ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 1

ஒரு மகா யோகியின் தரிசனங்கள்

Glimpses of A Great Yogi in Tamil – Part 1
Currently being shared for proof reading!
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். வே. ரங்கராஜன்

தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

மொழி பெயர்ப்பாளரின் முன்னுரை

யோகி ராம்சுரத்குமார்

துவங்கிய அன்று….

அய்யன் பாலகுமாரனின் எழுத்துக்களை படித்து அவரால் ஒரு உன்னத குருவான யோகி ராம்சுரத்குமார் அவர்களை வாழும் காலத்தில் மூன்று முறை தரிசித்தது அவரின் கருணையால் நடந்த ஒன்று. அந்த கருணையின் வெளிப்பாடாக எனது வாழ்நாளில் கிடைத்த முக்கியமான வாய்ப்புக்கள் மூன்று. 

1. அய்யன் பாலகுமாரன் அவர்களை சந்தித்து அவரது யோகியுடனான அனுபவங்கள் குறித்த மிக நீண்ட நேர்க்காணல் நூலான, ‘விஷாதயோகம்’. 

2. அய்யா திரு. பார்த்தசாரதி அண்ணாச்சி அவர்களின் ஆங்கில நூலான ‘அமரகாவியம்’ என்ற நூலை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்ய கிடைத்த வாய்ப்பு. 

3. இதோ இன்று சாது பேராசிரியர் வே. ரங்கராஜன் எழுதிய ஆங்கில நூலை அவரின் அனுமதியோடு தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு. 

முதலிரண்டு வாய்ப்புக்களை ஆசிர்வதித்து முடித்து தந்த யோகி ராம்சுரத்குமார் இந்த மூன்றாவது வாய்ப்பையும் செவ்வனே செய்து முடிக்கவும் என்னோடு உடனிருந்து வழி நடத்துவார். 

எது காணாமல் போனாலும், யோகி ராம்சுரத்குமார் குறித்த காவியங்கள் காலம் கடந்து நிற்கும், ஏனெனில் அவைகள் சத்தியத்தின் சாயல்கள். 

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெய குரு ராயா.

எனச் சொல்லி ஆதியும், அந்தமுமான குருவை நினைத்து இன்று துவங்கிவிட்டேன். இனி இந்தக்கருவிக்கு எந்த கர்வமும் வராமல் இச்செயலை முடித்து தருவது குரு யோகி ராம்சுரத்குமாரின் விருப்பம். 

என்றென்றும் அன்புடன்,

சரஸ்வதி சுவாமிநாதன்

11/07/2020
———

ஒரு மகா யோகியின் தரிசனங்கள்

பகுதி – I

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் காவியம்

அத்தியாயம் 1.1

காலை நட்சத்திரம்

ஓம் பூர் புவ: ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி 

தியோ யோந: ப்ரசோதயாத். 

“எங்களின் புத்தியை மூன்று உணர்வு நிலைகளிலும் பிரகாசிக்க வைக்கின்ற, சூரியனிடமிருந்து வெளிப்படுகின்ற, அந்த பேரொளியை நாங்கள் தியானிக்கிறோம்.”

இந்த பிரபஞ்சத்தை வெதுவெதுப்பான சூழலில் வைத்திருக்கும் சூரியனை, கங்கையின் கரைகளில் நின்று சூரிய உதயத்தின் போது கிழக்கு நோக்கி நின்று பக்தியுள்ள இந்துக்கள் இவ்விதமாகவே தியானிப்பார்கள். இந்த மந்திர ஒலி கங்கையில் பட்டு எதிரொலித்து பல்லாண்டு காலமாகவே ஹிந்துக்களின் ஆன்மீக மலர்ச்சிக்கு ஊட்டத்தை தந்திருக்கிறது. 

புனிதமான கங்கையின் ஓட்டத்தை பார்க்கும் எவரும் அதன் ஆடம்பரமான அழகோடு இந்த நாட்டின் மகிமையையும் உணர்வர். 

கங்கே சே யமுனே சைவ 

கோதாவரி சரஸ்வதி

நர்மதே சிந்து காவேரி

ஜலேஸ்மின் சந்நிதிம் குரு. 

“ஓ! கங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து மற்றும் காவேரி நீங்கள் அனைவரும் இந்த நீரில் வருவீர்களாக.”

அனைத்து புனித நதிகளையும் இந்த நீரில் வருமாறு அழைப்பதன் காரணம் இந்த அனைத்து நதியின் கரைகளிலும் புனிதமான கோயில்கள் மற்றும் ஆன்மீக கேந்திரங்கள் இருப்பதேயாகும். 

கங்கையின் ஓட்டம் பழங்காலத்திலிருந்து எவ்விதம் மகிமை படுத்தியதோ அவ்விதமே பல ஞானிகள், துறவிகள், சாதுக்கள், யோகிகள், அவதார புருஷர்கள் வேதகாலம் தொடங்கி இன்றைய நவீன காலம்வரை இந்த தேசத்தை மகிமைப்படுத்தி வருகிறார்கள். 

இந்த புனித பாரதம் என்பது, “ஆன்மீக ஒளியில் திளைக்கின்ற நாடு” — தெய்வீக தாயின் வெளிப்பாடு.

ரத்னாகரா தௌத பாடம்

ஹிமாலய கீரிடினம்

பிரம்மராஜா ரிஷி ரத்னாதயம்

வந்தே பாரத மாதரம் ! 

“அற்புதமான கடல்கள் கால்களை கழுவ, ஹிமாலயத்தை கிரீடமாகவும், கழுத்தின் அணிகலனின் முத்தாக விளங்கும் பிரம்மரிஷிகளையும், ராஜரிஷிகளையும் கொண்ட, இறை தாயான பாரத மாதாவே உன்னை வணங்குகிறோம்.” 

வேதரிஷிகள் இந்த தேசத்தின் பணி உலக குருவாக திகழ்வது எனக் கண்டனர், மனித இனம் வாழ்க்கையின் லட்சியம் என்ன என்பதை இம்மண்ணில் தோன்றியுள்ள பெரும் ஞானிகள் மூலம் கற்றுணர அறைகூவல் விடுத்தனர். ஸ்ரீமன் நாராயணன், தட்சிணாமூர்த்தி என தொடங்கி, சங்கரர், இராமானுசர், மத்வர் என மிக நீண்ட குரு பரம்பரையையும், ஆன்மீக குருமார்களையும் வரிசையையும் கொண்டது இந்த பாரதம். 

மழையானது வானத்திலிருந்து பொழிந்து பல வடிவங்கள் கொண்டு பின்னர் ஆறாக மாறி இறுதியாக கடலில் எப்படி கலந்து விடுகிறதோ அதுபோல் பல ஆச்சார்யர்களின் உள்தன்மையானது ஒரே சத்தியத்தில் இருந்து உருவானதே அவர்களின் கடவுள் அறிதல் என்ற பயணத்தின் பாதைகள், பரம்பரைகள் வேறான போதிலும் அனைவரின் இறுதி இலக்கும் சத் – சித் – ஆனந்தம் – இருப்பு – விழிப்புணர்வு – பேரின்பம் – பரப்பிரம்மம் என்பதாகவே இருக்கிறது. 

இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சி பெற்ற புரட்சிகள் நிறைந்த காலத்திலும், பாரதத்தின் ஆன்மீக மரபு, எந்த தடங்கலுமின்றி பல புதிய தொலைநோக்காளர்கள், மகாத்மாக்கள் என பலரை தந்து வருகிறது. மேலும் புதிய பாரதம் துறவிகளான தயானந்தர், பங்கிம், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் மற்றும் ரமணர் போன்றவர்களை தந்தது. பழங்கால வழிகளான ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் மற்றும் கர்ம யோகம் போன்றவைகளை புதுமையாக போதித்த சிவானந்தர், ராம்தாஸ், ஓம்கார் மற்றும் சாது வஸ்வனி போன்றவர்களையும் தந்தது. இத்தகைய வரிசையில் நம்மிடையே இருப்பவரே யோகி ராம்சுரத்குமார், அவர் ஒரு துறவி, சித்தர், ஞானி, மற்றும் பெரும் பக்தர், மேலும் அர்ப்பணிப்பான கர்ம யோகி என அனைத்தையுமே ஒருங்கே கொண்டவர். ஆன்மீக மையமாக விளங்கும் தமிழகத்தின் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலத்தைப் புனிதப்படுத்தியவர். 

பரம்பொருள் நிலையானது. ஆனால் அதே நேரம் மாறும் தன்மையும் கொண்டது. இதிலிருந்தே சகலமும் தோன்றுகின்றன. நிலைப்பெற்று இருக்கின்றன. இறுதியாக அதில் கலந்தும் விடுகின்றன. இந்த விழிப்புணர்வு-சக்தியே சிவம்-சக்தி எனப்படுகிறது. சிவம் என்பதே பிரம்மம், நிலையானது. சக்தி என்பதே ப்ரக்ருதி, அதாவது பிரம்மத்தின் ஆற்றல் வடிவம். இவ்விரண்டும் சொல்லும், பொருளும் போன்று பிரிக்க இயலாதவை. 

‘அருண’ என்றால் சூரியன், தொடர் சலனத்தில் இருக்கும் ஆற்றல். ‘அசலா’ என்றால் திடமான பாறை – நிலையாக இருக்கும் ஆற்றலின் வெளிப்பாடு. அருணாச்சலா என்பது மாறுகின்ற மற்றும் நிலைப்பெற்ற நிலை, சக்தி மற்றும் சிவம், ப்ரக்ருதி மற்றும் புருஷ என்ற பிரிக்க இயலாத சேர்க்கையாகும். சிவமானது பெரும் ஜோதியாக அருணாச்சல மலைமீது கார்த்திகை மாதத்தின் கிருத்திகை நாளில் தோன்றி, பார்வதியிடம் மலையைச் சுற்றி வரச் சொல்வார். பார்வதியின் கிரி பிரதட்சணம் முடிந்தப்பின் சிவமானது பார்வதியை தனது உடலின் இடது பாதியில் கலக்குமாறு செய்து அருணாச்சலேஸ்வரர் ஆவார். இந்த வருடாந்திர கார்த்திகை தீபத்திருவிழா நமக்கு நினைவூட்டுவது இதனையே. திருவண்ணாமலையைச் சேர்ந்த பெரியவர்கள் விஷ்ணுவும், பிரம்மாவும் முறையே வராகம், அன்னம் வடிவத்தைக் கொண்டு அண்ணாமலையாரின் அடி மற்றும் முடியை காண முயன்றனர் என்றும், வராகம் பூமியை குடைந்து கீழே சென்றும், அன்னம் உயர, உயர பறந்தும் பெரும் ஜோதியின் அடி மற்றும் முடியின் எல்லைகளை காண இயலவில்லை என்பார்கள். 

அந்த ஆதியந்தமில்லா பெரும் ஜோதி பலரை பல்லாண்டு காலமாக திருவண்ணாமலையை நோக்கி ஈர்த்திருக்கிறது. அருணகிரிநாதர் தனது முக்கியமான வாழ்க்கை கட்டத்தை கிளியாக வடிவம் கொண்டு, இன்று கிளிகோபுரம் என அழைக்கப்படும் அருணாச்சலேச்வரர் கோயில் கோபுரத்தில் அமர்ந்து ‘கந்தர் அனுபூதி’ என்ற பாடல்கள் தொகுப்பை பாடியிருக்கிறார். குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி மற்றும் ஈஸ்வர சுவாமி என பல ஞானிகள் இங்கு தங்கி திருவண்ணாமலையை புனிதப்படுத்தியிருக்கின்றனர். இன்று யோகி ராம்சுரத்குமார் அவர்களின். இருக்கையால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் பைத்தியம் போல் வயதான பிச்சைக்காரனாக, கன்னியாக்குமரியை சேர்ந்த மாயம்மாவைப் போல் வாழ்ந்து வந்தார். யோகி ராம்சுரத்குமார் ரமணரைப் போலவே பேருரைகள் வழங்குவதை தவிர்த்தார். ஆனால் இவரது ஆன்மீக பாடங்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தியுடையது போன்று ஆழமானவை. எந்த நூலையும் யோகி ராம்சுரத்குமார் எழுதினாரில்லை. ஆனால் இவரின் அதீத விழிப்புணர்வு மகாயோகி ஸ்ரீ அரவிந்தரை போன்றது். காஞ்சி காமகோடி பீடத்தின் மகாபெரியவர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி போலவே யோகி ராம்சுரத்குமார் பேரானந்த நிலையிலேயே மூழ்கியிருந்தார். அனைவரும் யோகி ராம்சுரத்குமாருக்கு ஒன்றே. 

யோகி ராம்சுரத்குமார் சந்நியாசியைப் போல் உடுத்தியதில்லை. அவர் பலவிதமான துணிகளை தனது உடலில் சுற்றியிருப்ப்பார். தலையில் ‘டர்பன்’ எனும் தலைப்பாகை, சட்டை, வேட்டி மற்றும் சால்வை உடுத்தியிருப்பார். அந்த சால்வை முறையாக துவைக்கப்பட்டதில்லை. அவர் வழக்கமாக குளித்ததில்லை, நித்ய கர்மா எனும் எந்த சடங்கையும் பின் தொடர்ந்ததில்லை. ஆனால் அவர் அகமானது தூய்மையாக இருந்தது. கைகளில் பனையோலை விசிறி, மயிலிறகுகள், வைத்திருந்ததோடு தேங்காய் சிரட்டையில் தனது உணவை பிச்சையேற்று பெற்றார். அவர் பல அழுக்கு மூட்டைகளையும், குப்பைகளையும் சுமந்து இருந்தார். ஆனால் பக்தர்களின் பாவங்களை கழுவி, துவைக்கும் வண்ணானாக இருந்தார். சில நேரங்களில் அவர் ஒரு குடிகாரனைப்போலவோ, பைத்தியக்காரனைப் போலவோ சத்தமிட்டு உரக்க சிரிப்பார். சில சமயம் அவரது விழிகள் பக்தர்களின் இதயங்களை அமைதியாக ஊடுருவும். அவரது உறைய வைக்கும், ஊடுருவும் பார்வை பலமணி நேரமும் சிலரிடம் தொடரும். ராமநாமத்தை உச்சரித்து அவர் குழந்தையைப் போல் ஆடவும், பாடவும் செய்வார். சிலநேரம் அவர் தனியே ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்து தனக்குள் அழுது விசும்புவார். அறியாமை, வலி, வேதனைகள் என பலவற்றில் மூழ்கியிருக்கும் மக்கள் குறித்தே அத்தகைய விசும்பலான அழுகை இருக்கும். அவர் தனது தந்தையின் விருப்பத்திற்கேற்பவே செயல்களை புரிவார், அடுத்து என்ன செய்வார் என எவராலும் கணிக்கவே இயலாது. எவ்வளவு முக்கியமான நபராக இருந்தாலும் அந்த சந்திப்பினை அவர் ஏற்பாரா? மறுப்பாரா? எவரும் அறிய இயலாது. ஆனால் பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் வாழ்வில் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தந்த கணங்களுக்கேற்பவே அவர் செயல் பட்டார். பலரை ஆன்மீக பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறார். வழமையான சாதுக்களைப்போன்றோ, துறவிகளைப் போன்றோ இல்லாமல் அவர் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவராக இருந்தார். ஆனால் அவர் பல பக்தர்களை இறுக்கமாக பிணைத்திருந்த கர்மாக்களை சாம்பலாக்கியவர். யார் அவர்? 

அத்தியாயம் 1.2

அந்தி

ஜெய ஜெய ஜகதாம்பா !

ஸ்ரீகலா ஸ்ரீ ஜடாயம் 

ஜெய ஜெய ஜெயஷீலே

ஜாஹ்னுகன்யே ! நமஸ்தே ! 

ஜெய ஜெய ஜலஷாயி

ஸ்ரீமதங்கரி ப்ரஸூதே ! 

ஜெய ஜெய ஜெய பவ்யே ! 

தேவி ! பூயோ நமஸ்தே ! 

“ஓ! பிரபஞ்சத்தின் தாயே ! ஓ ஜகதாம்பா ! ஓ வெற்றியின் தாயே ! ஓ ஜெயஷீலா ! ஓ ஜாஹ்னு ரிஷியின் மகளே ! எனது வணக்கங்கள் ! புனிதமான விஷ்ணுவின் பாதங்களில் பிறந்தவளே ! உனக்கு மகிமை உண்டாகுக ! தெய்வத் தாயே ! ஓ தேவி ! மங்களகரமானவளே ! ஓ பவ்யே ! மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்!.” 

இது உத்தரகாசியில் சுவாமி தபோவன் மஹராஜ் உள்ளம் உருக பாடும் அன்னை கங்கையின் பாடல். கங்கையை அவர் ‘பிரபஞ்சத்தின் தாய்’ என்கிறார் இவரது சீடரான சுவாமி சின்மயானந்தா அதனை ஏற்பதோடு இந்த தாய் பாரதப் பிள்ளைகளை கவனித்து ஊட்டமளிப்பவளாக இருக்கிறாள் என்கிறார். பண்டிதர் ஜவஹர்லால் நேருவும் தனது, ‘ தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற நூலில்,”கங்கையின் கதை அவளது துவக்கத்திலிருந்து கடல் வரை, பழங்காலம் முதல் இன்று வரை, இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம் மற்றும் பல சாம்ராஜ்யங்களின் எழுச்சி,வீழ்ச்சிகளை, பல பெரும் புகழ்பெற்ற நகரங்களை, மனிதர்களின் சாகசங்கள், மனங்களின் தேடல் நிரம்பி இருக்கும் பலதரப்பட்ட மனிதம், வசதிகளால் நிறைவடைந்த வாழ்க்கை, வசதியை மறுத்த துறவுநிலை, மேடு பள்ளங்கள், வளர்ச்சியும் சிதைவுகளும், வாழ்வும் மரணமும் என பல கூறுகளைக் கொண்டது கங்கையின் கதை.” என்கிறார். அதனாலேயே கங்கை வணங்கத்தக்க ஒரு தெய்வத்தாயாக பலகோடி மக்களால் போற்றப்படுகின்றாள். இன்றும் பல துறவிகளும், முனிவர்களும் கங்கைகரையில் அமர்வதாலேயே அந்தர்முகமாக பயணிக்கும் நிலையை அடைகின்ற தாக்கத்தைப் பெறுகின்றனர். 

