவிளக்கேற்றப்பட்டு துவக்கப்பட்டது. மதியம் உலகின் ஒரே ஹிந்து நாடான நேபாளின் அரசரான பீரேந்திரா பீர் பிக்ரம் ஷா தேவ் அவர்களின் வாழ்த்துமடல் வாசிக்கப்பட்டது. அதில் அவர், மானிட தொண்டில் ஒரு தனிப்பட்ட பிரிவினர் அல்லது வகுப்பினர் நலனில்  மட்டும் அக்கறை காட்டாமல், அனைத்து மக்களுடைய கல்வியின்மை, பசி, மற்றும் வருமை ஆகியவற்றை நீக்குவதற்கு முயற்சி எடுத்தால், மதங்கள் மனித நலன் மற்றும் உலக சமாதானத்திற்கு பெரிதும் உதவ இயலும் என்று அவர் கூறினார். மேலும் அவர் எச்சரிக்கும் வகையில், “நாம் அனைவரும் கவனத்தோடும், அர்ப்பணிப்போடும் இருந்து, நமது விலைமதிப்பற்ற மதங்களின் பாரம்பரியம், சகிப்புத்தன்மை, ஒற்றுமையுணர்வுகளை நமது சமூகத்தில் ஒருங்கிணைக்க வேண்டும்.” என்றார். 

ஸ்ரீ ஜெயேந்திர சங்கராச்சாரியார் கூறுகையில், போப் ஜான் பால் II, மொத்த ஆசிய நாடுகளையும் புத்தாயிரமாண்டில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றவேண்டும் என்று விடுத்துள்ள சவாலானது, மொத்த ஐரோப்பா மற்றும் அமெரிக்க மக்களில் பலர் ஹிந்து வழிபாட்டிற்கும் , மதத்திற்கும் வருவதைக் கண்ட பதட்டத்தினால் வருவதாகும் என்றார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மக்கள், இந்து மத சிந்தனைகள் , கலாச்சாரங்கள் மற்றும் உலகளாவிய மனித குலத்தின் வாழ்க்கை மூல்யங்களால்  கவரப்பட்டு, தன்னிச்சையாக அவற்றை ஏற்றுக்கொண்டு வரும்பொழுது, கிறிஸ்துவ சர்ச்கள், ஏழைகள் மற்றும் கல்வியறிவில்லாதவர்களை கட்டாய த்தாலும் பணத்  தூண்டுதல்களாலும் மதம் மாற்றி, அவர்களின் உள்ளத்தில் ஒரு அச்ச உணர்வையும் ஏற்படுத்துகின்றன என்றார்.

துவக்கவிழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் மனிதவளத்துறை அமைச்சரான மாண்புமிகு திரு. முரளி மனோகர் ஜோஷி கூறுகையில் பாரதநாடு புனிதமான நிலம். அதற்கு ஒரு ஆன்மீக கலாச்சாரம் உண்டு, அதுவே மனிதகுல சகோதரத்துவத்திற்கும், மதங்களின் ஒற்றுமைக்கும் அடிப்படையானதாகும் என்றார். அவர் வருகின்ற புத்தாயிரமாண்டில் ஹிந்து தர்மம் முழுவீச்சில் உலகெங்கும் பரவும் என்றார். 

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் திரு. அசோக் சிங்கல் மாநாட்டில் உரையாற்றுகையில், பாரதமும், நேபாளமும், ஹிந்து வேதங்கள், மற்றும் புத்த மற்றும் ஜெயின ஆன்மீக பாரம்பரியங்களின் மிகப்புராதனமான  கேந்திரங்களாக  திகழ்ந்து வந்துள்ளன என்றார். இந்தப் பாரம்பரியங்கள் தனித்த அடையாளங்களை கொண்டவை என்றும், இதன் மத தலைவர்கள் தங்களின் பாரம்பரியங்களை பாதுகாப்பதில் தீவிரமாகவும் மிகுந்த விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். இந்த சமய சம்பிரதாயங்களின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, போப் ஜான் பால் II சவால் விட்டுள்ளபடி ரோமன் கத்தோலிக்க சர்ச்சின், மொத்த ஆசியாவையே கிறிஸ்துவ மதமாக மாற்றும், முயற்சியை முறியடிப்பார்கள் என்றும்  கூறினார்

திரு. பாந்தே ஞான் ஜகத் மஹாஸ்தவிர், உலக புத்த கூட்டமைப்பின்  தலைவர், பேசுகையில், புத்தமதம் உலகம் எங்கிலும் மக்களை அஹிம்சை மற்றும் இரக்கம் போன்றவற்றின் பாதை மூலம் ஒருங்கிணைத்து , பாரதத்தின் ஆன்மீக பாரம்பரியங்களின்   மிக உயர்ந்த சாதனைகளின் சின்னமாக திகழ்கிறது என்றார். மேலும் அவர் புத்தமதத்தின் வேர்கள் ஹிந்து தர்மத்தில் உள்ளதை சுட்டிக்காட்டி, உலகெங்கும் உள்ள  பௌத்தர்களும் ஹிந்துக்களும் ஒன்றிணைந்து ஆசியா கண்டம் முழுவதும் பரவியுள்ள இந்த மஹா ஆன்மீக பாரம்பரியங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ளுவார்கள் என்றார்.

அர்ஷா வித்யா குருகுலத்தின் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி பேசுகையில், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் மதங்கள் வன்முறையின் மூலம் மனிதனை மதம் மாற்றி, அவனது குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து பிரித்து அவனை ஒரு வேற்று கிரகத்து மனிதன் போல் ஆக்குகிறது என்றும், கிரேக்க மற்றும் ரோமர்களின் நாகரீகத்தையும், பண்டைய அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கலாச்சாரத்தையும் பாரம்பரியங்களையும் கிறிஸ்துவ மதமே அழித்தது என்றும் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் – ன் அகில பாரத அதிகாரியான திரு. சூரிய நாராயணராவ் தனது உரையில், சுவாமி விவேகானந்தர், “இந்தியர்கள் சங்கரரின் தலையையும், புத்தரின் இதயத்தையும் ஒன்றாக கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியதை நினைவுறுத்தினார். மேலும் அவர் சுவாமிகள் மீது ஹிந்துக்கள் மட்டுமல்ல, தூர தேசங்களில் வாழும் பௌத்த மதத்தினரும் பெரும் மரியாதை கொண்டிருந்தனர் என்றார்.

சாது. பேராசிரியர் வே. ரங்கராஜன், சகோதரி நிவேதிதா அகாடமியின் ஸ்தாபக அறங்காவலர், அவரது உரையில், பழம்பெரும் சமய நூல்கள் ஆன விஷ்ணு புராணம் மற்றும் பார்ஹஸ்பத்ய சம்ஹிதை போன்றவை, ஞான ஒளியின் தேசமான பாரதத்தின் எல்லையைப் பற்றி குறிப்பிட்டு, இந்த தேசத்தை தாய் நாடாகவும் தெய்வத்திரு நாடாகவும் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்ற குடிமக்கள் தான் ஹிந்துக்கள் என்று குறிப்பிடுகின்றன என்றார். ஹிந்து கலாசாரம் மற்றும் ஆன்மீக பண்பாடுகளில் இருந்து உருவெடுத்த பல்வேறு மதங்களில் ஒன்றாகும் புத்தமதம், என்றார். அவர் ஜெயதேவரின் “கீத கோவிந்த”த்தில், புத்தர் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்படுவதோடு, ஹிந்துக்கள் அவரையும் இந்த நிலத்தின்  ஒரு மிகப்  புனிதரான ஆன்மீக குருவாக கருதி வணங்கி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார். மேலும் உலகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஹிந்து சமய கல்வித் துறைகளில், வேதத்தை ஏற்றுக் கொள்கின்ற நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், மீமாம்ஸா, மற்றும் வேதாந்தம், ஆஸ்திக தரிசனங்கள் என்றும், வேதத்தை மறுக்கின்ற பௌத்தம், ஜைனம், சார்வாகம் ஆகியவை நாஸ்திக தரிசனங்கள் என்றும், இவை அனைத்தும் ஹிந்து தர்மத்தின் பல்வேறு பிரிவுகள் தான் என்றும் கற்பிக்கப்படுகிறது என்றார். புத்த மதம், ஜைன மதம், சீக்கியம் ஆகிய வை ஹிந்து தர்மத்திலிருந்து மாறுபட்ட சமயங்கள் என்று கூறுவது முரண்பட்ட கருத்தாகும் என்று அவர் குறிப்பிட்டார். சாதுஜி, 1964 ல், பெரும் ஆன்மீக மற்றும் மத தலைவர்களான, குருஜி M.S. கோல்வால்கர், சுவாமி சின்மயானந்தா, ஆச்சார்யா துளசி, தலாய் லாமா, மாஸ்டர் தாராசிங் போன்ற, பல்வேறு சமய பிரிவுகளான வைஷ்ணவர்கள், சைவர்கள், புத்தமதத்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோரின் சமயத் தலைவர்கள் பங்குகொண்ட கூட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத்  அமைக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டு, அந்தக் கூட்டத்தில் “ஹிந்து” என்ற வார்த்தைக்கு வழங்கப்பட்ட சொற்பொருள்விளக்கம், “பாரதத்தில் உருவெடுத்த புராதன ஆன்மீக வாழ்க்கை மூல்யங்களை மதித்து ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் அனைவரும் ஹிந்துக்கள்” என்பதை சுட்டிக்காட்டினார். புதிய ஐரோப்பிய வரலாற்றாளர்கள் தங்களது ஆய்வுகளில் ஏசுவின் காணாமல் போன வருடங்களான 14 முதல் 29 வயதிலான காலத்தில் அவர் இந்தியாவில் ஹிந்து மற்றும் புத்த மதத்தின் பாரம்பரியங்களைக் கற்றார் என்றும், பின்னர் அவர் சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்படும் நிகழ்விற்கு பின் தப்பித்து வந்து இந்தியாவில் ஒரு ஹிந்து யோகியாக காஷ்மீரில் வாழ்ந்து, அங்கேயே மறைந்தார் என்றும் கூறுகின்றனர். மேலும், கிறிஸ்தவ மதம் என்பது இயேசு நிறுவியது அல்ல என்றும், செயின்ட் பால் ஏற்படுத்திய தேவாலய அமைப்பின் பேரரசு கோட்பாட்டு இயக்கமாகுமென்றும், குறிப்பிட்டார். ஹிந்து தலைவர்களுக்கு சாது விடுத்த அறைகூவலில் பண்பாடு மற்றும் வாழ்க்கை மூல்யங்களுக்கு ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு எழவேண்டும் எனக் கூறினார்..

