Yōgi Rāmsuratkumār eṉṉai vandu āḷuvāi

யோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்
எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
உடன் பாடியவர், அவரது மகள், செல்வி ஸ்ரீகௌரி
யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்திற்கு வந்த போது பதிவு செய்யப்பட்டது

Composed by Tamil Writer, Sri. Balakumaran
Sung by him accompanied by his daughter, Selvi. Srigowri
during a visit to Yogi Ramsuratkumar Ashram to have the darshan of Bhagavan Yogi Ramsuratkumar, Godchild, Tiruvannamalai
http://www.writerbalakumaran.com/wp-content/uploads/2017/11/yogithunai.pdf

எங்கு நானிருப்பினும்

செய்வதேது ஆயினும்

ஏகனாயிருப்பினும்

கூட்டமோடு ஆடினும்

பொங்கு கோபமாயினும்

பூஞ்சிரிப்பு ஆயினும்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

நல்லனாய் இருப்பினும்

அல்லவேறு ஆயினும்

கள்ள ஞானப் பொய்மையோடு

காதல் பேச்சு பேசினும்

பள்ளம் பாயும் நீரைபோல

காமவேகம் ஆயினும்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

கடந்து போன பாதையில்

நடந்து போன வேதனை

கிடங்கு போல பூட்டியே

அடங்கி வாதை செய்யுமே

தடங்கள் யாவும் மாற்றி வைத்து

தம்மை மேலும் ஏற்றியே

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

வாடி நின்ற பூமிபோல்

வானம் பார்த்த ஏரிபோல்

பாடிப்பாடித் தன் இணை

தேடுகின்ற பேடைபோல்

தேடித்தேடி என்னுள்ளே

உந்தன் நாமம் சொல்கிறேன்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

வாழ்க்கை இங்கு வேதனை

வாய்மையாவும் சோதனை

தாழ்வுறாத வண்ணம் வந்து

எந்தன் நெஞ்சில் தங்குவாய்

சூழ்ந்து வந்த ஊழ்வினை

சுற்றி நின்று தாக்கையில்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

என்னுள் வந்து தங்கி நீ

இரும்பில் செய்த வாளதாய்

வெண்ணெய் பூசித் தோகையோடு

வீசுகின்ற கருவியாய்

நாணுகின்ற செயல்கள்யாவும்

நான் துணிந்து நிற்கவே

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

சுற்றி நின்ற உறவுகள்

சோம்பலின்றி வாழவும்

பற்றி நின்ற நட்புகள்

பண்பு கூட்டி பேசவும்

கற்றறிந்த சபையிலே

எந்தன் வாக்கு வெல்லவும்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

பச்சை நெல்லு வயலிலே

வெள்ளை கொக்கு காட்சியாய்

இச்சை கொண்ட என்னுள்ளே

உந்தன் ரூபம் ஜோதியாய்

அச்சு வெல்லக்கட்டியாக

ஆனையாக தோன்றுவாய்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

செம்மையாய் சிறப்பினோடு

சேர்ந்து வந்த செல்வமாய்

தன்மையாய் தடங்கலின்றி

தாழ்ந்து வந்த மேகமாய்

உண்மையாய் உணர்ச்சியாய்

உயர்வடைந்த காதலாய்

யோகி ராம்சுரத்குமார்

என்னை வந்து ஆளுவாய்

 

ஆண்டகை அணைத்த கை

அன்பு அன்பு செய்ததை

தூண்டலைத் துளைத்தலைத்

தோன்றி நின்ற ஜோதியை

விண்ட பாலகுமரனிங்கு

எழுதி வந்த பாட்டிலே

யோகி ராம்சுரத்குமார்

நின்று என்றும் ஆளுவாய்

 

யோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்

எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

உடன் பாடியவர், அவரது மகள், செல்வி ஸ்ரீகௌரி

யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்திற்கு வந்த போது பதிவு செய்யப்பட்ட

இந்த காணொளியை வழங்கிய திரு. N.S. மணி அவர்களுக்கு நன்றி !

Composed by Popular Tamil Writer, Sri. Balakumaran
Sung by him accompanied by his daughter, Selvi. Srigowri
Thanks to Sri. N.S. Mani for sharing this video that was recorded when they had come for the darshan of Bhagavan Yogi Ramsuratkumar

 

 

 

 

 

 

 

Maitreem Bhajata – Tamil version

அனைத்துள்ளம் வெல்லும் அன்பு பயில்க
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க
போரினை விடுக போட்டியை விடுக
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க
அருள்வாள் புவித்தாய் காமதேனுவாய்
அப்பன் ஈசனோ அகில தயாபரன்
அடக்கம் கொடை அருள் பயிலுக மக்காள்
உலகினரெல்லாம் உயர் நலம் உறுக!
– திரு. இரா. கணபதி

Aṉaittuḷḷam vellum aṉpu payilka
aṉṉiyar tamaiyum taṉṉikar kāṇka
pōriṉai viṭuka pōṭṭiyai viṭuka
piṟaṉataip paṟikkum piḻai purintaṟka
aruḷvāḷ puvittāy kāmatēṉuvāy
appaṉ īcaṉō akila tayāparaṉ
aṭakkam koṭai aruḷ payiluka makkāḷ
ulakiṉarellām uyar nalam uṟuka!