கங்கையின் கரை நமது குருவின் தொட்டிலாக மட்டுமில்லாமல், விளையாட்டுத் திடலாகவும் இருந்திருக்கிறது. யோகி ராம்சுரத்குமாரின் இளமைப் பருவத்திலும், அவரது வாழ்வின் பிற்பகுதியிலும், கங்கையின் வேகமான ஓட்டம் அவரது ஆன்மாவை முடிவிலா விழிப்புணர்வு எனும் கடலை நோக்கி நகர்த்தியிருக்கிறது. ட்ருமன் கெய்லர் வாட்லிங்டன் இதுபற்றி குறிப்பிடுகையில், “யோகி ராம்சுரத்குமாரின் குழந்தைப்பருவத்தில் கங்கையும், அதன் புனித சாதுக்களும் தந்த ஆக்கபூர்வமான தாக்கமும், அனுபவங்களுமே தனது ஆன்மீக பயணத்தை துவக்கியதோடு, தனது இலக்கு குறித்த விழிப்புணர்வை தந்தது.” என யோகி ராம்சுரத்குமார் பகிர்ந்ததை அவரது நூலில் பதிவு செய்திருக்கிறார். சிறுவனாக கங்கையின் கரைகளில் விளையாடிய காலங்களில் தனது இதயத்திலிருந்து அமைதியின் குரலை கேட்டதாகவும், அந்தக்குரல் கங்கையின் கர்ஜிக்கும் வெள்ளத்தின் சத்தங்களில் பலமுறை எதிரொலித்ததாகவும் யோகி ராம்சுரத்குமார் கூறியிருக்கிறார். 

பனாரஸ் என அழைக்கப்படும் வாரணாசி, பாரதத்தின் ஏழு புனிதமான நகரங்களில் ஒன்றாகும். இது கங்கையின் கரையில் அமைந்த வாரணாசி, வேதம், உபநிஷத்துக்கள், புத்தமதம், ஜைனமதம் என பலவற்றில் குறிப்பிடப்பட்ட பழமை வாய்ந்த நகரகமாகும். இது ஒரு சக்தி பீடமாகும். சிவனின் நிரந்தர வாசஸ்தலம். ஆதிசங்கரர், ராமானந்தர், கபீர், துளசிதாசர், மதுசூதன் சரஸ்வதி மற்றும் பண்டிட்ராஜ் ஜெகன்னாத் போன்ற துறவிகளோடு, இன்றைய பண்டிட் மதன் மோகன் மாளவியா மற்றும் அன்னிபெசன்ட் என பலர் மகிமைபெற்ற புனித இடம் வாரணாசி. பதினெட்டாம் நூற்றாண்டில், ராணி அகல்யாபாய் ஹோல்கர் என்பவர் புனிதமான விஸ்வநாதர் ஆலயத்தை மறுசீரமைத்து கட்டினார், இந்த சீரமைப்பு மொகலாயர்களின் ஆலய தாக்குதலுக்குப்பின் நடந்த ஒன்றாகும். காசிக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய கிராம்மான ‘நர்தரா’ என்ற ஊரில் 1918 டிசம்பர் – 1 ல் யோகி ராம்சுரத்குமார் பிறந்தார். அவரது இளமைக்காலம் குறித்து மிக குறைந்த தகவல்களே நமக்கு கிடைத்துள்ளது. அவரது பெற்றோர்கள் மூலம் ராமாயணம், மகாபாரதம் போன்றவைகளின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. சிறிய வயதில் பெற்றோர்கள் மூலம் கேட்ட இந்த இதிகாச கதைகளே வளர்ந்தப்பின் அவர் கேட்டறிந்த பல விஷயங்களை விளங்க வைத்திருக்கின்றன. அவரது புலமை இந்த இரு புனிதமான பழமையான காவியங்களில் இருப்பதை இன்றும் நாம் உணர இயலும். 

யோகி ராம்சுரத்குமார் சிறுவனாக இருக்கையில் அவர் விரும்பி அலைந்து திரியுமிடம் கங்கை கரையாகவே இருந்தது. இரவிலும், பகலிலும் மணலில் பல மணிநேரங்கள் நடப்பதும், மேலே உள்ள நட்சத்திரங்களை கவனிப்பது, கால்களை நனைத்து புரண்டோடும் கங்கையை கவனித்தல் என தனது நேரத்தை செலவழித்த அவர் சிலசமயம் கங்கையின் கரையிலேயே படுத்து உறங்கவும் செய்தார். பெற்றோர்களின் அணைப்பை புறக்கணித்த இத்தகைய செயல்களை கவனித்த அவர்கள், இவரின் அலைந்து திரிகின்ற மன உணர்வை புரிந்து கொண்டனர். 

பொதுவாக அந்த வயது சிறுவர்களின் விருப்பமான விளையாட்டு மற்றும் சாதாரண வாழ்க்கைக்கு அவர் வரவிரும்பம் இல்லாதவராகவே இருந்தார். அவரது பெரும்பான்மையான நேரம் துறவிகளுடன் கழிப்பதிலேயே இருந்தது. அவர்களோடு இருக்கும்போது மிகுந்த புத்துணர்வை பெறுவதை உணர்ந்தார். அவர்களின் குடில்களில் பல இரவு தங்கினார். ஒரு சிறிய எண்ணெய் விளக்கின் முன்னால் அமர்ந்து பல கதைகளையும், ஆச்சர்யமூட்டும் பலரின் ஆன்மீக அனுபவங்களையும் கேட்டார். அவரது மனம் அவர்களின் உரையாடல்களில் மிகுந்த லயிப்பை பெற்றிருந்தார். எனவே பள்ளியை விட்டு வந்த உடனேயே சாதுக்களை நோக்கி ஓடத்துவங்கினார். 

சாதுக்களை தனது வீட்டிற்கு பிக்ஷை அளிக்க அழைப்பது அவரது பழக்கமாகவே மாறியது. அவரது குடும்பம் அத்தகைய தொடர் தர்மங்களை செய்ய இயலாத வசதி அற்றவர்களாக இருந்தபோதும், சாதுக்களுக்கு ஏதேனும் வழங்க வேண்டும் என்ற தவிப்பும், கடவுளைத் தேடுபவர்களின் மீதான கருணை மிகுந்த சேவை உள்ளத்தையும் அவர் கொண்டிருந்தார். சில சமயம் தனது உணவை சாதுக்களுக்கு தரவும் அவர் தயங்கியதில்லை. இன்றும் அவரிடம் வந்து செல்பவர்களுக்கு சிறிய அளவிலான உணவை பிரசாதமாக தந்தே அனுப்புகிறார். 

எல்லா துறவிகளின் வாழ்விலும் ஏதேனும் ஒரு திருப்புமுனையான சம்பவம் நிகழ்ந்தே மாற்றம் ஏற்படும். நமது நாயகனின் வாழ்விலும் அத்தகைய சம்பவம் உண்டு. அத்தகைய சம்பவம் நமது நாயகனின் பன்னிரண்டாவது வயதில் நிகழ்ந்த ஒன்றாகும். ஒரு மாலையில் அவரது தாயார் அவரை கிணற்றில் இருந்து தண்ணீரை கொண்டு வர அனுப்பினார். அது மெல்ல இருட்டி நிலவு தனது பால் வெளிச்சத்தை மெல்ல படரவிடத்துவங்கிய சந்தியாக்காலம். கிணற்றடிக்குச் சென்ற சிறுவன் கயிற்றைக் கட்டி வாளியில் தண்ணீர் இறைக்க முயன்ற போது, ஒரு சிறுபறவை கிணற்றின் மறுபகுதியில் வந்தமர்ந்தது. அதன் மெல்லிய கிறீச்சிடல் அந்த இடத்தின் அமைதியை கெடுப்பதாக உணர்ந்த சிறுவன் கயிற்றின் மறுமுனையைக் கொண்டு அந்தப் பறவையை விரட்டுவதற்கு வீசினான். அது ஒரு குழந்தையின் குறும்புத்தனமாக இருந்தபோதிலும், அந்த விபத்து நடந்தே விட்டது ஆம் கயிற்றால் அடிப்பட்ட அந்த சிறுபறவை அசைவற்று கிடந்தது. வாளியை கிணற்றில் விட்டு மரணித்து கொண்டிருந்த அந்த சிறுபறவையை காப்பாற்ற அந்த சிறுவன், அதனை தனது உள்ளங்கையில் ஏந்திச் சென்று அதன் வாயில் கங்கை நீரை புகட்ட எத்தனித்தான். ஆனால் அவனது முயற்சிகள் அனைத்தும் வீணாகி, கங்கையின் கரையில் அந்த சிறுபறவையை புதைக்கவே வைத்தது. கன்னங்களில் கண்ணீர் வழிய, உணர்ச்சி பெருக்கால் அழுத அச்சிறுவனை கவலை சூழ்ந்தது. இரவு முழுவதும் உறக்கமின்றி தவித்தான். தான் செய்த தவறுக்கு தனக்கு மன்னிப்பே கிடையாது என மறுகினான். 

இந்த நிகழ்வே அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. அவரது முழு வாழ்க்கையையும் புரட்டி போட்ட ஒன்று. அவர் அனைத்து வாழ்விலும் இருந்த ஒற்றுமையை உணர்ந்த தருணம். அனைத்து உயிர்களிலும் இருக்கும் அந்த ஒருமைப்பண்பு என்ன என்பது குறித்த விசாரம் அவருள் முளைவிடத்துவங்கியது. அவர் உள்முகமாக திரும்பினார். தெய்வத்தாய் கங்கையின் அணைப்பு, பல சாதுக்களின் தொடர்பு, அவருக்குள் ஒரு சத்தியத் தேடலுடன் கூடிய ஒரு துறவு நிலை அவருக்குள் ததும்பத்துவங்கியது. 

பதினாறாம் வயதில் அவர் தீவிரமான சத்தியத்தேடலோடு வீட்டைவிட்டு கிளம்பினார். ஒரு நல்மனிதர் அவருக்கு உணவையும், பனாரஸ்க்கு அருகே உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கான டிக்கெட்டையும் தந்து அனுப்பினார். அச்சிறுவன் ஜொலிக்கும் விஸ்வநாதர் கோயிலை நோக்கி நடக்கத்துவங்கினான். அவர் கோயில் கருவறையை நெருங்கிய போது தனது இறைத்தந்தையின் இருப்பை நோக்கி தான் பயணிப்பதை உணர்ந்தார். இறை பரவசத்தில் மூழ்கினார். ஒரு வாரக்காலம் அந்த கோயில் வளாகத்திற்கு அருகிலேயே தனது நேரத்தை செலவழித்தார். தியாகமும், வைராக்கியமும் இரண்டு சிறகுகளாக அவரது ஆன்மாவிற்குள் வளரத்தொடங்கியது. இந்தக் காலக்கட்டத்தில் அவர் இன்னொரு ஆன்மீக மையத்தையும் அடையாளம் கண்டார். அது பனாரஸிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள சாரநாத் ஆகும். சகோதரி நிவேதிதா தனது, ‘புட்பால்ஸ் ஆஃப் இந்தியன் ஹிஸ்டரி’ என்ற நூலில், “கி.மு.583 ல் கூறப்பட்ட உண்மை — ‘ஓ துறவிகளே, உங்கள் காதுகளை திறவுங்கள். மரணத்திலிருந்து விடுதலை பெறுதல் அறியப்பட்டுவிட்டது’ — இன்றும் புனிதமான சாரநாத்தில் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது. அது வரலாற்றில் என்றும் மறையாT. ஆமாம் இந்தக் குரலின் எதிரொலிப்பு யோகி ராம்சுரத்குமார் இதயத்திலும் கேட்க துவங்கியது. அவருக்குள் கிடைத்த செய்தியைக் கொண்டு அவர் ‘மரணத்திலிருந்து விடுதலை பெறுதல்’ என்ற பாதையில் பயணிக்க முடிவு செய்தார். 

ராம்சுரத்குமார் தனது இரண்டாம்நிலை கல்வியை 1937 ல் முடித்தார். மதுரை சிவானந்த தபோவனத்தின் சுவாமி விமலானந்தாவின் கூற்றுபடி யோகி தனது உயர்கல்வியை லக்னோவில் 30 வருடங்களுக்கு முன்பு தொடர்ந்திருக்கிறார், ஒருமுறை சுவாமி விமலானந்தா யோகியை திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சந்தித்தப்போது, யோகி தானே முன்வந்து தனது லக்னோவில் பயின்ற உயர்கல்வியைப் பற்றி விமலானந்தாவிடம் பேசியிருக்கிறார். அவரது இலக்கிய, வரலாறு, மற்றும் தத்துவங்கள் குறித்த யோகியின் ஆழமான பேச்சும், மேலை மற்றும் கீழை நாடுகளின் தத்துவப்படைப்புக்கள் குறித்த அவரது ஆளுமை, ஆங்கில புலமை, அவரது வாசிப்பார்வம், குறிப்பாக தினமும் செய்திதாள்களை வாசித்தல் போன்றவைகளை யோகி தன்னிடம் பகிர்ந்து கொண்டது தனக்கு அவர் நிச்சயமாக லக்னோ பல்கலைக்கழகத்தில் சிறந்த உயர்கல்வியை பெற்றிருக்கிறார் என்பதை உணர்த்தியதாக கூறுகிறார். 

இளமையான, அறிவார்ந்த நரேந்திரன் சுவாமி விவேகானந்தராக மாறியது போல், யோகி ராம்சுரத்குமார் தனது கூர்மையான அறிவு மற்றும் தேடுதல்களாலும், மேலும் அவரது ஆன்மீகத்தவிப்பு அவரது இதயத்தில் பள்ளிபருவத்திலேயே முளைவிடத்துவங்கி, அது வளர்ந்து தகிக்கும் தணலாய் அவரைச்சுட்டு ஓய்வற்றநிலையை தந்தது. அவரது ஆன்மீகத்தாகம் ஒரு ஆன்மீக வழிக்காட்Fயை தேடி, தீவிரமாகி, கங்கைக்கரை சாதுக்களுடனான தொடர்பை பலப்படுத்தியது. அவர் தனது இறுதி இலக்கை அடைவதற்கான பாதையில் தன்னை பயணிக்க வைக்கும் ஒரு குருவை தேடிவந்தார். 

கங்கைக்கரையில் இருந்த ஒரு துறவி ஒருவர் ராம்சுரத்குமாரின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அவர் ராம்சுரத்குமாரிடம் பல கேள்விகளைக் கேட்டு, அதன் பதில்கள் மூலம் அவரது ஓய்வற்றநிலையின் மூலத்தை அறிய முற்பட்டிருக்கிறார். இருப்பினும் அந்த துறவியால் ராம்சுரத்குமாரின் தேடலை பூர்த்தி செய்ய முடியாமல் போனது. 

1947-ல் ஒருநாள் இரவில் யோகி ராம்சுரத்குமார் அந்த துறவியோடு இருக்கும்போது, ராம்சுரத்குமாரிடம் அவரது தேடலுக்கான விடைகளை அவரே தனக்குள்ளேயே தேடவேண்டும் என அறிவுறுத்தினார். அந்தக் காலக்கட்டங்கள் வேதனையும், வலிகளும் நிரம்பியதாக இருந்திருக்கிறது. இறுதியாக தனக்கென ஒரு குருவை தேடவேண்டும் என ராம்சுரத்குமார் முடிவு செய்திருக்கிறார். தனது நண்பராக இருக்கும் துறவியிடம், சுதந்திரப்போராட்ட வீர்ரும் துறவியுமான மஹாயோகி ஸ்ரீ அரவிந்தரை சந்திக்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார். அச்சமயம் ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரியில் வசித்து வந்தார். அதனை அங்கீகரித்த அந்த துறவி ஸ்ரீ அரவிந்தரை மட்டும் சந்தித்துவிட்டு வராமல் அவரது ஆசிரமத்திற்கு அருகே இருக்கும் இன்னொருவரையும் சந்தித்துவிட்டு வருமாறு பணிந்தார். அந்த துறவி யார் என்பதையும், அவர் எங்கிருக்கிறார் என்பதையும் தெளிவாக ராம்சுரத்குமாரின் நண்பரான துறவி தெரிவிக்காத போதும், ராம்சுரத்குமார் பின்னாளில் தனது துறவி நண்பர் குறிப்பிட்டது திருவண்ணாமலையில் இருந்த மகரிஷி ரமணர் என்பதை அறிந்து கொண்டார். பாதை தெரிந்துகொண்ட உறுதியான சாதகன் தனது பயணத்தை துவங்கினான்.

அத்தியாயம் 1.3

 விடியல்

“காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே

நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்

மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா

வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி

வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 

செந்தமிழ்த் தென்புதுவை….” 

இது மஹாகவி சி.சுப்ரமண்ய பாரதி பாடிய ‘குயில் பாட்டு’ இது அன்று வேதபுரி என்றழைக்கப்பட்ட இன்றைய பாண்டிச்சேரியின் சிறப்பை கூறுகிறது. 1910 ஏப்ரல் 4 ம் தேதி ஸ்ரீ அரவிந்தர் வந்தப்பின் மீண்டும் வேதபாடங்கள் அங்கே உயிர்ப்பெற்றன. 

ஸ்ரீ அரவிந்தர் கல்கத்தாவில் 1872 ல் ஆகஸ்ட் – 15 ல் பிறந்தவர். அவரது தந்தை டாக்டர்.கிருஷ்ண தான் கோஷ் தன்னுடைய மகன் நவீன கலாச்சாரத்தை அறிய வேண்டுமென நினைத்து ஏழு வயதான ஸ்ரீ அரவிந்தரை இங்கிலாந்து அனுப்பியிருக்கிறார். ஆனால் விதி வேறுவிதமாக நினைத்தது. கேம்ப்ரிட்ஜ்ல் நன்றாக படித்து ICS க்கு தகுதியானவராக இருந்தபோதும், அவர் தானே வலிந்து தகுதி தேர்வுகளில் தோல்வியைத் தழுவி, இந்தியாவிற்கு திரும்பினார். பரோடாவின் மாநில கல்லூரியில் சிலகாலம் பணிபுரிந்த அரவிந்தர். சுவாமி விவேகானந்தரின் சீடையான சகோதரி. நிவேதிதாவினால் ஈர்க்கப்பட்டு தேசவிடுதலைக்காக போராடும் புரட்சி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அரவிந்தரின் கூர்மையான எழுத்துக்கள், அவரை ஆசிரியராகக் கொண்ட ‘பந்தே மாதரம்’ என்ற ஆங்கில தினசரியில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கானோர்களின் இதயங்களில் கிளர்ச்சியை விதைத்து அவர்களை பாரத தேசத்தின் விடுதலைக்காக பிரிட்டிஷாரை எதிர்க்க தூண்டின. அதனால் அரவிந்தர் அலிப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீ அரவிந்தருக்கு கிருஷ்ணவாசுதேவரின் தரிசனம் கிடைத்து, ஒரு புதிய விடியலுக்கான வெளிச்சம் அவருக்குள் பாய்ந்தது. யோக சக்திகளின் மூலம் இந்திய விடுதலையை பெற முடியும் என்றும், அது அரசியல் போராடங்களைவிட எளிய வழி என்றும் முடிவு செய்த அரவிந்தர், சிறைச்சாலையில் இருந்து விடுதலைப் பெற்றப்பின் சிறிதுகாலம் சந்தர்நகரில் இருந்துவிட்டு பின்னர் பாண்டிச்சேரிக்கு மாறினார். அங்கே கடும் தவத்தையும், சாதனாக்களையும் மேற்கொண்டார். அவரைச்சுற்றி ஒரு ஆன்மீக சமூகம் வளரலாயிற்று அது ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் ஆகும். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலங்களில் இந்த ஆசிரமம் ஆன்மீகத்தேடல் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, பாரதி, V.V.S அய்யர் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் சொர்க்கமாக திகழ்ந்தது. ஸ்ரீ அரவிந்தரோடு அமர்ந்து வேதங்கள், ஆன்மீக இலக்கியங்கள் குறித்த பல விவாதங்களோடு, தேசத்தின் அரசியல் எதிர்காலம் குறித்தும் பேசப்பட்டது. ஸ்ரீ அரவிந்தரின் 1947 ஆம் ஆண்டு பிறந்தநாளில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. தேச விடுதலையைக் கடந்து ஒவ்வொரு தனி மனிதனும் ஆன்ம விடுதலை அடைய வேண்டும் என்பதே அரவிந்தரின் லட்சியமாக இருந்தது. இறையை தனது உடலில் கண்ட ஸ்ரீ அரவிந்தர் 1950 டிசம்பர் 5 ல் மஹாசமாதியடைந்தார். 