அந்த மாநாட்டில் பல அறிஞர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஜப்பான், இந்தோனிசியா, மலேசியா, தாய்லாந்து, கொரியா , மியான்மர் , ஹாங்காங் , ஸ்ரீலங்கா மற்றும் தென் ஆப்பரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர். மாநாடு நிறைவுறும் முன் ஒரு முக்கியமான தீர்மானம் ஒன்றில், இரு நபர் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அதன்மூலம் ஆசியாவில் எங்கெல்லாம் கிறிஸ்தவ மதமாற்ற பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என்று கண்டறிந்து அதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய முயற்சிகள் குறித்து தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வெளிநாட்டு செயல் தலைவர், டாக்டர் பூபேந்திர குமார் மோடி,  மற்றும் ஜப்பானின் டைக்கோஜி கோயிலின் 17 வது ஆசார்யர், தவத்திரு டையன் S. உச்சிடா அந்த குழுவின் இரு உறுப்பினர்கள் ஆவார்கள். 

பல்வேறு நாடுகளிலுள்ள பல சமய குழுக்களின் பிரதிநிதிகள் 500 க்கும் மேற்பட்டவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதோடு, அந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், “ஹிந்து – பௌத்த  தத்துவத்தில் ‘கருணை’ என்ற கருத்தும், நடைமுறையும்” என்பது பற்றி விவாதித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை , நவம்பர் 28 , 1999 அன்று மாலையில், சாது, பாரதி, விவேக் மற்றும் இரண்டு பக்தர்களான வெங்கடேஷ் மற்றும் வேலு உடன், பெங்களூருக்கு காரில்  கிளம்பி அங்கே அடுத்தநாள் காலையில் சென்றடைந்தனர். திரு. K.N. வெங்கடராமன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உபதலைவர்,  மற்றும் திரு ஜெயராமன், பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு வந்தடைந்தனர். புதன்கிழமை, டிசம்பர் – 1 காலையில், திருமதி பவானி அஸ்வினிகுமார், திரு. ஹேமாத்ரி ராவ், திரு ரவி, திருமதி ஜெயஸ்ரீ மற்றும் திரு. G.S. ராமன் போன்றோர் சென்னையிலிருந்தும், திரு. பிரபாகரா மைசூரில் இருந்தும்,  பெங்களூரில் இருந்த பக்தர்களும் ஆசிரமத்திற்கு வந்திருந்தனர். பகவானின் கருணை மற்றும் ஆசியினால், யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி டிசம்பர் – 1 ,1999 அன்று, பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம், சிறப்பான ஒரு நிகழ்ச்சியில், கிருஷ்ணராஜபுரம்  ஸ்ரீனிவாச நகரில், துவக்கப்பட்டது. 

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா, ஒவ்வொரு ஆண்டினைப்போல், நாள் முழுவதும், சென்னை, மைசூர் மற்றும் பெங்களூர் பக்தர்கள் கலந்து கொண்ட அகண்ட ராமநாமம் நடைப்பெற்றது. வழக்கம்போல், கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம் மற்றும் ஆயுஷ் ஹோமம் போன்றவை காலையிலும் மாலையில் பஜனையும் நடைப்பெற்றன. 

சுருக்கமான நிறைவுரையில், சாது ரங்கராஜன், தனது குரு யோகி ராம்சுரத்குமார் அவர்களின் கருணையால், தனது முப்பது வருட கனவான, ஒரு புராதன குருகுலமுறையில் செயல்படும் ஒரு மையத்தை அமைப்பது சாத்தியமானது என்றும், இதில் உலகின் பல பகுதிகளில் இருந்து வருகின்ற இளைஞர்கள்  பயிற்றுவிக்கப்பட்டு, நமது அன்னை பாரதத்தின் பண்டைய ரிஷிகளின், மனிதர்களை உருவாக்கும் ஹிந்து பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையை உலகெங்கும் பரப்பும் பணியை மேற்கொள்வார்கள் என்றார். எளிய வாழ்க்கை, மற்றும் உயரிய சிந்தனை இவையே இந்துக்களின் வாழ்க்கை முறையின் அடிப்படை தத்துவங்கள் என்றும், இங்கு பயிற்சி பெறும் இளைஞர்கள் பாரத நாட்டின் உயர்ந்த ஆன்மீகப் பண்பாட்டின் உருவகங்களாக திகழ்வார்கள் என்றும் கூறினார்.

வி.எச்.பி. யின் சர்வதேச செயல் தலைவரான திரு. அசோக் சிங்கல் அனுப்பிய செய்தி மடலில், யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 82 வது ஜெயந்தி விழா வேளையில், தனது நமஸ்காரம் மற்றும் நீண்ட ஆயுளோடு வாழ தனது வாழ்த்துக்களை யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தெரிவித்தார். மேலும் பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிகல் ஆராய்ச்சி மையத்தின் வெற்றிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த விழா ஹனுமான் சாலிசா பாடி ஆரத்தியோடு முடிக்கப்பட்டது. 

சாது, சென்னைக்கு டிசம்பர் – 2 ஆம் தேதி திரும்பினார். சென்னையின் “தி ஹிந்து” நாளிதழ், பாரதமாதா குருகுல துவக்கவிழா குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது. சாது, பகவானுக்கு வெள்ளிக்கிழமை டிசம்பர் 10 அன்று, யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா மற்றும் பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார்  இன்டோலோஜிக்கல் ஆராய்ச்சி மையம் துவக்க விழா குறித்தும் தகவல் தெரிவித்தார். மையத்தின் பணிகளை துவங்க டிசம்பர் 11 அன்று தான் மீண்டும் பெங்களூர் செல்ல இருப்பது குறித்தும் அவர் தெரிவித்தார். டிசம்பர் 14, 1999 அன்று திரு. டெட்டி கொமல், திரு. சேகரன் மற்றும் திரு. சுஜன் போன்ற தென் ஆப்பிரிக்கா நண்பர்கள் பாரதமாதா குருகுல மந்திர்க்கு வருகை தந்தனர். திரு. கோவிந்தராவ் மற்றும் பெங்களூரின் ஆனந்தாஸ்ரம சத்சங்க சமிதியை சேர்ந்த ஐந்து பக்தர்கள் சாதுவை சந்தித்து, டிசம்பர் – 27 அன்று பப்பா ராம்தாஸ் அவர்களின் சன்னியாச தின விழாவன்று உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டனர். வெள்ளிக்கிழமை, திரு. டெட்டி மற்றும் நண்பர்கள் சாதுவிடம் விடைப்பெற்று கிளம்பினர். டிசம்பர் 21 அன்று, சாது சென்னைக்கு, சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் விவேகானந்தர் குறித்த பேச்சுப் போட்டியில் யோகி ராம்சுரத்குமார் சூழல் கேடயங்கள் மற்றும் பரிசுகளை நகர மாணவர்களுக்கு வழங்க, ஏற்பாடுகளுகளை மேற்கொள்ள வந்தார். ஜனவரி 9 , 2000 அன்று அந்த நிகழ்ச்சி நடத்த, திரு. கன்னிகா பரமேஸ்வரி கலைக் கல்லூரி ஏற்பாடு செய்யப்பட்டது. சனிக்கிழமை , டிசம்பர் 25 அன்று சாதுஜி திருவல்லிக்கேணி ஐயப்ப சேவா சங்கத்தில் பகவான் அய்யப்பனின் லட்சார்ச்சனை விழாவில் சபரி மலைக்கு செல்லும் பக்தர்களிடையே உரையாற்றினார். பகவான் யோகி ராம் சுரத் குமாரின் பக்தரான திரு. பாஸ்கரதாஸ், தனது ஃபியட் காரை, சாதுவிற்கு அவரது குருகுல பணிக்காக பரிசளித்தார். மேலும் அவர் திரு. சுரேஷ் என்ற ஓட்டுனரையும் காரை பெங்களூருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் – 26 அன்று சாது பெங்களூருக்கு காரில் சென்றார். காரில் ஏற்பட்ட சில பழுதின் காரணமாக அவர் கோலாரில் இரவு தங்கி, அடுத்தநாள் பழுது சரியான உடன் பயணத்தை தொடர்ந்து பெங்களூரை அடைந்தார். பெங்களூர் ஆனந்தாஸ்ரம சத்சங்க சமிதியின் திரு. கோவிந்தராவ் மற்றும் திரு. ராமநாராயண் வந்து சாதுவை பப்பா ராம்தாஸ் சன்னியாஸ நாள். விழாவிற்கு அழைத்துச் சென்றனர். சாது பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்து பேசினார். டிசம்பர் – 31, 1999 அன்று, சாது சென்னைக்கு பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் திரும்பினார். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.23