-Ra. Ganapathy

Regarding the Tamil song: Sri Ra. Ganapathy, an ardent devotee of Paramaacharya and the author of “Deivathin Kural – தெய்வத்தின் குரல்”, composed this wonderful Tamil translation that beautifully conveys the original meaning. This appeared in his book “Maitreem Bhajata”. When Bhagavan Yogi Ramsuratkumar saw this Tamil version, He was so excited. And when the Sudhama sisters told Him that this can be sung in the same tune, Bhagavan’s excitement knew no bounds. The Sudhama sisters (Ma Devaki, Ma Vijayalakshmi, Sow. Rajalakshmi and Smt. Vijayakka) immediately sang this at the “Breakfast Hut”. Bhagavan often listened to “maitreem” & this song.

(Audio) Bhajan Songs – Erode R. Satyanarayanan

Bhajan songs and Nama Chanting audio are available in this folder. You can download the files.

Drive Link –>  https://drive.google.com/open?id=1D_pI23kC85pnNHzXHBkb4DTavt1Noq7_

Links to individual files.

https://drive.google.com/open?id=1zqjKYhc5h3QTLcH3b1BeRcF71z0OEjqj

https://drive.google.com/open?id=14DUEfpaBdphO7VZasFtPpGrsUG4E0nPx

https://drive.google.com/open?id=13g3f4VhYvnQJ3chbamhxmMOBzQguJBLg

https://drive.google.com/open?id=1LS4Hcv5Kv6y6ex7wmuEYp7WTncK1QxSr

https://drive.google.com/open?id=1atY4EkubF26Hbuj-niaSrM-wBpRHkP1w

https://drive.google.com/open?id=1gEg1EzIHYBVJJLAgz0dajw0Nkt9nCn4-

Chanting – https://drive.google.com/open?id=1lahwGyMqOt4uRbOXBvVHlE9B_dmUBx8S

https://m.soundcloud.com/erodersathyanarayanan

https://m.soundcloud.com/erodersathyanarayanan/01-bambanaimel-2

https://m.soundcloud.com/erodersathyanarayanan/03-thevathi-2

 

Sri Parthasarathy’s songs – sung by Sri. Rajkumar Bharathi

பார்த்தசாரதி அவர்களின் பாடல்வரிகள் – யோகி ராம்சுரத்குமார் சமர்ப்பணம் –
பாடல் தொகுப்பு

This post has the lyrics in Tamil for the songs in the Audio CD “Samarpanam” produced by Sri Parthasarathy.  The songs were written by Sri Parthasarathy, the author of “Amarakavyam, Biography of Yogi Ramsuratkumar, Godchild, Tiruvannamalai”. The videos included in this post have the songs from this Audio CD. The songs were rendered by Sri. Rajkumar Bharathi & Vijayalakshmi Subrahmaniam

Digital Recording & Mastering: Sangeetha
Engineers: Y. Radhakrishnan & Senthil
Produced by : Parthasarathy, Sivakasi

002 Azhiyum Vazvin

003 Kandu Sollaayo

005 Guru nathan nathan

006 Ninpani

007 Koovi Azhaithal

008 Nin Azhagai Kanda Pinnae

009 Endha Nilai Aayinum

Video Courtesy – https://www.youtube.com/user/yrskcss/search?query=Rajkumar+Bharathi


Lyrics

001 Yogi Ranmsuratkumar Than Yoga

001 Yogi Ranmsuratkumar Than Yoga

002 Azhiyum Vazvin
This post has the lyrics (i.e., transliteration) in English also.
https://yogiramsuratkumarblog.wordpress.com/2017/03/14/azhiyum-vaazhvil-viruppaik-kutti-song/  It also has the link to the video of the live rendition of this song in Yogi Ramsuratkumar’s divine presence.

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா

அழியும் வாழ்வில் விருப்பைக் கூட்டி
விழிகள் இரண்டில் நீரைப் பெருக்கி
தெளிவில்லாத துயரம் காட்டும் நமது உள்ளத்தில்
தெய்வரூபச்சுடரைக் கொண்டு
பழிகள் அகன்று அமைதி கொள்ள
அருவமான நினது நாமம் பாடி ஆடுவோம் (அருவமான)

எனது உனது என்னும் பிரிவில்
நமது உள்ளம் என்றும் விலக்கி
ஒன்று உலகில் யாவும் ஒன்று என்று காணவே
தனது நாமம் தந்த வள்ளல்
புனித பாதம் சரணம் கொண்டு
தரணி வாழ குருவின் நாமம் பாடி ஆடுவூம் (தரணி வாழ)

நாளும் இளைத்து சாவை நோக்கும்
சாரமற்ற உடலின் வாழ்க்கை
நாதன் காட்டும் பாதை சென்றால் சாவை தடுக்கலாம்
நாமம் பாடும் இனிய சுவையில்
நாவும் மனதும் மயங்கி என்றும்
தேஹ பற்று அற்ற அந்த தேவராகலாம் (தேஹ பற்று)

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா

003 Kandu Sollaayo

003 Kandu Sollaayo

004 Aanandha Azhagam

004 Aanandha Azhagam.JPG

005 Guru nathan nathan

005 Guru nathan nathan.JPG

006 Ninpani

006 Ninpani.JPG

007 Koovi Azhaithal

007 Koovi Azhaithal

008 Nin Azhagai Kanda Pinnae

008 Nin Azhagai Kanda Pinnae

009 Endha Nilai Aayinum

009 Endha Nilai Aayinum

010 Thuyaramae Thaan Soozhum

010 Thuyaramae Thaan Soozhum

011 Engae Inbum

011 Engae Inbum

Thanks to Sri Parthasarathy for sharing the lyrics.