ராம்சுரத்குமார், பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு நவம்பர் 1947 ல் ஸ்ரீ அரவிந்தர் அவரது ஆன்மீகத்தின் உச்சநிலை சாதனாக்களில் இருக்கும்போது வந்தடைந்திருக்கிறார். இளம் சாதகரான ராம்சுரத்குமார் அரவிந்தர் தனது குருவாக இருந்து தன்னை வழிநடத்துவார் என நினைத்து, அவரது வாழ்க்கையையும், அவரது எழுத்துக்களையும் படித்து, மஹா யோகியான அரவிந்தரின் உயர்ந்த சத்தியத்தின் விழிப்புணர்வை பற்றி அறிந்து கொண்டார். ராம்சுரத்குமார் தனது சாதனாக்களை தீவிரமாக்கி தனது விழிப்புணர்வை பெருக்கி தனது உண்மையான அடையாளத்தை அறியமுடியும் என்பதை உணர்ந்தார். 

ஆயினும் ராம்சுரத்குமாருக்கு உடனிருந்து வழிகாட்டி அழைத்துச் செல்லும் ஒரு குரு தேவைப்பட்டார். ஆனால் அரவிந்தர் அவரது இறுதிக்காலத்தின் சில வருடங்களில் பலரிடம் இருந்து விலகியே இருந்தார். ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பிரம்மச்சாரி ராம்சுரத்குமாரை அணுகி அவரிடம் அருகே இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று ஸ்ரீ ரமண மகரிஷியை பார்க்குமாறு அறிவுறுத்தினார். ராம்சுரத்குமாரின் நண்பராக இருந்த கங்கைக்கரை துறவி கூறி அனுப்பிய குறிப்பு மனதில் நிழலாட ரமணாச்ரமம் செல்ல ராம்சுரத்குமார் முடிவு செய்தார். 

1879 ஆம் ஆண்டில் டிசம்பர் 29 அன்று சுந்தரம் ஐயருக்கும், அழகம்மாளுக்கும் திருச்சுழி என்ற ஊரில் ஆருத்திரா தரிசன நாளில் பிறந்த வேங்கடராமனே பின்னாளில் ரமண மகரிஷியாக அறியப்படுகிறார். இவரது இளமைக்காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதுமில்லை. இவர் பள்ளிப்படிப்பில் பெரும் ஆர்வம் இல்லாதவராக இருந்த போதிலும், தான் கேட்கும், படிக்கும் எதனையும் நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்திய நினைவாற்றல் கொண்டவராக இருந்தார். 

அவரது பதினாறாம் வயதில் ஒரு அசாதாரண அனுபவம் இந்த சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் தந்தையை இழந்தப்பின் தனது மாமாவின் இல்லத்தில் வசித்து வந்தார். பன்னிரண்டு வயது முதலே நல்ல உடல்நலம் கொண்டிருந்த போதிலும் அவர் அதிகமான மரணபயத்தைக் கொண்டிருந்தார். ஒருநாள் அவரது மாமா வீட்டின் மாடியில் அவர் இருந்தபோது அவருக்குள் மரணபயம் ஏற்பட்டு அந்த பயத்தினால் அவர் மனமானது உள்முகமாக திரும்பியது. அவர் தனக்குள்ளேயே சில கேள்விகளை எழுப்பிக்கொண்டார். “மரணிப்பது என்பது என்ன?“ என்று அவரே ஒருமுறை நிகழ்த்தியும் பார்த்திருக்கிறார். அவரது அனுபவத்தை பின்வருமாறு வர்ணிக்கிறார். “நான் எனது கை, கால்களை நன்றாக நீட்டி படுத்துக் கொண்டேன். மெல்ல அவை மரத்துப்போகும்படி அசையாமல் கிடந்தேன். எனது விசாரத்திற்கு உண்மைத்தன்மை வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்…நன்று, அடுத்து, என்னிடம் நானே, இந்த உடல் இறந்துவிட்டது. இது மயானத்திற்கு கொண்டு செல்லப்படும். பிறகு அங்கே எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும். இந்த உடல் இறந்துவிட்டதால் நான் இறந்துவிட்டேனா? நான் என்பது எனது இந்த உடலா? அது அமைதியாக உள்ளே இருப்பதல்லவா? என்னால் நான் என்ற ஆளுமையை, அதன் குரலை என்னால் கேட்க முடிகிறது. எனவே நான் என்பது இந்த உடலில் இருக்கும் ஆன்மா. உடல் மரித்தாலும் ஆன்மா இருக்கிறது அதனை மரணத்தால் தொட இயலாது. அதாவது நான் என்பது அழிவில்லாத ஆன்மா. இவையனைத்தும் ஏதோ ஒரு மந்தமான எண்ணமல்ல. இவையனைத்தும் மின்னல் வெட்டாக தோன்றிய நிஜங்கள். இவையனைத்தையும் நேரடியாகவே நான் உணர்ந்தேன் அப்போது எண்ணங்கள் என்பதே என்னிடமில்லை.” சத்தியத்தின் பார்வையும், ஆன்மீகதாகமும் இளம் வேங்கடராமன் இதயத்தில் எழுந்து, அவரது வீட்டைத் துறந்து அருணாச்சலத்தை நோக்கி வர வைத்தது. இந்த அருணாச்சலம் குறித்து முன்பே அவனது வீட்டின் பெரியோர்கள் மூலம் அறிந்து வைத்திருந்தான். ஆழ்ந்த தியானம், சாதனாக்கள் என திரும்பிய அச்சிறுவன் சமாதிநிலையில் மூழ்கினார். பின்னர் அவனது தாயார் தனது மகன் திருவண்ணாமலையில் இருப்பதை அறிந்து, திருவண்ணாமலைக்கு வந்T, அவன் தாயார் அழைத்தபோதும் அதனை மறுத்தார் ரமணர். அனைத்துப் பற்றுக்களில் இருந்தும் தான் விலகிவிட்டதாக கூறி, திருவண்ணாமலையில் உள்ள விருபாக்‌ஷா குகையில் தவம் செய்ய சென்றப்பின், அவரது ஆன்ம ஒளியானது பல சாதகர்களை அவர்பால் ஈர்த்தது. அவரது தாயும், சகோதரரும் அவரைப்போல் துறவு பூண்டனர். ரமணரால் ஈர்க்கப்பட்ட சீடரான கணபதி முனி இவரது அற்புதங்களை உணர்ந்து அவரை, ‘மகரிஷி ரமணர்’ என அழைத்தார். பின்னர் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இவரது காலடியைத் தேடி சரணடைந்தனர் அவற்றில் ஒருவரே, “இந்தியப்புதையலில் ஒரு தேடல்” என்ற நூலை எழுதிய பால் பிரண்டன் ஆவார். மகரிஷியின் சுயவிசாரம் என்பதைக் குறிப்பிடும் போது, ”விசாரம் என்பது ஒரு வழிமுறை மட்டுமல்ல அதுவே இலக்கு”, ‘நான்’ என்பதே சத்தியத்தின் இறுதி இலக்கு. அதனைப்பற்ற உதவும் முயற்சியே விசாரம். அது இயல்பாக, இயற்கையாக நடக்க அதுவே அறிதல் எனப்படும்.” பகவான் 1950 ஏப்ரல் 14 ஆம் நாள் மஹா சமாதி அடைந்தார். 

ராம்சுரத்குமார், இறைஞானம், உயர்ந்த உண்மை போன்றவைகள் குறித்த அறிமுகத்தை ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களின் மூலம் அறிந்து கொண்டபோதிலும், அதனை தனது ஆன்மீக பயணத்திற்கு செயல்முறையாக்க ஒரு குரு வேண்டும் என நினைத்தார். இருப்பினும் குருநாதனின் வழிகாட்டல் பெறுவதற்கான நேரம் இன்னும் அவருக்கு வரவில்லை. மூன்று நாட்கள் மகரிஷியை தரிசித்து நகர்ந்த நிலையில், ஒரு நபர் தந்த ஒரு துண்டு விளம்பர செய்தியில், வடக்கு கேரளாவின் காஞ்சன்காடு என்ற கிராமத்தில் இருக்கும் இன்னொரு துறவியான ஆனந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த பப்பா ராம்தாஸை அறிமுகப்படுத்தியது. 

சுவாமி ராம்தாஸ் அவரது சன்னியாசத்திற்கு முந்தைய வாழ்வில் விட்டல்ராவ் என்றழைக்கப்பட்டார். இவர் பக்தி மிகுந்த பாலகிருஷ்ணராவ், லலிதாபாய் தம்பதியனர்க்கு கஞ்சன்காட்டில் புனிதமான ஹனுமன் ஜெயந்தி நாளில் பிறந்தார். அந்நாள் 1884 ஏப்ரல் 10 ஆம் தேதி ஆகும். அவர் பள்ளியில் படித்தப்போதும் விளையாட்டுக்களில் அதிகம் ஆர்வம் காட்டினார். அவர் மெட்ரிகுலேஷன் படிப்பிலும் தோல்வியடைந்தார். பின்னர் ஓவியம் மற்றும் சிற்ப படிப்பை தேர்ந்தெடுத்து பின்னர் அதனையும் பாதியில் கைவிட்டு, ஜவுளி தொழில்நுட்பம் பயின்ற அவர் பின்னர் வியாபாரத்தில் இறங்கி அதிலும் அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் தான் வேறெதோ செயலுக்காக விதிக்கப்பட்டிருப்பதையும் தனது தோல்விகள் அனைத்தும் வாழ்க்கையின் படிக்கட்டுகள் என்பதையும் மெல்ல உணரத்துவங்கினார். அவரது புற வாழ்க்கை சரிவுகள் அவரை ஆன்மீக தேடலுக்கு வலு சேர்த்தன. தினமும் மாலை வேளையில் தனது சகோதரர் வீட்டில் அவருடன் இறை பஜனை செய்வதில் தன்னை இணைத்துக் கொண்டார். மெல்ல மகிமை பொருந்திய ராம நாமத்தை சொல்லத் தொடங்கினார் அது அவரை உள்முகமாக்கியது. இந்த நிலையில் அவரது தந்தையின் மூலமாக ‘ ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரம் அவருக்கு உபதேசிக்கப்பட்டது, இது அவரது வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டி போட்டது. சில காலங்களிலேயே அவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து விடைப்பெற்றார். ஸ்ரீரங்கம் வந்தடைந்த அவர் காவேரியின் கரையில் காவி உடுத்தி ‘ராம்தாஸ்’ என்ற பெயரைப் பெற்றார். சிலகாலம் கழித்து திருவண்ணாமலை வந்து ரமணமகரிஷியை சந்தித்த அவர் மீது தனது கருணைமழையை ரமணர் பொழிந்தார். அருணாச்சல மலையில் உள்ள ஒரு குகையில் தங்கி இருபது நாட்கள் ராமநாமம் சொன்ன ராம்தாஸ். இந்தியாவின் நீள, அகலங்களில் பெரும் புனிதப்பயணங்களை மேற்கொண்டு இறுதியாக காஞ்சன்காட்டில் ஆனந்தாஸ்ரமத்தை நிறுவினார். அதனை தற்சமயம் தலைமையேற்று நிர்வகித்து வருபவர் மாதாஜி கிருஷ்ணாபாய் ஆவார். (இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில் மாதாஜி கிருஷ்ணாபாய் தலைமையேற்றார். அவரைப் பின்தொடர்ந்து சுவாமி சச்சிதானந்தர், தலைமை ஏற்றார். அவருக்குப்பின் சுவாமி முக்தானந்தர் தற்சமயம் இந்த ஆனந்தாஸ்ரமத்தை நிர்வகித்து வருகிறார்.) மாதாஜி கிருஷ்ணாபாய் சுவாமி ராம்தாஸ் உடன் இணைந்து நிறுவிய இந்த ஆசிரமத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து வருகின்றனர். இது சக்தி வாய்ந்த ஆன்மீக மையமாக விளங்குகிறது. 1949 முதல் 1957 வரை இந்தியாவைக் கடந்தும் பல பயணங்களை மேற்கொண்டு, ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்’ என்ற மந்திரத்தை அனைத்து மூலை முடுக்களுக்கும் சுவாமி ராம்தாஸ் கொண்டு சேர்த்தார். 1954 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட அவர் 1963 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் மஹாசமாதி அடைந்தார். 

மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர், மகரிஷி ரமணர் போன்றோர் ராம்சுரத்குமாரை ஈர்த்ததைப்போல் சுவாமி ராம்தாஸ் அவர்களின் முதல் சந்திப்பில் ராம் சுரத் குமாருக்கு எந்த ஈர்ப்பையும் தரவில்லை. இது குறித்து யோகி ராம்சுரத்குமார் குறிப்பிடும் போது, “இந்தப்பிச்சைக்காரனை ஸ்ரீஅரவிந்தர், ரமணமகரிஷி ஈர்த்ததைப்போல் சுவாமி ராம்தாஸ் ஈர்க்கவில்லை. இந்தப்பிச்சைக்காரனால் சுவாமி ராம்தாஸை அச்சமயத்தில் புரிந்து கொள்ள இயலவில்லை. மற்ற இவரும் ஆன்மிகத்தின் உயர்நிலையில் இருப்பதை உணர்ந்த இவனால், ராம்தாஸ் முற்றிலும் வேறுபட்டவராக தோன்றினார். அவர் சொகுசான வாழ்க்கை முறையில் வாழ்ந்தார், அவருக்கு மக்கள் அரசருக்கு சேவை செய்வதைப் போன்று சேவை செய்துவந்தனர்.” எனவே சுவாமி ராம்தாஸிடம் எந்த ஈர்ப்பும் இன்றி ராம்சுரத்குமார் தனது இல்லத்திற்கே திரும்பினார். 

1948 ஆம் ஆண்டு ராம்சுரத்குமார் மீண்டும் தென்னிந்தியாவிற்கு வந்தார்.அப்போதும் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு பயணித்த அவர் அங்கே தங்காமல், திருவண்ணாமலைக்கு சென்று ரமணரின் முன்பு இரண்டு மாதங்கள் தங்கினார். இந்தமுறை ரமணரின் கருணை ராம்சுரத்குமாரிடம் வேலை செய்ய துவங்கியது. ஒருநாள் ரமணரின் ஊடுருவும் பார்வையை பெற்ற ராம்சுரத்குமார் பெரிதும் பரவசமடைந்தார். ரமணரின் ஊடுருவும் பார்வையைக் குறித்து பால் பிரண்டன் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “அவரது கண்கள் ஞானத்தால் ஒளிரும் தன்மை கொண்டவை. ஆன்மாவை ஊடுருவுபவை. அவர் எனது இதயம், எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள் அனைத்தையும் தனது பார்வையிலேயே அறிந்து கொள்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது, அத்தகைய பார்வையின் முன் நான் கையறுநிலையிலேயே இருந்தேன். நானே மறந்துவிட்ட எனது கடந்த காலங்களையும் அவரால் உள்வாங்க முடிகிறது என்பதையும் உணர்ந்தேன்.அவர் அனைத்தையும் அறிவார் என நிச்சயமாக என்னால் கூற முடியும். அவரிடமிருந்து தப்பிக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. ஆயினும் அதனை செய்ய நான் முயற்சிக்கவில்லை. எனது எதிர்காலம் குறித்த ஆர்வமே அந்த கூர்மையான விழிகளை சகித்துக் கொள்ள செய்தது” (‘இந்தியப்புதையலில் ஒரு தேடல்’ என்ற நூலிலிருந்து). 

ராம்சுரத்குமாரின் அனுபவம் முற்றிலும் ஆழமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர் தியானத்தில் இருந்து கண்களைத் திறந்து பார்த்தபோது மகரிஷி தன்னை ஊடுருவி பார்ப்பதை உணர்ந்திருக்கிறார். தனது உடல் உணர்வுகளை இழந்து, காலம், தூரம் போன்றவற்றை இழந்து ஒன்றுமில்லாத நிலையில் இணைவதை உணர்ந்தார். தனது இருப்பின் முந்தைய வாழ்க்கைகள், இனி வர இருப்பவைகளையும் உணர்ந்ததோடு, தனது உள்தன்மையில் தீவிரமான மாறுதல்கள் நடப்பதை அறிந்தார். அந்தக்கணத்திலிருந்து ராம்சுரத்குமாரின் வாழ்க்கை கடும் தவம் மற்றும் சுயவிசாரத்தை மேற்கொள்ள நங்கூரமிடப்பட்டது. 

இதே வருடத்தில், ராம்சுரத்குமார் மீண்டும் ஒருமுறை ராம்தாஸை நோக்கி பயணப்பட்டார். இந்தமுறையும் ஏதோஒன்று அவரை ராம்தாஸிடம் நல்லுறவை மேற்கொள்ளாமல் தடுத்தது. ராம்சுரத்குமார் தனது குருவான பப்பா ராம்தாஸே அவரை அறிந்து கொள்ள முடியாத வகையில் தடுத்துவிட்டதாக குறிப்பிடுகிறார். ஏனெனில் சாதகனுக்கு அடுத்தக்கட்ட பயணத்திற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்பதே குருவின் பார்வையாக இருந்திருக்கும். ராம்சுரத்குமார் மீண்டும் ராம்தாஸிடம் விடைப்பெற்று வட இந்தியாவிற்கு பயணமானார். பல கிராமங்கள், நகரங்கள் என பயணித்த அவர் இறுதியாக பல புதிய அனுபவங்களோடு ஹிமாலயத்தை அடைந்தார். பல சாதுக்கள், மகான்கள், துறவிகளின் தொடர்பு அவரது ஆன்மீக உணர்வை உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது. சுவாமி விமலானந்தாவின் கூற்றின்படி ராம்சுரத்குமார் ரிஷிகேஷிற்கு பயணம் செய்து சிலகாலம் இமாலயத்தின் துறவியாக திகழ்ந்த பகவான் சிவானந்தரோடும் கழித்திருக்கிறார்.

