Azhiyum vaazhvil viruppaik kutti Song

This song  was often sung in Yogi Ramsuratkumar’s divine presence. This song was written by Sri Parthasarathy, the author of Amarakaavyam, a biography on Yogi Ramsuratkumar. You may watch the song being sung during the Akhanda Ramnam celebrated on 1st Jan 1994 in the divine presence of Yogi Ramsuratkumar starting from the 19th minute in the video.

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா

அழியும் வாழ்வில் விருப்பைக் கூட்டி
விழிகள் இரண்டில் நீரைப் பெருக்கி
தெளிவில்லாத துயரம் காட்டும் நமது உள்ளத்தில்
தெய்வரூபச்சுடரைக் கொண்டு
பழிகள் அகன்று அமைதி கொள்ள
அருவமான நினது நாமம் பாடி ஆடுவோம் (அருவமான)

எனது உனது என்னும் பிரிவில்
நமது உள்ளம் என்றும் விலக்கி
ஒன்று உலகில் யாவும் ஒன்று என்று காணவே
தனது நாமம் தந்த வள்ளல்
புனித பாதம் சரணம் கொண்டு
தரணி வாழ குருவின் நாமம் பாடி ஆடுவோம் (தரணி வாழ)

நாளும் இளைத்து சாவை நோக்கும்
சாரமற்ற உடலின் வாழ்க்கை
நாதன் காட்டும் பாதை சென்றால் சாவை தடுக்கலாம்
நாமம் பாடும் இனிய சுவையில்
நாவும் மனதும் மயங்கி என்றும்
தேஹ பற்று அற்ற அந்த தேவராகலாம் (தேஹ பற்று)

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா

Yōgi rāmsuratkumār yōgi rāmsuratkumār
yōgi rāmsuratkumār jeya guru rāyā
yōgi rāmsuratkumār yōgi rāmsuratkumār
yōgi rāmsuratkumār jeya guru rāyā
yōgi rāmsuratkumār jeya guru rāyā

aḻiyum vāḻvil viruppaik kūṭṭi
viḻikaḷ iraṇṭil nīraip perukki
teḷivillāta tuyaram kāṭṭum namatu uḷḷattil
teyvarūpaccudaraik koṇṭu
paḻikaḷ akaṉṟu amaiti koḷḷa
aruvamāṉa niṉatu nāmam pādi āduvōm (aruvamāṉa)

eṉatu uṉatu eṉṉum pirivil
namatu uḷḷam eṉṟum vilakki
oṉṟu ulakil yāvum oṉṟu eṉṟu kāṇavē
taṉatu nāmam tanta vaḷḷal
puṉita pātam caraṇam koṇṭu
taraṇi vāḻa kuruviṉ nāmam pādi āduvūm (taraṇi vāḻa)

nāḷum iḷaittu cāvai nōkkum
sāramaṟṟa udaliṉ vāḻkkai
nātaṉ kāṭṭum pādai ceṉṟāl cāvai tadukkalām
nāmam pāṭum iṉiya suvaiyil
nāvum maṉatum mayaṅki eṉṟum
tēha paṟṟu aṟṟa anta tēvarākalām (tēha paṟṟu)

Yōgi rāmsuratkumār yōgi rāmsuratkumār
yōgi rāmsuratkumār jeya guru rāyā
yōgi rāmsuratkumār yōgi rāmsuratkumār
yōgi rāmsuratkumār jeya guru rāyā
yōgi rāmsuratkumār jeya guru rāyā

Kaasiyin Arugil Thondriyavar Song

This song was often sung in Yogi Ramsuratkumar’s divine presence. This is sung in the tune of the famous movie song “brindaavanamum nandakumaaranum”. You may watch it being sung during the Akhanda Ramnam celebrated on 1st Jan 1994 in the divine presence of Yogi Ramsuratkumar starting from the 13th minute in the video.

யோகி ராமசுரதகுமாரா ஜெய குரு  ஜெய குரு ஜெய குருராயா
யோகி ராமசுரதகுமாரா ஜெய குரு  ஜெய குரு ஜெய குருராயா

காசியின் அருகில் தோன்றியவர் – துயர்
துடைத்து மக்களைக் காத்திடுவார்
ஆண்டிவேடம் எடுத்துவந்து – இந்த
உலகத்தின் பாவத்தைப் போக்கிடுவார்

ராமதாசர் தீக்ஷயினாலும்
ரமணரிஷியின் பார்வையாலும்
அரவிந்தரின் ஆசியினாலும்
அன்பு ஆட்சிப் புரிகின்றார்

உலகத் தந்தையும் தாயும் குருவும்
அவர் தான் என்றே போற்றிடுவோம்
உள்ளத்தில் ராம நாமத்தைப் பாடி
வாழ்வில் உயர்வு அடைந்திடுவோம்

அண்ணாமலையில் இருக்கின்றார் – அவர்
அருள்தனைப் பெற்றிட வந்தோமே
யோகி ராம்சுரத்குமாரேன்றே – தினம்
கூவித் தொழுதின்பம் பெறுவோமே

யோகி ராமசுரதகுமாரா ஜெய குரு  ஜெய குரு ஜெய குருராயா
யோகி ராமசுரதகுமாரா ஜெய குரு  ஜெய குரு ஜெய குருராயா

Yōgi rāmasuratakumārā jeya guru jeya guru jeya gururāyā
yōgi rāmasuratakumārā jeya guru jeya guru jeya gururāyā

kāsiyiṉ arukil tōṉṟiyavar – tuyar
tudaittu makkaḷaik kāttiduvār
āṇdivēṭam eduttuvantu – inta
ulakattiṉ pāvattaip pōkkiduvār

rāmadāsar dīkṣayiṉālum
ramaṇariṣiyiṉ pārvaiyālum
aravindariṉ āsiyiṉālum
aṉbu āṭcip purikiṉṟār

ulagat tantaiyum tāyum guruvum
avar tāṉ eṉṟē pōṟṟiduvōm
uḷḷattil rāma nāmattaip pādi
vāḻvil uyarvu adaintiduvōm

aṇṇāmalaiyil irukkiṉṟār – avar
aruḷtaṉaip peṟṟiṭa vantōmē
yōdi rāmsuratkumārēṉṟē – tiṉam
kūvit toḻutiṉpam peṟuvōmē

Yōgi rāmasuratakumārā jeya guru jeya guru jeya gururāyā
yōgi rāmasuratakumārā jeya guru jeya guru jeya gururāyā