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.23 

தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் சாதுவின் தர்ம பிரசாரம்

சாதுவின் தென் ஆப்பிரிக்காவின் முதல் நிகழ்ச்சி வெட்ஸ்டோன் விஷ்ணு கோயிலில் நடைபெற்ற சீதா ஜெயந்தி விழா ஆகும். திரு. துக்கான் அவர்களின் சுந்தர காண்டம் வாசிப்பு நடைப்பெற்றது. அங்கே சாது “ராமாயணத்தின் முக்கியத்துவம்” குறித்து பேசினார். அவர், சீதாய சரிதம் மஹத் – “சீதாவின் பெரும் வரலாறு” என்று ராமாயண காவியம் போற்றப் படுவதாக குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை , ஏப்ரல் 25 அன்று தென் ஆப்பிரிக்காவின் விஷ்வ ஹிந்து பரிஷத் சாதுவிற்கு நார்த்க்ராஃப்ட் ஹிந்து சபாவில் பெரும. வரவேற்பை தந்தது. சாது விஷ்வ ஹிந்து பரிஷத் உருவெடுத்தது குறித்தும் ஹிந்து ஒற்றுமை குறித்தும் பேசினார். சாது ஒரு அமைதி பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார். அங்கே அவர் திரு. ராஜ்பன்ஸி என்ற இந்திய சமூகத்தின் தலைவரை சந்தித்தார். 27 ஆம் தேதி சாது திரு. சோம பிள்ளை வீட்டில் நடந்த சத்சங்கத்தில் இந்திய மொழிகள் மற்றும் மத அமைப்புகள் இடையேயான ஒருமைப்பாடு குறித்து பேசினார். அடுத்தநாள் அவர் ஹிந்து ஸ்வயம்சேவக  சங்கத்தின் விஷ்ணு மந்திர் சாகாவில், சுயம் சேவகர்களிடம் உரையாற்றினார். வியாழக்கிழமை 29 ஆம் தேதி அன்று சாது ஆசிரியர்கள் மையத்தில் ஏப்ரல் 29 அன்று ஃபினிக்ஸில் ஆசிரியர்கள் மையத்தில், “இந்திய மொழிகளின் பொது மூலம் மற்றும் ஹிந்து கலாச்சாரம்“ குறித்து பேசினார். மாலையில், டோங்காட்டில், சத்ய சாய் மையத்தில், சாது, “பகவான், அவதாரம் மற்றும் மனித விதி“ குறித்து பேசினார். பின்னர் அங்கே ஒரு நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. வெள்ளிக்கிழமை அன்று சாது ஸீடைட்ஸ் லைப்ரரி ஹாலில், “வாழ்க்கையின் இலக்கு“ குறித்து பேசினார். சனிக்கிழமை அன்று, பெலவிடேரில்  நடந்த சத்சங்கத்தில், சாது,  “ஹிந்து தர்மத்தில் கடவுள் கோட்பாடு” என்பது குறித்து பேசினார். மே – 2 ஞாயிற்றுக்கிழமையன்று, சாது, ஓவர்போர்ட் நாகரி பிரச்சாரினி சபையில் நடைபெற்ற பஞ்ச பூஜா விழாவில் உரையாற்றினார். நோர்த்கிராஃப்ட் ஹிந்து தர்ம சபாவின் ஹிந்து தினவிழாவிலும்  சாது உரை நிகழ்த்தினார். திங்கள்கிழமை மே – 3 அன்று, சாது, பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர் தனது தென்னாப்பிரிக்கா நிகழ்ச்சிகள் மற்றும் பணியில் முன்னேற்றங்கள் குறித்து எழுதி திரு. டெட்டி கொமல்  மூலம் ஃபேக்ஸ்  செய்தார். ஹிந்து ஸ்வயம் சேவக சங்க கூட்டத்தில் சாது உரையாற்றினார். பின்னர் விஸ்வரூப்  மந்திரில் “ஹிந்து புனரெழுச்சி” குறித்து பேசினார். செவ்வாய்க்கிழமையன்று சாது தென் ஆப்பிரிக்கா ஹிந்து காவல்துறையினர் சங்கக் கூட்டத்தில் “மதமாற்றம் மற்றும் தண்ட நீதி” குறித்து உரையாற்றினார். மாலையில் விஸ்வரூப் கோயில் சத்சங்கத்தில்  இரண்டாவது நாளாக உரை நிகழ்த்தி, ஒரு பெரும் கேள்வி பதில் நிகழ்ச்சியையும் நடத்தினார்.

மே – 5 அன்று புதன்கிழமை , 1999 அன்று சாது க்ரேடவுன்க்கு காரில் சென்றார். சாது அடுத்தநாள் மாலை பக்தர்களிடையே “ஹிந்துத்துவம் 21 ஆம் நூற்றாண்டில்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை இரண்டு தனிச்சபைகளில் சுயம்சேவக் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் சாது விஷ்ணு மந்திரில் உரையாற்றினார். அடுத்தநாள் திரு. ஓரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற சத்சங்கத்தில் சாது, “ஹிந்து மதிப்புகள்” குறித்து பேசினார். ஞாயிற்றுக்கிழமை மே – 9 அன்று சாது அனைத்து பக்தர்களோடு மேதில் லேக் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்று அங்கே அவர் காயத்ரி, துர்கா மற்றும் த்ரயம்பகா ஹோமங்களை நடத்தி, பின்னர், ஹிந்து தர்மம் குறித்து உரையாற்றினார். திங்கள்கிழமையன்று அவர் ஹிந்தி சிக்‌ஷன் சம்ஸ்தாவை சார்ந்த ஹிந்தி மாணவர்களிடையே  உரையாற்றினார். மற்றும் மாலையில் அவர் “பஜகோவிந்தம்” குறித்த தொடர்  உரையை விஷ்ணு மந்திரில் துவக்கி, சனிக்கிழமைவரை நடத்தினார். புதன்கிழமை மே – 12 அன்று, பிருந்தாவன் ஹாலில் நடைபெற்ற ஹிந்து சுயம்சேவக் சங்கத்தின் கூட்டத்தில் சாது, “இலட்சிய ஹிந்து இளைஞன்” குறித்து சுயம்சேவகர்கள் இடையே பேசினார். வியாழக்கிழமை அன்று கூல்ஏரில் சத்யசாய் குழுவினர் இடையே, “21 ஆம் நூற்றாண்டில் ஹிந்து தர்மம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை அன்று, HSS சுயம்சேவகர்களிடையே “சங்க ஒழுக்கம்“ குறித்து பேசினார். பஜகோவிந்தம் இறுதிநாள் உரையில் பல பக்தர்கள் கலந்து கொண்டு சாதுவிற்கு குரு தட்சணை வழங்கினார்கள். 