1950 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஹிமாலயத்தில் இருக்கும் போது, ராம் சுரத்குமார் ரமணமகரிஷி மகாசமாதி அடைந்த செய்தியை அறிகிறார். இந்த தனிப்பட்ட பேரிழப்பில் இருந்து மீள்வதற்கு முன்பே அதே வருட இறுதியில் ஸ்ரீ அரவிந்தர் மகா சமாதி அடைந்த தகவலையும் அறிந்த ராம் சுரத்குமாரின் இதயத்தில் ஓய்வற்றநிலை பெரும் அலையாக அடிக்கிறது. இரண்டு பொன்னான வாய்ப்புக்களையும் இழந்ததாக ராம் சுரத்குமார் வருந்துவதோடு, இவ்விரண்டு குருமார்களிடம் இருந்த நெருக்கமான உணர்வு தன்னுடைய ஆன்ம விழிப்புணர்வை மேம்படுத்தும் என்ற தனது எண்ணம் சிதைந்து போனதை நினைத்து வருந்தினார். ராம் சுரத்குமார் தீர்மானமாக முடிவெடுத்து தனக்கு இருக்கும் இன்னொரு வாய்ப்பான சுவாமி ராம்தாஸ் அவர்களை தவற விடக்கூடாது என நினைத்து தனது மூன்றாவது குருவை நோக்கிச் செல்வதற்கான மூன்றாவது பயணத்தை திட்டமிட்டார். இது குறித்து ராம் சுரத்குமார், “ராம்தாஸை நோக்கிய இப்பயணம் எனக்கான மூன்றாவது வாய்ப்பு. இரண்டு அற்புதமான குருமார்கள் மஹாசமாதி அடைந்து விட்டார்கள். எனவே ’ராம்தாஸ் ஒரு அற்புத துறவியாகவே காட்சியளிக்கிறார். அவரிடம் செல்வோம்.’ என முடிவு செய்து 1952 ஆம் ஆண்டு இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையோ, பாண்டிச்சேரியோ செல்லாமல் நேரடியாக ஆனந்தாஸ்ரமம் சென்றான். ஆனால் இந்தமுறை சுவாமி ராம்தாஸ் முற்றிலும் வேறானவராக எனக்கு தோன்றினார்.என்னைப்பார்த்த முதல் பார்வையிலேயே ராம்தாஸ் எனது வாழ்க்கை, எனது இலக்கு குறித்தும் பல தகவல்களை இந்தப் பிச்சைக்காரனிடம் பரிமாறினார். அதனை வேறெவரும் அறியமாட்டார்கள் ஆனால் இந்த பிச்சைக்காரன் அறிவான்” என்று கூறுகிறார். 

இந்தமுறை குருவே சீடனின் வருகைக்காக காத்திருந்தார், எப்படி ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேந்திரனுக்காக காத்திருந்தாரோ அவ்விதமான காத்திருப்பு இது. ராம் சுரத்குமார் பெற்ற வரவேற்பு முன்பு நடந்தது போலில்லாமல் இருந்தது இதுகுறித்து ராம் சுரத்குமார் கூறுகையில், “இந்தப்பிச்சைக்காரன் மீது குரு தனித்த சிறப்பான அக்கறையை காட்டத்துவங்கினார். இந்தப் பிச்சைக்காரன் பல அறிந்த, நெருக்கமான நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வந்ததைப்போல் உணர்ந்தான். அந்த ஆசிரமத்தின் சூழல் ராம்தாஸை ஒரு அற்புதமான துறவி என இந்தப் பிச்சைக்காரன் எண்ணவைத்தது, உண்மையிலேயே அற்புத துறவிதான். அதன்பின்னரே இந்தப்பிச்சைக்காரன் அற்புதமான குருவை புரிந்துகொண்டான். ராம்தாஸ் இந்தப்பிச்சைக்காரனின் தந்தை.”

இறுதியில் ராம் சுரத்குமார் சத்தியத்தை அறிவதற்கான நேரம் நெருங்கியது, இந்தியா முழுவதும் பயணித்த காலத்தில் பலமுறை ராம்சுரத்குமாருக்கு காவி உடை வழங்கப்பட்டது, ஆனால் அதனை அவர் புறக்கணித்தே வந்தார். அவர் விரும்பியது வெளிப்புறத் தோற்றத்தில் நடக்கும் மாற்றமல்ல, உள்முகமாக நடக்க வேண்டிய மாற்றம். புறச் சடங்குகளுக்கு அவர் ஓரளவே சாதகர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவராக இருந்தார். ஒருநாள் சுவாமி ராம்தாஸ் ஒரு பெண்மணிக்கு மந்திரோபதேசத்தை வழங்குவதைக் கண்ணுற்ற ராம் சுரத்குமார் தனது உள்ளக்கிடக்கையை ஆனந்தாஸ்ரமத்தின் செயலாளர் சுவாமி சச்சிதானந்தாவிடம் கூறியிருக்கிறார், என்ன ராம்சுரத்குமார் பகிர்ந்தார் என்பதை சுவாமி சச்சிதானந்தர் மறந்துவிட்ட போதிலும், தான் ராம்சுரத்குமாரிடம் பப்பா ராம்தாஸை அணுகி அவரிடம் மந்திரோபதேசம் கோருமாறு வழிநடத்தியது மட்டும் நினைவில் இருப்பதாக கூறுகிறார். பொதுவாக பப்பா ராம்தாஸ் எவருக்கும் வழக்கமான முறையில் சந்நியாசம் தருவதில்லை, ஆனால்,’ ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ‘ என்ற மந்திரோபதேசத்தையே தூண்டுதலாக தருவது வழக்கம். ராம்சுரத்குமார் தனது குருவிடம் பிரார்த்தனையோடு தூண்டுதலுக்காக அணுகினார். குரு அவரை உற்று நோக்கி ராம்சுரத்குமார் தூண்டுதலுக்கு தயாராகி தன்னிடமிருந்து ஆன்மீக ஆற்றலை பெறும் நிலையில் இருப்பதை அறிந்த ராம்தாஸ், “உனக்கு தூண்டுதல் வேண்டுமா? உட்கார்” என உத்தரவிட்ட குரு. ராம் சுரத்குமாருக்கு அற்புத மந்திரமான, ‘ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்’ என்பதை உபதேசிக்க ராம் சுரத்குமார் தனக்குள் கட்டற்ற ஆன்மீக ஆற்றல் பாய்வதை உணர்ந்தார். தன்னுள் இருக்கும் ஆன்மீக சக்கரங்கள் விழிப்புறுவதையும் ராம்சுரத்குமார் உணர்ந்தார். காதுகளில் ராம நாம மந்திரம் இடைவிடாது ஒலித்த வண்ணம் இருந்தது. ராம்தாஸின் குரு தூண்டுதலை தரும் என்னென்ன மாற்றங்களை உணர்ந்தார், அதே மாற்றங்களை ராம்சுரத்குமாரும் உணர்ந்தார். ராம்தாஸ் தனது நூலில் குறிப்பிடும் தகவல்கள் இவையே, “தீடிரென ஒரு விளக்கு ஏற்றப்பட்டதைப் போன்ற ஒரு ஒளி, அது உள்ளிருக்கும் இருட்டை நீக்கி, எழுப்பி, பாதையை காட்டியது. அதன்பின் எதையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப செய்யவில்லை அனைத்து செயல்களும் இறை விருப்பத்தின் படியே நடந்தன. முன்பு வாழ்ந்த வாழ்க்கையைப் போல் அல்லாமல் இறையே என் வாழ்க்கையை நடத்தியது. எதையும் எனது வாழ்க்கையில் என்னால் கோர முடியவில்லை, ஏனெனில் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருந்தது. இறையே என்னை சுத்தப்படுத்தி, என்னை தனக்குள் உறிஞ்சி, வழிநடத்தி, தனது சக்தி நிறைந்த அம்சமாக எனை மாற்றியது.” (ராம்தாஸ் பேசுகிறார் – பாகம் – 4)

குரு சீடனிடம் ஒருநாளின் இருபத்து நான்கு மணிநேரமும் மந்திரத்தை உச்சரிக்குமாறு உத்தரவிட்டார். ராம்சுரத்குமார் இறை அனுபவம் பெற்று தொடர்ந்து பல நாட்களுக்கு இறை பரவசநிலையிலேயே இருந்தார். மந்திரத்தை உச்சரித்தவாறே அவர் பரவசநிலையில் ஆடவும், பாடவும் செய்தார். மொத்த பிரபஞ்சமும் தன்னுள் இருப்பதை உணர்ந்தார். இறை விழிப்புணர்வு எனும் விடியல் அவருக்குள் மூன்று குருமார்களால் தனக்குள் நிகழ்ந்ததை நகைச்சுவையாக யோகி ராம்சுரத்குமார் குறிப்பிடுகையில், “பொதுவாக மனிதர்கள் தனக்கு மூன்று தந்தைகள் என்று கூறுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்தப் பிச்சைக்காரனுக்கோ மூன்று தந்தைகள் இருந்தனர். இவர்கள் மூவரும் இந்தப்பிச்சைக்காரனுக்கு நிறைய வேலை செய்துள்ளனர். அரவிந்தர் துவக்கினார். ரமணமகரிஷி சிலவற்றை செய்தார், ராம்தாஸ் முடித்து வைத்தார்.” ஸ்ரீ அரவிந்தர் உண்மையைத் தேடும் ஞானத்தை தந்தார். ரமணர் தவத்திற்கான பாதையைக் காட்டினார், இறுதியாக ராம்தாஸ் பக்தியை தந்து அதன்மூலம் இறை பரவசத்தை அடைய வைத்தார். 

ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது சீடனான இளம் நரேந்திரன் நிர்விகல்ப சமாதியில் மூழ்கி இருப்பதை விரும்பதாதைப் போல், ராம்தாஸூம் தனது சீடனும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட பணிகளை செய்ய நியமிக்கப்பட்டதை முன்கூட்டியே அறிந்தார். எனவே அவரை இந்த உலகத்தின் செயல்களுக்குள் தள்ளி வாழ்வின் துன்பங்களை உணர்ந்தால் மட்டுமே அவர் சரியான முறையில் வார்க்கப்பட்ட இறையின் கருவி ஆவார் என நினைத்தார். இது குறித்து ராம்சுரத்குமார் கூறுகையில், “இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் இந்தப்பிச்சைக்காரன் தொடர்ந்து ஆனந்தாஸ்ரமத்தில் தங்க நினைத்து, மூன்று முறை இந்தப்பிச்சைக்காரன் சுவாமி ராம்தாஸை அணுகினான். ஒவ்வொரு முறையும் அவர் என்னை நிராகரித்தார். இறுதியாக ஒரு முறை ராம்தாஸ், ‘ஆசிரம வாழ்க்கைக்கு பொருத்தமான பல நபர்கள் இருக்கிறார்கள். இதற்குமேல் அத்தகையோர் எங்களுக்கு தேவையில்லை.’ என்றார். 

சுவாமி சச்சிதானந்தரின் கூற்றுபடி, ராம்சுரத்குமார் ராம்தாஸ் மீது கொண்ட பக்தியானது மிகவும் தீவிரமாகி எப்போதும் தான் ராம்தாஸ் உடன் இருக்க வேண்டும் என எண்ணினார். ராம்தாஸ் ராம்சுரத்குமாரின் இறைப்பற்றை அறிந்தார். ஆயினும் அது ஆசிரமத்தில் இருக்கும் பிற பக்தர்களுக்கு சங்கடமாக இருப்பதை உணர்ந்தார். எனவே ராம்சுரத்குமார் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட, ராம்சுரத்குமாரும் ஆசிரமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். இறுதியாக தன் குருவிடம் விடைபெறுவதற்காகச் சென்ற ராம்சுரத்குமாரிடம் எங்கே செல்ல இருக்கிறாய் என ராம்தாஸ் வினவ, எந்த சிறு எண்ணமுமின்றி ராம்சுரத்குமார், ‘ திருவண்ணாமலை’ என பதிலளித்தார். 

இறைவனை அடையும் பாதைகள் விவரிக்க முடியாத வழிகளை கொண்டவை. கஞ்சன்காடு என்ற இடத்திலிருந்து திருவண்ணாமலை வந்து சேரும் பாதை சாதாரணமாக இருப்பதைப் போல் தோன்றினாலும், யோகி ராம்சுரத்குமார் கைகளில் பணம் இன்றி, பிச்சைக்காரனாக, பல கிராமம், நகரம், என கடந்து கன்னியாக்குமரி முதல் இமாலயம் வரை பயணித்து இறுதியாக திருவண்ணாமலை வந்து சேர ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. 1959 ன் வசந்தகாலத்தின் முற்பகுதியில் ராம்சுரத்குமார் திருவண்ணாமலையின் அருணாச்சல மலையை அடைந்தார். அவர் மரத்தடியில் தங்கினார், அவரின் நீண்ட புனிதப்பயணம் ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் அன்றே பெரும் இலக்கை நோக்கிய பயணத்தின் ஆரம்பம் குறிக்கப்பட்டது. 

அத்தியாயம் 1.4

தகிக்கும் சூரியன்

வீடில்லாதவர்களை என்ன வீடு 

வைத்திருக்கும் நண்பனே? 

வானமே கூரை, புல்தரையே மெத்தை

உணவுக்கு? 

வாய்ப்பிருப்பின் நல்ல உணவு அல்லது 

மோசமானது, கணிக்காதே

உணவில்லை, நீரில்லை எனினும் 

கறைபடியாது கருணைமிக்க சுயம்

அது தன்னையறிந்து, சுதந்திரமாய் 

ஓடும் ஆறு அதைப்போல் சந்நியாசிகளே

உறுதியோடு எப்போதும் இருங்கள். 

“ஓம் தத் சத், ஓம்!“ எனச் சொல்லுங்கள். 

இது சுவாமி விவேகானந்தரின் சன்னியாசி பாடல். இதுவே மிகச்சரியாக ராம்சுரத்குமாரின் வாழ்க்கை, இதையே அவரது வசிப்பிடமான திருவண்ணாமலையில் அவர் மேற்கொண்ட வாழ்க்கைமுறை. சிலநேரங்களில் குகைகளில் அவர் தங்குவார், சில நேரங்களில் ஏதேனும் மரத்தடியில் இருப்பார். மற்ற நேரத்தில் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் மதில்சுவர் அருகே இருப்பார். வெயில், மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கோயிலின் அருகே உள்ள கடைகளின் வராண்டாவில் ஒதுங்குவார். அவர் தனது உணவு மற்றும் வசதிக்காக எப்போதும் கவலைக் கொண்டதில்லை. எது பிச்சையாக கிடைத்ததோ அதனை அவர் அன்போடு ஏற்றுக் கொண்டார். சிலசமயம் தொடர்ந்து பலநாட்கள் பட்டினியில் இருந்திருக்கிறார், ஆனால் அவர் எப்போதும் துவண்டுபோனதில்லை, அங்குமிங்கும் திரிந்து, ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் என்று உச்சரித்தவாறே பரமானந்தநிலையில் ஆடிக்கொண்டிருப்பார். 

இன்று யோகியின் பக்தர்கள் கோயிலின் பக்கத்தில் ஒரு வசிப்பிடத்தை (சன்னதி தெரு இல்லம்) அமைத்து தந்திருந்தனர். அது பலரை வரவேற்று யோகி தரிசனம் தரும் இடமாக இருந்தது. இப்போதும் அவர் திறந்தவெளி, கோயிலின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு பொது இடத்தில் தங்குவதையே விரும்புவார். சிலருக்கு அவர் பைத்தியக்காரனைப் போலவும், சிலருக்கு கடவுளாகவும் அவர் காட்சியளித்தார். மக்கள் அவரை சூழ்ந்திருந்த போதிலும் அவர் எந்தவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவதையோ, உபன்யாசங்களையோ செய்யவில்லை. அவரிடம் வருபவர்களின் எதிர்காலத்தை கணித்து அவர் எதையும் கூறியதில்லை. எவர் அவரை பக்தியோடு உண்மையாக அணுகுகின்றனரோ அவர்களின் இதயங்களில் அமைதியை தந்து அவர்களின் உள்ளார்ந்த கேள்விகளுக்கான பதிலை ஊடுருவும் ஒரு பார்வையிலேயே தருபவராக இருந்தார். ஒரு பக்தருக்கு தனது கைகளை உயர்த்தி, “பயப்படாதே!” என சைகை செய்ததிலிருந்து அந்த பக்தர் உள்ளார்ந்த அமைதியை இன்றுவரை உணர்ந்து வருகிறார். 

தன்னை ஏற்பவர்களை நோக்கி அவரிடமிருந்து பெருகிவரும் கருணையின் மூலம் அவர், “என் தந்தை உன்னை ஆசிர்வதிக்கிறார்!” என்று கூறுவார். அவரிடம் ‘நான்’ என்ற உணர்வு வெளிப்படுவதே இல்லை, அவர் எப்போதும் தன்னை, ‘இந்தப் பிச்சைக்காரன்’ என்றே குறிப்பிடுவார். ஒரு குழந்தையைப் போல் அவர் வெகுளியாகவும், நகைச்சுவை உணர்வோடும், சிரித்தவாறே இருப்பார். அவர் சிரிக்கும் போது அவரது மொத்த உடலும் குலுங்கும். ஒருமுறை யாரோ ஒருவர் அவரிடம் உங்களை ஏன் பிச்சைக்காரன் என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்டதற்கு, நகைச்சுவையாக அவர் அளித்த பதில், ”என்னை நான் பிச்சைக்காரன் என்றழைத்துக் கொள்ளும் போதே, மக்கள் நான் ஏதோ பொக்கிஷத்தை மறைத்து வைத்திருப்பதைப் போல் சந்தேகப்பட்டு எனக்கு பல தொந்திரவுகளைத் தருகின்றனர். என்னை அரசன் என்று அழைத்துக் கொண்டால் என் விதி என்னவாகும்?”. 