(Video) Surata Kavacham – Lyrics in Tamil

The lyrics in Tamil for “Surata Kavacham” on Yogi Ramsuratkumar, written by Sri. Visiri Shankar is given here.

surata-kavacham

Surata Kavacham or Surata Kavasam is a Hymn in Tamil language written in praise of Yogi Ramsuratkumar, Godchild, Tiruvannamalai. It was recited by the author Sri Visiri Shankar in the Divine presence of Yogi Ramsuratkumar on 16th August 1995. The audio of this song was released by Yogi Ramsuratkumar Gurukshetram, Jaihindpuram, Madurai 625 011 in the year 2014. In this audio, the kavasam has been sung by Sow. K. Maathangi for the music composed by Sri. Nanda. Interested people may approach Sri Visiri Shankar / Yogi Ramsuratkumar Gurukshetram (cell: 99527 25753, 76672 12221, 93441 07298) to get the Audio CD.

The tune of this song, is similar to the famous Skanda Shashti Kavacham by Sri Bala Devaraya Swamigal on Lord Muruga. Like the Skanda Shashti Kavacham, this Surata Kavacham is also a mantra to replace the negative energies with positive energies, for succeeding in our worldly and spiritual pursuits.

Suratha Kavasam Audio can be downloaded from : https://onedrive.live.com/redir?resid=174EB7233AF3CE7%21345

சுரத கவசம் – திருவண்ணாமலை தெய்வகுழந்தை யோகி ராமசுரதகுமார் அவர்களை குறித்து திரு விசிறி சங்கர் இயற்றியது.

Audio Courtesy – Yogi Ramsuratkumar Gurukshetram.
Video Courtesy – Sri Visiri Shankar https://www.youtube.com/channel/UC5B2QUng2Q7d_Fn-ubWJ5KA

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா!
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா!

பச்சைப் பாகை தாங்கிய தலையுடன்
பிச்சை வேடம் பூண்ட முனிவன்
இச்சைகொண்ட எம்மை நாடி
கச்சை கட்டி வருகிறான் தேடி!

தேடி வந்திடும் தெய்வ குமாரா
நாடி எம்மை நாளும் வருக!
வருக வருக சுரதகுமாரா!
வருக வருக யோகி ராமா!

ராம நாமம் நெஞ்சினில் ஓங்க
காமக் குரோதம் கலைந்தே போக
கருணை வடிவினில் அருணையில் வந்த
பெருமையின் நாயக வருக! வருக!

இரட்டை விசிறி ஏந்திய கரத்தில்
சிரட்டை கோலுடன் கயிறும் தாங்கி
மறுகரம் தூக்கி மானுடம் காக்கும்
அறுமுகன் வடிவே அழகே வருக!

இன்பம் சூழும் வேளையில் வருக!
துன்பம் வாட்டும் போதிலும் வருக!
சினமது ஏறும் சிந்தையில் வருக!
குணமது ஆற குருவே வருக!

சரணம் பாதம் என்றே பணிந்திடும்
கரணம் ஒடுங்குங்காலையில் வருக!
நானெனும் ஆணவம் ஓங்கிடும் போது
தானது உதிர்ந்திடு மாலையில் வருக!

வெள்ளைத்தாடி காற்றினில் புரள
கொள்ளை அழகுடன் விசிறியைத் தூக்கி
மெல்ல மெல்ல எம்மை வெல்ல
வந்திடும் சுரத குமரனே வருக!

வருக வருக கங்கையின் புதல்வா
வருக வருக அருணையின் நாதா
வருக வருக கருணையின் கடலே
வருக வருக கதிரொளி நிலவே!

சக்கரவிசிறி கரந்தனில் ஏந்தி
சங்கினையொத்த சிரட்டையுந்தாங்கி
மரகதமாலை கயிற்றினை மார்பில்
வரதமும் அணியும் சுரதனே வருக!

வருக வருக வளர்தமிழ் அழகே!
வருக வருக வரந்தரு முகிலே!
வருக வருக பொதிகையின் தேனே!
வருக வருக புலவர்கள் நாவில்!

உச்சியில் பாகை ஒருதனி அழகில்
மெச்சிடும் வகையில் பச்சையில் தோன்றும்
பரந்த நெற்றி படர்ந்திடும் ஜோதி
நிரந்தரம் அழகில் நிலைத்திடும் ஆடி!

புருவம் இரண்டும் விரிந்திடும் சிறகு
நிறமது கறுப்பு வெள்ளையில் தோன்றும்
விழிகளின் அழகை மொழிந்திட வழியிலை
பழியுண்டு வார்த்தையில் பகர்ந்திட முனைந்தால்

கூரிய நாசி கொண்டிடும் வாசி
நேரிய அழகில் நிறமது ஒளிரும்!
கன்னக் கதுப்பை கிள்ளிட கரங்கள்
சொன்ன சேதி சொல்லிட மறந்தேன்!