சாது டர்பனுக்கு ஞாயிற்றுக்கிழமை மே 16 அன்று திரும்பி ஃபினிக்ஸில் பஞ்ச பூஜை விழாவில் உரையாற்றினார். அவர் மே 17 அன்று வெருலம்  கோபால் லால் கோவிலில் சாது, “பஜகோவிந்தம்” குறித்து தொடர் உரை துவக்கினார். செவ்வாய்க்கிழமை, திரு தனசங்கர் மஹராஜ், தென் ஆப்பிரிக்காவின் காவல்துறை ஹிந்து சாப்ளின், சாதுவை டர்பன் , பைன்டவுன் மற்றும் சாட்ஸ்வர்த்தில் உள்ள காவல்துறையை சேர்ந்த ஹிந்து காவலர்கள் சத்சங்கங்களில் உரையாற்ற அழைத்து சென்றார். சாது, அந்த கூட்டங்களில், ஹிந்துத்துவம் என்பது என்ன என்ற தலைப்பில் உரையாற்றி, கேள்வி-பதில் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். மே – 19, புதன்கிழமையன்று, வெருலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழுவைச் சார்ந்த திருமதி அனிதா சுஜன் சிங், சிறுவர்களுக்கான ஒரு சத்சங்கத்தை ஏற்பாடு செய்தார். அதில் ஹிந்து தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகள் குறித்து சாது விளக்கினார். வியாழக்கிழமை அன்று சாது, ஸ்டேங்கர் இரண்டாம்நிலை பள்ளியில், மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே, “கல்வியின் இலட்சியம்“ குறித்து உரையாற்றினார். மாலையில் சாது தனது “பஜகோவிந்தம்” உரையை கோபால் லால் கோயிலில் தொடர்ந்தார். வெள்ளிக்கிழமையன்று சாது “பஜ கோவிந்தம்“ குறித்த இறுதி உரையை நிகழ்த்தினார். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மே – 23 அன்று, சாது, மதமாற்றம் குறித்து ஒரு பயிற்சிப்பட்டறையை, வெருலம் கோயில் ஹாலில் நடத்தினார். திங்கள்கிழமை அவர் ந்யூலாண்ட்ஸ்  ஹிந்து சபாவில் வேத பாரம்பரியம் குறித்து பேசினார். செவ்வாய்க்கிழமையன்று அவர் ரிவர்டைனில் ஹிந்து தர்மம் குறித்து உரையாற்றினார். மே – 26 அன்று சாது, பகவானுக்கு, தனது ஜோஹனஸ்பர்க் செல்வதற்கான திட்டம் மற்றும் கௌதங் மாநிலத்தில் தனது நிகழ்ச்சிகள் குறித்து கடிதம் எழுதி, அதனை ஃபேக்ஸ் செய்தார். 

மே – 27, வியாழக்கிழமை அன்று, சாதுஜி, ஸ்டேங்கர் சிவன் கோயிலில், சத்யசாய் குழுவின் சத்சங்கத்தில் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை சாது பிரிட்டிஷ் ஏர்வேஸ் கோமேர் விமானத்தை பிடித்து ஜோஹனஸ்பர்க் சென்றடைந்தார். திரு  கோர்க்கி சிங் மற்றும் குடும்பத்தினர் சாதுவை விமான நிலையத்தில் வரவேற்றனர். சாது, ஸ்ரீ ராமகிருஷ்ண மையத்தில் சுவாமி பிரேமானந்தா,  மற்றும் ஆதிசங்கர ஆசிரமத்தில் சுவாமி சங்கரானந்தா, ஆகியோர்களை  சந்தித்த பிறகு, ரேடியோ ஈஸ்ட் வேவில், ஹிந்து தர்மம் குறித்த தனது நேர்காணலை வழங்கி, தொலைபேசி மூலமாக நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து,  கௌதங் மாநிலத்தில் தனது நிகழ்ச்சிகள் குறித்து அறிவித்தார். சனிக்கிழமை சாது சுப்ரமண்ய கோயிலில், “இந்துக்களின் சடங்குகளும், சம்பிரதாயங்களும்“ என்ற தலைப்பில் பேசினார். மே – 30 ஞாயிற்றுக்கிழமை அன்று, சாது, சனாதன வேத தர்ம சபாவின் கோயிலில் இளைஞர்களிடையே, “இளைஞர்களும், சத்சங்கமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மாலையில், சாது, ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து ஒற்றுமை குறித்தும் உரையாற்றினார். ஜூன் – 1 அன்று, சாது, தெற்கு லெனேசியாவில் ஈஸ்வரன் கோயிலில், அங்கிருந்த பெரும்திரளான மக்களிடம், “புத்தாயிரமாண்டில் ஹிந்து தர்மம்“ என்ற தலைப்பில் பேசினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மையத்தின் சுவாமி பிரேமானந்தா அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். லெனேசியா  தக்ஷிண  சேவா சமாஜில்,  சாது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், “பாரதிய பெண்மையின் முல்யங்கள்” என்ற தலைப்பில் பேசினார். பின்னர், ஷீரடி சாய்மந்திரில், பகவான் சாய்பாபா பற்றி உரை நிகழ்த்தினார். ஜூன் – 4 வெள்ளிக்கிழமையன்று, சாது மீண்டும் “புத்தாயிரமாண்டில் ஹிந்து தர்மம்“ என்ற தலைப்பில், வேதா மந்திரிலும் உரையாற்றினார். சனிக்கிழமை ஜூன் – 5 அன்று, சாதுஜி,  பினோனி ஹிந்து தலைவரான, திரு. கரீப் பாய் அவர்களின் 60 வது பிறந்தநாள் விழாவில், வேத  மந்திரில், “இந்து வாழ்வியல் முறை“ குறித்து பேசினார். ஞாயிற்றுக்கிழமை பினோனி குஜராத்தி மண்டலில், மற்றும் விஸ்வநாத் மந்திரில், சிறுவர்களுக்கான சத்சங்கங்களில் உரையாற்றினார். மாலையில் விஸ்வநாத் மந்திரில் பக்தர்களிடையே, “வெற்றியின் ரகசியம்“ குறித்து பேசினார். திங்கள்கிழமை, மிட்ரண்டில், திரு. ரபின் ரகுநண்ணன் அவர்களின் இல்லத்தில் நடந்த சிறுவர்கள் சத்சங்கத்தில் அவர் உரையாற்றினார். லாடியம் விஷ்ணு மந்திரில்,  சாது, “21  – ஆவது நூற்றாண்டில் ஹிந்து தர்மம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். செவ்வாயன்று, திரு ரபின் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற சத்சங்கத்தில்  “ஹிந்து வாழ்க்கை மூல்யங்கள்”  குறித்து பேசினார்.

சாது ரங்கராஜன் காரில் பயணித்து, தென் ஆப்பிரிக்காவின் எல்லையை கடந்து, சுங்க அதிகாரிகளின் சோதனைகளுக்குப்பின், போட்ஸ்வானா குடியரசில் நுழைந்து, அவர் போட்ஸ்வானாவின் தலைநகரான கேபொரோனை ஜூன் – 9 , 1999, புதன்  அன்று அடைந்தார். அவரை போட்ஸ்வானா சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், திருமதி ஜெயஸ்ரீ, மற்றும் திரு ரவிக்குமார் குடும்பத்தினர் வரவேற்றனர். லோபாட்ஸேயில் நடந்த ஒரு பிரம்மாண்டமான சத்சங்கத்தில் சாது, “புத்தாயிரமாண்டில் ஹிந்துத்துவம்“ என்ற தலைப்பில் வியாழக்கிழமை அன்று பேசினார். சாது SOS கிராமத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள குழந்தைகளிடையே உரையாற்றி, அவர்களுக்கு பழங்களை வழங்கினார் பிறகு அங்குள்ள ஹிந்து ஹாலில் நடைபெற்ற சத்சங்கத்தில் உரையாற்றினார். மேன்மைதங்கிய திரு. மித்தல், இந்தியாவின் ஹைகமிஷனர், அந்த விழாவில் கலந்து கொண்டார். டாக்டர் B.D. சர்மா சாதுவை அறிமுகப்படுத்தினார். சாது “ஹிந்து தர்மமும் அறிவியலும்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். சனிக்கிழமை ஜூன் – 12 அன்று, சாது, மணி A. புலா பள்ளியில் சிறுவர்களிடையே உரை நிகழ்த்தினார். மாலையில், தோர்ன்ஹில் பள்ளியில் ஒரு சத்சங்கத்தில் ”ஹிந்துத்துவம் – இலக்கும், பாதையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஞாயிற்றுக்கிழமையன்று, மணி A. புலா பள்ளியில் மீண்டும் சிறுவர்களிடையே உரையாற்றி, அங்கே நசிகேதனின் கதை மற்றும் துணிவுமிக்க பாரத சிறுவர்கள் குறித்து பேசினார். அவர்களுக்கு தினசரி பிரார்த்தனைகளை கற்பித்தார். பின்னர் சாது, ராமாயாண குழுவினரிடம், ஹிந்து சபா ஹாலில், ராமாயணம் குறித்து பேசினார். ஸ்ரீ அரவிந்தர் மையத்தில் “ வேதாந்தம் –- வேதம் முதல் ஸ்ரீ அரவிந்தர்  வரை” என்ற தலைப்பில் பேசினார். சத்யசாய் குழுவினரிடம் சாது பேசுகையில், “சத்தியம், சிவம், சுந்தரம்“ என்ற தலைப்பில் பேசினார். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. 