சிலநேரங்களில் யோகி தன்னைக் காணவரும் பக்தர்களின் சில நேர்மையான பிரச்சனைகளை கேட்டு அதற்கு யதார்த்தமான தீர்வுகளை வழங்குவார். ஒருமுறை ஒரு பக்தரிடம், ஹிதோபதேசம் என்ற சமஸ்கிருத நீதிபோதனை நூலில் இருந்து தித்திப என்ற ஜோடி பறவைகள் குறித்த கதையை யோகி ராம்சுரத்குமார் கூறினார். கடற்கரை ஓரமாக வசித்த இந்த ஜோடி பறவைகளில் பெண் பறவை முட்டையிட்டு வைத்திருந்தது. கடலின் அலைகள் அந்த முட்டையை அடித்துச் சென்றன. ஆண் பறவை அதிகமான துன்பம் கொண்டு உறுதிக்கொண்டு முட்டைகளை மீட்க முடிவு செய்து, சிறிய புல்லொன்றின் மூலம் கடல் நீரை முகர்ந்து கடலை வற்றிவிட முயற்சி செய்தது. இந்த முயற்சி பிற பறவைகளின் கவனத்தை ஈர்க்க அவைகளும் இப்பணியில் இணைந்தன. இறுதியாக, பக்ஷிராஜனான கருடனும் அந்த பறவை தம்பதிகளுக்கு உதவ முன்வந்தார். கடலரசன், பக்ஷிராஜன் தனது இறக்கையை வீசி மொத்த கடலையும் வற்றிவிடச் செய்வார் என அஞ்சினார். எனவே கடலரசன் தனது அலைகள் சுருட்டிக் கொணர்ந்த முட்டைகளை உடனடியாக திருப்பி அந்த தம்பதியினரிடமே தந்தது. இந்தக் கதையின் இறுதியில் யோகி ராம்சுரத்குமார் தனது அறிவுரையை பக்தர்களுக்கு இணைத்து, “எனவே உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள், தொடருங்கள். உங்கள் முயற்சியும், நீங்களும் வெல்வீர்கள்.” 

சிலசமயம் யோகி தூய, எளிய ஆங்கிலத்தில் பேசுவார், மறுசமயம் தமிழில் பேசுவார். சிலசமயம் மணிக்கணக்கில் சிரிப்பார், மறுசமயம் நீண்ட மவுனத்தில் வெகுநேரம் ஆழ்ந்துவிடுவார். பால், தண்ணீர் என எதனை அவருக்கு கொடுத்தாலும் அதனை அவர் தனது சிரட்டையில் பெற்றுக் கொள்வார், அது அவருக்கு பிக்ஷை பாத்திரமாக இருந்தது. அவர் எதைப் பெற்றுக் கொண்டாலும் தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கினார். சர்க்கரை நோய் உள்ள பக்தருக்கு இனிப்பை பிரசாதமாக வழங்குவார். வயிற்றுப்புண் உள்ளவர்க்கு கடும் காரமானவற்றை வழங்குவார், அவர் எதை தந்தாலும் அது பக்தர்களுக்கு தேன் போல் இனித்தது. அவரைக்காண வந்தவர்களில் மந்திரிகள், நீதிபதிகள், நிர்வாகிகள், துணை வேந்தர்கள், இலக்கியவாதிகள், ஏழைகள், அப்பாவியான மக்கள், தொழிலாளிகள், தெருவில் இருப்பவர்கள், பக்கத்து கிராமத்து மக்களில் இருந்து தூரதேசங்களில் இருந்தும் பலர் அவரைக்காண வந்தனர். ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இலங்கை போன்ற நாடுகளும் இதில் அடங்கும். 

எது இந்த வயதான, பைத்தியக்காரனைப் போன்ற பிச்சைக்காரனை நோக்கி பலதரப்பட்ட மனிதர்களை ஈர்த்தது? அவர் ஒரு ‘விடுதலையடைந்த ஆன்மா’ என்பதாலா? அவரது பார்வை உலகியல் வசதிகளோடு, ஆன்மீகத்துடிப்பையும் அவரது பக்தர்களுக்கு தருவதாலா? அல்லது ஒரு பெரும் இலக்கிற்காக இந்த பக்தியான ஆன்மாக்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டனவா?

 “விடுதலை இந்தப்பிச்சைக்காரனுக்கு இறுதியல்ல. மாறாக அது அவனுக்கு துவக்கம்” என்று கூறிய யோகி ராம்சுரத்குமார், ”இந்தப் பிச்சைக்காரனின் வேலை ஆளுமைகளை உருவாக்குவதே” என்று தனது இலக்கு குறித்து வெளிப்படுத்தியுள்ளார். தனிநபர்களை சிறந்த கருவிகளாக்குவது மட்டுமல்ல, தேசத்திற்கும், மனித இனத்திற்கும் இலக்கை நிர்ணயிப்பதேயாகும்.” 

1972 ல் ஒருநாள் யோகி ராம்சுரத்குமார், திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள திருக்கோயிலூர் ஞானானந்தகிரி தபோவனத்தில் அமைதியின்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை மாட்டுத்தொழுவத்திலோ, தோப்புக்களிலோ ஆழ்ந்த எண்ணத்தில் மூழ்கியிருப்பதைக் காணலாம். அவருக்கு ஞானானந்தகிரியோடு மிகுந்த நெருக்கம் இருந்து வந்தது. இருவரும் நாட்டில் ஆன்மீக அலையை உருவாக்க சில செயல்முறைத் திட்டங்களோடு இருந்தனர். திரு. AR.PN. ராஜமாணிக்க நாடார், நிர்வாக டிரஸ்டியாக தபோவனத்தில் இருந்ததோடு, இவ்விரு ஞானிகளின் பக்தராக இருந்த்தோடு, அன்னை மாயம்மா மற்றும் பிற துறவிகளோடும் அன்பு பூண்டிருந்தார். 1973 ஏப்ரல் 27 ல் சுவாமி ஞானானந்தா கிரி யோகி ராம்சுரத்குமாருக்கு ஒரு பனையோலை விசிறியை வழங்கினார். தனக்குப்பின் தனது ஆசிரமத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதாகவே இது பார்க்கப்பட்டது. 1973 ஏப்ரல் 29 ல் பல பக்தர்கள் குழுமியிருந்தபோது, ஞானானந்தா கிரி, ’ஒன்று, இரண்டு, மூன்று, சுடு’ என்று கூற, யோகி ஓடிவந்து ஞானானந்தா கிரியின் முன்னர் வீரசானத்தைப்போல் முழங்கால் இட்டு, இராணுவ வீரர் தனது மூத்த இராணுவ அதிகாரியை வணக்கம் செலுத்துவதைப் போல் செய்ய, இருவரும் கர்ஜனையோடுடன் கூடிய வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். இது தங்கள் ஆன்மீக சக்தியை தாய்நாட்டின் அறியாமை, சுயநலம், லௌகீக வாழ்க்கை போன்றவற்றில் இருந்து விடுதலை பெறுவதற்காக இருவரும் பயன்படுத்த இருக்கின்றனர் என்பதன் குறியீடாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. 1973 ன் நவராத்ரி விழாவிற்கு மகாத்மா காந்தியின் சிலையை ஞானானந்தகிரிக்கு யோகி ராம்சுரத்குமார் அனுப்பியதும் தேசத்தின் மீது அவர்கள் கொண்ட அக்கறையை உணர்த்துகிறது. 1974 ஜனவரி 10 ஆம் தேதி ஞானானந்தகிரி மஹாசமாதி அடைந்தபிறகு, தபோவனத்தில் 1974 ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை தபோவனத்தில் தங்கியிருந்T அதன்பின் ஆசிரமத்திற்கு செல்லவில்லை. ஞானானந்தகிரியால் கண்டறியப்பட்ட, ‘கன்னியாக்குமரியின் மாணிக்கம்’ என அறியப்பட்ட அன்னை மாயம்மா, 1976 செப்டம்பர் 26 ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து யோகி ராம்சுரத்குமாரை கோயிலுக்கு முன் சந்தித்தார். 

1976 ஆம் ஆண்டு டிசம்பர் – 1 யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவை பக்தர்கள் சேர்ந்து கொண்டாடிய பொழுது யோகியின் அமைதியான, அதே நேரம் உன்னதமான, ஓர் இயக்கத்துக்கு உரிய உட்கரு உருவானது. ஜகத்குரு சந்திரசேகர

சரஸ்வதி சுவாமிகள் தனது வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார். பக்தர்கள் அவருக்கு பாதபூஜை செய்யும்போது யோகி கண்கள் திறந்திருந்த நிலையில், மிக ஆழ்ந்த சமாதிநிலையில் மூழ்கி இருந்தார். 

பைத்தியக்காரன், கனவுலகில் இருப்பவன், வெகுளியான குழந்தை, பிச்சைக்காரன் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் இன்று பல நூறு பக்தர்களுக்கு கலங்கரை விளக்கம். அவர்களின் வாழ்க்கையில் யோகி கொண்டுவந்த மாற்றம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. கல்வியறிவே இல்லாத ஒருவனும் அவரது கருணையால் மிகச்சிறந்த தரமான பாடல்களை இயற்றுபவனாகிறான். இந்தப்பிச்சைக்காரனுக்கு தமிழ் மொழியும், இலக்கியமும் தெரியாது என்று கூறிக்கொண்ட போதிலும், அவர், ‘சிவஞானபோதம்’ என்ற தமிழ் வேதநூலுக்கு தரும் விளக்கங்கள் தமிழ் நன்கு கற்றறிந்த புலவர்களையும் வியக்க செய்வதாகும். யோகி ராம மந் திரத்தை ஜெபிக்கத்துவங்கினால் அவரது குரலானது கேட்பவர்களின் இதயத்தை கரைக்க வல்லது. நாத்திகர்களும் அவரோடு இணைந்து பாடுமாறு ஈர்க்கவல்லது அவரின் குரல். சில சமூக விரோதிகள் இவரைச் சாதாரண பிச்சைக்காரனாக கருதி தாக்கியபோதும், அவர்களை துணிவோடு பார்வையால் ஊடுருவி துரத்தியிருக்கிறார். யோகி கோயிலின் ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்து மனிதகுலத்தின் அறியாமை மற்றும் இருள் குறித்து அமைதியாக யோசித்து விசும்பிக் கொண்டிருப்பார். 

உலகத்தின் பல பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் யோகி ராம்சுரத்குமார் குறித்த தனித்த அனுபவங்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஹோமம் கம்யூனிட்டியின் தலைவரான லீ லோசோவிக், ஆன்மீகத்தை பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக பயிற்றுவிக்கும் ஒரு ஆசிரியர் ஆவார். அவருக்கு உலகமெங்கிலும் பல மாணவர்கள் உண்டு. ‘தி ஒன்லி க்ரேஸ் இஸ் லவ்விங்’, மற்றும் ‘தி சீட்டிங் புத்தா’ போன்ற பல நூல்களின் ஆசிரியர் இவர் ஆவார். பன்னிரண்டு வருடங்களில் மூன்றுமுறை இந்தியாவிற்கு வந்த லீ லோசோவிக் ஆனந்தமயிமா, முக்தானந்தா, சச்சிதானந்தா போன்ற பல ஆன்மீக ஆசிரியர்களை சந்திந்திருக்கிறார். யோகி ராம்சுரத்குமாருடனும் அவர் நேரத்தை செலழித்திருக்கிறார், அவர் பல குருமார்களை சந்தித்தப்போதும் ஒரே ஒரு பிச்சைக்காரனை அவரது கடைசி இந்தியப் பயணத்தில் சந்தித்ததாகவும் அவரே ‘யோகி’ என்றும் குறிப்பிடுவார். லீ யோகி ராம்சுரத்குமாரின் மனிதநேயம் மற்றும் சரணாகதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது கடைசி பயணத்தின் போது யோகி தனது ஆன்மீக உணர்வை தனக்கும் பகிர்ந்ததாக உணர்ந்தார். லீ தனது பக்தியினால் சில பாடல்களை யோகி ராம்சுரத்குமார் மீது எழுதினார். அவற்றில் ஒரு பாடல், ‘ தி ஒன்லி கிரேஸ் இஸ் லவ்விங்’ என்ற நூலின் அறிமுகத்தில் உள்ள பாடல், பின்வருமாறு: 

நீண்ட காலமாக பணக்காரர்களைத் தேடினேன்

        செல்வ வளமானவர்களைக் கண்டேன் 

ஒர் பிச்சைக்காரனான உன்னை 

         நான் கண்டறிந்தவுடன்

இப்போது நீ தாங்கியிருக்கும் ஏழ்மையை 

        மட்டுமே நான் தேடுகிறேன் 

எனது அன்பான குருவே 

        உனைப்போன்ற ஏழையாயிருத்தல்

ஒரு வரம், பிரமிப்போடு 

          நான் காணும் கனவது 

எனது செல்வங்கள், எனது கடவுளின் 

          ஏழ்மையால் வெளியேற்றப்பட்டது 

எனவே லீ பாடுகிறார்

          ‘இது அப்படியே இருக்கட்டும்.’

ஒரு அமெரிக்க பக்தையான.ஃபிலிஸ் கூறுகிறார், தன்னைப் பொருத்தவரை இந்தியா என்பது யோகி ராம்சுரத்குமார். அவரது முந்தைய வருகையின் பொழுது தான் எவ்விதம் ஒரு கார் விபத்தில் இருந்து யோகியின் கருணையால் காப்பாற்றப்பட்டேன் என்பதை அவர் யோகிடம் விளக்கியபோது, யோகி ராம்சுரத்குமார் அவரிடம் நகைச்சுவையாக வினவினார்: “அப்படியெனில் விபத்தை நீ சந்தித்ததும் எனது கருணையாலா?. யோகி எளிமையானவர், தாழ்மையானவர், தற்பெருமையற்றவர். இன்னொரு அமெரிக்க பக்தரான திரு.வில்லியம், எவ்விதம் யோகி ராம்சுரத்குமார் தனது கரங்களை உயர்த்தி ஆசிர்வதித்தே, தனக்கு ஆழ்ந்த தியான நிலையையும், ஆனந்த பரவச அனுபவத்தையும் தந்ததாக கூறுகிறார். இதே மாதிரியான அனுபவங்களை, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பெற்றிருக்கிறார்… இன்னொரு அமெரிக்க்க பக்தையான ஹில்டா, மே 1978 ல் வெளியான, ‘தி ந்யூ சன்’ என்ற இதழில், ‘யோகி ராம்சுரத்குமார் – தி ஹிடன் செயின்ட் ஆஃப் இந்தியா’ எனும் கட்டுரையில் தனது அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார். யோகி ராம்சுரத்குமாரை ஒரு முறைகூட காணாதவர்களுக்கும், கனவுகளின் மூலம் யோகி தரிசனம் அளித்து வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார் பின்னாளில் அவர்கள் யோகி ராம்சுரத்குமார் படத்தை பார்த்தப்போதே இவரின் வழிக்காட்டுதலே அது என புரிந்து கொண்டிருக்கின்றனர். இதனைக் குறித்து ஹில்டா யோகி ராம்சுரத்குமாரிடம் கேட்டப்போது, “இந்தப்பிச்சைக்காரனுக்கு எதுவும் தெரியாது, தந்தையே இவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்து இருக்கிறார்.” என்று கூறியிருக்கிறார். 

யோகி ராம்சுரத்குமார் தனது கருணையை பக்தர்களின் மீது பார்வை, எண்ணம் மற்றும் தொடுகை மூலமாகவும் பரிமாறியிருக்கிறார். ஒருமுறை யோகியிடம் வந்த பக்தர் தான் இழந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை திரும்ப பெற வேண்டும் என வேண்டினார். யோகி ஆறுதல் அளிக்கும் வகையில், சில குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் அவருடையப் பணம் அவருக்கு திரும்பக்கிடைக்கும் என உறுதியளித்தார். ஆனால் அந்த பக்தர் அந்த கால இடைவெளிக்குள் மீண்டும் யோகியை சந்தித்து தனது பணம் திரும்ப கிடைக்கவில்லையே என யோகி ராம்சுரத்குமாரைக் கேட்க, யோகி அவரிடம் எந்த பதட்டமுமின்றி, “இந்த மண்ணில் இருக்கும் பல அற்புத குருமார்கள், கடலில் விழுந்த ஊசியைக்கூட திரும்ப எடுத்து தந்திருக்கின்றனர், ஆனால் நானோ மிகச்சாதாரணமான ஏழைப் பிச்சைக்காரன்” என்றார். யோகி ராம்சுரத்குமார் மேலும், தனது தந்தையிடம் இந்தப் பக்தருக்கு தந்தையின். கருணையின் மீது நம்பிக்கை பிறக்க பிரார்த்திப்பதாக கூறினார். சிறிது காலத்திலேயே பக்தர் ஆச்சரியப்படும் வகையில், அவரது பணம் திரும்ப கிடைத்தது. 

ஜகத்குரு சங்கராச்சாரியாரின் காஞ்சி காமகோடி பீடத்தின், ஸ்ரீ சந்திரசேகரந்ர சரஸ்வதி சுவாமிகளை இரண்டு பக்தர்கள் தரிசித்துவிட்டு அவர்கள் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களையும் தரிசிக்க விரும்பினார்கள். அவர்கள் திருவண்ணாமலை வந்து யோகியின் இல்லத்தின் கதவுகளைத் தட்டினர். யோகி ராம்சுரத்குமார் வெளியே வந்து அவர்களை சில நொடிகள் உற்று நோக்கினார். உடனே அவர்களின் பாதங்களில் விழுந்து யோகி ராம்சுரத்குமார் வணங்க அவர்களிருவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். யோகி சிரித்தவாறே அவர்களிடம், “நீங்கள் இருவரும் பெரிய ஆச்சார்யாரை பார்த்தப்பிறகு என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள், இந்த பிச்சைக்காரனிடம் காண்பதற்கு என்ன இருக்கிறது? என் தந்தை உங்களை ஆசிர்வதிக்கிறார்! நீங்கள் இப்போது போகலாம்.” என்றார். வந்தவர்கள் யோகி தந்த இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்க்குள், யோகி தனது இல்லத்திற்குள் நுழைந்தார். யோகியின் இந்த எல்லையற்ற பணிவான செயலானது அவர் தனது குருமீது கொண்டிருந்த பக்தியை அறிவிக்கும் போது வெளிப்பட்டது, “தந்தை ராம்தாஸ் எப்போதும் இந்தப் பிச்சைக்காரனோடே இருக்கிறார்.” சிந்தனையைத் தூண்டக்கூடிய இத்தகைய ஆழமான பார்வைகள் அவரது கூற்றில் வெளிப்படுகிறது: ”நான் எல்லையற்றவன், எனவே நீங்களும், நாமனைவரும் எல்லயற்றவர்களே, என் நண்பர்களே, ஆனால் ஒரு முக்காடு உள்ளது, ஆம் ஒரு முக்காடு உள்ளது. என்னைப் பின் தொடர்கிறீர்களா? நீங்கள் பார்ப்பது எனது எண்ணற்ற வடிவத்தின் ஒரு பகுதி. இது கடற்கரையில் நின்றிருக்கும் ஒருவன் பெரும் கடலைப் பார்ப்பதைப்போலத்தான். அதைப்போலவே அனைவரும் என்னில் ஒரு சிறு பகுதியையே பார்க்கின்றனர். இந்த மொத்த பிரபஞ்சம் மொத்தமே மனிதனின் ஒரு பகுதியே ஆனால் ஒரு மனிதனால் எப்படி மொத்த பிரபஞ்சத்தைம் பார்க்க முடியும்?”.