வெள்ளை அருவி வீழ்வது போல
கொள்ளை அழகில் குளிர்தரு தாடி
சொல்லத் தமிழில் சொல்லுக்குப் பஞ்சம்
சொல்லா விடிலோ சுட்டிடும் நெஞ்சம் !

மணிமுடி கறுப்பாய் மலையெத் தோன்றும்
அணிந்திடும் பாகை கானகம் ஒக்கும்
வட்டச் சொட்டை பின்புற அழகு
விட்டுச்சென்றிட முடியா அழகு!

இதழ்கள் மறைந்து இதமாய் இருக்கும்
இதழ்கள் மலர்ந்தால் இசையாய் இனிக்கும்
முகமது பார்த்தால் முக்தியே கிடைக்கும்
சுகமது சொர்க்கம் அனுபவம் சொல்லும்!

கழுத்தினில் மாலை வரிசைகள் விளங்க
எழுத்தினில் அடங்கா இனிமையில் துலங்க
துளசிப் படிக தூமணி மாலைகள்
துவளும் அழகுடன் தோள்கள் விளங்க

சாத்திய சால்வை சரிந்திடும் அழகை
ஏற்றிப் பிடிக்கும் இருகரம் தாங்கி
மாற்றிச் சுற்றி மன்னவன் எழுந்தால்
போற்றிடத் தோன்றும் புனிதனின் மார்பை!

முழுக்கைச் சட்டை மூட்டினை மறைக்கும்
மடக்கிய கைகள் உரத்தினைக் காட்டும்
இடது கரத்தில் எல்லாம் இருக்கும்
விசிறி சிரட்டைத் தொகுதிகள் சிறக்கும்!

வலது கரத்தில் இருவிரல் அசைய
தருவது என்ன முத்திரை தானோ!
அல்லியின் மெல்லிய இதழ்களைப் போல
சொல்லிடும் வகையில் சுடர்மணி விரல்கள்!

இடுப்பினில் வேட்டி இறுகவே கட்டி
தொடுத்து இறங்கும் கால்களைச் சூழ்ந்து
அலை அலையாக துணியது ஆக
கலையாய் விளங்கும் கச்சிதமாக!

பாதங்கள் இரண்டு பங்கயம் திரண்டு
ஓதரும் அழகிய உருதனைக் கொண்டு
ராம சுரத குமரனாய் இன்று
வானகம் வந்தது பூமிக்கு நன்று!

மன்னவன் விசிறி மணி முடி காக்க
என்னவன் விசிறி என்றுமே காக்க
நெற்றிப் பரப்பை நேர்பட காக்க
சுற்றியே விசிறி சூழவே காக்க!

நாசியை என்றும் நல்விசிறி காக்க
வீசிடும் விசிறி புருவங்கள் காக்க
பேசிடும் வாயைப் பெருவிசிறி காக்க
பேசா ஞானப் பெருமையில் காக்க!

விழிகள் இரண்டையும் விசிறியே காக்க
விழிகளின் மணிகள் விளங்கவே காக்க
கன்னக் கதுப்பை கைவிசிறி காக்க
மன்னும் விசிறி மலைபோல் காக்க!

இருசெவி இரண்டும் இனிதே காக்க
வருவது விசிறி வரந்தரு விசிறி
ஐந்தனில் நாலை அடக்கிய முகத்தை
பைந்தமிழ் போல பழகியே காக்க!

சங்கு கழுத்தை சடுதியில் காக்க
எங்கும் விசிறி இயைந்தே காக்க
பொங்கும் தோள்களை போற்றியே காக்க
மங்காப் புகழின் விசிறியே காக்க!

திண்ணிய மார்பை திடமுடன் காக்க
திவ்விய விசிறி தினந்தினம் காக்க
அன்னை முலைப்பால் அருந்தவே காக்க
என்னை விசிறி என்றுமே காக்க!

வாழும் வயிற்றை வளமுடன் காக்க
நாளும் துணைவரும் நல்விசிறி காக்க
மழலைகள் பயக்கும் மணிவயிறு காக்க
வளரும் பிறைபோல் வந்தெமை காக்க!

கரங்கள் இரண்டையும் கருணையில் காக்க
வரங்கள் தந்திடும் வல்விசிறி காக்க
பத்து விரல்கள் பங்கய இதழ்கள்
சொத்து எனவே சூழ்ந்தவை காக்க!

ஆணின் பெண்ணின் அடையாளங்கள்
பேணிடும் விசிறி பெரிதே காக்க!
இருதொடை முழங்கால் இறங்கிடும் கணுக்கால்
அருள்தரும் விசிறி அனுதினம் காக்க!

உடலினைத் தாங்கும் ஓரிணை பாதம்
உயர்புகழ் விசிறி உடன்வந்து காக்க!
மாயக் குரங்கெனும் மனமது காக்க
ஓயா விசிறி உணர்ந்தே காக்க!

காலையில் மாலையில் கண்துயில் வேளையில்
வேலையில் ஓய்வினில் விசிறியே காக்க!
காட்டில் மேட்டில் கடும்பகை இருட்டில்
ஏற்றிடும் விசிறி எமையே காக்க!