போட்ஸ்வானா குடியரசில் சாதுவின் சாதனைகளுக்கு மரியாதை தெரிவித்து, நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான திரு. ஷங்கர் எழுதினார்:

“சாது பேராசிரியர் ரங்கராஜன் (சாதுஜி) அவர்களின் போட்ஸ்வானா விஜயம் குறித்து  எழுதும் வாய்ப்பு பெற்ற நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி.  அவரது இந்தப்பயணத்தின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து மட்டும் நான் எழுத விரும்புகிறேன்.

ஒரு பிரம்மசாரி மாணவனாகவும், பின்னர் ஒரு குடும்பஸ்தனாகவும் தனது கடமைகளை திறம்பட நிர்வகித்த பிறகு சாது முற்றும் துறந்து தாழ்மையான கடவுள் மற்றும் மனிதகுலத்தின் பணியாளனாகவே பயணித்துள்ளார்.

அவர் இவையனைத்தையும் சாதித்துள்ளது, வெளித்தோற்றத்திற்கு மிக முற்போக்கானதும், மனித வாழ்க்கை மிகவும் எந்திரமயமானதும் உலகாயத இன்பங்களில் கட்டுப்பாடில்லாது தொடர்ந்து மூழ்கியிருப்பதுமான, இந்த நவீன உலகத்தில் இருந்துகொண்டுதான். ஆக, சாதுஜி சாதாரண மனிதத் தன்மையில் உறங்கிய நிலையில் இருக்கும் உண்மையான, வேகம் மிகுந்த, ஒரு  பேராற்றலின் சின்னமாக திகழ்கிறார்.

அனைத்து மக்களும், புத்தி பூர்வமாக, கடமைப்பட்டிருக்கிறார்கள்–. 1) மிகக் கடினமானதாகிலும் கண்டிப்பாக அடையக்கூடிய ஒரு லட்சியத்தின்  உருவகமாக அவரை ஏற்றுக்கொள்ள, 2) அவரது குணங்களை ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்ற. அவர் பல மெய்ஞானிகள், ரிஷிகள் மற்றும் அவதார புருஷர்கள் போதித்துள்ள பாடங்கள் குறித்து ஆழ்ந்த ஞானத்தை பெற்றிருப்பவர் ஆவர்.

அவர், இந்த அனைத்து ஆசாரியர்களின் போதனைகளையும் எளிமையாக உண்மையாக, மற்றும் தீவிரமாக ஆதரிப்பதற்கு ஆற்றல் கொண்டவர் ஆவர். இந்த ஆசிரியர்களின் போதனைகள் சில சமயம் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதாக, மாறுபட்டதாக, வெளித்தோற்றத்திற்கு இந்த ஆசிரியர்களின் போதனைகள் சில சமயம் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதாக மாறுபட்டதாக வெளித்தோற்றத்திற்கு ஒன்றை மற்றொன்று எதிர்ப்பதாகவும் தென்பட்டாலும் அவற்றை ஒருங்கிணைத்து அவைகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு ஆற்றல் அவரிடம் நிரந்தரமாக உள்ளது காண்கிறோம். இந்த ஒருங்கிணைக்கும் ஆற்றல்  இயற்கையாக அவரிடம் உள்ளது அவரது தனித்தன்மை ஆகும். அனைத்து ஆசிரியர்களின் போதனைகளிலும் உள்ள பொதுவான உயர்ந்த கருத்துக்கள், வெளித்தோற்றத்திற்கு தெரியும் இவைகள் இடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து, ஒருங்கிணைந்த ஒரு தத்துவ கோட்பாடாக இவர் மூலம் வெளிப்படுகிறது. எல்லாவற்றையும் அகப் படுத்திய விரிந்த  உளப்பாங்கு இவரின் உருவகமாக திகழ்கிறது.

இந்துத்துவத்தை போட்ஸ்வானாவில் பரப்புவதற்கு தெளிவான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்துடன் அவர் இங்கு வந்தார். அனைவரையும் கவரும் எளிமை மூலமாக அவர், குறுகிய மனப்பான்மை கொண்ட இதயங்களை விரிவடையச் செய்து தனது சாதனையின் முதல்விதைகளை இங்கு பதித்துவிட்டார், ஒன்றோடு மற்றொன்று மோதிக் கொண்டிருக்கும் ஹிந்து பிரிவினர்களிடையே ஒரு ஆற்றல்மிக்க ஒருங்கிணைப்பு உண்மையிலேயே ஏற்பட அவருடைய வருகை வழி வகுத்துள்ளது,”

ஜூன் – 15 , 1999 அன்று  திரு வெங்கடேசுலு அவர்களின் இல்லத்தில் சாதுவிற்கு வழியனுப்புதலை தந்தனர். திரு ராம்தாஸ், இந்திய ஹை கமிஷனின் முதல் செயலர், அவரது மனைவி, திரு ரவி, திருமதி. ஜெயஸ்ரீ மற்றும் குடும்பத்தினர் சாதுவோடு மதிய உணவிற்கு இணைந்தனர். பின்னர் சாது தென் ஆப்பிரிக்காவிற்கு காரில் பயணித்து திரும்பினார். சாது, தென் ஆப்பிரிக்காவின் வடக்கு மாநிலம் ஆகிய மாஃபிகெங்கிலுள்ள மம்பாத்தோ வந்து அடைந்தார். அங்கே, திருமதி. சங்கீதா தவே, சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், அவரது குடும்பத்தினர், மற்றும் வடமேற்கு ஹிந்து சபாவின் செயலாளரும் மம்பாத்தோ பல்கலைகழகத்தில் பேராசிரியருமான, திரு M. ராமனாதன் சாதுவை வரவேற்றனர். மாஃபிகெங்கிற்கு சாது விஜயம் செய்தது குறித்து, பேராசிரியர் ராமநாதன், “தத்துவ தரிசனம்” இதழில் பின்வருமாறு எழுதினார்:

“சுவாமி ரங்கராஜன் மாஃபிகெங்கிற்கு, போட்ஸ்வானாவின் காபொரோனில் இருந்து, செவ்வாய்க்கிழமை ஜூன் 15 , 1999 ல் வந்தார். அவர் இங்கு ஒரு புதிய பார்வையாளர் அல்ல. சுவாமியின் சிறப்பும், திறனும் மாஃபிகெங் -ல்  பலர் அறிந்த ஒன்று. வடக்கு ஹிந்து சபா தி மெயில் என்ற செய்திதாளோடு இணைந்து, இவரது வருகை குறித்த பெரும் விளம்பரத்தை செய்திருந்தது. மாஃபிகெங் வாழ்வாசிகள் ஆன்மீக தேடலோடு இருந்தார்கள், ஏனெனில் எந்த ஆன்மீக குருவோ  சமயத் தலைவரோ  உலகத்தின் இந்த பகுதிக்கு வருவதில்லை. மாஃபிகெங்-ன் ஹிந்து மக்கள் சாதுவை இங்கு கடவுள் அனுப்பிய பரிசாகவே நினைக்கிறார்கள். திருமதி. சங்கீதா தவே, சுவாமியின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். 15 ஆம் தேதி சாது தனது ஆன்மீக உரைகளை சாந்தி மந்திரில் துவக்கினார். அவர், “நான் ஏன் இந்து என்பதில் பெருமை கொள்கிறேன்?“ என்பது குறித்து பேசினார். அடுத்த நாள் “அறிவியலும், ஹிந்துத்துவமும் 21 ஆம் நூற்றாண்டில்“ என்ற தலைப்பிலும், 17 ஆம் தேதி, “ஹனுமான் சாலீசாவும், சுந்தரகாண்டமும்“ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். 18 ஆம் தேதி, மாநில பிரதமர், மேன்மைதங்கிய போபோ மொளேஃபே   அவர்களின் பதவியேற்பு துவக்க விழா, மம்பாத்தோ கரோனாவிலுள்ள சட்டமன்ற சதுக்கத்தில் நடைபெற்றபொழுது, அந்த நிகழ்ச்சியில் ஒரு ஹிந்து பிரார்த்தனை நிகழ்த்த, சாது அழைக்கப்பட்டார். 19 ஆம் தேதி அன்று கோல்ஃப் வியூவில், “பகவத்கீதையின் சாரம்“ என்ற தலைப்பில் பேசினார். 20 ஆம் தேதி பாலவிகாஸ் குழந்தைகளுடன் சாது ஒரு சிறந்த உரையாடல் நிகழ்ச்சி மேற்கொண்டு, அவர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். மாலையில், ”இயேசு கிறிஸ்து – ஒரு ஹிந்து யோகி“, என்ற தலைப்பில் உரையாற்றினார். சமயங்களுக்கு இடையேயான நன்றிநவிலும் பிரார்த்தனை கூட்டத்தில், மம்பாத்தோ சிவிக் சென்டரில், “ஹிந்து வாழ்க்கை முறை “குறித்து அவர் நிகழ்த்திய உரை அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அவர் சொற்பொழிவை முடித்தவுடன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கருப்பர்கள் வெள்ளையர்கள் உட்பட அனைவரும் எழுந்து மகிழ்ச்சியுடன் நடமாடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அது சுவாமிக்கு ஒரு மறக்க இயலாத நாளாக அமைந்தது. 21 ஆம் தேதி சுவாமி, மாஃபிகெங்கிலிருந்து, காரில் ஜோஹனஸ்பர்கிற்கு, மாஃபிகெங் ஹிந்து சமூகத்தினரின் மிகுந்த இனிமையான நினைவுகளோடு சென்றார். 