சுவாமி விவேகானந்தர், தன்னை எல்லோரிலும், எல்லாவற்றிலும் கண்ட துறவி, தத்துவவாதி. அவரைப்போலவே யோகி ராம்சுரத்குமாரும் ஒரு நாட்டுப்பற்றாளர். ”தாயும், தாய்நாடும் சொர்க்கத்தைவிட புனிதமானவை” என்று ராமசந்திரமூர்த்தி அருளுகிறார். ராமனை தியானிப்பவர்கள், மற்றும் தன்னை ராமரிடம் இணைத்துக் கொண்டவர்களுக்கு இதைத்தவிர வேறு எந்த மந்திரம் இருக்க முடியும் ராம்சுரத்குமாருக்கு இந்த மொத்த தேசம் என்பது இன்றிருக்கும் துண்டாடப்பட்டிருக்கும் தேசமல்ல, அகண்ட பாரதம், முனிவர்களும், துறவிகளும் வணங!கிய தாய். இந்த நாடு பிரிவினைக்கு உட்பட்டபோது, மகா யோகி ஸ்ரீ அரவிந்தர் அறிவித்தது: “பழைய இந்து முஸ்லீம் மதப்பிரிவினை இப்போது திடமாகி, நிரந்தரமான அரசியல் பிரிவினையாக இந்த நாட்டில் ஆகிவிட்டது. இப்போது தீர்க்கப்பட்ட விவகாரம், ஏற்கப்படாது, நிரந்தரமான தீர்வுமாகாது. தற்காலிக பயனைத் தரும் இது இந்தியாவை பலவீனப்படுத்துவதோடு, முடங்கிப் போகச் செய்யும், உள்நாட்டு சண்டை எப்போது வேண்டுமானாலும் நடக்கும். புதிய படையெடுப்பும், வெளிநாட்டவரின் தாக்குதல்களும் கூட நடக்கலாம். இந்தியாவின் உள்வளர்ச்சி மற்றும் வளமும் தடைபடலாம். மற்ற நாடுகளின் மத்தியில் அவள் பலவீனமாகலாம். அவளின் இலக்கு பலவீனமாகவும், விரக்தியடைவதாகவும் மாறலாம். இந்தப்பிரிவினை, பகிர்வு கூடாது.” இந்த உணர்வுகளை மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர் 1947 ஆகஸ்ட் 15 ல் இந்தியா சுதந்திரமடைந்த `தே நாளில் வெளிப்படுத்தினார். யோகி ராம்சுரத்குமார் கூற்றும் அரவிந்தரின் எதிரொலியாகவே உள்ளது: ”இந்தியா நமது விளையாட்டுத்திடல்…. தெய்வீக திட்டத்தின் பாதுகாவலர்கள் ஆகிய குருமார்களின் விளையாட்டுத்திடல், அது ஒருபோதும் துண்டாடப்படக்கூடாது அல்லது நம்மிடம் இருந்து பறித்துச் செல்லப்படக்கூடாது. எனது நண்பனே, என்னை நம்பு, சத்தியத்திற்கு அதன் வழி இருக்கும். சத்தியம் வெல்லும்.” 

யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை புனிதப்படுத்தப்பட்டது தாய்நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்யமட்டுமல்ல, அT மொத்த மனிதகுலத்திற்கும் சேவை செய்யவே. ட்ருமன் கெய்லர் வாட்லிங்டன் இதைப்பற்றி குறிப்பிடும் போது, “பசிகொண்ட ஆத்மாக்கள் அவரை நோக்கி வருவார்கள், அவர்களுக்கு ரொட்டியை அவர் தருவார். பாவத்தாலும், நோயாலும் துன்பப்படும் ஆன்மாக்கள் அவரிடம் வரும், அவர் அவர்களை தனது உயிர்ப்பான வார்த்தைகளால் குணமாக்குவார். அறியாமையால் குருடான ஆன்மாக்கள் அவரிடம் வருகையில் அவர் ஞானத்தால் அவர்களை ஒளிர வைப்பார். மனிதகுலத்தின் அங்கமாக மட்டும் அவரில்லாமல், கடவுள் குழந்தைகளின் செயல் மிக்க சகோதரத்துவத்தின் ஒரு ஒருங்கிணைந்த உறுப்பினராகவே அவர் இருந்தார்.” 

அத்தியாயம் 1.5

 முடிவிலா ஒளி

அத்வேஷ்டா ஸர்வ பூதாநாம் மைத்ர: கருண ஏவ ச |

நிர்மமோ நிரஹங்கார: ஸம து:க ஸுக: க்ஷமீ ||

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஸ்சய: |

மய்யர்பித மநோ புத்திர் யோ மத் பக்த: ஸ மே ப்ரிய: || (ஸ்ரீமத் பகவத்கீதை – 12 : 13 & 14) 

எவ்வுயிரையும் பகைத்தலன்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும், துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய், எப்போதும் மகிழ்ச்சியுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து என் தொண்டனாகிய யோகி எனக்கினியவன் என கீதையில் பகவான் கிருஷ்ணர் உரைக்கிறார். 

யார் அத்தகைய யோகி? எங்கே அவரைக் காணலாம்? 

ஒருநாள் அருணாச்சல மலையடிவாரத்தில் அருணாச்சல சிவனின் இரண்டு பக்தர்கள் அமர்ந்து நட்புரீதியான உரையாடல்களில் ஈடுபட்டு இருந்தனர். இருவரும் நீண்டகாலமாக இறைத்தேடலில் பரஸ்பரம் அறிந்தவர்கள், பயணித்தவர்கள். குழந்தைத்தனமான எளிமை அவர்களின் இதயத்தை பற்றியிருந்தன. அதில் இளையவரானவர் இன்னொருவரின் கரத்தை தீடிரெனப் பற்றி, “நீயொரு யோகி, இப்பொழுது நீ உன் சக்தியை காட்ட வேண்டும். நான் உனது கரத்தை விடமாட்டேன்.” என்றார். 

இளையவர் யோகியின் கரத்தை மிகக் கடுமையாக அழுத்தத் தொடங்கினார். யோகி தனது எதிர்ப்பைக் காட்டி, “இல்லை, இல்லை. நானொரு சாதாரண பிச்சைக்காரன். என்னை விடு, நான் யோகி அல்ல”. அந்த இளையவர் ஒரு வெளிநாட்டவர் அவர் துறவியாகி திருவண்ணாமலையின் குகைகளில் ஒன்றில் இருக்கிறார், யோகியிடம் தனது சக்தியைக் காட்ட அவரால் வற்புறுத்த இயலவில்லை. யோகி இந்த நிகழ்வைக் குறிப்பிட்D சொல்லுகையில், “ஓ ! எப்படி இந்தப் பிச்சசைக்காரனின் கைகளை நசுக்கினான் தெரியுமா ! இந்தப் பிச்சைக்காரன் தான் யோகி அல்ல என்று அழுது கதறினான். ஆனாலும் அவன் இந்தப் பிச்சைக்காரனை விடவில்லை.” என்று கூறி யோகி பெருங்களிப்புடன் சிரித்தார். 

அந்த யோகி வேறு எவரும் இல்லை நமது நாயகனான யோகி ராம்சுரத்குமார், அவர் தன்னை யோகி என்று அழைத்துக் கொண்டதில்லை. எந்த சக்திகளையும் வெளிக்காட்டியதில்லை. எப்போதும் தன்னை ‘பிச்சைக்காரன்’ என்றே அழைத்துக் கொள்வார். 

லீ லோசோவிக் ஒரு கடிதம் ஒன்றை பாடலாக எழுதி அதற்கு, “பெறுநர் யோகி ராம்சுரத்குமார், பைத்திய பிச்சைக்காரன், விடுநர் மோசமான கவிஞன்“ என எழுதி அனுப்ப அது யோகி ராம்சுரத்குமாரிடம் வந்தது. ஆனால், அதனை யோகி புகழவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை? அந்தக்கடிதம் யோகி பொக்கிஷமாக பாதுகாக்கும் வீணான காகிதங்களோடு சேர்ந்தது. இந்நூலின் ஆசிரியர் யோகி ராம்சுரத்குமார் குறித்த சில தகவல்களை யோகியிடம் கேட்கும் போது, யோகி சிரித்தவாறே நீண்ட நேரம் அந்த வீணான காகிதங்களைத் தேடிவிட்டு, “ஓ ! அதனைக் காணவில்லை. யாரோ எதையோ எழுதினார்கள், அதனைக் காணவில்லை“ என்று கூறினார். இதனைக்கேட்ட அடியேனின் முகம் வாடுவதைக் கண்ட யோகி மீண்டும் அந்த காகித மூட்டைகளைத் துழாவி ஒரு வீணான காகிதத்தை எடுத்துத் தந்தார். அதனைக் கண்டதும் தங்கச்சுரங்கத்தைக் கண்டதைப் போல் இந்த ஆசிரியர் மகிழ்ந்திருக்கிறார். யோகி அதனை கருணைக்கொண்ட புன்னகையோடு தந்திருக்கிறார். 

யோகியின் கருணையும், இரக்கமும் அவரது எல்லா பக்தர்கள், பிச்சைக்காரர்கள், எல்லா உயிரினங்களுக்கும் சென்றடைந்தது. அவர் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் அருகே அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இடையே சென்று அமர்ந்துவிடுவார். சில நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுக்காகவும், பிச்சைக்காரர்களை தொல்லையாகவும் கருதி, இவர்களை சூழ்ந்து மிக கடுமையான முறையில் தாக்கி பிச்சைக்காரர்களை காவல்துறையினர் விரட்டுவார்கள். ஆனால் இந்த பிச்சைக்காரன் மட்டும் மனம் புண்பட்டு, “நமது நாட்டில், பிச்சை எடுத்தல் ஒருபோதும் ஒரு குற்றமில்லை. அது ஒருபோதும் தடைசெய்யப்பட்டதில்லை. பிச்சைக்காரர்கள் மதிக்கப்பட்டு, அக்காலத்தில் பிச்சையிடப்பட்டது. ஆனால் இன்றைய அரசாங்கமோ அவர்களை கைது செய்து, துன்புறுத்தி வருகிறது. இந்த பரதகண்டத்தில், பிச்சைபெறுதல் ஒருபோதும் தடைசெய்யப்பட்டதில்லை. பிச்சைக்காரர்கள் வதைக்கப்படுதல் சரியல்ல” என்று யோகி ராம்சுரத்குமார் கூறியிருக்கிறார். 

இந்த நூலின் ஆசிரியர் முன்னிலையில் ஒருமுறை தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சில பக்தர்களுடன் ஒரு சன்னியாசினியும் உடனிணைந்து யோகியை காண வந்திருந்தனர். அவர்கள் சில பழங்கள் நிறைந்த பொட்டலங்களை கொண்டு வந்திருந்தனர். யோகியின் முன்பு அவைகள் பார்வையாளர்களால் அன்பான காணிக்கையாக வைக்கப்பட்டபோது யோகி, “இவையெல்லாம் எதற்கு? இந்தப் பிச்சைக்காரனுக்கு இவையெல்லாம் தேவையில்லை.” அந்த நேரத்தில் ஒரு பிச்சைக்காரன் கதவருகே வந்து நின்று, “யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய்!“ என கத்தினார். யோகி உடனடியாக தனது பக்தர்களில் ஒருவரை அழைத்து, “சுவாமிநாதா, இவைகள் அனைத்தையும் எடுத்துச் சென்று அவரிடம் கொடு என உத்தரவிட்டார்.” அனைத்துப் பழங்களும் அந்த பிச்சைக்காரனின் நீட்டப்பட்ட கரங்களில் திணிக்கப்பட்டன. யோகி அந்தப் பிச்சைக்காரனிடம், “இவைகளை நீ எடுத்துச் சென்று அங்கு அமர்ந்திருப்பவர்களிடம் பகிர்ந்து கொள். (கோயிலின் அருகே இருந்த பிச்சைக்காரர்களைக் காட்டி).” 

யோகியிடம் ‘மமகாரம்’ அல்லது ‘அகங்காரம்’ போன்றவை கிடையாது. அனைவருக்கும் உரியவர், அனைவருக்கும் நண்பர். டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த ஒரு தத்துவ பேராசிரியர் ஆவார். அவர் யோகியை காணவந்திருந்த போது அவரோடான உரையாடலை முடித்த யோகி, அந்த பேராசிரிய புகைபிடிப!பார் என்பதை அறிந்து, “நீ ஏன் என்னோடு புகை பிடிக்க மாட்டாயா?“ என்று கேட்க பேராசிரியர் தயங்கினார். யோகி தொடர்ந்து வற்புறுத்த, பேராசிரியர் தனது சட்டைப்பையில் இருந்து சிகரெட்டை எடுக்க முயன்றார். ஆனால் யோகியோ அவரிடம், “இல்லை.இல்லை. நான் எனது சிகரெட்டைத் தருகிறேன்” என்றார். யோகி தனது சிகரெட்டில் இருந்து ஒன்றை எடுத்து பேராசிரியருக்கு தந்தார். சிகரெட்டை எடுத்து தந்ததோடு மட்டுமின்றி, பேராசிரியரின் சிகரெட்டை பற்றவைக்கவும் செய்தார். பேராசியர் யோகியிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். “நீங்கள் இந்த சிகரெட்டின் இறுதி துண்டினை பத்திரப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.” என்றார். யோகி அவருக்கு சிரித்தவாறே அனுமதியளித்தார்.

ஒருமுறை இந்த நூலாசிரியருடன் கனடா, இத்தாலி, சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து சேலத்திலுள்ள அன்னை மாயம்மாவை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமாரை தரிசிக்க விரும்பினர். ஆனால் அவர்கள் திருவண்ணாமலைக்கு நள்ளிரவில் வந்தடைந்தனர். ஒரு பக்தர் சந்தேகத்துடன், “யோகி இப்போது விழித்திருப்பாரா? அவர் இப்போது நம்மை பார்ப்பாரா? “என வினா எழுப்பினார். 

யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாக்ரதி ஸம்யமீ |

யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிசா பச்யதோ முநே ||

(ஸ்ரீமத் பகவத் கீதை 2 : 69) 

எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு. 

ஆனால் நாங்கள் அனைவரும் யோகியின் இல்லத்தை நெருங்கும் போது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். தியானத்தில் இருந்து எழுந்து எங்கள் அனைவரையும் வரவேற்ற யோகி, ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆனந்தமாக உரையாடியதோடு, பஜனைப் பாடல்களையும் பாடச் சொன்னார். 

யோகி ஒரு அற்புதமான பக்தர். அவரது குருபக்தி இணையற்ற ஒன்று. அவர் எப்போதும் தனது குருவை தந்தை என்றே அழைப்பார். திரு.A.R.ராவ் என்ற பக்தர், இவரே இந்த நூலின் முதலிரண்டு பதிப்புகளை அச்சிடடவர் ஆவார். இவர் மூலநூல் ஆசிரியரோடு இணைந்து யோகியை அவரது இல்லத்தில் சந்தித்தப்போது, தான் கௌட சாரஸ்வத் குலத்தைச் சேர்ந்தவர் என்பதை பகிர, யோகி பெருமகிழ்வோடு, “ஓ! நீ கௌட சாரஸ்வத்தா! நீ எனது தந்தையான சுவாமி ராம்தாஸ் அவர்களின் குலத்தைச் சேர்ந்தவர்!” என்றிருக்கிறார். 

இந்த ஆசிரியரின் மகளான செல்வி நிவேதிதாவிடம் யோகி ஒருமுறை “உனது பெயரின் அர்த்தமென்ன” என வினவ, அவர், “அர்ப்பணிப்பு என்பதே அதன் அர்த்தம்” என பதிலளித்திருக்கிறார். “ஓ! அதன் அர்த்தம் தியாகம்! உன் தந்தை உன்னை கடவுளுக்கு தியாகம் செய்திருக்கிறார்! அதை நீ ஏற்கிறாயா?” என்று கூறிய யோகி, ஆசிரியரை கவனிக்க, அவர் அந்த வார்த்தைகளின் பொருளையும், தாக்கத்தையும் புரிந்து கொண்டார். இது எதிர்காலம் குறித்த குறிப்பு. வெகுளியான அந்த சிறியப் பெண் தலையசைக்க, யோகி சில கோப்பை தேனீர் கொண்டுவருமாறு கூறிய யோகி, அதனை தனது சிரட்டையில் வாங்கி அருந்திய யோகி, அதில் ஒரு பகுதி தேனீரை அந்த இளம்பெண்ணிற்கு தந்தார். பின்னர் யோகி இந்த ஆசிரியரின் மகனான சிரஞ்சீவி. விவேகானந்தனை அழைத்து, தனதருகே அமரவைத்து அவனது கரங்களை சிறிது நேரம் பற்றியவாறு அமர்ந்து, ஆழமான தியானத்தில் மூழ்கினார். பின்னர் யோகி தனது கழுத்திலிருந்து ருத்ராக்‌ஷமாலையை எடுத்து அந்த சிறுவனின் கழுத்தில் அணிவித்தார். யோகி அவ்விரு பிள்ளைகளின் தாயாரையும் ஆசிர்வதித்தார். 

இன்னொரு சமயம், யோகியின் ஒரு பக்தர் தான் துவங்க இருக்கும் டிராவல்ஸ் சேவைக்காக ஆசியை கேட்டு வந்தபோது, யோகி அருகில் இருந்த நிவேதிதாவிடம், “உனது நண்பர் டிராவல்ஸ் சேவையை துவங்க இருக்கிறார். நீ முதலில் எங்கு செல்ல விரும்புகிறாய்? “என கேட்க, மிகுந்த அப்பாவித்தனத்தோடு அந்தப் பெண், “நான் காஞ்சன்காடு போக விரும்புகிறேன்.” என்றாள். 

யோகி அளவற்ற சந்தோஷத்தோடும், சிரிப்போடும், “ஓ! நிவேதிதா எனது தந்தையின் இடத்திற்கு போக விரும்புகிறார்.“ என்று கூறியிருக்கிறார். 