காக்க காக்க கருணையின் விசிறி
நோக்க நோக்க நோக்கினில் கரைய
தாக்க தாக்க தளைகள் தகர
பார்க்க பார்க்க பரவசமாக!

அழகே! மலரே! அன்பின் கனிவே!
நிலவே குளிரே! நிர்மல ஒளியே!
தேனே! மானே! தெவிட்டா அமுதே!
ஊனே உருக்கும் உள்ளொளி சுடரே!

அகத்தினில் ஆலயம் அழகுற அமைத்து
யுகத்தினில் நீயே கதியெனக் குறித்து
சரணாகதியால் உனையே சேர்ந்து
வரமே கேட்டோம் தருக உவந்து!

திட்டம் போட்டே திருடிடும் கூட்டம்
திடுமென நுழைந்தே தாக்கிடும் கூட்டம்
பட்டப்பகலில் சுட்டுக் கொல்லும்
கெட்ட பயங்கரவாதிகள் ஆட்டம்!

வெறியுடன் திரியும் வீணர்கள் கூட்டம்
குறியென பெண்களை குறித்திடும் நாட்டம்
புலியென நின்றிடும் அடியனைக் கண்டால்
எலியென ஒடுங்கி எடுக்கனும் ஓட்டம்!

ஒருவரை ஒருவர் வெறியுடன் தாக்கும்
கலவர யுத்தக் கொடுமைகள் எல்லாம்
அடியவன் அங்கே எழுந்திடும் வேளையில்
அகன்றிடும் ஆற்றல் அருளிடல் வேண்டும்!

சுட்டிடும் நெருப்பு சூழ்ந்திடும் வெள்ளம்
தந்திடும் விபத்து தவிர்த்திட வேண்டும்!
வாகனம் ஓட்டிடும் வேளையில் நீயென்
சாரதியாய் வந்து காத்திட வேண்டும்!

விஷமுடன் பாம்பு நெருங்கிடும் வேளையில்
விசிறியாய் வந்து காத்திட வேண்டும்!
நீலகண்டன் போல எங்கள்
அமுதம் காத்து அருளிடல் வேண்டும்!

துஷ்ட விலங்குகள் தொலைவினில் நின்றிட
இஷ்டன் நீயெங்கள் அருகினில் வேண்டும்!
கஷ்டம் வந்திடும் வேளையில் கண்ணா
கண்ணீர் துடைக்க வந்திட வேண்டும்!

ஏய்ப்பு இளைப்பு இரத்தக் கொதிப்பு
வலிப்பு சுளிப்பு வாத இழுப்பு
மாரினில் அடைப்பு நாளங்கள் வெடிப்பு
கூறிடில் நோய்கள் கோடியைத் தாண்டும்!

சிகிச்சைகள் பெருக நோய்களும் பெருக
தவிக்கிது உலகம் தருமத்தின் குழப்பம்!
எய்ட்செனும் நோயால் யுகமே நடுங்குது
வைத்தியம் நீதான் வருக! வருக!

நோயும் வரட்டும் நொம்பலம் தரட்டும்
பேயே வரட்டும் பித்தே வரட்டும்
சாவே வரட்டும் சடுதியில் வரட்டும்
நாயேன் சொல்வேன் நாமம் ஒன்றே!

தீதுகள் என்ன தீமொழி என்ன
யாதும் என்னை என்னவே செய்யும்
ஓதும் நாமம் உனதே போதும்
மோதும் அவைகள் பொடிப்பொடியாகும்!

ஒளிதரு சுரனே! உயர்தனி சுரனே!
களிதரு சுரனே! கலி அழி சுரனே!
விண்ணின் சுரனே! விளங்கிடும் சுரனே!
மண்ணைக் காத்திடும் மணியாம் சுரனே!

பிள்ளைகள் நாங்கள் பெரும்பிழை செய்கையில்
கிள்ளை மொழியோய் வந்தெமை காக்க!
அறியா நாங்கள் அறிந்தே இழைக்கும்
குறியா பிழைகள் குறித்தே காக்க!

சுரனே! சுரனே! சுந்தரசுரனே!
சரணே! சரணே! உன்னிரு பதமே!
வரனே! வரனே! வழங்கிடு வரனே!
பரனே! பரனே! பரந்தாமனனே!

பறந்திடும் எனது சிறகுகள் ஒடுக்கி
இருந்திடும் இடத்தில் எனையே இருத்தி
தன்னில் தன்னை தானாய் காணும்
என்னில் என்னாய் இருந்தாய் வாழி!

சுர சுர சுர சுர சுர சுர சுரதா!
வர வர வர வர வர வர வரதா!
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹரனே!
ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெயனே!

கங்கையின் கொடையாய் பிறந்து வந்தாயே!
காசியின் அருளாய் தவழ்ந்து வந்தாயே!
இமயச்சாரலில் நடந்திருந்தாயே!
எமையே ஆளும் சுரத குமாரா!

பாலுக்கு அழுதாய் காஞ்சன் காட்டில்
பாலகன் நீயே சுரத குமாரா!
ராம தாசரின் அரவணைப் பினிலே
ஞானப் பாலினை அருந்தி வந்தாயே!

