உலகம் உன்னை வணங்கும்
பல்லவி
இறவாத நிலை வேண்டும்
இறந்தாலும் ஒளி வேண்டும்
மறவாத நிலை வேண்டும்
மறந்தாலும் இடம் வேண்டும் (உலகம்)
திறவாது பொருள் வேண்டும்
திறந்தாலும் அருள் வேண்டும்
கறவாது பால் வேண்டும்
கறந்தால் உன்பால் வேண்டும் (உலகம்)
சிறப்பான நிலை வேண்டும்
சிற்றின்பம் கடந்துலவும்
சிறப்பான நற் பிறப்பே
செஞ்சுடரின் நற்பிரியோய் (உலகம்)
உலகம் உனை வணங்கி
உன் உருவை வழிபட்டுத்
திலகம் போல் நீ திகழத்
திருவண்ணாமலை அருளும் (உலகம்)
அடியார்கள் உனைத் தேடி
ஆயிரம் ஆயிரம் வருவர்
அடியார்கள் உனை வாழ்த்தி
முத்தம் பல பொழிவார் (உலகம்)
சடையனின் வாக்கு இது
கடையனின் கருத்து இது
இடையனை நம்பும் உனக்கு
எப்போதும் புகழ் ஓங்கும் (உலகம்)
————
(பல்லவி)
சுவாமி மயானந்தன்
உனக்கு நான் கரிவரதனே.
ஓம் ! ஸ்ரீ ராம்! ஹரி ஓம்! ராம்!
சோதிப்ப தென்வேலை
வாதிப்ப துன்வேலை
நாதி யனாதி யான
நடராஜன் லீலை யிது (சுவாமி)
ஆதி அனாதி யிடம்
அண்ணாமலை யினிடம்.
பூஜித்த புண்ணியனே!
புண்ணியமே உனை யணையும். (சுவாமி)
Source: http://www.yogiramsuratkumarbiography.com/img/Amarakavyam_English_2017.pdf