யோகி தனது பக்தர்களை அவ்வப்போது வழிநடத்தினாலும், யோகியின் ஆழமான எதிர்கால கணிப்புகள் அடிக்கடி வெளிப்படுபவை அல்ல. சி்ரஞ்சீவி. விவேகானந்தன் தனது பொதுத் தேர்வுக்கு முன்னர் யோகியை சந்திக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு யோகியை காணச் சென்றபோது, அவனை சரியான முறையில் வரவேற்ற யோகி அவனது தேர்வுக்கான தயாரிப்புகள் குறித்து விசாரித்தார். அதற்கு அச்சிறுவன் தான் அனைத்துப் பாடங்களுக்குரிய தயாரிப்புகளை மேற்கொண்டு விட்டதாகவும், மொழிப்பாடங்களுக்கு மட்டும் இன்னமும் தயாராகவில்லை என்றான். “நீ அனைத்து பாடங்களையும் நன்றாகவே எழுதுவாய். மொழிப்பாடங்களையும் நன்றாகவே எழுதுவாய். ஆனால் கணிதப்பாடத்தில் விழிப்போடிரு.” என எச்சரித்தார். 

தேர்வுகள் முடிந்தபிறகு, செய்திதாள்கள் அந்த வருடத்தின் கணிதப்பாடத்தேர்வு மிகுந்த கடினமாக இருந்ததாக செய்திகளை வெளியிட்டிருந்தன. யோகி தக்க தருணத்தில் தந்த எச்சரிக்கையானது அந்த சிறுவனுக்கு உதவியது. அவன் அனைத்து பாடங்களில் உயர்ந்த மதிப்பெண்களை பெற்றிருந்தான். நம்பிக்கை, குருவின் வார்த்தைகளில் கொள்ளும் நம்பிக்கையானது அற்புதங்களை நிகழ்த்த வல்லவை. 

“துல்யா நிந்தா ஸ்துதிர் மௌனி, சந்துஷ்டோ யேனா கேனாசித்” – “எவனொருவன் புகழ்ச்சியிலும், நிந்தனையிலும் அமைதியாக இருக்கிறானோ, எவன் அவனிடம் உள்ளதைக் கொண்டு நிறைவு கொள்கிறானோ” அவனே ஒரு யோகி. யோகியின் சரிதம் முதல் பதிப்பு பதிப்பிக்கப்பட்டபோது, அவர் ஒரு பிரதியை வேண்டினார். 

நூறு பிரதிகள் யோகியை வந்தடைந்தன. யோகி அவைகளை ஏற்று அதனை கட டுக்களாக்கி ஒரு பக்தரிடம் ஒப்படைக்கும் போது, “இந்த கட்டுக்களை ஒரு வாரத்திற்குப்பின் திறந்து, அதனுள் என்ன இருக்கிறதோ, அதனை தகுதியுடையவர்களுக்கு விநியோகம் செய்.” என கூறினார். ஆசிரியருக்கோ யோகி ஒரு வேட்டியை துறவினை பரிந்துரைக்கும் வண்ணம் தந்தார், துறவே ஆசிரியரின் எண்ணமாகவும் இருந்தது. 

இந்த ஆசிரியர் தனது கரீபியநாடுகளுக்கான பயணம் மேற்கொள்ள தொடங்கிய போது, அங்கிருக்கும் இந்தியர்களுக்கான செய்தியாக சில தகவல்களை தருமாறு யோகியிடம் கேட்க, “என்ன செய்தியை இந்தப் பிச்சைக்காரன் தர முடியும், நான் மிகப்பெரியவனல்ல. ராமகிருஷ்ணா, விவேகானந்தா, அரவிந்தோ, ராம்தீர்த்தா, ராம்தாஸ், ரமணா, ஜே.கே, அனைவரும் மிகப்பெரியவர்கள் அவர்கள் தங்கள் செய்திகளைத் தந்தனர். அவர்கள் பகிர்ந்த செய்திகள் அனைத்தும், எனது தந்தையின் செய்திகளாகும். இந்தப் பிச்சைக்காரனுக்கு தருவதற்கு வேறெந்த செய்திகளும் இல்லை.” அதன்பின் தழுதழுக்கும் குரலில் உணர்ச்சிப்பொங்க யோகி, ”அவர்கள் ராமர், கிருஷ்ணர் மற்றும் சிவனின் பெயர்களை நினைவில் கொள்ளட்டும். அப்போது அவர்கள் எப்போதும் பாரத தேசத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரும் இந்தப் புனிதமான பாரத நாட்டிற்கு திரும்ப வருவார்கள்.” யோகி உச்சரித்தவை சுவாமி விவேகானந்தர் அவர்களின் குரலின் எதிரொலிப்பே, “இந்த பூமியில் இருக்கும் எந்த ஒரு நிலம் புண்ணிய பூமி என ஆசிர்வதிக்கப்பட்டதோ…எங்கே ஆன்மாக்கள் களைத்துப் போய் கடவுளைத் தேடி தனது வீட்டிற்கு போகுமோ….அதுதான் இந்தியா.” ஆமாம் அன்னை பாரதம் உண்மையில் முடிவிலா ஒளியின் நிலம் – பாரதம்!.

அத்தியாயம் 1.6

 பொங்கும் கருணை

அநாஸ்ரித: கர்ம்பலம் கார்யம் கர்ம கரோதி ய:|

ஸ ஸந்நியாஸீ ச யோகீ ச ந நிரக்நிர் நசாக்ரிய: || (ஸ்ரீமத் பகவத்கீதை 6 : 1) 

“செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும், கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.” 

 அருணாசல மலையில் உள்ள ஆலமர குகையில் 1988 ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற சத்குரு சுவாமி ராமதாஸ் அவர்களின் 108-ஆவது ஜெயந்தி விழாவில் பங்குகொள்ள இந்த ‘பிச்சைக்காரனின் எளிய வேலைக்காரன்’ அழைக்கப்பட்டான். அவருடன் சிரஞ்சீவி விவேகானந்தன், நேதாஜி சுபாஷ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் லெப்டனன்ட் ஆக தொண்டாற்றிய திரு சேகர் என்ற பக்தர், மூவரும் திருவண்ணாமலைக்கு ஒருநாள் முன்னராகவே யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்தை பெறுவதற்காக வந்து சேர்ந்தோம், யோகியின் இல்லத்தை நெருங்கும் போது உள்ளமானது கவலையால் பதைபதைக்கத் துவங்கியது. யோகியின் தரிசனம் கிடைக்குமா? அவர் நம்மோடு பேசுவாரா? அல்லது ஆசி தந்து அனுப்பிவிடுவாரா? என்ற எண்ணத்தோடு அவர்கள் யோகியின் இல்லத்து கதவை மெதுவாக தட்டிவிட்டு சில நிமிடங்கள் காத்திருக்க, யோகியே கதவைத்திறந்து வந்தார், அவரது ஒருகையில் இந்த தொண்டன் அனுப்பியிருந்த கடிதம், மறுகையில் பனையோலை விசிறி என ஆச்சர்யத்தை யோகி அளித்தார். யோகி எங்களை வரவேற்று பாஸ்கர்தாஸ் என்ற ஓவியர் எங்கே என வினவினார். அடியேனின் கடிதப்படி இவர்களோடு இணைந்து வரவேண்டியவர் அவர். அடியேன் யோகியிடம் அவரால் வர இயலவில்லை, எனவே அவருக்கு பதிலாக வேறொரு நண்பர் எங்களோடு வந்திருக்கிறார் என்றவுடன் யோகி திரு. சேகரின் வயது என்ன என்று வினவிவிட்டு, பிறகு பேச்சு சுவாமி விவேகானந்தரின் நேதாஜி மீதான தாக்கம், அவரது தீவிரமான தேசப்பற்று என வேறு திசைக்கு திரும்பியது. சேகர் யோகியிடம் விமான விபத்திற்கு பிறகு நேதாஜியின் சாம்பலை இந்தியாவிற்கு கொண்டுவர செய்யப்பட்ட முயற்சி பற்றி பகிர்கையில், யோகி நேதாஜியின் மரணம் பற்றியும், விமான விபத்து குறித்தும் வெளிவந்த சர்ச்சைக்குரிய தகவல்கள் பற்றி விசாரித்த யோகி, சேகரை மிக அற்புதமான தேசப்பற்றாளரான நேதாஜியின் நினைவுகளை பாதுகாக்கும் முயற்சியில் வெற்றிபெற ஆசிர்வதித்தார். அந்தப் பேச்சு மெல்ல இந்த சமூகத்தில் பிச்சைக்காரர்களின் பங்கு என்பதைக் குறித்து திரும்பியது. யோகி பிச்சைக்காரர்களை சூழ்ந்து அவர்களை துன்புறுத்துவதையும் மற்றும் அரசின் கொள்கை மீதான தனது மறுப்பை மிக கடுமையாகவும், உறுதியாகவும் பதிவு செய்தார். 

“ரங்கராஜா, இந்த நிலத்தில் பிச்சைபெறுதல் ஒருபோதும் குற்றமல்ல. சுதாமா ஒரு பிச்சைக்காரன். அவன் பிச்சைப்பெற கிருஷ்ணரிடம் சென்றான். கிருஷ்ணர் அவரை சகல மரியாதைகளோடும் வரவேற்றார். அனைத்து துறவிகளும் பிச்சைக்காரர்களே. எனது குரு, சுவாமி ராம்தாஸ், ‘கடவுளைத்தேடி’ என்ற நூலில் தான் எவ்விதம் பிச்சைக்காரனாக திரிந்தேன் என்பதை விளக்குகிறார். இந்தப் பிச்சைக்காரனும் இந்த தேசம் முழுவதும் உணவைப் பிச்சையேற்று பன்னிரண்டு வருடங்களுக்கு அலைந்திருக்கிறான். அவன் ஒருபோதும் ருத்ராக்ஷத்தை அணிந்ததோ, நெற்றியில் சாம்பலை பூசியதோ ;ல்லை. மற்ற பிச்சைக்காரர்களைப் போல கிழிந்த உடையுடனே அலைந்திருக்கிறான். இந்தப்பிச்சைக்காரன் சபர்மதி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் போது, அங்கே குளிப்பதற்கு வரும் பெண்கள் சில நாணயங்களை தினமும் என்னிடம் வீசிவிட்டு செல்வார்கள். ஒரு நாளின் வருமான சேகரிப்பு இரண்டு நாள் உணவிற்கு போதுமானதாக இருக்கும். நான் சாதுக்களுக்காக மட்டும் பேசவில்லை, பிரம்மச்சாரிகள், பிராமணர்கள் என இவர்களோடு இணைந்து இந்த நாட்டில் பிச்சையெடுப்பவர்களுக்காகவும் பேசுகிறேன். நான் சாதாரண மனிதர்களுக்காகவும் பேசுகிறேன். தினமும் பிச்சையெடுக்க செல்லும் அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் அதிகம். அவர்கள் குற்றவாளிகள் அல்ல. வேறு வழியில்லாதமையால் அவர்கள் பிச்சையெடுக்கிறார்கள்.” 

இந்த ஆசிரியர் யோகியிடம் அவரது வார்த்தைகளை ஏற்கனவே ‘தத்துவ தர்சன்’ என்ற இதழில் எழுதிவிட்டதாகவும், மீண்டும் ஒரு தலையங்கம் இது குறித்து எழுத இருப்பதாகவும் கூற, யோகி, “ஆமாம் நீ ஒரு தலையங்கமும் எழுது” என்றார். மேலும் யோகி, “நீ அவசரத்தேவைக்கு தலையங்கம் எழுது, ஆனால் நீ நிச்சயமாக மனு ஸ்மிருதி யாக்ஞவல்கியர் ஸ்மிருதி போன்ற நீதி புத்தகங்களையும், பிற வேதங்கள், காளிதாசன் படைப்புகள் என பழைமையான நூல்களை தொகுத்து, நமது பாரம்பரியத்தில், நமது தேசத்தில் பிச்சைக்காரர்கள் எவ்விதம் நடத்தப்பட்டார்கள் என்பது குறித்து ஒரு கட்டுரை எழுது, ரங்கராஜா, “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ” இது நமது பாரம்பரியம் ரங்கராஜா. பிச்சையெடுப்பவர்களைத் தேடிச் சென்று நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன என யோகி விளக்கியிருக்கிறார். 

தாழ்மையான யோகியின் வேலைக்காரனான இந்த நூலின் ஆசிரியர் தனது முந்தைய யோகியுடனான நினைவுகளை நினைவு கூர்ந்தார். யோகி ஆசிரியருக்கு வஸ்திர தானம் என்று ஒரு வேட்டியை தந்திருந்தார். அதனை அவர் பிச்சையெடுக்க செல்லும் போது உடுத்துவது வழக்கம் என்று ஆசிரியர் பகிர்ந்தவுடன் யோகி ஆச்சரியத்தோடு, “ஓ ! இந்தப்பிச்சைக்காரன் உனக்கு வேட்டியை கொடுத்திருக்கிறான்.!” என்று கரங்களை உயர்த்தி ஆசிரியரை ஆசிர்வாதம் செய்த யோகி, “நாம் பிச்சைக்காரர்கள் ரங்கராஜா, ஆனால் நாம் குற்றவளிகள் அல்ல.” 

அடியேன் யோகியிடம் லீ லோசோவிக் எழுதிய பால்ஸ் சமூக பாரம்பரியம் பற்றி குறிப்பிட யோகி, “ஆமாம். ஆமாம். அவரும் சில பாடல்களை இந்தப்பிச்சைக்காரன் மீது எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றை உன்னிடம் தந்தேன், நீயும் அதனை அச்சிட்டாய். மற்றவைகள் எங்கே என்று இந்தப். பிச்சைக்காரனுக்கு தெரியாது. அவன் ஒருபோதும் அவைகளை பாதுகாக்கவில்லை” என்றார்.

இந்த உரையாடல் மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை தொடர்ந்தது. இந்த நேரத்தில் யோகி எங்களுக்கு காபி தந்து எங்களோடு பொழுதுபோக்கிய யோகி 7 மணி அளவில், “நன்று. சுந்தரராமன் சுவாமி உங்களுக்காக காத்திருப்பார். அங்கே சில விருந்தினர்களும் இருப்பார்கள். எனவே இந்தப் பிச்சைக்காரன் உங்களை இப்போது செல்ல விடுகிறான்.”

அடியேன் முன்பு யோகி தனக்கு தந்த புகைப்படத்தை வேறொரு பக்தருக்கு தந்துவிட்டதாக கூற, யோகி உடனடியாக இன்னொரு புகைப்படத்தைக் கொண்டு வந்து ஆசிரியரிடம் கொடுத்தார். மறுபடியும் நாளை வருவதற்கு ஆசிரியர் யோகியிடம் அனுமதி கேட்க, யோகி, “ஏன்? நாம் இருவரும் ஒன்றாக இன்று நிறைய நேரம் செலவழித்திருக்கிறோம். வேறென்ன இருக்கிறது பேசுவதற்கு?” என வினவினார்.

“பேசுவதற்கு ஏதுமில்லை மஹாராஜ், ஆனாலும் நாங்கள் கிளம்புவதற்கு முன் இங்கு வந்து உங்கள் ஆசியை பெற நினைக்கிறோம்.” 

“இந்தப். பிச்சைக்காரன் நாளை சந்திக்கும் மனநிலையில் இருக்கிறானா என்று பார்ப்போம். எப்போது நீங்கள் வருவீர்கள்?” 

“நாளை மதியம் விழா முடிந்தப்பின்”

யோகி எங்களை ஆசிர்வதித்து நாங்கள் கிளம்புவதைப் பார்த்தார். 

*                    *                     *

கிழக்கில் சூரியன் உதிக்கும் வேளையில் யோகியின் தாழ்மையான வேலைக்காரன் ஆலமரக்குகையில் ஒரு பாறையில் அமர்ந்து, சூரிய உதயத்தை நோக்கி சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்க, அவரது கண்கள் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரத்தையும், யோகியையும் நினைத்தன. சுவாமி ராம்தாஸ் அவர்களின் 104 வது ஜெயந்திவிழாவைக் கொண்டாட பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். ஆலமரத்து குகை ஆசிரமத்தின் ஏழாவது ஆண்டுவிழாவும் அன்றே. அடியேன் மெல்ல எனது காயத்ரி ஜப தியானத்திலிருந்து எழுந்து கீழே வந்தபோது அங்கே பக்தர்களிடம் சிறிது சலசலப்பு ஏற்பட்டிருந்தது. யாரும் எதிர்பாராத விதமாகவும், ஆச்சரியமான வருகையாக அங்கே ஒர் அற்புத மனிதரான யோகி ராம்சுரத்குமார் நுழைந்தார். நுழையும் போதே, “சென்னையில் இருந்து வந்த சுவாமி ரங்கராஜன் எங்கே?” என்று கேட்டவாறே வந்த யோகியை சுவாமி சுந்தரராமன் வரவேற்று, அவரை அமர வைத்துவிட்டு என்னிடம் வந்து, யோகி வந்து உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார் என அறிவித்தார். இந்த வேலைக்காரனும் யோகியை நோக்கி ஓடிச் சென்று வரவேற்க, மகனுக்காக காத்திருக்கும் ஒரு தாயைப்போல எனது கைகளை இணைத்துக் கொண்ட யோகி, “நேற்று நீ இன்று மீண்டும் இந்தப்பிச்சைக்காரனை பார்க்க வருவதாக கூறினாய். ஆனால் இந்தப்பிச்சைக்காரன் அதற்கு அவசியமில்லை என்றும் நாம் ஒன்றாக நிறைய நேரம் செலவழித்து விட்டோம் என்றும் கூறினான். நேற்றிரவு நீ கிளம்பியபிறகு இந்தப்பிச்சைக்காரன் இது குறித்து மீண்டும் சிந்தித்தான்: ‘ரங்கராஜன் இந்தப்பிச்சைக்காரனுக்கு நிறைய சேவைகள் செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து இத்தனை தொலைவு வந்திருக்கிறார். சுவாமி சுந்தரராமன் வேறு என்னை அழைத்திருந்தார்.’ எனவே ஏன் இந்தப்பிச்சைக்காரன் சென்று ரங்கராஜனைப் பார்க்ககூடாது என நினைத்தான். இன்று காலையில் சிதம்பரம் வந்திருந்தார். அவர் இந்தப்பிச்சைக்காரன் இங்கு வர உதவி செய்தார். எனவே இந்தப்பிச்சைக்காரன் இங்கே ரங்கராஜனை காண வந்தான்.” 

இந்த தாழ்மையான வேலைக்காரனின் இதயத்தில் சந்தோஷம் பொங்கியது, இந்த ஏழைக்கு நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சியதைப் போன்ற உணர்வு யோகியின் கருணை நிறைந்த வார்த்தைகளை கேட்டபோது தோன்றியிருக்கிறது. முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களின் கனியை ஒரே சமயத்தில் அறுவடை செய்ததைப் போன்ற உணர்வு மேலிட இந்த வேலைக்காரனால் தன்னை கட்டுப்படுத்த முடியாது தவிக்கையில் யோகி அவசரமாக கரங்களைப் பற்றி, “எங்கே தங்கியிருக்கிறாய் ரங்கராஜா?“ என வினவினார். இந்த வேலைக்காரன் குகையின் மேல் பகுதியை சுட்டிக்காட்டி, “மொட்டை மாடி மேலே மஹாராஜ்”. 