அண்ணா மலையில் ஆடிடும் குழந்தை
உண்ணும் போதும் உறங்கும் போதும்
தன்னுள் சொல்லிடும் மழலையின் நாதம்
மன்னுயிர் காக்கும் ராம நாமம்!

சுரத குமரனே! சுந்தர ரூபனே!
சுதாமா வதியும் சூட்சும வடிவே!
எங்கள் ராம்ஜி ஆஸ்ரமம் தனிலே
தங்கிடும் யோகி சுரத குமாரா!

கோயில் கொண்ட தெய்வமே எங்கள்
காணி மடத்தின் கருணை நாதா!
தேவகி மாதா விழியென காக்கும்
மூவா முதல்வா சுரத குமாரா!

தேடினேன் தேடினேன் தெய்வத்தை தேடினேன்
நாடினேன் நாடினேன் உன்னையே நாடினேன்
ஆடினேன் ஆடினேன் ஆனந்தத்தில் ஆடினேன்
பாடினேன் பாடினேன் பரவசம் பாடினேன்!

தெய்வக் குழந்தை திருவடி போற்றி!
தேவகி மாதா அருளடி போற்றி!
ராம சுரத குமரா போற்றி!
நாமம் சொல்வோம் உனதே போற்றி!

போற்றி! போற்றி! புனிதா போற்றி!
போற்றி! போற்றி! சுரதா போற்றி!
போற்றி! போற்றி! அருணையே போற்றி!
போற்றி! போற்றி! அருளே போற்றி!

சுரத கவசம் சொல்லிடும் பக்தர்
விரதம் ஒன்றே குருவிடம் பக்தி!
சரணடி சரணடி சரணடி சேர்வோம்!
சரணம்! சரணம்! சுரதா சரணம்!

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா!
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா!

 

Azhiyum vaazhvil viruppaik kutti Song

This song  was often sung in Yogi Ramsuratkumar’s divine presence. This song was written by Sri Parthasarathy, the author of Amarakaavyam, a biography on Yogi Ramsuratkumar. You may watch the song being sung during the Akhanda Ramnam celebrated on 1st Jan 1994 in the divine presence of Yogi Ramsuratkumar starting from the 19th minute in the video.

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா

அழியும் வாழ்வில் விருப்பைக் கூட்டி
விழிகள் இரண்டில் நீரைப் பெருக்கி
தெளிவில்லாத துயரம் காட்டும் நமது உள்ளத்தில்
தெய்வரூபச்சுடரைக் கொண்டு
பழிகள் அகன்று அமைதி கொள்ள
அருவமான நினது நாமம் பாடி ஆடுவோம் (அருவமான)

எனது உனது என்னும் பிரிவில்
நமது உள்ளம் என்றும் விலக்கி
ஒன்று உலகில் யாவும் ஒன்று என்று காணவே
தனது நாமம் தந்த வள்ளல்
புனித பாதம் சரணம் கொண்டு
தரணி வாழ குருவின் நாமம் பாடி ஆடுவூம் (தரணி வாழ)

நாளும் இளைத்து சாவை நோக்கும்
சாரமற்ற உடலின் வாழ்க்கை
நாதன் காட்டும் பாதை சென்றால் சாவை தடுக்கலாம்
நாமம் பாடும் இனிய சுவையில்
நாவும் மனதும் மயங்கி என்றும்
தேஹ பற்று அற்ற அந்த தேவராகலாம் (தேஹ பற்று)

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா

 

Yōgi rāmsuratkumār yōgi rāmsuratkumār
yōgi rāmsuratkumār jeya guru rāyā
yōgi rāmsuratkumār yōgi rāmsuratkumār
yōgi rāmsuratkumār jeya guru rāyā
yōgi rāmsuratkumār jeya guru rāyā

aḻiyum vāḻvil viruppaik kūṭṭi
viḻikaḷ iraṇṭil nīraip perukki
teḷivillāta tuyaram kāṭṭum namatu uḷḷattil
teyvarūpaccudaraik koṇṭu
paḻikaḷ akaṉṟu amaiti koḷḷa
aruvamāṉa niṉatu nāmam pādi āduvōm (aruvamāṉa)

eṉatu uṉatu eṉṉum pirivil
namatu uḷḷam eṉṟum vilakki
oṉṟu ulakil yāvum oṉṟu eṉṟu kāṇavē
taṉatu nāmam tanta vaḷḷal
puṉita pātam caraṇam koṇṭu
taraṇi vāḻa kuruviṉ nāmam pādi āduvūm (taraṇi vāḻa)

nāḷum iḷaittu cāvai nōkkum
sāramaṟṟa udaliṉ vāḻkkai
nātaṉ kāṭṭum pādai ceṉṟāl cāvai tadukkalām
nāmam pāṭum iṉiya suvaiyil
nāvum maṉatum mayaṅki eṉṟum
tēha paṟṟu aṟṟa anta tēvarākalām (tēha paṟṟu)

Yōgi rāmsuratkumār yōgi rāmsuratkumār
yōgi rāmsuratkumār jeya guru rāyā
yōgi rāmsuratkumār yōgi rāmsuratkumār
yōgi rāmsuratkumār jeya guru rāyā
yōgi rāmsuratkumār jeya guru rāyā

Kaasiyin Arugil Thondriyavar Song

This song was often sung in Yogi Ramsuratkumar’s divine presence. This is sung in the tune of the famous movie song “brindaavanamum nandakumaaranum”. You may watch it being sung during the Akhanda Ramnam celebrated on 1st Jan 1994 in the divine presence of Yogi Ramsuratkumar starting from the 13th minute in the video.