சுவாமியின் அனைத்து உரை நிகழ்ச்சிகளிலும் பலர் கலந்து கொண்டனர். சொற்பொழிவுகளுக்கு பின் நேரடி, கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் நடந்தன. அவர் பல தொடர்ச்சியான கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை அளித்தார். அவரது உரைகளில், வேதங்கள், உபநிஷத், ஹிந்து கலாச்சாரம், தத்துவங்கள், சமயச்சடங்குகள், புராணங்கள் மற்றும் இதிஹாசங்கள் ஆகிய அனைத்து பற்றியும் அளிக்கப்பட விளக்கங்கள் அனைவரையும் கவர்ந்தன. மாஃபிகெங் ஹிந்து மக்கள் கூட்டத்திற்கு இது வறண்ட நிலத்தில் தெய்வீகமான மழை பெய்ததுபோல் இருந்தது. அவர் பல இந்து இல்லங்களுக்கு சென்று காயத்ரி, துர்கா ஹோமங்களை பல இடங்களில் மேற்கொண்டார். அந்த ஹோமங்களின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். மாஃபிகெங் வரலாற்றில் அவரது விஜயம் நினைவு கொள்ளத்தக்க ஒன்றாக அமைந்தது.” 

திங்கள்கிழமை ,ஜூன் – 21 அன்று, சாது. மிட்ராண்டிற்கு காரில் சென்றார். செவ்வாய்க்கிழமையன்று சாதுஜி ஒரு விரிவான தகவலை ஃபேக்ஸ் மூலம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தனது போட்ஸ்வானா மற்றும் மம்பாத்தோ பயணம் பற்றி அனுப்பினார். தொலைபேசி மூலம் திருவண்ணாமலை ஆசிரமத்தில் உள்ள  ராஜலட்சுமியை அழைத்து தனது வணக்கங்களை பகவானுக்கு தெரிவிக்குமாறு கூறினார். மாலையில் மிட்ராண்ட் சத்ய சாய் குழுவினர் இடையே அவர் உரையாற்றினார். 

ப்ரிடோரியா ஹிந்து சமாஜ் ஒரு ஆரவாரமான வரவேற்பை சாதுவிற்கு புதன்கிழமை ஜூன் 23 , 1990 அன்று தந்தது. சௌ. யாஷிகா சிங், தென்னாப்பிரிக்கா தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சாதுவை வரவேற்றார். சாது, “புத்தாயிரமாண்டில் ஹிந்துத்துவம்“ என்ற தலைப்பில் பேசினார். திரு. கொர்க்கி சிங் லெனேசியாவில் வியாழக்கிழமை ஒரு சத்சங்கத்தை ஏற்பாடு செய்தார். வெள்ளிக்கிழமை சாது, லெனேசியா தக்ஷிண சேவா சமாஜில், “ஹிந்துத்துவமும் இளைஞர்களும்” என்ற தலைப்பில் பேசினார். சனிக்கிழமையன்று ஜூன் – 26 ல், சௌ. யாஷிகா சிங் சாதுவின் உரைகளை  “புருஷார்த்தங்கள்”, “ஐந்து உன்னத நற்பண்புகள்” மற்றும் “புத்தாயிரமாண்டில் ஹிந்துத்துவம்“  ஆகிய தலைப்புகளில், சவுத் ஆஃப்ரிக்கா ப்ரோடுகாஸ்டிங் கார்ப்பரேஷன் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுக்காக பதிவு செய்து கொண்டார். மாலையில் சாது, ராமேஸ்வர்  மந்திரில்  ஒரு கூட்டத்தில், “ஹிந்துக் கடவுள்கள் பற்றிய பகுத்தறிவுப் பூர்வமான விளக்கம்” பற்றி பேசினார். ஜனவரி 27 ஞாயிறன்று, ஜோஹன்னஸ்பர்க் காயத்ரி பரிவார், 108 முறை காயத்ரி சாலிசா பாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அந்த நிகழ்ச்சியில சாது விற்க்கு சிறப்பான வரவேற்பு வழங்கியது. சாது அதில் உரையாற்றினார். அன்று சாது கௌடேங் பக்தர்களிடமிருந்து விடைப்பெற்று டர்பனுக்கு விமானம் மூலம் சென்றார். திரு. டெட்டி கொமல்  மற்றும் அவரது பிள்ளைகள் சாதுவை டர்பன் விமானநிலையத்தில் வரவேற்றார்கள். திங்கள்கிழமை அன்று சாது ஒரு விவரமான கடிதம் ஒன்றை பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு, தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் உலக ராமநாம இயக்கத்தை பரப்புவதைப்பற்றி, எழுதினார். ஜூலை – 1 அன்று சாதுவை, திரு. ஸ்டீஃபன், ரேடியோ ஃபினிக்ஸில், தொலைபேசி மூலம் உரையாடல் நிகழ்ச்சிக்காக, ஒரு பேட்டியை எடுத்தார். சாது அதில் ஹிந்து சடங்குகள் குறித்து பேசியதோடு, நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஸ்யம்சேவக் மற்றும் சேவிகாக்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நான்கு நாள் முகாமில், A.M. மூலா ஸ்பெஸ் நோவா பள்ளியில், சாது ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை, ஜூலை – 2 , 1999 அன்று தொடங்கி, நான்கு நாட்களும் சாது அவர்களோடு தங்கினார். முதல் நாள், சாது காயத்ரி ஹோமம் மற்றும் தேச மாத்ரிகா பூஜையை செய்தார். அவர், பாரதத்தில், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஸ்தாபகர் மற்றும் முதல் சர்சங்கசாலக் ஆகிய டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் குறித்து பேசினார். தினமும் காலையில், சாது, ப்ராதஸ்மரண் மற்றும் ஏகாத்மதா மந்த்ரம்  போன்றவற்றை முகாமில் இருப்பவர்களுக்கு பயிற்சி அளித்ததோடு, சிறுவர்களுக்கான கதை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். அந்த முகாமில் கலந்து கொண்ட சுயம்சேவகர்கள் மற்றும் சேவிகாக்களிடையே, சனிக்கிழமை அன்று, ஹிந்துக்கள் மதம் மாற்றப்படும் பிரச்சனை குறித்து சாது உரையாற்றினார். அவர் டிவைன் லைஃப் சொஸைட்டியின் 50 வது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டார். சுவாமி வெங்கடேஸ்வரானந்தா அவர்களும் அதில் கலந்து கொண்டார். ஞாயிறன்று, சாது, திரு டெட்டி, திருமதி ஷெரிதா, மற்றும் திரு சிவா குடும்பத்தினர், போர்ட் ஷெப்ஸ்டோணிற்கு காரில் பயணித்து, அங்கு, இந்திய  பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஏராளமான நூல்கள் மற்றும் கலைப்பொருட்களை சேகரித்து வைத்துள்ள டாக்டர் கென்னத் சி.  புல்ஸ்ட்ரோடு என்பவரை சந்தித்தனர். மாலையில் மீண்டும் சங்க முகாமிற்கு திரும்பிவந்த சாது, சுவாமி விவேகானந்தர் குறித்து பேசியதோடு, அந்த முகாமில் பங்கெடுத்தவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். திங்கள்கிழமை அன்று முகாமில் இறுதி உரையை ஆற்றினார். 