“வா. அங்கு சென்று அமர்வோம். இந்தப்பிச்சைக்காரன் ஒரு சில மணிநேரங்கள் உன்னோடு கழிக்க விரும்புகிறான்.”

யோகி ஏறக்குறைய என்னை மாடிக்கு இழுத்துக் கொண்டே சென்றார். இருவரும் ஒரு கோரைப்பாய் மீது அமர்ந்தபோது பல பக்தர்கள் யோகியைக் காண வந்தனர். யோகி கோரைப்பாயை பக்தர்களுக்கு இரண்டு வரிசைகளாக அமர தந்துவிட்டு ஓலைகளின் மீது அமர்ந்து இந்த வேலைக்காரனையும் தனதருகே அழைத்து, “வா ரங்கராஜா, நீ என்னருகே அமர்.” என்றார். பிறகு தன்னைச் சூழ்ந்திருந்த பக்தர்களை நோக்கி, “சுவாமி விவேகானந்தர் ‘வலியத்தாக்கும் இந்துமதம்’ குறித்து பேசியிருக்கிறார். நிவேதிதாவும் இது குறித்து புத்தகம் எழுதியுள்ளார். ஆனாலும் இந்த ‘வலியத்தாக்கும் இந்துமதம்’ எப்போது வரும்? எவ்வளவு காலம் ஆகும்? “

பின்லாந்தைச் சேர்ந்த ஒரு சன்னியாசினி பக்தையான சிவப்பிரியா (கிறிஸ்டி) மேற்கத்திய நாடுகளில் இந்து மதம் வளர்ந்து வருகிறது என்று சொல்ல, யோகி நகைச்சுவையாக, “ஆமாம், இந்துமதம் ஐரோப்பா, அமெரிக்காவிற்கு சென்று அவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆவார்கள். நாம் அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆவோம், அப்படித்தானே?” மேலும் தொடர்ந்த யோகி, “இந்தப்பிச்சைக்காரன் ஒரு முறை ஒரு பிராட்டஸ்டன்ட் மிஷினரியிடம், நீங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை பிராட்டஸ்டனட் கிறிஸ்தவர்களாக ஆக்குவீர்களா?” என்று கேட்டதற்கு ‘இல்லை’ என்று பதிலளித்தார். ஆனால் அவர் ஹிந்துக்களை, கிறிஸ்தவர்களாக மாற்றுவார்.” என்று கூறிவிட்டு பெரும் சிரிப்பைத் தொடர்ந்த யோகி, “நாம் அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆவோம். அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் ஆவார்கள்.” மேலும் தொடர்ந்த யோகி, “ஒருவேளை இந்துமதம் இந்தியாவை விட்டுப்போனால், நமது வேதங்களையும், உபநிஷத்துக்களையும் யார் பாதுகாப்பர்?” என வினவினார்.

இந்த உரையாடல் பல மணி நேரங்கள் நீடித்தது. அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. இந்த வேலைக்காரன் விரதம் இருப்பதால் உப்பு போட்ட எதையும் இன்று உண்பதில்லை என்று கூற, யோகி நீ சிறிதளவு பழங்களையாவது எடுத்துக் கொள் என வலியுறுத்தினார். 

ஒரு பக்தர் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார். அதற்கு யோகி, ”இந்தப் பிச்சைக்காரன் புகைப்படங்கள் எடுப்பதை அனுமதிப்பதில்லை. ஆனால் ரங்கராஜன் என்னுடன் இருக்கிறார், எனவே நீ இரண்டு புகைப்படங்கள் இந்தப்பிச்சைக்காரனை ரங்கராஜனுடன் எடுக்கலாம். அதில் இருவரும் இருக்க வேண்டும்” என்றார். மேலும் யோகி வேறு எவரும் எங்கள் பக்கத்தில் நிற்க கூடாதென உத்தரவிட்டார். அந்த புகைப்படக்கலைஞர் இரண்டுமுறை தனது கேமராவை ‘க்ளிக்’ செய்தவுடன், அவர் கிறிஸ்டியிடம், “உன்னிடம் கேமரா உள்ளதா?” என கேட்க, கிறிஸ்டி சிரித்துக்கொண்டே தனது கேமராவை எடுத்தாள்.” சரி இந்தப் பிச்சைக்காரனை ரங்கராஜனுடன் எடு” என்றார். அப்போது இரண்டு குரங்குகள் எங்கிருந்தோ வந்து எங்களின் பின்னால் இருக்கும் பாறையில் அமர்ந்தன. கிறிஸ்டி கேமராவை க்ளிக் செய்ய தயங்கினார். யோகி, “பரவாயில்லை. ரங்கராஜனும், இந்தப்பிச்சைக்காரனும் இங்கிருக்கின்றனர், எங்களின் பின்னால், சுக்ரீவன் மற்றும் ஹனுமான்!” என்றார். 

சுந்தரராமன் சுவாமி வந்து நிகழ்ச்சி நிரல்களை துவக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறியதோடு, யோகியை தலைமைத்தாங்க வருமாறு அழைக்க யோகி, “இல்லை. இல்லை இந்தப்பிச்சைக்காரன் பேசமாட்டான், தலைமை தாங்க மாட்டான். ரங்கராஜன் பேசுவார். ஆனால் ரங்கராஜன் சிறிது நேரம் இந்தப்பிச்சைக்காரனுடன் இருப்பார். அங்கே வேறு எவரேனும் தலைமைத்தாங்க இருப்பார்கள். நீ சென்று துவக்கலாம்.” என்றார் யோகி. 

சுந்தரராமன் சுவாமி சென்றபிறகு, நிகழ்ச்சிகள் தொடங்கியபோது யோகி இந்த வேலைக்காரனை தனது கரங்களில் இழுத்துக் கொண்டு கீழே சென்றார். “வா, நாம் சென்று என்ன நடக்கிறது என பார்ப்போம்.” என்றார். அவர் சில நிமிடங்கள் பார்வையாளர்களோடு அமர்ந்தார். பிறகு மீண்டும் இந்த வேலைக்காரனை அவ்விடத்தில் இருந்து இழுத்துச் சென்றார். அவர் அருகில் உள்ள சுவாமி ராம்தாஸ் குகைக்கு அழைத்துச் சென்றார், இங்கேதான் சுவாமி ராம்தாஸ் 65 வருடங்களுக்கு முன் தியானம் செய்திருக்கிறார். 

அந்த குகைக்குள் நுழைந்தவுடன் யோகி தன்னருகே என்னை அமரவைத்துக் கொண்டு, ”ரங்கராஜா, இந்த குகையில்தான் எனது குரு வசித்தார் ! இங்கேதான் அவர் அமர்ந்து தியானம் செய்தார். இங்கேயிருந்துதான் அவர் மகரிஷி ரமணரைப் பார்க்கச் சென்றார். ஓ! இந்த குகையில்தான் சுவாமி ராம்தாஸ் அமர்ந்து தியானம் செய்தார்! வா! சில பஜனைகள் செய்வோம்.” நாங்கள் இணைந்து ராமநாமத்தை சிறிது நேரம் சொன்னோம். திடீரென, பரவச மனநிலையில், நான் அவரிடம், “மஹராஜ், ஆசிர்வதிக்கப்பட்ட இந்த நாளில், நாம் ராம்தாஸின் ஜெயந்தியை கொண்டாடும் நேரத்தில், நீங்கள் என்னை அவர் எங்கு அமர்ந்து தியானித்தாரோ அந்த குகைக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு தீக்ஷை அளிக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.”

எந்தவொரு இரண்டாவது சிந்தனையுமின்றி குரு, “சரி. உனக்கு தீக்ஷை வேண்டுமெனில் நான் தருகிறேன்.“ என பதிலளித்தார். 

பின்னர் யோகி இந்த வேலைக்காரனை மிக அருகே இழுத்து தாரக மந்திரத்தை மெல்ல காதில் ஓதினார்: “ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்”. இது யோகியின் குரு சுவாமி ராம்தாஸ் இடம் இருந்து யோகி பெற்றது. மூன்றுமுறை காதுகளில் சொல்லப்பட்டது. நானும் மூன்றுமுறை திரும்பச் சொன்னேன். இந்த வேலைக்காரன் யோகியின் பாதங்களில் விழுந்து தழுதழுக்கும் குரலில் பின்வருமாறு பிரார்த்தனை செய்தான். “மஹராஜ், எனக்கு பேராசிரியராகவோ, பத்திரிக்கையின் ஆசிரியராகவோ இருக்க விருப்பமில்லை. நான் சாதுவாக இருக்க விரும்புகிறேன். உங்களைப் போன்ற பிச்சைக்காரனாக இருக்க விரும்புகிறேன்.” யோகி எனது கண்களை நேரடியாக பார்த்து தனது விசிறியை உயர்த்தி உரத்த குரலில், “ரங்கராஜா, நீ ஒரு சாது. இந்தப்பிச்சைக்காரன் சொல்கிறேன் நீ ஒரு சாது. ரங்கராஜா நீ பேராசிரியராகவோ, பத்திரிக்கையின் ஆசிரியராகவோ இருக்கலாம். இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நீ ஒரு சாது. இந்தப்பிச்சைக்காரன் சொல்கிறான் ரங்கராஜன் ஒரு சாது.” அவரின் உறுதியான இந்த அறிவிப்பு எனது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பின்னர் யோகியிடம், “அடுத்து நான் என்ன செய்யவேண்டும்? எங்கே நான் போக வேண்டும்? என்ன பெயரில் எனது பணிகளை இனிநான் செய்யவேண்டும்?”

“என் தந்தை உன்னை அவ்வப்போது வழிநடந்துவார்”, என்று பதில் சொன்ன யோகி மேலும், ”என் தந்தை உன்னை எவரும் தவறாக வழிநடத்தாமலும் பார்த்துக் கொள்வார்,” என்று கூறிய யோகி, எனது மகன் விவேகானந்தனையும் அழைத்து குகைக்குள் எங்களின் அருகே அமரச் சொன்னார். அதன்பின் அவரும் அவரது பக்தர்களும் வெளியே நின்று பிற நிகழ்வுகளைப் பார்த்தனர். யோகி பலமுறை தனக்கு குடிநீர் எடுத்துவரச் சொன்னார். ஒவ்வொரு முறையும் நானே அதனைச் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். அவர் இந்த வேலைக்காரன் அவரோடு குடிநீர் அருந்தவும் செய்தார். எனக்கு அந்த கூட்டத்தில் பேச விருப்பமா என்று கேட்டார். அதற்கு நான், “மஹராஜ் நீங்கள் அனுமதித்தால் நான் சில நிமிடங்கள் பேசுகிறேன்.” என பதிலளித்தேன். அவர் மீண்டும் என்னை கூட்டம் நடக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றார். அங்கே அவருக்கு மாலையணிவிக்கப்பட்டது. என்னை பேசுவதற்கு அழைக்கப்பட்டபோது, நான் யோகியை வணங்கிவிட்டு மேடைக்குச் சென்றேன். நான் அரைமணி நேரத்திற்கு பாரதத்தின் சிறப்பு மிக்க ஆன்மீக பாரம்பரியம் குறித்தும், பாரத நாட்டில் தட்சிணாமூர்த்தி தொடங்கி சுவாமி ராம்தாஸ் மற்றும் யோகி ராம்சுரத்குமார் வரை வழிவழியாக வந்துள்ள குரு பரம்பரை குறித்தும் அந்த புனிதமான நாளில் இந்த சாதுவுக்கு அற்புத யோகியால் நடந்த தீக்ஷை அளிப்பு நிகழ்வு குறித்தும் பேசினேன் . எனது பேச்சை முடித்துவிட்டு, மேடையை விட்டிறங்கி யோகியிடம் திரும்பினேன். அவர் என்னை ஆசிர்வதித்து மீண்டும் என்னை குகைக்கு அழைத்துச் சென்றார். யோகி என்னுடைய கரீபியன் தீவுகளுக்கான பயணத்திட்டம் குறித்து விசாரித்தார். மேலும் யோகி தென் அமெரிக்காவுடனான இந்துக்களின் சகோதரத்துவம் குறித்தும். என்னிடம் பேசினார். 

சாது அருணாச்சலம் மற்றும் கிறிஸ்டி எங்களோடு இணைந்தனர். உணவு விநியோகம் நடைபெறும் போது யோகி வெளியில் வந்து என்னை உணவுகூடத்திற்கு இழுத்துச் சென்றார். ஆனால் அவ்விடம் அமர இடம் இல்லாமல் நிரம்பியிருந்தது. எனவே நாங்கள் மீண்டும் ராம்தாஸ் குகைக்கு வந்து சேர்ந்தோம். ஒரு கருணைமிகுந்த தாய் எங்களுக்கு உணவை கொண்டு வந்தார். யோகி என்னை நோக்கி கைக்காட்டி, “இந்த சுவாமி பழங்களையும், இனிப்புக்களையும் மட்டுமே சாப்பிடுவார். இன்று அவர் உப்பு உள்ளவைகளை எடுத்துக்கொள்ளமாட்டார்.” என்று கூறி சில பழங்களையும், பாயாசத்தையும் இந்த வேலைக்காரன் எடுத்துக் கொள்ள வலியுறுத்தினார். அவர் உணவு உண்டப்பின் அவரது கரங்களை கழுவ நான் தண்ணீர் ஊற்றினேன். பின்னர் நாங்கள் வெளியே அமர்ந்திருந்தோம். சில பக்தர்களும் எங்களோடு இணைந்தனர். மதுரை சித்தாஸ்ரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சித்த நரஹரி குருஜி, சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை சார்ந்த ஸ்ரீ ஒம் தத் சத் அடிகள் போன்றோரும் எங்களோடு இணைந்தனர். ஒரு பக்தர் புகைப்படம் எடுக்க விரும்பியபோது, யோகி தன்னோடு ரங்கராஜனும் அனைத்து புகைப்படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினார். எனது கைகளை பிடித்து அதனை உயரத்தூக்கினார், இந்த தாழ்மையான வேலைக்காரனை, சீடனை குரு உயர்த்திய தருணமது. 

மாலை ஐந்து மணிவரை நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம், யோகி இந்த வேலைக்காரனின் கரங்களை சில நிமிடங்கள் தவிர்த்து எப்போதும் பிடித்த வண்ணம் இருந்தார். நான் அவருக்கு தண்ணீர் கொண்டு வரவும், கூட்டத்தில் பேசவும் மட்டுமே எழுந்து சென்றேன். பின்னர் நாங்கள் தங்கியிருந்த மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தோம். மீண்டும் யோகியிடம், “நான் என்ன செய்யவேண்டும் மஹராஜ்? எனது எதிர்காலத்திற்குரிய வழிக்காட்டுதலைத் தாருங்கள்” என்று கேட்க, “என் தந்தை உன்னை வழி நடத்துவார். நீ இப்போது திரும்பிச் சென்று இத்தனைக்காலமாக நீ செய்து வந்த பணிகளை தொடர்ந்து வா. துறவு என்பது எதனையும் விட்டுவிடுவதுமல்ல, எதையும் பெறுவதுமல்ல. அது இந்த உலகத்துடனான உன் அணுகுமுறையில் வரும் மாற்றம். என் தந்தை ஒருவரே நிலைப்பெற்றிருக்கிறார், வேறெருவரும் இல்லை, வேறெதுவும் இல்லை.” மேலும் யோகி கூறியது, “ரங்கராஜா, நேற்றுவரை நீ விரும்பியபடி செயல்களை செய்து வந்தாய், இந்தக்கணம் முதல் இந்தப் பிச்சைக்காரன் தனது தந்தையின் பணியை உன் மூலமாக செய்ய இருக்கிறான்.” 

யோகி விவேகானந்தனை அழைத்து, “விவேகானந்தன், உனது தந்தைக்கு சென்னையில் நிறைய வேலைகள் உள்ளது. நீயும், உனது தந்தையும் இப்பொழுது போகலாம்.” நாங்கள் அவர் பாதங்களை வணங்கி, அவரிடம் இருந்து விடைப்பெற்றோம். 

விவேக் ஹாலில் தொலைந்த யோகியின் புகைப்படத்தை தேடியவாறு இருந்தான். யோகி கிறிஸ்டியை அனுப்பி நாங்கள் கிளம்பி விட்டோமா என பார்க்கச் சொன்னார். கிறிஸ்டி நாங்கள் கிளம்பவில்லை என்ற சேதியை பகிர, யோகி அவரை தொடர்ந்து நாங்கள் கிளம்புவது குறித்து தகவல் தெரிவிக்கச் சொன்னார். எனவே, நான். ஒரு பக்தரிடம் அந்த புகைப்படத்தை கொண்டு வருமாறு கூறிவிட்டுச் சென்றேன். நாங்கள் செல்லும் வழியில் இந்த வேலைக்காரன் யோகி முந்திய நாள் மாலை யோகி தந்த அவரின் படத்தைப் பெற்றுக் கொண்டான். அதனை பின்னர் சட்டமிட்டு வைத்துக் கொண்டேன். 

மிக அபூர்வமான மூன்று விஷயங்கள் என சங்கரர் கூறுபவை – “மனித பிறப்பு, மிக உயர்ந்த லட்சியத்தை தேடல், மற்றும் குருவின் வழிகாட்டுதல்”. வாழ்க்கையின் ஓட்டத்தில் இவைகள் தன்னிச்சையாக வந்தார். அதைவிட பெரும் பேறு வேறு என்ன தேவை. எனது குரு கூறுகிறார், “ஒரு ஆன்மீக குருவை பெறுதல் எளிதானதல்ல, சிலசமயம் ஒரு ஆன்மீக குருவை அடைய பல பிறவிகள் தேவைப்படலாம்.” குருவின் அளவிலாத இரக்கம், பொங்கும் கருணை குறித்து என்ன பேச இயலும். அவரே இந்த தாழ்மையான சாதகனை கடவுள் உணர்தல் என்ற பாதையில் வழி நடத்துபவர். 

மகிமை பொருந்திய பிச்சைக்காரர்களின் வரிசையில் உள்ள எனது குரு என்னை வழி நடத்துகிறார் ! ஜெய் குரு மஹராஜ் ! 

யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய் ! வந்தே மாதரம்.

 ஏப்ரல் – 28, 1988 ல் திருவண்ணாமலை பப்பா ராம்தாஸ் குகையில் சாதுவிற்கு யோகி ராம்சுரத்குமாரால் நடந்த தீக்ஷை நிகழ்ச்சி
சாதுவின் தீக்ஷை நடக்கையில் இருந்த பக்தர்களும். சுவாமி சுந்தரராமன், சாது மற்றும் பகவான்.  

One thought on “ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 1

Leave a comment