யோகி ராமசுரதகுமாரா ஜெய குரு  ஜெய குரு ஜெய குருராயா
யோகி ராமசுரதகுமாரா ஜெய குரு  ஜெய குரு ஜெய குருராயா

காசியின் அருகில் தோன்றியவர் – துயர்
துடைத்து மக்களைக் காத்திடுவார்
ஆண்டிவேடம் எடுத்துவந்து – இந்த
உலகத்தின் பாவத்தைப் போக்கிடுவார்

ராமதாசர் தீக்ஷயினாலும்
ரமணரிஷியின் பார்வையாலும்
அரவிந்தரின் ஆசியினாலும்
அன்பு ஆட்சிப் புரிகின்றார்

உலகத் தந்தையும் தாயும் குருவும்
அவர் தான் என்றே போற்றிடுவோம்
உள்ளத்தில் ராம நாமத்தைப் பாடி
வாழ்வில் உயர்வு அடைந்திடுவோம்

அண்ணாமலையில் இருக்கின்றார் – அவர்
அருள்தனைப் பெற்றிட வந்தோமே
யோகி ராம்சுரத்குமாரேன்றே – தினம்
கூவித் தொழுதின்பம் பெறுவோமே

யோகி ராமசுரதகுமாரா ஜெய குரு  ஜெய குரு ஜெய குருராயா
யோகி ராமசுரதகுமாரா ஜெய குரு  ஜெய குரு ஜெய குருராயா

Yōgi rāmasuratakumārā jeya guru jeya guru jeya gururāyā
yōgi rāmasuratakumārā jeya guru jeya guru jeya gururāyā

kāsiyiṉ arukil tōṉṟiyavar – tuyar
tudaittu makkaḷaik kāttiduvār
āṇdivēṭam eduttuvantu – inta
ulakattiṉ pāvattaip pōkkiduvār

rāmadāsar dīkṣayiṉālum
ramaṇariṣiyiṉ pārvaiyālum
aravindariṉ āsiyiṉālum
aṉbu āṭcip purikiṉṟār

ulagat tantaiyum tāyum guruvum
avar tāṉ eṉṟē pōṟṟiduvōm
uḷḷattil rāma nāmattaip pādi
vāḻvil uyarvu adaintiduvōm

aṇṇāmalaiyil irukkiṉṟār – avar
aruḷtaṉaip peṟṟiṭa vantōmē
yōdi rāmsuratkumārēṉṟē – tiṉam
kūvit toḻutiṉpam peṟuvōmē

Yōgi rāmasuratakumārā jeya guru jeya guru jeya gururāyā
yōgi rāmasuratakumārā jeya guru jeya guru jeya gururāyā

Jo Jo Aadhiseshane umakku – Lullaby song

Yogi Ramsuratkumar’s Jo Jo Lullaby song is usually played in Yogi Ramsuratkumar Ashram at 8 PM before Bhagawan is put to sleep. Here are the lyrics and the audio of the song sung by Smt. Saradha Srikaran. Thanks to Yogi Ramsuratkumar Online Radio   yrskradio.in for the audio and the lyrics.

deep-meditation-copy
ஜோ ஜோ (2)

ஆதிசேஷனே உமக்கு தொட்டிலாய் இருக்க
மென்மலர் மேனி ஓய்வெடுக்க
கண்ணுறங்கு நீ ஏன் செல்வமே
யோகி ராம்சுரத்குமாரா ஜோ ஜோ
1. நாம ரசித்தை மகிழ்ந்து பருகி (2)
ஆனந்த மேனி ஒய்வெடுக்க (கண்ணுறங்கு)
2. சந்திரவதனத்தை முனிவரும் தேவரும் தரிசிக்க
சலங்கைபதங்களை அசைத்து மகிழ்விக்க (கண்ணுறங்கு)
3. மதுரமான கானாம்ருதம் (2)
மென்மையாய் இசைக்க
புன்சிரிப்புடன் ஆமோதித்து லயித்து (கண்ணுறங்கு)
4. அனுமனே உமக்கு விசிறி வீச
தென்றல் காற்றின் இன்பத்தில் (கண்ணுறங்கு)
யோகி ராம்சுரத்குமாரா ஜோ ஜோ

Transliteration

Jō jō (2)
āticēṣaṉē umakku toṭṭilāy irukka
meṉmalar mēṉi ōyveṭukka
kaṇṇuṟaṅku nī ēṉ celvamē
yōki rāmcuratkumārā jō jō
1. Nāma racittai makiḻntu paruki (2)
āṉanta mēṉi oyveṭukka (kaṇṇuṟaṅku)
2. Cantiravataṉattai muṉivarum tēvarum taricikka
calaṅkaipataṅkaḷai acaittu makiḻvikka (kaṇṇuṟaṅku)
3. Maturamāṉa kāṉāmrutam (2)
meṉmaiyāy icaikka
puṉcirippuṭaṉ āmōtittu layittu (kaṇṇuṟaṅku)
4. Aṉumaṉē umakku viciṟi vīca
teṉṟal kāṟṟiṉ iṉpattil (kaṇṇuṟaṅku)