ஷெல்க்ராஸ் சிவா மந்திர் சாதுவின் நிகழ்ச்சியை  செவ்வாய்க்கிழமையன்று ஜூலை – 6 ல் ஏற்பாடு செய்திருந்தது. சத்ய சாய் அமைப்பைச் சேர்ந்த திரு. சுரேஷ் சாதுவை வரவேற்றார். சாது, “ஹிந்துத்துவம் மற்றும் அறிவியல்” குறித்து உரையாற்றினார். சாட்ஸ்வர்த்தின் சர்வதர்ம ஆசிரமத்தில். ஜூலை – 7, புதன் அன்று, சிறப்பான ஒரு வரவேற்பு சாதுவிற்கு அளிக்கப்பட்டது. காலையில் சாது குழந்தைகளுக்கு, நசிகேதன் மற்றும் கௌஸ்துகன் குறித்த கதைகளை கூறினார். மாலையில் அவருக்கு அளிக்கப்பட்ட ஒரு வரவேற்பு சத்சங்கத்தில், சாது, ஹிந்து தர்மம் குறித்து பேசினார். அடுத்தநாள் சாது, மாண்ட்போர்ட் மூத்தகுடிமக்கள் மையத்தில், “வாழ்வின் இலட்சியங்கள்“ குறித்து பேசினார். மாலையில், ஸ்ரீகிருஷ்ணா சங்கத்தில், சாது, பகவத்கீதை புகட்டும் வாழ்க்கைமுறை குறித்துப் பேசினார். ஜூலை – 9 அன்று, சாது, அருட்பா கழகத்தினரிடையே, அருள் ஞானி ராமலிங்க வள்ளலார் குறித்து பேசினார். சௌ. லோகி பண்டாரம் சாதுவை அறிமுகப்படுத்தி பேசினார். சனிக்கிழமையன்று, வேதாந்தா அகாடமியை சேர்ந்த திரு ஜெயராம் அவர்களுடன், ஹிந்து சம்மேளனத்தவர்கள் ஏற்பாடுசெய்திருந்த ஒரு பாத யாத்திரையில் கலந்துகொண்டு டெரென்ஸ் பார்க்கில், “ஹிந்துத்துவத்தின்  மகிமை“ குறித்து உரையாற்றினார். திரு ஹரிதாஸ், திருமதி அலர்மேல் கூப்பர் மற்றும் திரு கமல் மஹராஜ் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். ஜூலை 11 ஞாயிறன்று காலையில், சத்திய சாய் மையத்தில்,  “புத்தாயிரம் ஆண்டில் ஹிந்துத்துவம்” என்ற தலைப்பில் சாது  உரை நிகழ்த்தினார். மாலையில், சர்வ தர்ம ஆசிரமத்தில், ஒரு சிறப்பான ஹோமம் நடத்தி அந்த ஆசிரமத்தை திறந்து வைத்து உரையாற்றினார். சுவாமி வெங்கடேஸ்வரானந்தா அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திங்களன்று, சாது, ஆரியன் பெனெவோலெண்ட் ஹோமில், “சுவாமி தயானந்தரும் ஹிந்து எழுச்சியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாலையில், சின்மயா மிஷனில்,  சுவாமி நிர்மலானந்தர்  சாதுவை வரவேற்றார். அங்கு சாது, “செயல்திறனின் ரகசியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். செவ்வாயன்று, சாது, இசிப்பிங்கோவில், ராமலிங்கா இன்ஸ்டிட்யூட்டில், மூத்த குடிமக்கள் இடையே உரையாற்றி, “வாழ்க்கையின் லட்சியம்” என்பது குறித்து பேசினார்.

சாது, சர்வ தர்ம ஆசிரமத்தில், செவ்வாய், ஜூலை 13 முதல் வெள்ளி, ஜூலை 16, 1999 வரை, “பஜகோவிந்தம்” குறித்து தொடர் உரையை ஆற்றினார். பின்னர் சனிக்கிழமை, ஜூலை 17 அன்று, காலையில், சாது, பிரிட்டிஷ் ஏர்லைன்சின் கோமெயர்  விமானம் மூலம், கேப்டவுன் வந்தார். கேப்டவுன் விமான நிலையத்தில் திரு துளசி வஸ்ஸன் அவரை வரவேற்றார். கேப்டௌனில், கேப் மாநில சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், திருமதி ப்ரமிளா வஸ்ஸனின்  இல்லத்தில், சாது விருந்தினராக தாங்கினார். திருமதி ஐனஸ் லாலர் மற்றும் ஆனந்த குடீரின் மா யோகேஸ்வரி மற்றும் பல பக்தர்கள்  சாதுவை சந்தித்தனர். மாலையில் சாது, ராதாகிருஷ்ணா கோயிலில் ‘பக்தி மற்றும் ஞானம்’ குறித்து பேசினார். ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், விஷ்ணு கோயிலில்  “இளைஞர்கள் குறித்த ஹிந்து இலட்சியங்கள்“ பற்றி பேசினார். மாலையில் கேப்டௌன்  தியோசஃபிகல் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘ஹிந்துத்துவத்தின் உலகளாவிய மற்றும் விஞ்ஞானபூர்வமான அடிப்படை’ என்பது குறித்து உரை நிகழ்த்தினார். ஜூலை 19 முதல் 23 வரை காலை வேளைகளில், திருமதி ப்ரமிளா அவர்களின் இல்லத்தில், “பஜகோவிந்தம்” குறித்து தொடர் உரையாற்றினார். 19 ஆம் தேதி மாலையில் சிவன் கோயிலில்,  “கடவுளும், வழிபாடும்“ என்ற தலைப்பில் பேசினார். விஷ்ணு கோவிலில் மற்றொரு கூட்டத்தில், ‘ஹிந்து புத்தெழுச்சி’  குறித்து பேசினார். ஜூலை 20 தேதியன்று, சாது, திருமதி ப்ரமிளா அவர்களின் SABC நிகழ்ச்சிக்காக ஒரு ஹோமத்தை நடத்தினார். அந்த TV குழுவினருடன் சாது, டேபிள் மவுண்டன் சென்று கயாமத் மலாய் முஸ்லிம் மியூசியம் ஆகியவற்றை பார்வையிட்டார். மாலையில் அவர் பகவத்கீதை குறித்து உரையாற்றினார். 

ஆப்பிரிக்கா கண்டத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தின் முன்னோடியாக திகழ்ந்த சுவாமி நிச்ரேயசானந்தா அவர்களின், அர்ப்பணிப்பு மிகுந்த பக்தரான, திரு. சுபாஷ் ராணா, நீண்டகாலமாக அவர் பாதுகாத்து வந்த சுவாமிஜியின் ஜெர்சியை  ஜூலை – 21 அன்று, சாதுவிற்கு அளித்தார். சாது, ராதாகிருஷ்ணா கோயிலில் நடந்த சத்சங்கத்தில், மானிட மூலியங்களின் அடிப்படையான ராமாயணம் குறித்து பேசினார். வியாழக்கிழமை அன்று சாது ஆனந்த குடீரில், “21-ஆம் நூற்றாண்டில் மதம்” குறித்து பேசினார். மா யோகேஸ்வரி சாதுவை அறிமுகப்படுத்தினார். அவர் சாதுவிற்கு சுவாமி வெங்கடேஸ்வரானந்தரின் நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். கேப்டௌனில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் சர்வ சமய பாராளுமன்றத்தின் அலுவலகத்திற்கு, சாது, ஜூலை 23, வெள்ளிக்கிழமை அன்று, சென்றார். பின்னர் அவர், டர்பனுக்கு காம்ஏர் விமானத்தை பிடித்தார். டர்பன் விமான நிலையத்தில், சாதுவை, இஸிப்பிங்கோவை சார்ந்த திரு பாலகிருஷ்ணா வரவேற்றார். அவரது இல்லத்தில் அவர் மனைவி, சரஸ், மற்றும் அவரது மக்கள், சோமா, தினா, மற்றும் பத்மா, சாதுவை வரவேற்று அவர்கள் விருந்தினராக தங்கவைத்தனர். ஜூலை – 24 சனிக்கிழமையன்று, சாது, ஹிந்து ஸ்வயம் சேவக சங்கத்தின், சேவகர்களின் சுற்றுலா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, டோங்காட் கோகலே ஹாலில், ‘ஒழுக்கம் மற்றும் தன்மை’ என்பது குறித்து,  சுயம்சேவகர்களிடையே உரையாற்றினார். அடுத்த நாள், திரு தனபால் நாயுடு அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சத்சங்கத்தில், சாது, ‘சமயம் மற்றும் பகுத்தறிவு’ என்பது பற்றி உரையாற்றினார். செவ்வாய்க்கிழமையன்று நியூ லாண்ட்ஸ் சிவன் கோவிலில் “செயல்முறைக்கு ஏற்ற ஹிந்து தர்மம்” என்ற தலைப்பில் சாது உரையாற்றினார். ஜூலை 28 அன்று சாது பீட்டர்மாரிட்ஸ்பெர்க் சென்று, தென்னாபிரிக்க போலீஸ் ஹிந்து சங்கத்தில் ‘ஹிந்து ஒற்றுமை மற்றும் மானிட சகோதரத்துவம்’ என்பது பற்றி சொற்பொழிவாற்றினார். மாலையில் திரு நரேன் ரகுநன்னன் இல்லத்தில் ஒரு சத்சங்கத்தில் கலந்துகொண்டார். ஜூலை -29, வியாழனன்று.  சாது ரிட்ஜ்வ்யூ ஆரம்பபள்ளியில், இன்டெக்ரல் யோகா சென்டரின் கூட்டத்தில், குருபூர்ணிமா விழாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வெள்ளியன்று வேத தரும சபாவில் வேத தர்மம் என்பது பற்றி உரையாற்றினார். சனிக்கிழமை அன்று, ஆரிய சமாஜத்தில் “புத்தாயிரம் ஆண்டில் ஹிந்து தர்மம்” என்பது பற்றி உரை நிகழ்த்தினார். ஆகஸ்ட் – 1 அன்று ஞாயிற்றுக்கிழமை, சாது, சத்யசாய் அமைப்பில், ஆந்திர சபாவில் உரை நிகழ்த்திய பிறகு ஹோவிக் சென்று, வேத தர்ம சபையில் பேசினார். மாலையில் ரிட்ஜ்வ்யூ ஆரம்பபள்ளியில், இன்டெக்ரல் யோகா சென்டரின் கூட்டத்தில் “பரமகுரு” என்ற தலைப்பில் பேசினார். திங்கள்கிழமை சாது, டர்பனில் இருந்து விமானம் மூலம், போர்ட் எலிசபெத் வந்தார். அவரை திரு. ராமு விமானநிலையத்தில் வரவேற்றார். 