8 PM – http://tunein.com/radio/Jo-Jo-p606302/

Bhagawan’s Lullaby (Jo Jo) Lyrics (English)

Jo Jo (*2)
Aadhi Seshane Umakku Thottilai Irukka
Menmalar Meni Oyivvedukka …
Kannurangu Nee En Selvame
Yogi Ramsuratkumara Jo Jo

Nama Rasathai Magizhndhu Parugi… (*2)
Anandha Meni Oyivvedukka
Kannurangu Nee En Selvame
Yogi Ramsuratkumara Jo Jo

Chandra Vadanathai Munivarum Devarum Darisikka,
Salangai Pathangalai Asaithu Magizhvikka,
Kannurangu Nee En Selvame
Yogi Ramsuratkumara Jo Jo

Madhuramaana Gaanaamrutham (*2)
Menmayaai Isaikka
Punsirippudan Aamothiththu Layiththu
Kannurangu Nee En Selvame
Yogi Ramsuratkumara Jo Jo

Hanumane Umakku Visiri Veesa
Thendral Kaatrin Inbathil
Kannurangu Nee En Selvame
Yogi Ramsuratkumara Jo Jo
Yogi Ramsuratkumara Jo Jo
Yogi Ramsuratkumara Jo Jo
Jo Jo

 

Vaageesha Kalaanidhi Ki.Va.Ja’s songs – sung by Sri. T.M.Krishna

This post has the lyrics in Tamil for all the songs included in the Audio CD along with a short introduction. The videos included in this post have the songs from this Audio CD.

kivaja-coverkivaja-cover1

 

“Vaakeesha Kalaanidhi” Kee. Vaa. Jagannathan, a student of Tamil Taattaa (Grandfather of Tamil Language) U.Ve.Saaminaata Iyer, was himself a very famous Tamil Poet. Ki.Va.Ja had the Darshan of Yogi Ramsuratkumar for the first time when he went to Tiruvannamalai to participate in the Kumbhabhishekam of the Arunachaleshwarar Temple in 1976. He was very much attracted by Yogi Ramsuratkumar and he started visiting Yogi Ramsuratkumar often. During such visits, the emotion of devotion reached its peak and transformed itself into extempore poems, which would simply burst out. He started composing many poems in this way in the Divine presence of Yogi Ramsuratkumar. The people around him were struggling to capture those continuous flow of poems which were forceful and uncontrollable, like the water gushing out of a dam. As they were too precious to be lost, audio recorders were arranged to capture these extempore poems. There were numerous such songs (1024 to be precise) that were composed by Ki.Va.Ja on Yogi Ramsuratkumar. They were all set to music and were repeatedly sung in the presence of Yogi Ramsuratkumar. Yogi Ramsuratkumar enjoyed and encouraged the singing of Ki.Va.Ja’s songs. In these songs, Ki.Va.Ja has expressed his mystical experiences on seeing Yogi Ramsuratkumar and has described both the physical form of Yogi Ramsuratkumar and the indescribable Spiritual Power that Yogi Ramsuratkumar represents.

Some of the songs were published in the Souvenir released on the occasion of  Yogi Ramsuratkumar’s Jayanthi Celebrations held on 1-Dec-1978. Yogi Ramsuratkumar Trust has brought out an Audio CD based on a collection of songs from that book. These songs have been rendered by the famous Carnatic Musician Sri. T.M. Krishna. He is accompanied by Sri. S. Varadarajan on the Violin, Sri K. Arun Prakash on the Mrudangam and Sri P.S. Purushottam on the Kanjira. Copies of this CD can be obtained from Yogi Ramsuratkumar Ashram,  Agrahara kollai, 1833/1, Chengam Road, Thiruvannamalai – 606603, Phone: 04175-237567, Mobile: +91 94433 83557, E-mail: yrskttvm@gmail.com. http://www.yogiramsuratkumarashram.org/

திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஜெயந்தி பாடல்கள் – இயற்றியவர் வாகீச கலாநிதி கீ. வா. ஜகந்நாதன் அவர்கள் ; பாடியவர் திரு. T. M. கிருஷ்ணா ; வெளியீடு – யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம்

Track 1

kivaja1-1

kivaja1-2

kivaja1-3

kivaja1-4

Track 2

kivaja2-1-1kivaja2-1-2

kivaja2-2

kivaja2-3

kivaja2-4
Track 3
kivaja3-1

kivaja3-2

kivaja3-3

kivaja3-4-1kivaja3-4-2

kivaja3-5

kivaja3-6-1kivaja3-6-2

kivaja3-7

kivaja3-8-1kivaja3-8-2

kivaja3-9

kivaja3-10-1kivaja3-10-2
Track 4
kivaja4-1

kivaja4-2-1kivaja4-2-2

kivaja4-3

kivaja4-4
Track 5
kivaja5-1

kivaja5-2

kivaja5-3
Track 6
kivaja6-1

kivaja6-2-1
kivaja6-2-2

kivaja6-3-1
kivaja6-3-2

kivaja6-4

Video Courtesy – https://www.youtube.com/playlist?list=PLm4yKuDMx2mTxs6KqlmDJ-U66EVGzvOz_