சாது சுப்ரமண்ய ஆலயத்திற்கு காரில் சென்று அங்கே “அறிவியல் மற்றும் ஹிந்து மத பாரம்பரியம்“ குறித்து பேசினார். போர்ட் எலிசபெத்தில் சாது சௌ. தினா அவர்களின் விருந்தினராக தங்கினார். செவ்வாய்க்கிழமை சாது, தனது நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து, பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதி ஃபேக்ஸ் அனுப்பினார். மாலையில் ஹிந்து சேவா சமாஜம் கூட்டத்தில், “சமயம் மற்றும் பகுத்தறிவு” என்பது பற்றி உரையாற்றினார். திருமதி. ஹேம்கலா தயா என்பவர் என்பவர் போர்ட் எலிசபெத்தின் சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். அவருடன் சாது ஊடன்ஹேஜ் சென்று அங்குள்ள ஹிந்து சமாஜ் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். ஆகஸ்ட் – 5 அன்று சாது டர்பனுக்கு விமானம் மூலம் திரும்பினார். சௌ.  பத்மா, விமான நிலையத்தில் சாதுவை வரவேற்று,  இஸிபிங்கோவிலுள்ள தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். வெள்ளிக்கிழமையன்று சாது இஸிபிங்கோ ஆலயத்தில் ‘சமயம் மற்றும் பகுத்தறிவு’ பற்றி பேசினார். ஆகஸ்ட் – 8 ஞாயிறு அன்று, சாது ஸ்பிரிங்ஃபீல்டில் பஞ்ச பூஜா விழாவில் கலந்துகொண்டு இந்து சடங்குகள் குறித்து பேசினார். பின்னர் அவர், கார் மூலமாக பயணித்து, எஸ்ட்கார்ட்  சென்றார்.  அங்கு சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளர், திரு சிந்தால் ராமையா, சாதுவை வரவேற்றார். எஸ்ட்கார்ட் கோயிலில் பக்தர்களிடையே உரையாற்றினார். ஆகஸ்ட் – 9 அன்று குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பிறகு சைவசித்தாந்த கழகத்தில் உரையாற்றினார். பின்னர் மகா காயத்ரி மந்திரில் “புத்தாயிராமாண்டில் ஹிந்துத்வம்” என்பதுகுறித்து பேசினார். செவ்வாயன்று, சாது, டிவைன் லைஃப் சொசைட்டி, சத்யசாயி இயக்கம் மற்றும் ராமகிருஷ்ணா மையத்தின்  பக்தர்கள் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், காயத்ரி மந்திரில்,  பகவத் கீதை பற்றி உரை நிகழ்த்தினார். பின்னர் சாது பீட்டர்மார்டிஸ்பர்க் சென்றார். புதன்கிழமை அன்று சாது மதுபாதுபா சென்று, அங்கே கம்யூனிட்டி ஹாலில், “ஹிந்துத்துவத்தின் பகுத்தறிவு“ குறித்து பேசினார். அடுத்த நாள் மதுபாதுபா  சத்திய சாயி மையத்தில், ‘சமயம் மற்றும் பகுத்தறிவு’ என்பது பற்றி பேசினார். திருமதி ப்ரசில்லா, மதுபாதுபாவில் சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு ஏற்றார். சாது கார்மூலம் பயணித்து சாட்ஸ்வர்த் வந்து, திருமதி அம்பி இந்திரன் இல்லத்தை அடைந்தார். ஆகஸ்ட் 14, சனிக்கிழமையன்று அங்கு நடைபெற்ற சத்சங்கத்தில் பல பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆகஸ்ட் – 15 , 1999 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், சாட்ஸ்வர்த்தில், சாது, சத்யசாய் குழுவினரின் சத்சங்கத்தில், “உலகளாவிய மதமும் சேவையும்”  என்ற தலைப்பில் பேசினார். சர்வ தர்ம  ஆசிரமம் நடத்திய ஒரு முகாமில் பங்கு கொண்டு பக்தர்களுக்கு தியானம் செய்யும் முறை பற்றி பயிற்சி அளித்தார். அதன்பின் ஃபினிக்ஸ் சைவ சித்தாந்த சங்கத்தின் துர்கா பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் சர்வ தர்ம ஆசிரமம் வந்து பக்தர்களுடன் இந்திய சுதந்திர தின விழாவில் பங்கு கொண்டார். அங்கு, பாரதத்தின் மெய்ஞானிகள் பற்றி உரை நிகழ்த்தியதுடன், குழந்தைகளுக்கு தேசபக்தி பாடல்களையும், பாரம்பரிய விளையாட்டுகளையும் கற்றுத்தந்தார்.

ஆகஸ்ட் – 18 புதன் அன்று, சாது, டோங்காட் கோகுல் ஹாலில், ‘படைப்பு குறித்த ஹிந்துக்களின்  கருத்து’ என்பது பற்றி பேசினார். வியாழக்கிழமை, ரேடியோ ஃபினிக்ஸின், திரு ஸ்டீவன், சாதுவை நேர்காணல் செய்தார். “இந்துத்துவமும் விஞ்ஞானமும்”, “சமயமும் பகுத்தறிவும்”, மற்றும் “பாரதத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு” ஆகிய தலைப்புகளில் பேசிய சாது, நேயர்களின் தொலைபேசி மூலமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆகஸ்ட் – 21 அன்று சாது, மியர்பாங்கில் உள்ள பராசக்தி கோயிலில் ஹிந்து தர்மம் குறித்து உரை நிகழ்த்தினார். ஆகஸ்ட் – 23 அன்று சாது “ஆன்மீகமும், மதமும்” என்ற தலைப்பில் டோங்காட் காவல் நிலையத்தில், காவலர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில், உரையாற்றினார். 

ஆகஸ்ட் – 24 அன்று, சாதுவை வழியனுப்பும் மனம் நெகிழும் நிகழ்ச்சியை, டர்பன் ஏர்போர்ட்டில், பக்தர்கள் நிகழ்த்தினார்கள். சாது,  ஏர் மொரிஷியஸின் விமான எண் MK 848 ஐ மதியம் 1.40 மணிக்கு பிடித்து, மொரிஷியஸை இரவு 7.30 மணிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து சாது மும்பைக்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட்டார். திரு. ஓரி, மற்றும் திரு. நாயக்கர், தென் ஆப்பிரிக்காவில் இருந்து சாதுவுடன் பயணித்தனர். சாது, அடுத்தநாள் காலை மும்பையை அடைந்தபோது அவரை, சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர், திரு. A.R. ராவ் வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பக்தர்கள் சாதுவை திரு ராவ் அவர்களின் இல்லத்தில் சந்தித்தனர். திரு. ஓரி மற்றும் திரு. நாயக்கர் பெங்களூருக்கு பறந்து சென்றனர். சாது ஜெட் விமானம் W 461 ஐ பிடித்து, சென்னைக்கு. மாலையில் பயணித்தார். திருமதி. பாரதி, விவேக் மற்றும் வெங்கடேஷ் சாதுவை வரவேற்றனர். சாது வீட்டை அடைந்தப்பின் நிவேதிதா மற்றும் ஹரிப்ரியா, சாதுவை பெங்களூரில் இருந்து, தொலைபேசியில்  தொடர்பு கொண்டனர்.